என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய கடற்படை"
- எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அரபிக்கடல் முழுவதையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
- துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அரபிக்கடல் முழுவதையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
மேலும், மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய கடற்படை அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது.
அரபிக்கடலில் இந்திய கடற்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்
- வருகிற 7-ந்தேதி வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து இந்த போர் ஒத்திகை பயிற்சி நடைபெறும்.
காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு வகையில் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் வகையில் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதை இந்திய ராணுவ உளவுத்துறை உறுதி செய்தது.
இதையடுத்து பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கு இந்தியா முப்படைகளையும் தயார் படுத்தி வருகிறது. அதோடு பாகிஸ்தானுக்கும் பல்வேறு நெருக்கடிகளை இந்தியா ஏற்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக பாகிஸ்தானியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய மத்திய அரசு சிந்து நதிநீரை முழுமையாக தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நிதி உதவிகளை தடுத்து நிறுத்தவும் இந்தியா முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் வர்த்தக கப்பல் கள் இந்தியாவுக்குள் வருவது தடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு சம்மட்டி அடி ஏற்படுத்தும் வகையில் மாறி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய முப்படைகளும் வகையில் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த ஆய்வு செய்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடைேய கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.
இந்த பதட்டத்தை மேலும் அதிகரிக்க செய்யும் வகை யில் எல்லைக்கட்டுப் பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தினமும் இரவு துப்பாக்கியால் சுட்டப்படி உள்ளனர். நேற்று இரவு 10-வது நாளாக பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அவர்களுக்கு இந்திய தரப்பில் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நீண்ட நாள் விடுப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் ஆயுதங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் புனேவில் இந்திய போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ராக்கெட் குண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகளும் அந்த நகரில் உள்ள ஆயுத தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு விடுமுறை நீட்டிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்தியா முழுவதும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் உருவானபோது அரபிக் கடலில் அக்ரான் என்ற பெயரில் போர் பயிற்சிகள் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் திடீர் பயிற்சியில் ஈடுபட தொடங்கி உள்ளன. நேற்று அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில் இந்திய போர் கப்பல்கள் அணிவகுத்து போர் பயிற்சியை தொடங்கின.
இந்த போர் பயிற்சி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து கடற்படை தளபதி நேற்று நீண்ட விளக்கம் அளித்துள்ளார். எனவே தற்போது அரபிக் கடலில் நடந்து வரும் இந்திய போர் கப்பல்களின் போர் ஒத்திகை பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வருகிற 7-ந்தேதி வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து இந்த போர் ஒத்திகை பயிற்சி நடைபெறும் என்று இந்திய கடற்படை அறிவித்துள்ளது. போர் ஒத்திகை எப்படி நடக்கிறது என்கிற தகவல் கள் வெளியிடப்படவில்லை.
என்றாலும் இந்திய கடற்படை கப்பல்கள் நீண்டதூர தாக்குதலுக்கு தங்களை தயார்ப்படுத்தும் வகையில் பயிற்சி நடப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட இலக்குகளை மிக மிக துல்லியமாக தாக்கும் பயிற்சிகளும் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்திய கடற்படை போன்று வட மண்டலத்தில் இந்திய விமானப்படையும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதட்டம் தொடர்ந்து நீடித்தப்படி உள்ளது.
எனவே இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் கூறியபடி உள்ளது. கடந்த 2 தினங்களாக பாகிஸ்தான் ராணு வத்தினர் அதிகளவு ராடார் கருவிகளை எல்லைப் பகுதிகளுக்கு கொண்டு வந்து குவித்துள்ளனர்.
குறிப்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா ஊடுருவும் என்று எதிர்பார்த்து பல இடங்க ளில் பாகிஸ்தான் போர் விமானங்களை நிறுத்தி இருக்கிறது.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பல்வேறு நாட்டு தலைவர்களிடம் பாகிஸ்தான் தொடர்ந்து தன்னிலை விளக்கம் அளித்து வருகிறது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலை விசாரணைக்கு தயார் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது.
இந்த விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண் டும் என்று பாகிஸ்தான் தரப்பில் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அரபிக்கடலில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் சோதனையில் ஈடுபட்டது.
- தொலை தூர இலக்கை தாக்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படை தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அரபிக்கடலில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் சோதனையில் ஈடுபட்டது. இதை கடற்படை இன்று தெரிவித்தது. இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
போர் கப்பல்களில் இருந்து அச்சுறுத்தல்களாக வரும் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணை ஒத்திகையில் இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளன. தொலை தூர இலக்கை தாக்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படை தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன.
நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய, எவ்வித அச்சுறுத்தல்கள் எந்நேரம், எந்த வகையில் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடல் வழி தாக்குதல்களை எதிர்கொள்ளவும், சண்டையிடவும் கடற்படை தயார் நிலையில் இருப்பதை மேற்கண்ட ஒத்திகை வெளிக்காட்டுகிறது.
- உள்நாட்டில் தயாரித்த ஏவுகணையாகும்.
- வானத்தில் உள்ள இலக்கை துல்லியாக தாக்கி அழித்தது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சூரத் கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்தி மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் வானத்தில் உள்ள இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சோதனை வெற்றி இந்திய கடற்படைக்கு மேலும் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். விமானம் மற்றும் தரையில் இருந்து கப்பலை தாக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் பாகிஸ்தான், ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கடற்படை நடத்திய சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- விமான நிலையத்தில் கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
- அவர் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் நம்மை பெருமைப்படுத்தினார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியது.
