என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசநோய்"

    • வாழப்பாடி பேரூராட்சி அண்ணா நகரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
    • நம்பிக்கை மைய ஆலோசகர் சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர், 50- க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அண்ணா நகரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை வாகனத்துடன் நடைபெற்ற இம்முகாமை பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தொடங்கி வைத்தார்.

    சேலம் நடமாடும் எக்ஸ்ரே ஆய்வக நுட்புநர் ரவிச்சந்திரன், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர்கள் ராஜ்குமார், கவிதா, நம்பிக்கை மைய ஆலோசகர் சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர், 50- க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர்.

    காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாழப்பாடி அன்னை அரிமா சங்க தலைவர் ஷபிராபானு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க துரித பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் உலக காசநோய் தினவிழா கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    காசநோய் குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் வெளியில் தெரிந்தால் அச்சம் என்ற அடிப்படையில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளனர். தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் அனைத்துவிதமான நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தமிழக அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான போதிய மருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    சரிவர மருந்தை சாப்பிடாமல் இருப்பதால் தான் விளைவுகள் ஏற்படுகிறது. மேலும், மற்றவர்களுக்கு தொற்று நோயாக பரவாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ மனைகளை அணுகி முறை யாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுப்பதன் அடிப்படையில் தங்களைச் சார்ந்தோர்களுக்கும் பரவாமல் பாதுகாக்க முடியும். வருகிற 2025-க்குள் காசநோய் இல்லாத தமிழகமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருந்து தங்களை சார்ந்தவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    காசநோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் அதிக ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசால் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதுதவிர, தன்னார்வலர்களும் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் 52 காசநோய் கண்டறியும் நுண்ணோக்கி மையங்கள் உள்ளன. மேலும், 14 புதிய இருகண் நுண்ணோக்கிகள், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்களின் உபயோகத்திற்கென தற்போது வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், அனைத்துத்துறையைச் சார்ந்த அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, காசநோய் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்குவதற்கான பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மயிலாடுதுறையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தை கலெக்்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சுகாதாரத்துறையின் சார்பில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஊர்வலத்தை கொடியசைத்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    இந்தியாவில் காசநோய் காரணமாக 5 நிமிடத்திற்கு இருவர் இறந்துவிடுகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 913 நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றோம்.

    காசநோய் பரம்பரை வியாதியல்ல.

    காசநோய் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும், பெரும்பாலும் காசநோய் நுரையீரலைத் தாக்குகிறது. காசநோய் 80 சதவீதம் நுரையீரலையும், 20 சதவீதம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.

    காசநோய் அறிகுறி உள்ளவர்கள் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

    பின்னர் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் சங்கீதா, மாவட்ட கலெக்்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், மருத்துவ அலுவலர்கள் ஜெய்கணேஷ், கார்த்திக், ஆனந்த்பிரபு மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன.

    சேலம்:

    தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆத்தூர் நகராட்சி மந்தவெளி பகுதியில் கடந்த 3 நாட்களாக நடமாடும் நுண் கதிர் வீச்சு வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் நுண் கதிர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதனை கள் நடந்தன. இந்த வாரம் இறுதி வரை இந்த முகாம் நடைபெறும்.

    இதையொட்டி 33-வது வார்டு கவுன்சிலர் ராமச்சந்தி ரன் தலைமையில் சேலம் மாவட்ட காசநோய் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் கணபதி கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

    முகாமிற்கு வந்தவர்களுக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதுடன் அதன் தன்மை குறித்தும் அதற்கான அவசியம் தேவையான சிகிச்சை குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது. 2 வார சளி இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், நெஞ்சுவலி, காச நோயின் அறிகுறிகள் ஆகும். நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படுப வர்களுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்து ரைக்கப்பட்டனர்.

    மேலும் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் வீரமணிகண்டன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்து இருந்தனர். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்.

    • காசநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சக்க ராஜாக்கோட்டை மூதனூர் தாயாதியார் சாவடி வளாகத்தில் தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக சக்காராஜா கோட்டை சத்திரிய ராஜூக்கள் பொது மகாசபையும், விருதுநகர் மாவட்ட காசநோய் கழகமும் இணைந்து காசற்ற இலவச காசநோய் கண்டறியும் முகாமை நடத்தியது.

    முகாமில் சக்கராஜாக் கோட்டை சத்திரிய ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட ராஜா, ரவிராஜா, ஜெகநாத ராஜா, பலராம ராஜா, நகராட்சி ஆணையாளர். பார்த்தசாரதி மற்றும் சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் காசநோய் கண்டறி யப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனை மூலம் தொடர்பு கொள்ளப்படு வார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி அவர்களது இல்லம் தேடி வந்து விடும் என தெரிவிக்கப்பட்டது.

