என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல்"

    • வங்காளதேச கடலோர காவல் படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • இரு நாடுகளின் கடலோர காவல் படைகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    சிட்ரங் சூறாவளி தாக்குதலால் வங்காளதேச மீனவர்கள் சென்ற மீன்பிடி படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 20 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர்.

    இதன்பின்னர், கடலில் மிதந்த பெரிய பொருள் ஒன்றை பிடித்து கொண்டு உதவிக்காக வெகுநேரம் காத்திருந்துள்ளனர்.

    இந்த நிலையில், அந்த வழியே இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் விமானம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. இதில், நடுக்கடலில் சிக்கி தவித்த வங்காளதேச மீனவர்களை இந்திய படை வீரர்கள் கவனித்தனர்.

    இதனை தொடர்ந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு மீனவர்களை மீட்டனர். அவர்களை வங்காளதேச கடலோர காவல் படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இரு நாடுகளின் கடலோர காவல் படைகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    • வண்டலூர் பூங்கா கொண்டு செல்லப்பட்டது
    • ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கழுகுகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரிமாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வந்த ஓகி புயலின் போது காற்றின் திசையால் அடித்து வரப்பட்ட சினேரியஸ் இனத்தை சேர்ந்த அரிய வகை கழுகு ஆசாரிபள்ளம் அருகில் விழுந்து கிடந்துள்ளது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் உடலில் காயத்துடன் பறக்க முடியாத நிலையில் இருந்த இரண்டு வயதான கழுகை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து குணமானதும் அதனை தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பல்லுயிரன பூங்காவில் விசாலமான இரும்பு வலை பின்னிய கூண்டில் விட்டனர். 2 நாள்களுக்கு ஒரு முறை மாமிச இறச்சியும், தண்ணீரும் கொடுத்து 5 வருடமாக பாதுகாத்து வந்தனர்.

    கூட்டமாக வானில் சுதந்திரமாக பறந்து திரியும் கழுகை ஒரே இடத்தில் அடைத்து வைத்திருப்பது அதன் சுதந்திரத்தை பாதிக்கும் என்பதால் அதை கழுகுகள் வாழும் பகுதியில் கொண்டு விட மாவட்ட வனத்துறை முயற்சி மேற்கொண்டு வந்தது.ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூரில் இருக்கும் கழுகுகள் சரணாலயத்தில் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

    பின்பு அதை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் குழுவினர் ஆலோசனை பெற்று அதன் படி திட்டமிடப்பட்டது.சாலை அல்லது ரயில் மூலம் கொண்டு சென்றால் பயண நேரம் அதிகமாகும் இதனால் கழுகின் உயிர் ஆபத்து வந்து விட கூடாது என முடிவு செய்து விமானத்தில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் நாய் பூனை தவிர மற்ற விலங்குகள் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால் தமிழக வனத்துறை மூலம் மத்திய விமான துறை அமைச்சகம் மூலம் பேசி அனுமதி பெறப்பட்டது.

    இதனையடுத்து கழுகை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக பிரத்தியேக பைபரில் ஆன கூண்டு தயார் செய்து அதில் வைத்து கொண்டு செல்ல நடவடிக்கைகள் நேற்று உதயகிரி கோட்டையில் வைத்து நடைபெற்றது.மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலையில் கழுகை கொண்டு செல்ல அது 5 வருடமாக வாழ்ந்து வந்த இடத்தில் உள்ள மண் புளி இலை தரையில் உள்ள புல் ஆகியவற்றை கூண்டுக்குள் வைத்தனர்.பின்னர் கழுகிற்காக அமைக்கபட்ட தண்ணீர் தொட்டி அதனுள் வைக்க பட்டது. கழுகை பராமரித்து வந்த ஊழியர் ராஜா பைபர் கூண்டுக்குள் கொண்டு விட்டார்.

    கோட்டைக்கு வெளியே தயாராக நின்ற ஏசி காரில் பத்திரமாக புறப்பட்டு சென்றது.உதயகிரி கோட்டையில் இருந்து சென்ற கழுகு இன்று மதியம் வண்டலூர் பூங்காவிற்கு சென்று அங்கு 3 நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு நவம்பர் 3-ம் தேதி சென்னை ஏர் இந்தியா விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூரில் உள்ள கழுகுகள் சரணாலயத்தில் ஒப்படைக்க படுகிறது.

    • சென்னை மற்றும் புறநகரில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 24 மணிநேரத்தில் 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நேற்று உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்தது. இதனால் தமிழகத்தில் வருகிற 14-ந்தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் அது மேலும் வலு குறைந்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருகிறது.

    மேலும், தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். சென்னை மற்றும் புறநகரில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    மேலும், குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை.
    • சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர நடவடிக்கை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்ன ங்குடி, கீழையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பார்வையிட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்,

    மேலும் சின்னங்குடி மீனவர் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், அரசினர் உயர்நிலைப்பள்ளி சுற்றி குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும் சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் உறுதியளித்தார்.

