என் மலர்
நீங்கள் தேடியது "slug 152272"
- போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
- என்ஜினீயரிங் படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார்.
கோவை:
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரிடம், எதுவும் சொல்லாமல் சேலத்தில் இருந்து தனது மொபட்டில் தனியாக கோவை கே.ஜி.சாவடிக்கு வந்தார். அப்போது மொபட்டில் பெட்ரோல் இல்லாமல் நின்று போனது.
இதனையடுத்து அந்த இளம்பெண் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார். அங்கு ரூ.450, பெட்ரோல் போட்டுவிட்டு கையில் பணம் இல்லை என அவர்களிடம் தெரிவித்தார். இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முருகசாமி விரைந்து சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகசாமி இளம் பெண்ணின் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார்.
அப்போது அவர்கள் தங்களது மகளை காணவில்லை என புகார் கொடுக்க கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இருப்பதாக தெரிவித்தனர்.பின்னர் அவர்கள் போலீசாரிடம் தங்களது மகளை அங்கே பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் நாங்கள் கோவை வந்து அழைத்து செல்கிறோம் என கூறினர்.
பின்னர் இளம் பெண்ணின் பெற்றோர்கள் வந்ததும் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கணவர் குளச்சல் போலீசில் புகார்
- பாலப்பள்ளம் வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே பத்தறை பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை தொழிலாளி. இவரது மனைவி அபிஷா (வயது 30). இருவருக்கும் கடந்த 2017-ல் நெய்யூரில் வைத்து திருமணம் நடந்தது.இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.கடந்த 12-ந்தேதி அபிஷா பாலப்பள்ளம் வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்த தங்கத்துரை வீடு பூட்டி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அபிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிஷாவை தேடி வருகின்றனர்.
- இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண்ணின் தாய் கணேசமணியின் தந்தையிடம் ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்
விருதுநகர்
சிவகாசி கவிதா நகரைச் சேர்ந்தவர் கணேசமணி, சமையல் தொழிலாளி. இவரும் கோவில்பட்டியைச் சேர்ந்த 16 வயது பெண்ணும் ஆன்லைன் கேம் மூலம் பழகி வந்துள்ளனர். அவர்களது பெற்றோர் 4 ஆண்டுகளுக்கு பின்பு திருமணம் செய்யலாம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணின் தாய் கணேசமணியின் தந்தையிடம் ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதனை அவர் சொன்னபடி திருப்பி கொடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கணேசமணி கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி 16 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் சிவகாசி பர்மா காலனி, கவிதா நகர் ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளனர். இதன் பின்னர் கணேசமணியின் தந்தை 16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியு ள்ளார். அவருடன் இருப்பவர்களை போட்டோ எடுத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இளம்பெண்ணுடன் இருந்த ராணுவ வீரரையும் போட்டோ எடுத்து அவரிடம் பணம் கேட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிவகாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசமணி, சுடலை மற்றும் கணேசமணியின் தந்தை, இளம்பெண்ணின் தாய், ராணுவவீரர் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- குழந்தை இல்லாததால் கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (50). இவரது கணவர் பாலசுப்பிரமணியன். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்களது மகளான செல்லகனிக்கு சாத்தூர் சுப்பிரெட்டியபட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் சென்னையில் மளிகை கடை நடத்தி வந்தனர்.
குழந்தை இல்லாததால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முனீஸ்வரன், வத்திராயிருப்பில் உள்ள மாமனார் வீட்டில் செல்லக்கனியை விட்டுச் சென்றார்.
இந்த நிலையில் சாத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முனீஸ்வரன் மனுதாக்கல் செய்தார். இதை அறிந்த செல்லக்கனி நேற்று காலை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லக்கனி இறந்தார். இதுகுறித்து செல்லகனியின் தாய் அமுதா கொடுத்த பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணி வேலையை முடித்து வீட்டுக்கு வந்தபோது மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- இதையடுத்து மணி வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து மாயமான தனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தருமாறு புகார் செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மாதூர், ஐச்சிமார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி (32). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மணி பெருந்து றையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மணி அந்தியூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கால்நடை கடனாக ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.அதற்கு மாதம் ரூ.4,565 தவணை செலுத்தி வந்துள்ளார். தவணை காலம் கடந்து கடன் தொகையை செலுத்து வதாகவும், இதற்காக மணி அபராத வட்டி செலுத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று மணி வேலைக்கு சென்று இருந்தபோது வங்கியின் மேலாளர் மற்றும் பணியாளர் மணி வீட்டுக்கு வந்து அவரது மனைவியிடம் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் இல்லா விட்டால் கையெழுத்து போட்டு கொடுத்து கடனை முடித்து கொள்ள நிர்பந்தம் செய்துள்ளனர்.