    காச நோயற்ற தமிழகம் காண்போம் என்ற தலைப்பில் (காசற்ற) இலவச முகாம் சிறப்பாக நடத்தியதை சமூக ஆர்வலர்கள் வரவேற்று பாராட்டினார்கள்.

    முகாம் ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் மற்றும் தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.

    • கல்லூரி தாளாளர் தோமஸ் ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • கல்லூரி மூத்த பேராசிரியர் செல்வின் இன்பராஜ் வரவேற்று பேசினார்.

    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஞான தீபம் கல்லூரியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஞான தீபம் கல்லூரி தாளாளர் தோமஸ் ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மூத்த பேராசிரியர் செல்வின் இன்பராஜ் வரவேற்று பேசினார்.

    முகாமில் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் பிரிட்டோ கலந்துகொண்டு காசநோய் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். அதில் காசநோய் எவ்வாறு வருகிறது, அதன் அறிகுறிகள், எவ்வாறு காசநோய் வராமல் தடுக்கலாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் காசநோய்க்கு என்னென்ன மருந்துகள் உட்கொள்ளலாம் போன்றவற்றினை குறித்து மாணவர்களிடையே பேசினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். மேலும் வெட்டுமணி அரசு மருத்துவமனை சுகாதார பார்வையாளர்கள் சாந்தி மற்றும் அகிலா ஆகியோர் இந்த முகாமில் கலந்துகொண்டனர். விழா முடிவில் ஆசிரியை சிஞ்சு நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஞானதீபம் கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மன்ப்ரீத் கவுர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார்.
    • காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    24 வயதான இந்திய வம்சாவளி பெண்ணான மன்ப்ரீத் கவுர் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார். படிக்கும் போதே வேலை செய்து தனது செலவுகளை அவர் கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். அதன்படி மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் எறியுள்ளார். ஆனால் விமானத்தில் ஏறி அவள் சீட் பெல்ட்டை அணிய முயன்றபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

    காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. காசநோய் நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும்.

    காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #Vijayabaskar

    சென்னை:

    மாமல்லபுரத்தில் தமிழக தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து காசநோய் இல்லாத தமிழ்நாடு-2025 உருவாக்கும் கருத்தரங்கு நடைபெற்றது.

    இதை துவக்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரால் 2017 அக்டோபர் மாதம் காசநோய் இல்லாத சென்னை என்ற திட்டம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் நோயாளிகளை இல்லம் தேடி சென்று காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவன துணைத் தலைமை இயக்குனர் சவும்யா சாமிநாதன், அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிக்கோல் சுகி, வீகாஷ் ஷீல் பங்கேற்று பேசினார்கள்.  #Vijayabaskar

    காசநோயை கண்டறியும் நடமாடும் மருத்துவ ஆய்வகத்தை புதுக்கோட்டையில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
    புதுக்கோட்டை:

    மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று காசநோயை கண்டறியும் வகையில் நடமாடும் மருத்துவ ஆய்வகத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ ஆய்வகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முற்றிலுமாக ஒழித்திடும் வகையில்் காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இலவச பரிசோதனை மற்றும் சிசிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் 2025-க்குள் காசநோய் இல்லாத நிலையை ஏற்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் சென்று காசநோயை பரிசோதிக்கும் CBNAAT என்ற புதிய வகை பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காசநோயை பரிசோதிக்கும் நடமாடும் மருத்துவ ஆய்வகத்தில் உள்ள CBNAAT முறையின் மூலம் சளி பரிசோதனை மேற்கொண்டு 2 மணி நேரத்தில் காசநோயை இருப்பதை கண்டறிந்து உறுதிபடுத்தலாம். மேலும் மருந்துக்கு கட்டுப்படாத காசநோய், சந்தேகமான காசநோய் பாதிப்பு, எச்.ஐ.வி. தொற்று மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் இருப்பதையும் இதன் மூலம் கண்டறியலாம்.

    மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் காசநோயை கண்டறியும் நடமாடும் ஆய்வகத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இருமல் மற்றும் காய்ச்சல், எடை குறைதல், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், எச்.ஐ.வி-தொற்று உள்ளவர்கள் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் இதன் மூலம் தங்களது இருப்பிடங்களிலேயே காசநோய் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சந்திர சேகர், துணை இயக்குனர் (காசநோய்) பெரியசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    ×