    அதைத் தொட ர்ந்து கீழையூர், கிடாரங்கொ ண்டான், புன்செய், தலைச்சங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிரு ப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், ஒன்றிய குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

    இதனால் வரும் 8ம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை புயல் நெருங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.

    • தமிழகத்தில் வரும் 8ம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும்.
    • தமிழகத்தின் வானிலை முன்னெச்சரிக்கை குறித்து தலைமை செயலாளருடன் ஆலோசித்ததாக பாலசந்திரன் பேட்டி.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதனால், தமிழகத்தில் வரும் 8ம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் இறையன்பு உடன், தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, தமிழகத்தின் வானிலை முன்னெச்சரிக்கை குறித்து தலைமை செயலாளருடன் ஆலோசித்ததாக பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

    • சாலைகள் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    • பஸ் நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வங்க கடலில் நிலை கொண்டுள்ள தீவிர மாண்டஸ் புயல் காரணமாக வேதாரணத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் அலைகள் 5 அடி உயரம் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது.

    கடல் சீற்றம் காரணமாக ஆற்காடுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவாக பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    வேதாரண்யம் பகுதியில் இரவில் இருந்து கடும் குளிர் காற்று வீசி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி உள்ளனர்.

    இதனால் சாலைகள் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம்யின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் பேருந்து நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க தயார் நிலையில் காவல் துறை சார்பில் மீட்பு படையினர் வேதா ரண்யத்தில் முகாமிட்டு ள்ளனர்.

    • வங்க கடலில் உருவாகி யுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • இதன் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்தால் உடனடியாக அகற்ற மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    ராசிபுரம்:

    வங்க கடலில் உருவாகி யுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், கொல்லிமலை, புதுச்சத்திரன் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ரப்பர் படகுகள், கயிறு, லைப் ஜாக்கெட்கள், வீடு களுக்குள் வெள்ளம் புகுந்தால் உடனடியாக அகற்ற மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    மேலும் பெரு வெள்ளம் சமயத்தில் மக்களை பாது காப்பாக தங்க வைக்க திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவன முடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
    • 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    தரங்கம்பாடி:

    வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    சின்னூர்பேட்டை, சந்திரபாடி தரங்கம்பாடி சின்னங்குடி வானகிரி பூம்புகார் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் 28 மீனவர் கிராமங்களிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 விசைப்படகுகளும் 15,000 பைபர் படகுகளும் உள்ள நிலையில் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் ஏற்றி நிறுத்தி உள்ளனர். தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக பகுதியில் பல அடி உயரத்திற்கு அலைகள் சீறிப் பாய்கின்றன.

    துறைமுகத்தின் தடுப்புச் சுவர்களை அலைகள் மோதி தாண்டி உள்ளே நுழைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

    தற்போது 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் 25 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உள்ளது போல் மீனவர்களுக்கும் மீனவர் நல கூட்டுறவு வங்கிகள் தொடங்க வேண்டும் என்றும் இதனால் தங்களுக்கு இது போன்ற தடை காலங்களில் நிவாரணம் பெறவும் கடனுதவி பெறவும் பெரும் வசதியாக இருக்கும் என்று மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே இன்று மாலைக்கு மேல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    • மே 28-ந்தேதி வரை அக்னி வெயில் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும்.
    • வங்கக்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி வளி மண்டலத்தில் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. மே 28-ந்தேதி வரை அக்னி வெயில் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும்.

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோடை மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 7-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயலின் தாக்கம் முடிந்த பிறகு வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் பி.செந்தாமரைகண்ணா கூறியதாவது:-

    வங்கக்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி வளி மண்டலத்தில் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால் 7-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. 8-ந்தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பிறகு 9-ந்தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது வடக்கே மத்திய வங்கக்கடலை நோக்கி நகரும்போது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் பாதை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச கடற்கரையை ஒட்டி இருக்கும்.

    தமிழகத்தை பொறுத்தவரை மழையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. எனவே மழை குறைய வாய்ப்புள்ளது. இந்த புயலின் தாக்கமானது வங்கக் கடலில் நிலவி வரும் ஈரப்பதம் முழுவதையும் இழந்துவிடும். இதனால் வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு மோக்கா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்து வந்த நிலையில் 101 டிகிரி வெயில் பதிவானது . சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். மேலும் காலை மற்றும் மதிய நேரங்களில் வெயில், மாலை நேரங்களில் புழுக்கம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்துவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் மிக கனமழை பெய்த காரணத்தினால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிப்ப டைந்து விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

    இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மோக்கா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும், கடல் காற்றானது மணிக்கு 50 முதல் 80 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் வங்க்கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒருபுறம் சுட்டெரிக்கும் வெயில், திடீர் கனமழை என இருந்து வந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும்.
    • 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயலானது நாளை மே 11 ம் தேதி காலை கடுமையான சூறாவாளி புயலாக மாறும் எனவும் இது பங்களாதேஷ் மியான்மர் இடையை மே 14 ம் தேதி கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து தூரத்தில் புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் நாகை, காரைக்கால், சென்னை, கடலூர், புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    ×