இது குறித்து அவரது மனைவி தனது கணவரிடம் போனில் பேசியுள்ளார். அதற்கு மணி நீ கடன் வாங்கியதால் தான் இவ்வளவு பிரச்சனை என்று மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது.
பின்னர் இரவு மணி வேலையை முடித்து வீட்டுக்கு வந்தபோது மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் குறித்து தகவல் கிடைக்கவில்லை.
இதையடுத்து மணி வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து மாயமான தனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தருமாறு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை
- மதியம் வந்து பார்த்த போது மனைவியையும் குழந்தையையும் காணாது அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த 40 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள ஆளூர் பகுதியை அடுத்த தோப்புவிளையை சேர்ந்தவர் ஜெயபாஸ்கர். இவரது மகள் அஸ்வினி (வயது25).
இவர் கொடுப்பைக்குழி யில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கம்பெனிக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு மாலையில் அஸ்வினி வீடு திரும்ப வில்லை.
உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இது குறித்து அவரது தந்தை ஜெயபாஸ்கர், இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அஸ்வினியை தேடி வருகின்றனர்.
இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் (37), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மேழ்சி (35). இவர்களது மகள் ஜாஸ்மின் லியா (5). நேற்று முன்தினம் ஜோஸ் வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மதியம் வந்து பார்த்த போது மனைவியையும் குழந்தையையும் காணாது அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த 40 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது. அதனை மேழ்சி எடுத்துச் சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து ஜோஸ், இரணியல் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- ஏமாந்து போன 4 பேரின் மனைவிகளும் எங்கள் நகைகள், பணம் கிடைத்தால் போதும்.
- அவளிடம் இருந்து என்னுடைய கணவரை மீட்டுத் தாருங்கள் எனக் கூறினார்கள்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 4 பேரை கணவராக ஏற்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த ஒருவர் மற்றும் கருப்பூர் பகுதி சேர்ந்த 2 டிரைவர்கள் மற்றும் ஆம்பூரை சேர்ந்த ஒரு டிரைவர் என 4 பேருடன் அடுத்தடுத்து குடும்பம் நடத்தி உள்ளார்.
நேற்று கருப்பூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரின் மனைவி 2 குழந்தைகளுடன் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
அவர் தனது கணவர் வீட்டுக்கு வருவதில்லை. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். அந்த பெண்ணிடம் இருந்து கணவரை மீட்டு தாருங்கள் என புகார் அளித்தார். போலீசார் அவரது கணவருடன் தொடர்பில் இருந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் அந்தப் பெண் ஏற்கனவே 3 பேருடன் நடிகர் வடிவேலு நடித்த சினிமா பாணியில் குடும்ப நடத்தியது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் 3 முன்னாள் தற்காலிக கணவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
அவர்களுடன் அவர்களது மனைவிகளும் வந்தனர். தங்களது கணவர்கள் சரிவர வீட்டுக்கு வருவதில்லை. எங்களுடைய நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பணத்தையும் அந்த பெண் அபகரித்துள்ளார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்கள். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க இளம்பெண்ணுடன் குடும்பம் நடத்திய 4 பேரும் எதுவும் தெரியாதது போல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது போலீசார் இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்த 2 பேர் ஊர் உமாராபாத் அருகே உள்ளது. ஆகவே 2 பேர் உமாராபாத் போலீஸ் நிலையத்திலும் மற்றும் 2 பேர் இங்கேயும் புகார் தாருங்கள் என கூறினார்கள்.
