search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141661"

    • உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
    • உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-தஞ்சாவூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07325) வருகிற 20-ந்தேதி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3, 10, 17, 24-ந்தேதி ஆகிய 5 நாட்கள் இரவு 8.25 மணிக்கு உப்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூரை சென்றடையும்.

    மறுமார்க்கமாக தஞ்சாவூர்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.

    இந்த ரெயில் இருமார்க்கமாகவும் ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிகர், தாவணகெரே, பீரூர், அரிசிகெரே, துமகூரு, சிக்கபானவாரா, சர் எம்.விசுவேஸ்வரய்யா முனையம் பெங்களூரு, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திருச்சி போர்ட், திருச்சி சந்திப்பு, பூதலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    • திருவிழாவானது தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.
    • கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிப்பு

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆயா கோவில் என்று அழைக்கப்படும் அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு பழமையான இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று இரவே தொடங்கிய திருவிழா இன்று விமரிசையாக கொண்டா டப்பட்டு வருகிறது. திரு விழாவை ஒட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர், வெளியூர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அதிகாலை யிலேயே பொங்கல் வைத்தும், ஆடுகளை பலியிட்டு விருந்து அளித்தும் வேண்தலை நிறைவேற்றினர்.

    திருவிழாவில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி, கரூர், ஈரோடு, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும், விளையாட்டு சாமான்கள், பொம்மைகள் உள்பட பல்வேறு கடை களையும் வியா பாரிகள் வைத்திருந்தனர். தீய ணைப்பு படையினர் தயார் நிலையில் இருந்தனர். புதுச்சத்திரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
    • இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

    சேலம்:

    வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் சேலத்தில் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்குகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதையொட்டி வெள்ளிப் பொருட்கள் கேட்டு வட மாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    இதனால் சேலம் செவ்வாய்ப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நவராத்திரி விழாவின் போது வடமாநிலங்களில் பெண்கள் லைட் வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் வாங்குவார்கள். இதையொட்டி வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடக,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் தெரிவித்தார்.

    • பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது என்று சேலம் மாவட்ட கலெக்டர் தகவல் வெளியிட்டுள்ளார்.
    • முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 250 முதல் 1000 சதுர.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன் குஞ்சு, மீன் தீவனம், உரங்கள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பண்ணைப் பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான ஒரு அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    இந்த மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    எனவே, இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 10-ந்தேதிக்குள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வாழப்பாடி பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் 2 பேர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது பெற்றோர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதிக்கையில் சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின்படி வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமியை 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இதில் ஒருவர் சிக்சினார். அவர் வாழப்பாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி வெள்ளியங்கிரி (வயது 21) ஆவார்.

    இதனை தொடர்ந்து போலீசார், போக்சோ சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்து,ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவான வாழப்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • சுதந்திரத்திருநாள் ‘அமுதப்பெருவிழா’வை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதாக அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும், தங்களது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேசிய க்கொடிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் (பொறுப்பு) சபீனா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரத்திருநாள் 'அமுதப்பெருவிழா'வை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதாக அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதில் அனைத்து தொழிற்சாணலை களிலும் நிர்வாகத்தினர் கொடியேற்றுவது மட்டுமின்றி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடுகளிலும் கொடியேற்ற ஏதுவாக தேசிய க்கொடிகளை வழங்கி ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும், தங்களது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேசிய க்கொடிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.மேலும் தொழிற்சாலை நிறுவனங்கள் சுதந்திரத்திருநாள் 'அமுதப்பெ ருவிழா' கொண்டாடப்பட்ட விவரங்களை, மாவட்ட வாரியாக போட்டோக்களுடன் கூடிய அறிக்கையை சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • துப்பாக்கி தயாரித்ததாக கடந்த மே மாதம் ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர் படுத்தினர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த என்ஜி னீயர் சஞ்சய் பிரகாஷ் (வயது 24), எருமாபாளையத்தை சேர்ந்தவர் பி.சி.ஏ.பட்டதாரி நவீன்சக்ரவர்த்தி (25), அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் கபிலன் (25) .

    இவர்கள் துப்பாக்கி தயாரித்ததாக கடந்த மே மாதம் ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறபபு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர் படுத்தினர்.

    அப்போது 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. போலீ சார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசா ரணை வருகிற 16ந் தேதி மீண்டும் சென்னை கோர்ட்டில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து மீண்டும் பலத்த பாதுகாப்புடன் சேலத்திற்கு அழைத்து வரப்பட்ட 3 பேரும் சேலம் மத்திய சிறையில் நேற்றிரவு அடைக்கப்பட்டனர். 

    • கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 4- வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி.

    இவரது2-வது மனைவி அலமேலு ( வயது 46). இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று கண்ணன் - அலமேலு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு, ஒருவரை–யொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. அந்த சமயம் கண்ணனுக்கு ஆதரவாக அவரது தம்பி குமார் மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த குமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து பெற்று வருகிறார்.

    இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்ன–தானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் அலமேலுவை கைது செய்து சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைந்தனர்.

    • இதற்கு பட்டியல் அணியின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ்குமார்ராஜா தலைமை வகித்தார்.
    • ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தஞ்சாவூர்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பருவ தேர்வு வினாத்தாளில் ஜாதி பெயரை குறிப்பிட்டு கேட்கப்பட்ட ஒரு கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும், அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு பட்டியல் அணியின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ்குமார்ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொதுச் செயலாளர் முரளிதரன், விவசாய அணி மாநில துணை தலைவர் பண்ணவயல் இளங்கோ, ஐ.டி. பிரிவு மாவட்ட தலைவர் தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தை கலக்கிய ஏ.டி.எம். கார்டு கொள்ளையர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 2 பேர் மீது முதியவர்களிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியை சேர்ந்த சிவானந்தன் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் (30).

    நண்பர்களான இருவரும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு, பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம், பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து, அசல் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கிக்கொண்டு போலி கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

    இருவர் மீதும் கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டு எடப்பாடி பகுதியில், முதியவர்களிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த இளைஞர்கள் 5 ஆண்டுகளாக ஏடிஎம் பணக் கொள்கையடித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து 38 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இருவரையும் எடப்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

    • சேலம் மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சேலம் மாநகராட்சியில் மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கல்வி நிலைக்குழு மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

    சேலம் மாநகராட்சியில் 51 துவக்கப்பள்ளிகள், 29 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகள், 7 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இப்பள்ளிகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டுதல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், கணினி உபகரணங்கள் வாங்குதல், ஆய்வகங்கள் வசதி ஏற்படுத்துதல், தளவாட சாமான்கள் வாங்குதல், பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிப்பிட வசதி, நூலகங்கள் ஏற்படுத்துதல், விளையாட்டு மைதானங்கள், சுற்றுசுவர் போன்ற கல்வி மேம்பாட்டு பணிகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது குறித்து ஆலோசிக்கபப்ட்டது,

    மேலும் மேற்குறிப்பிட்ட மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி நிதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு, சமூக பொறுப்பு நிதி, நமக்கு நாமே திட்டம் மற்றும் அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றில் இருந்து மேற்கொள்ளுவது குறித்தும், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர கோருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது:

    மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்வது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

    அனைத்து பள்ளிகளிலும் மாணவமாணவியர்களுக்கு கழிப்பிட வசதியும், நூலக வசதியும் சுற்றுசுவர் அமைத்தலும் மிக முக்கியமானதாகும். மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் மாணவமாணவியர்களுக்கு கல்வியை கற்று தருகிறார்கள்.

    அந்த பள்ளிகளுக்கு மிக முக்கிய தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதை நோக்கமாக கொண்டு புது பொலிவுடன் கூடிய மாநகராட்சி பள்ளியாக மாற்றி அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    கல்வி நிலைக்குழு உறுப்பினர்கள் மாநகராட்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்து கூறியுள்ளிர்கள். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் நிறைவேற்றி தரப்படும்.

    • பொதுபல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    • சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த மையங்க–ளில் திரளான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

    சேலம்:

    மத்திய பல்கலைக்–கழகங்கள்-44, மாநில பல்கலைக்–கழகங்கள்- 12, நிகர்நிலை பல்கலைக்– கழகங்கள்- 11, தனியார் பல்கலைக்கழகங்கள்-19 ஆகியவற்றில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான 2022-2023 -ம் ஆண்டு முதல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி.) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பிளஸ்-2 முடித்து உயர்படிப்புக்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகள் பலர் விண்ணப்பித்தனர்.

    இதனை தொடர்ந்து பொது பல்கலைக்கழக இளநிலை நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் 500 நகரங்களில் தொடங்கியது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த மையங்க–ளில் திரளான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். காலையில் தாள்-1 தேர்வு 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வரையிலும், மாலையில் தாள்-2 தேர்வு 3 மணி நேரம் 45 நிமிடங்கள் வரையிலும் நடைபெற்றது. அதாவது தாள்-1 தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து தாள்-2 தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 6.45 மணி வரை நடைபெற்றது.

    இன்று முதல் தொடர்ந்து பொதுபல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×