என் மலர்
நீங்கள் தேடியது "டெங்கு காய்ச்சல்"
- சிறுமி வசித்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ராகஸ்ரீ (வயது6). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுமி ராகஸ்ரீக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெற்றோர் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு காய்ச்சல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி ராகஸ்ரீ நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். டாக்டர்களின் பரிசோதனையில் சிறுமி ராகஸ்ரீக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து சிறுமி வசித்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உடல் நிலை பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- 13 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் :
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 39 மருத்துவ குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.
இதுவரை மாவட்டத்தில் பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. ஒருசிலர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி அவர்கள் குணமடைந்து விட்டனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மேற்கொண்டு வருவதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர்.
- மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதற்கான துவக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர்கள், கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வக ங்கள், நூலகம் மற்றும் புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பருவ தேர்வுகள் தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கவும், கல்லூரி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்கவும், குழுக்களை அமைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ள து" என்றார்.
- கேரளாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் இப்போது மீண்டும் அதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- தண்ணீர் தேங்கும் இடங்களையும், கொசு உற்பத்தியாகும் பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி காய்ச்சல் பரவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே கேரளாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் இப்போது மீண்டும் அதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுகாதார துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தண்ணீர் தேங்கும் இடங்களையும், கொசு உற்பத்தியாகும் பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- உமாவிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
- உமாவின் சகோதரர் பெருமாள் என்பவர் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் உமா (வயது31). இப்ப பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.
இதையடுத்து உமாவை நேற்று முன் தினம் மாலை ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. எனவே டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உமா பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து நேற்று உமாவின் சகோதரர் பெருமாள் என்பவர் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துவந்த போதிலும் காய்ச்சல் குணமாகவில்லை.
- மாணவிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூா் மாநகரில் அண்மையில் பெய்த பருவமழையால் பரவலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் வசித்து வரும் தொழிலாளியின் 9 வயது மகள் நெசவாளர் காலனியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துவந்த போதிலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத்தொடா்ந்து, மாணவிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனர்.
இதுகுறித்து மாணவியின் தந்தை கூறுகையில், திருப்பூர் நெசவாளர் காலனி பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் 2, 3 கழிப்பறைகள் மட்டுமே உள்ளது. இந்தக் கழிப்பறைகளும் சுத்தமாக பராமரிக்கப்படாததால் மாணவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது. ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் நோய் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தெருக்கள் தோறும் புகை மருந்து அடிப்பது, வீடுகள் தோறும் சென்று கொசுப்புழுக்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- டெங்கு பரவும் அபாயம் ஏற்படுவதாக புகார்
- தூர்வார பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆம்பூர்:
ஆம்பூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடன டியாக சாக்கடை கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கந்தர்வகோட்டை அருகே ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது
- சுகாதார பணியாளர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பட்டியல் வசித்து வரும் ஒரு நபருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது.தகவல் அறிந்த வட்டார மருத்துவ அதிகாரி மணிமாறன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான மருத்துவத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் இணைந்து துவார் ஊராட்சியில் தூய்மைப்பணி, காய்ச்சல் சர்வே, குளோரி நேசன் ஆய்வுகள் செய்யப்பட்டது. மேலும் பொது மக்களிடம் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா செந்தில், வெள்ளாள விடுதலை மருத்துவ அலுவலர் ரஞ்சித், சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
- டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது.
கயத்தாறு:
கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கயத்தாறு பேரூராட்சி மற்றும் மருத்துவ அதிகாரிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கட்டபொம்மன் தெருவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கயத்தாறு பேரூராட்சி மன்றம் ஏற்பாட்டில், மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். மேலும் கொசு புழு ஒழிப்புக்காக எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, முன்னாள் பேரூர் செயலாளர் இஸ்மாயில், வழக்கறிஞர் மாரியப்பன், சுகாதார அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி சுகாதார, துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மாணவ-மாணவிகள் அதிகமாக உள்ளனர்.