அப்போது ஏமாந்து போன 4 பேரின் மனைவிகளும் எங்கள் நகைகள், பணம் கிடைத்தால் போதும். அவளிடம் இருந்து என்னுடைய கணவரை மீட்டுத் தாருங்கள் எனக் கூறினார்கள். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் இந்த பிரச்சனைக்கு போலீசாரால் தீர்வு காண முடியவில்லை. பல மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. ஒரு கட்டத்தில் 4 பேருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் நகைகளை 4 மாதத்தில் திருப்பித் தருவதாக கூறினார்.
இதைதொடர்ந்து போலீசார் அவரை அனுப்பினர். அவர் தனது தாயுடன் சென்று விட்டார்.
அவருடன் குடும்பம் நடத்திய 4 பேரையும் அவர்களது மனைவிகள் நன்கு கவனிப்பது போல் முறைத்து பார்த்தபடி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நவநீதகிருஷ்ணன் வெளியே சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது சேலையால் தூக்கிட்ட நிலையில் திவ்யா தொங்கி கொண்டிருந்தார்.
- திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன். ஈரோடு ெரயில்வே யார்டூ மாஸ்டர் அலுவலக எழுத்தர் ஆக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி திவ்யா வயது (24). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நவநீதகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இது தொடர்பாக கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சமாதான மாகியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை நவநீதகிருஷ்ணன் வெளியே சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது சேலையால் தூக்கிட்ட நிலையில் திவ்யா தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு திவ்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.
- அவினாசி அருகே தெக்கலூரில் உள்ள ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார்.
- நேற்று முன்தினம்இரவு சுவேதா செளத்ரி குழந்தையுடன் தூங்க சென்று விட்டார்.
அவினாசி:
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அமித் (வயது30) .இவர் அவினாசி அருகே தெக்கலூரில் உள்ள ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி சுவேதா செளத்ரி (26) மற்றும் 8 மாத பெண் குழந்தையும் உள்ளது. நேற்று முன்தினம்இரவு சுவேதா செளத்ரி குழந்தையுடன் தூங்க சென்று விட்டார். இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அமித் அறையை திறந்து பார்த்தபோது சுவேதா செளத்ரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிகொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சுவேதா சௌத்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறினார்.
- இளம்பெண் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருப்பது தெரியவந்தது
கோவை
கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நள்ளிரவு
இந்தநிலையில் இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறினார். இதனையடுத்து அவரை அவரது கணவர் வேலைக்கு செல்ல அனுமதித்தார். ஆனால் இளம்பெண் தினசரி நள்ளிரவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தினசரி வேலை முடிந்து வீட்டிற்கு வரும் இளம்பெண் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவர் தனது குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். இதனால் இளம்பெண்ணின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவி எங்கே வேலை செய்கிறார். என்ன வேலைக்கு செல்கிறார் என்பதை கண்காணிக்க திட்டமிட்டார்.
பல ஆண்களுடன் உல்லாசம்
அதன்படி அவர் வேலைக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது இளம்பெண் தனது கணவருக்கு தெரியாமல் மசாஜ் சென்டரில் வேலை பார்ப்பதும், அவருக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பது ெதரிய வந்தது.
இளம்பெண் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருந்து விட்டு நள்ளிரவு வீட்டிற்கு வருவது தெரிய வந்தது.
ஓட்டம்
இதுகுறித்து அவர் இளம்பெண்ணிடம் கேட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த இளம்பெண் கணவரிடம் கோபித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இது குறித்து இளம்பெண்ணின் கணவர் கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- மேகலா தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டார்
- கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார்.
கோவை
கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள காமராஜர்புரத்தை சேர்ந்தவர் கதிரேஷ். இவரது மனைவி மேகலா (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டார். மொபட் எட்டிமடையில் உள்ள தியேட்டர் அருகே சென்ற போது அந்த வழியாக மற்றொரு மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் மேகலாவின் மொபட்டை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவரது மொபட்டின் சாவியை பறித்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த மேகலா இது குறித்து கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
- இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
ஆனைமலை,
பொள்ளாச்சி பில்சின்னம்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு, அந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இளம்பெண்ணும், அவரது வீட்டின் அருகே வசித்தும் வரும் வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
நேற்று இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியான பெற்றோர் அக்கம்பக்கம் உள்ள வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.
ஆனால் எங்குதேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாயார் மகளை போனில் தொடர்பு கொண்டார். அப்போது இளம்பெண் வாலிபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டதாக கூறினார்.
இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.