என் மலர்
நீங்கள் தேடியது "வில்வித்தை"
- அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.
- தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.
சீர்காழி:
தஞ்சாவூர் 39 வார்டு பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் கைலாஷ்.
இவர் அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.
இந்த சாதனையின் மூலம் தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.
இதனை அறிந்த சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று பாராட்டு பெற வைப்பதாக அப்போது தெரிவித்தார்.
- இறுதிச்சுற்றில் பிரியன்ஷ், அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை வீழ்த்தினார்.
- இந்தியா இதுவரை 5 தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.
லிமரிக்:
அயர்லாந்தில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், 21 வயதிற்குட்பட்டோருக்கான காம்பவுண்டு வில்வித்தை போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இவர் இறுதிச்சுற்றில் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை 147-141 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
முன்னதாக 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி காம்பவுண்டு பிரிவில் அமெரிக்காவின் லீன் டிரேக்கை 142-136 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 தங்கம் அடங்கும்
- ஆண்கள், பெண்கள், மாணவ மாணவிகள் என தனித்தனியாக போட்டி நடந்தது.
- வெற்றி பெறும் வீரர்களுக்கு வல்வில் ஓரி கோப்பை, ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.
கொல்லிமலை:
கொல்லிமலையை ஆண்ட கடை 7 வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின் போது அரசின் சார்பில் விழா நடக்கிறது. இவ்வாண்டு நேற்றும் இன்றும் வல்வில் ஓரி விழா சிறப்பாக நடந்தது.
நேற்று மலர்கண்காட்சி நிகழ்ச்சி தொடங்கியது. இன்று வல்வில் ஓரி மன்னரின் ஆற்றலை போற்றும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் வில்வித்தை சங்கத்தின் சார்பில் தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டிகள் நடந்தது.
இப்போட்டி கொல்லிமலை செம்மேடு பஸ் நிலையத்தில் நடந்தது. போட்டியை கலெக்டர் உமா, பொன்னுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டிகள் இந்தியன், ரிக்கர்வ், காம்பவுண்ட் என 3 பிரிவுகளில் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் 19 வயதுக்கு மேற்பட்டோர் 7 வயது பிரிவாக ஆண்கள், பெண்கள், மாணவ மாணவிகள் என தனித்தனியாக போட்டி நடந்தது.
போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் மற்றும் வல்வில் ஓரி கோப்பை ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.
- இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
- டை பிரேக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
பாரீஸ்:
பிரான்சில் நடைபெற்று வரும் உலக கோப்பை 4-ம் நிலை வில்வித்தை போட்டியின் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனால் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியானது.
ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஒஜாஸ் தியோடெல், பிரத மேஷ் ஜவகர், அபிஷேக் வர்மா ஆகியோர் அடங்கிய அணி தென் கொரியாவை எதிர் கொண்டது. இந்த ஆட்டம் 235-235 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. டை பிரேக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சந்திக்கிறது.
மகளிர் அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத்கபூர் ஆகியோர் அடங்கிய அணி 234-233 என்ற கணக்கில் இங்கி லாந்தை தோற்கடித் தது. இறுதிப் போட்டியில் மெக்சிகோவுடன் மோதுகிறது.
- துருக்கி அணியை 232-226 என வீழ்த்தி தங்கம் வென்றது.
- ஏற்கனவே இரண்டு முறை தங்கம் வென்ற நிலையில், தொடர்ந்து 3-வது முறையாக தற்போது தங்கம் வென்றுள்ளது.
தென்கொரியாவில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-2) நடைபெற்று வருகிறது. இதில் மூன்று பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி துருக்கி அணியை 232-226 என புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர்தான் இந்த தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்டேஜ்-1ல் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிஸ் நகரில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.
அமெரிக்காவில் நடைபெறும் கலப்பு அணியில் ஜோதி, பிரியான்ஷ் தங்கத்திற்கான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆண்களுக்கான காம்பவுண்ட் பிரிவில் பிரதாமேஷ் புஜ் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
- முதல் இரண்டு ரவுண்டில் இந்திய வீராங்கனைகள் அதிக புள்ளிகள் சேர்த்தனர்.
- இதனால் 5-2 என உக்ரைன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.
வில்வித்தை உலகக் கோப்பை துருக்கி நாட்டின் அன்டால்யா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி (தீபிகா, பஜன், அங்கிதா) காலிறுதியில் ரிகர்வ் பிரிவில் உக்ரைன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் அணி 5-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
முதல் ரவுண்டில் இந்திய வீராங்கனைகள் 53 புள்ளிகளும், உக்ரைன் வீராங்கனைகள் 52 புள்ளிகளும் பெற்றனர்.
