என் மலர்
நீங்கள் தேடியது "slug 107163"
- ஐயா றப்பர் சுவாமிக்கும் அறம்வ ளர்த்தநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
- புத்தாடை மற்றும் பல்வேறு இனிப்புகளை வைத்து தீப ஆராதனை செய்யப்பட்டது.
திருவையாறு:
தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஐயாறப்பர் சுவாமிக்கும் அறம்வ ளர்த்தநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்து, லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு, முறுக்கு மற்றும் அதிரசம் ஆகிய பலகாரங்களை நிவேதனமாக சமர்ப்பித்து, தீப ஆராதனைகள் செய்ய ப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் மற்றும் சுயசாம்பிகை அம்மன் தம்பதியருக்கும், தெட்சணாமூர்த்தி, வினா யகர், சுப்பிரமணியர்சுவாமி, துர்கை, லெட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியருக்கும், சண்டிகேஸ்வரர், அகப்பே ய்ச்சித்தர் மற்றும் 63 நாயன்மா ர்களுக்கும் அபிஷேகம் செய்து புத்தாடைகள் அணிவித்து ஆராதனைகள் செய்யப்பட்டது.
மேலும், சன்னதி முன்னால் சுவாமிகளின் சார்பில் பட்டாசு வெடித்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடி வழிபாடு செய்யப்பட்டது. இவ்வழிபாட்டில் கோயில் சிவாச்சாரியார்கள், நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியின் அருள்பெற்றார்கள்.
இத ற்கான ஏற்பாடுகளை ஐயாற ப்பர் கோயில் நிர்வாகிகள் செய்திரந்தார்கள்.
- சனி பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்தி வேலூர் சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர், அக் 23-
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூர் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் மற்றும் வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபி ஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
- கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி கோவில் உள்ளது.
- கோவில் குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.
மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இதில் கோதண்ட ராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்தனர்.
- காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை.
- சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரங்கநாயகி உடனாகிய பாலவடரங்கநாதர் கோயில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பால வடரங்கநாதர் மற்றும் ரங்கநாயகிக்கு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அங்குள்ள ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோவில் அர்ச்சகர் ரமேஷ்ஐயர் செய்திருந்தார்.
- ஆஞ்சநேயரை புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
- ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் அதிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் 16 அடி உயர வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
இந்த ஆஞ்சநேயரை புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாதம் சனிக்கிழமையையொட்டி நேற்று வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிங்காரவடிவேலு.
தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் செய்திருந்தனர்.
- செல்வ முத்துக்குமாரசாமிக்கு 21 வகையான நறுமண திரவியபொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்.
- கேதார்நாத்திலிருந்து 20 மணி நேரத்தில் வருகை புரிந்து தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் புரட்டாசிமாத கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக வள்ளி, தெய்வானைஉடனாகிய செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு 21 வகையான நறுமன திரவியபொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மலர்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து சண்முகா ர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.
உடன் வேளாக்குறிச்சி இளவரசு சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கேதார்நாத்திலிருந்து 20 மணி நேரத்தில் வருகை புரிந்து தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம் செய்தது குறிப்பிடதக்கது.
- 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும் நடந்தது.
- முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.
இதையொட்டி மாலை கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். முப்பெரும்தேவி அம்மனுக்கு பன்னீர், மஞ்சள் உள்பட 21 வகையான அபிஷேகங்களும், 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது. பின் முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இரவு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு இரவு சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- துர்க்கை அம்மனுக்கு பால், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்படும்.
- சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இக்கோவிலில் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை மிகவும் விஷேசமானதாகும்.
அன்று துர்க்கை அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
- சங்கல்பம் மேற்கொண்டு சுவாமிக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது.
திருவையாறு:
திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. குடும்ப நன்மைக்காகவும், பொருளாதார மேன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், தேச அமைதிக்காகவும், முன்னோர்களின் ஆசி வேண்டியும் சங்கல்பம் மேற்கொண்டு சுவாமிக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது.
பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
- பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்.
தஞ்சாவூர் :
புரட்டாசி மாதம் பெருமாளு க்கு உகந்ததாகும்.
இந்த மாதத்தில் பெருமாள் பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கம்.
பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடை பெறும்.
இருப்பினும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பிரசித்தி பெற்றவை.
இதனால் புரட்டாசி மாத சனிக்கி ழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி இன்றுபுரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது.
பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொ டர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
பெருமாள் ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சியளித்தார்.
அதிகாலை யில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு குவிய தொடங்கினர்.
நேரம் செல்ல செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்.
இதே போல் தஞ்சை மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மேல ராஜா வீதி நவநீதகிருஷ்ணன், கீழ ராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளி அக்ரஹாரம் கோதண்ட ராம பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- தினமும் மாலை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
- விழாவின் முதல் நாளான நாளை பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம்.
அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.
நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7:30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
விழாவின் முதல் நாளான நாளை பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்படும். 26-ந் தேதி மீனாட்சி அலங்காரமும், 27-ந் தேதி சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் செய்யப்படும்.
30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்
- பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- பைரவர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு தேய் பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் சாமிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.