- நோய் தடுப்பு பணிகளை தீவிர படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாம்பவர் வடகரை:
சாம்பவர் வடகரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குழந்தைகள், பெண்கள் சிறுவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் சாம்பவர் வடகரை மற்றும் தென்காசி அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மாணவ-மாணவிகள் அதிகமாக உள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு கண்டறியப்படுவதால் டெங்கு காய்ச்சலாக இருக்கும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கொசுக்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சியில் இருந்து சாக்கடைகளை சுத்தம் செய்தும் குப்பைகளை அகற்றும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுகாதாரத்துறையும், பேரூராட்சியும் டெங்கு பரவலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
- நோயாளிகளுக்கு ஏற்றப்படும் குளுக்கோஸ் பாட்டில்களை இரும்பு ஆங்கிள்களில் தொங்கவிடாமல் அருகில் இருக்கும் ஜன்னல் கம்பிகளில் பிளாஸ்டிக் கவர்கள் மூலம் கட்டி தொங்கவிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனையை ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி பலமுறை நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஆலங்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. ஆனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சற்று திணறி தான் வருகிறது. அதற்கு போதிய டெங்கு ஒழிப்பு பணியாளர் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.
ஆலங்குளத்தில் சுமார் 40 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. ஆனால் டெங்கு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்கள் வெறும் 10 பேர் மட்டுமே உள்ளனர். டெங்கு மஸ்தூர் பணியாளர் பேரூராட்சியால் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த 10 பேரில் சிலரை வரி வசூல் செய்யவும், வீடுகளை அளவீடு செய்யும் பணிக்கு அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது.
சாதாரணமாக 80 மஸ்தூர் பணியாளர்கள் பணியமர்த்த வேண்டிய இடத்தில் வெறும் 10 டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சுகாதாரத்துறையும், பேரூராட்சியும் டெங்கு பரவலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நோயாளிகளுக்கு ஏற்றப்படும் குளுக்கோஸ் பாட்டில்களை இரும்பு ஆங்கிள்களில் தொங்கவிடாமல் அருகில் இருக்கும் ஜன்னல் கம்பிகளில் பிளாஸ்டிக் கவர்கள் மூலம் கட்டி தொங்கவிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சிறுவன் டெங்கு காய்ச்சலால் இறந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குளம் ராஜிவ் நகரை சேர்ந்தவர் தங்கம், சங்கீதா தம்பதியினர். தங்கம் கூலி தொழிலாளி. இவர்களுக்கு பர்வீஷ் (வயது11), பூனிஷ் (9) என 2 மகன்கள்.
2 பேரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆலங்குளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். காய்ச்சல் தொடரவே 2 பேரும் கடந்த 24-ந் தேதி ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ரத்ததில் அணுக்கள் குறைந்து டெங்கு காய்ச்சல் என கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சகோதரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பூனிஷ்க்கு டெங்கு காய்சல் தாக்கம் அதிகரித்து மூளை காய்ச்சலாக மாறியதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவன் நேற்றிரவு பலியானான்.
பர்வீஷ்க்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, உயிரிழப்பு ஏற்படும் முன்பு போதிய டெங்கு ஒழிப்பு பணியாளர் நியமித்து டெங்கு ஒழிப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிவகிரி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- தெருக்களில் புகை மருந்து அடித்தல், நிலவேம்பு குடிநீர் வழங்கல் பணிகள் நடைபெற்றது.
சிவகிரி:
தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் முரளி சங்கர் ஆலோசனையின்படி, சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தென்காசி நலக்கல்வியாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார். வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி மேற்பார்வையில் சந்திவிநாயகர் கோவில் தெரு, தெற்கு ரத வீதி, ஆர்.சி.சர்ச் தெரு, அம்பேத்கர் தெரு ஆகிய தெருக்களில் புகை மருந்து அடித்தல், நிலவேம்பு குடிநீர் வழங்கல், டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல் மற்றும் வீடுகள் தோறும் சென்று காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு ஆகியன நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராஜாராம், கவுன்சிலர்கள், குழு மேற்பார்வையாளர் தினேஷ் குமார், துப்புரவு சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முருகையா, இசக்கி, டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராஜாராம் செய்திருந்தார்.