2-வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் 53 புள்ளிகளும், உக்ரைன் வீராங்கனைகள் 54 புள்ளிகளும் பெற்றனர்.
3-வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் 57 புள்ளிகள் பெற்றனர். உக்ரைன் வீராங்கனைகள் 54 புள்ளிகள் பெற்றனர்.
4-வது சுற்றில் இந்திய வீராங்கனைகளும், உக்ரைன் வீராங்கனைகளும் தலா 53 புள்ளிகள் பெற்றனர்.
ஒரு சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கு 2 மார்க் வழங்கப்படும். சமநிலை பெற்றால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு மார்க் வழங்கப்படும். அதன் அடிப்படையில் இந்திய வீராங்கனைகள் 5-3 என வெற்றி பெற்றனர்.
ஒவ்வொரு சுற்றிலும் ஒரு வீராங்கனை இரண்டு முறை என மூன்று வீராங்கனைகள் ஆறு அம்புகளை எய்த வேண்டும். வட்டத்தின் மையத்தை அம்பு தாக்கினால் 10 புள்ளிகள் வழங்கப்படும்.
ஆண்கள் அணி நெதர்லாந்திடம் 1-5 என தோல்வியடைந்து வெளியேறியது.
- எஸ்டோனியா அணியை 232-229 என வீழ்த்தி தங்கம் வென்றது.
- ஏற்கனவே 2 முறை தங்கம் வென்ற நிலையில், 3-வது முறையாக தங்கம் வென்றது.
துருக்கி:
துருக்கியில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-3) நடைபெற்றது. இதில் காம்பவுண்ட் பிரிவில் 3 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி எஸ்டோனியா அணியை 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி உலகக் கோப்பை ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ் 2 பிரிவுகளிலும் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிசில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
- வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று நடந்தது.
பாரிஸ்:
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று இன்று நடைபெற்றது. இதில் 72 அம்புகள் எய்யப்பட்டன.
இதில் தென் கொரியா 2016 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், சீனா 1996 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், இந்தியா 1983 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்தன.
இதன்மூலம் வில்வித்தை பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
- தென்கொரியா 2049 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
- பிரான்ஸ் 2025 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிக்கான முதன்மை சுற்றுகள் 30-ந்தேதி தொடங்குகின்றன. இன்று தரவரிசை பெறுவதற்கான சுற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 72 அம்புகள் எய்த வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் தரவரிசை கொடுக்கப்படும்.
தனிநபர் புள்ளிகள் அணிகள் மற்றும் கலப்பு அணிகளுக்கு அப்படியே சேர்க்கப்படும். அதன்படி இன்று மதியம் பெண்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் (இந்திய அணி) 4-வது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்த நிலையில் தற்போது ஆண்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்தியாவின் திராஜ் பொம்மாதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திராஜ் பொம்மாதேவரா 681 புள்ளிகளும், தருண்தீப் ராய் 674 புள்ளிகளும், பிரவீன் ரமேஷ் ஜாதவ் 658 புள்ளிகளும் பெற்றனர். மொத்தமாக 2013 புள்ளிகள் பெற்று அணிகள் பிரிவில் 3-வது இடம் பிடித்தனர். இதனால் ஆண்கள் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். மீதமுள்ள 8 அணிகளில் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தென்கொரியா 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன.
- ரவுண்டு ஆப் 32 சுற்றுக்கு இந்திய வீராங்கனை பஜன் கவுர் முன்னேறினார்.
- மற்றொரு வீராங்கனையான அங்கிதா பகத் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்து கொண்டார்.
முதல் செட்டில் 1-1 என சமனிலை வகித்தது. 2வது செட்டில் 3-1 என இந்தோனேசிய வீராங்கனை முன்னிலை வகித்தார். 3வது செட்டில் 3-3 என சமனிலை வகித்தனர். 4வது செட்டில் பஜன் கவுர் 5-3 என முன்னிலை பெற்றார். 5வது செட்டில் 7-3 என கைப்பற்றி வென்றார்.
இதன்மூலம் ரவுண்டு ஆப் 32 சுற்றுக்கு இந்திய வீராங்கனை பஜன் கவுர் முன்னேறி அசத்தினார்.
மற்றொரு வீராங்கனையான அங்கிதா பகத் தோல்வி அடைந்தார்/
- குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்றார்.
- பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார்.
பாரீஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் டச்சு வீராங்கனையை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அடுத்த சுற்றில் தீபிகா குமாரி ஜெர்மன் வீராங்கனையை சந்திக்கிறார்.
- கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
- பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
பாரீஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா-தீரஜ் ஜோடி
5-1 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.