என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 106327"
- பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
- முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கையுடன் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்குவாசல் கல்லுக்கட்டித் தெருவில் அமைந்துள்ள தூய அலங்கார மாதா ஆலயத்தில் தேர்பவனி விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு வடக்குவாசல் தூய அருளானந்தர் ஆலய பங்கு தந்தை அருள் தலைமையிலும் இணை பங்கு தந்தை ஜோ கிளமென்ட் முன்னிலையிலும் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு கூட்டு திருப்பலி நடைபெற்றன.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் தூய அலங்கார மாதா ஆடம்பர தேரில் எழுந்தருளி தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கையுடன் நடைபெற்றது.
தேர் பவனியின் போது, பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
- குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமித்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திரவுபதி அம்மன் கோயில தீமிதி திருவிழாவை முன்னிட்டுகோவத்தகுடி அருகே உள்ள வெண்ணாற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், சக்தி கரகம் எடுத்து மேள தாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீகுண்டத்தில் கிராமவாசிகள் இறங்கி தீமித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
ஏற்பாடுகளை கரம்பை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- மின்தடை உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் முழுமையாக பின்பற்றபடும்.
- தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேரோடும் தஞ்சை மேலவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி ஆகிய 4 வீதிகளில் இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார்.
தேரோடும் வீதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
இன்று தேரோடும் வீதிகளில் அலுவலர்கள், போலீசாருடன் நேரடியாக கள ஆய்வு நடத்தினோம்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தேரோட்டத்தை காண பக்தர்கள், பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தேரோட்டத்தை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க அந்தந்த துறை அலுவலர்க ளுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தேரோட்டத்தை காண பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தேரோடும் வீதி சாலைகளில் உள்ள சிறு சிறு பள்ளங்கள் மூடப்பட்டு சரி செய்யப்பட்டு வருகின்றன. பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்யப்படும்.
மேலும் அரசு கூறியப்படி தேரோடும் நேரத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு ஏற்கனவே எடுத்து கூறி உள்ளோம்.
அதாவது தேரோடும் பகுதியில் அன்றைய தினம் செய்ய வேண்டிய மின்தடை உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் முழுமையாக பின்பற்றபடும்.
இது தவிர தேரோட்டம் இன்று தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஆணையர் சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி,
இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அரசு விடுமுறை முடிந்ததால் பக்தர்கள் கூட்டம் குறையும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.
இருப்பினும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை முதல் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்தனர்.
இதனால் வாகன சோதனை நடைபெறும் அலிபிரி சோதனை சாவடியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோதனைக்காக சுமார் 1 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்தனர். தரிசனத்திற்கு வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வைகுந்தம் காம்ளக்ஸ் 30 அறைகளும் நிரம்பி வழிந்தது. இலவச தரிசனத்திற்காக நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 20 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 74,748 பேர் தரிசனம் செய்தனர். 39,086 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- காவல்துறை, போக்கு–வரத்துத்துறை, சுகாதா–ரத்துறை உள்ளிட்ட பல்வேறுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விவாதித்தனர்.
- வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.
நாகப்பட்டினம்:
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இம்மாதம் 29 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதி குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் வேளாங்கண்ணியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவல்துறை, போக்கு–வரத்துத்துறை, சுகாதா–ரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விவாதித்தனர். மேலும் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவாக செய்திட வேண்டும் என அனைத்துதுறை அதிகாரிகளுக்கும், கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் அளித்த பேட்டியில், வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருவிழா நாட்களில் வேளாங்க–ண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்த்திடும் பொருட்டு கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
திருமலை:
திருப்பதியிலிருந்து திருமலைக்கு 2-ம் மலைப்பாதை வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு ஆந்திர அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
திடீரென கட்டுபாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற கார் மீது மோதி சுற்று சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து மரங்கள் இடையே சிக்கி தொங்கி கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு கதறினர். இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருப்பதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இன்றி 10 பேர் காயத்துடன் உயிர்தப்பினர்.
பஸ் மரத்தில் சிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடந்த 16-ம் தேதி முதல் பாதயாத்திரையாக புறப்பட்டு நேற்று இரவு வரை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கையில் மஞ்சள் பூசிய குச்சியில் வேப்பிலைகளை கட்டி கொண்டு வந்த பக்தர்கள் அதனை வைத்தீஸ்வரன் கோவில் கொடி மரத்து முன்பு போட்டு விட்டு சென்று சாமி தரிசனம் செய்தனர். சித்திரை மாதம் 2-ம் செவ்வாய் கிழமையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று காலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்பதால் பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.எஸ்.பி. வந்தனா, இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவுக்கு மாட்டு வண்டிகளிலும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியை சேர்ந்த ஒருவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது கனவில் தோன்றிய தையல் நாயகி அம்மன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும்படி கூறியுள்ளார். அதனை ஏற்று அவர் பாதயாத்திரையாக வந்து தையல் நாயகி அம்மனை தரிசனம் செய்ததும் அவரின் நோய் குணமாகி விட்டது.
இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தையல் நாயகி அம்மனை தங்களது குல தெய்வமாக வழிபட தொடங்கினர். அவர்கள் சித்திரை 2-வது செவ்வாய் கிழமை கோவிலுக்கு வந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை உருவாக்கினர். அன்று முதல் இந்த வழிபாடு காலம் காலமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரியில் மறக்குடி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், வடக்குரதவீதியில் உள்ள முத்தாரம்மன் கோவில், வடக்கு தெருவில் உள்ள பிரானோபகாரி தர்ம மடம் சுப்பிரமணியசாமி கோவில், கற்பக விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
இந்த பக்தர்கள் பாதயாத்திரையாக அஞ்சுகிராமம், செட்டிகுளம், கூடங்குளம், நவலடி, திசையன்குளம், உடையன்குடி வழியாக திருச்செந்தூர் கோவிலை சென்றடைகிறார்கள்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமலை கிராமத்தில் ராஜராஜசோழன் சகோதரி குந்தவை நாச்சியார் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில் உள்ளது.
இங்கு ஸ்வஸ்தி ஸ்ரீடாக்டர் தவளகீர்த்தி சுவாமிகள் ஜெயின் மடம் ஒன்றினை நிறுவி ஆசிரமம் நடத்தி வருகிறார்.
ஏராளமான துறவிகளும், முனிவர்களும், மாதாஜிகளும் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது 2 நிர்வாண முனிவர்களும், 10 பெண் துறவிகளும் தங்கி உள்ளனர்.
அவர்களில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஸ்ரீசுகுந்தன் மதிமாதாஜி (வயது 72) என்ற பெண் துறவியும் தங்கியிருந்தார். அவர் ஜீவ சமாதி அடைவதற்காக கடந்த 6 நாட்களுக்கு முன்பு உணவு மற்றும் தண்ணீரை குருசன்னிதானத்தின் முன்னிலையில் தியாகம் செய்தார். அவரது உடல் நிலையை அங்குள்ள பெண் துறவிகள் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் 6-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் ஸ்ரீசுகுந்தன் மதி மதாஜி ஜீவ சமாதி அடைந்தார்.
கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அவரது உடலை பரிசோதனை செய்து மரணம் அடைந்ததை உறுதி செய்தார். இதையடுத்து 500 சமண பக்தர்கள் முன்னிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டியப் பட்டி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஏரியில் பழமையான நீர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா வருடா வருடம், தை மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இதே போன்று இந்த ஆண்டு கடந்த செவ்வாய் கிழமை பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
இதை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்று, தினமும் சாமிக்கு அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து மாலை அலகு குத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெண்கள் நாக்கு அலகு, கடவாய்ப்பூட்டு அலகு, உள்ளிட்டவைகள் குத்தி வந்தனர்.
அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகள் சிலர் திடீரென அருள் வந்து சாமி ஆடினர். தொடர்ந்து அந்த பகுதி பெரியவர்கள் அவர்களை பிடித்த போதும் அவர்கள் தொடர்ந்து சாமி வந்து ஆடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாமி கோவிலை சுற்றி வந்த அவர்கள் அலகுகளை பிடுங்கிய பின் திரு நீர் இட்ட பின் மாணவ, மாணவிகள் சாமி அருள் நீங்கி ஆடுவதை நிறுத்தினர். அந்த பகுதியில் வான வேடிக்கை மற்றும் வண்டி வேடிக்கை நடைபெற்றது.
இதில் பத்ரகாளியம்மன் வேடமிட்டு வந்தவருக்கு அருள் வந்து ஆடு மற்றும் கோழிகளை கடித்து பலியிட்டார். இதில் அம்மன்வேடம், முருகன், ஈஸ்வரன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட வேடமணிந்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரி பிரசித்திப் பெற்ற ஆன்மீக தலமாக திகழ்கிறது. இங்குள்ள விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22½ கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 22-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று 6-வது நாளாக யாகசாலை பூஜைகள் நடந்தது. மேலும் அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 4 புனித நீர் குடங்கள் திருப்பதி குடைகள் புடைசூழ மேளதாளங்களுடன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சரியாக காலை 7.15 மணிக்கு இங்குள்ள மூலவர் வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள் ஆகிய 3 சன்னதிகளிலும் மூலஸ்தான கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து 7½ அடி உயரமுள்ள ஏழுமலையான், 3½ அடி உயரமுள்ள பத்மாவதி தாயார், 3½ அடி உயரமுள்ள ஆண்டாள் அம்மாள் ஆகிய 3 சன்னதிகளிலும் விசேஷ அபிஷேகங்கள் நடந்தது.
பால், பன்னீர், எண்ணை போன்ற பொருட்களை பயன்படுத்தி இந்த அபிஷேகங்கள் நடந்தது. கருடாவாழ்வார் சன்னதியிலும் அபிஷேகங்கள் நடந்தது. மேலும் தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் மூலவர் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பகல் 12.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு கம்பிகள் கட்டப்பட்டிருந்தது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் மற்றும் புளியோதரை, பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பயணிகளும் திரளாக கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் உள்ள மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெறுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு இதே விவேகானந்தபுரம் கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்துதான் தற்போது கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடந்துள்ளது. #Tirupati #TirupatiTemple
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்