இந்நிலையில் டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தாக்குதலில் கொல்லப்பட்ட தனது கணவருக்கு மனைவி கனத்த மனதுடன் அழுதபடி பிரியாவிடை அளித்த மனதை உருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
"அவரது ஆன்மா சாந்தியடைய நம்புகிறேன். அவர் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் நம்மை பெருமைப்படுத்தினார். இந்த பெருமையை நாம் எல்லா வகையிலும் காப்பாற்ற வேண்டும்," என்று அவர் நடுக்கும் குரலில் தெரிவித்தார்.
- படகு மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது
- ஹெலிகாப்டர் மூலமும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தர்காஷ் கப்பல் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
புதுடெல்லி:
மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் படகு மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும், சந்தேகத்துக்கு இடமான கப்பல்கள் வந்து செல்வதாகவும் இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் கடற்படையினரின் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி ஹெலிகாப்டர் மூலமும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தர்காஷ் கப்பல் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்துக்கு இடமான படகு ஒன்றை, தர்காஷ் கப்பல் வழிமறித்து நிறுத்தியது.
இதையடுத்து கடற்படையினர் அந்த படகை சோதனையிட்டனர். அப்போது அதில் சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகள் அதிக அளவில் இருந்தன. விசாரணையில் அதில் 2,386 கிலோ ஹாஷிஷ் என்ற போதைப்பொருளும், 121 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 21-ந் தேதி அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது சமிக்ஜை செய்தும் நிற்காமல் விசைப்படகு சென்றதாக கூறி இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை வானகிரியை சேர்ந்த மீனவர் வீரவேல் (வயது 31) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். மேலும் விசைப்படகு மீதும் பல குண்டுகள் பாய்ந்தன.
இந்த தாக்குதலில் காயமடைந்த வீரவேல் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 9 மீனவர்கள் காயத்துக்கு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படையினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள் விசைப்படகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து படகை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கப்பல் தயாரிப்பு நிறுவனம், ஒரே ஆண்டில் 3வது பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்துள்ளது.
- 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்து செல்லும் திறன் கொண்டது.
மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும், கப்பல் தயாரிப்பு நிறுவனமான ஜி.ஆர்.எஸ்.இ., இந்திய கடற்படைக்காக 3-வது மிகப் பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு பிராந்திய இந்தியக் கடற்படையை சேர்ந்த மனைவியர் நலச் சங்கத் தலைவர் மதுமதி ஹம்பிஹோலி இந்த ஆய்வுக் கப்பல் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு கடற்படை கமாண்டர் துணை அட்மிரல் ஹம்பிஹோலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஐ.என்.எஸ். இக்சாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல், 110 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்டது. சுமார் 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டது. இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த முக்கியப் பங்காற்றும்.
கடந்த 60 ஆண்டுகளில், ஜிஆர்எஸ்இ நிறுவனம் 800க்கும் மேற்பட்ட கப்பல்களை உருவாக்கி உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டவை இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கப்பல்கள், இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல்படை, நட்பு நாடுகளான மொரீஷியஸ், சீஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆண் மாலுமிகள் பெறும் அதே பயிற்சி முறைகளை பெண் மாலுமிகளும் பெறுவார்கள்.
- அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்க்க முயற்சி
புதுடெல்லி:
இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய கடற்படை 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தன்னிறைவு பெறும் என மத்திய அரசிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ராணுவம் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இந்திய கடற்படையில் முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னிவீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 341 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவார்கள். அக்னிவீரர் திட்டத்தின்கீழ் முதல் முறையாக கடற்படையில் பெண் மாலுமிகள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆண்கள் பெறும் அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். கப்பல்கள், விமான தளங்கள், விமானங்களில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். ஒரு மாலுமிக்கு அளிக்க கூடிய அதே பயிற்சி முறைகள் அவர்களுக்கு வழங்கப்படும். பயிற்சி முறையில் எந்தவித வேற்றுமையும் இருக்காது. ஒரு தனிநபரின் திறமையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதுதவிர, பாலின சமத்துவ கடற்படையாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் பார்க்கிறோம்.
அடுத்த ஆண்டில் இருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். இதுவரை 7 முதல் 8 பிரிவுகளில் மட்டுமே அவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வி பரிவர்த்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
- நிகழ்ச்சியில் ஆலோகர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
கூடுவாஞ்சேரி:
இந்திய கடற்படை அலுவலர்களுக்கு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வியில் முதுகலை பட்டபடிப்பு மற்றும் பி.எச்.டி. பட்டபடிப்பு வழங்கவும், எஸ்.ஆர்.எம். மாணவர்கள், பேராசிரியர்கள் கடற்படை தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடவும் இந்திய கடற்படை, கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை, காட்டங்குளத்தூர் எஸ். ஆர். எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பிரிவு ரியர் அட்மிரல் பி. சிவகுமார், கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் சி.முத்தமிழ் செல்வன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்.
நிகழ்ச்சியில் கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்.ஆர். எம். மருத்துவம் மற்றும் உடல்நலம் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்னல் டாக்டர் ஏ. ரவிக்குமார், பதிவாளர் சு. பொன்னுசாமி, கூடுதல் பதிவாளர் டி. மைதிலி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச கல்வி ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் பேராசிரியர் வி. பி. நெடுஞ்செழியன் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள், டீன்கள் பங்கேற்றனர்.
- கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பலாகும்.
- எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன.
மும்பை:
இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதேபோல் கடற்படையில் 17 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர் மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர் மூழ்கி கப்பல்கள் ரஷியா, ஜெர்மனி தயாரிப்புகள் ஆகும்.
இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டில் பிரான்சின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2007-ம் ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர் மூழூகி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது.
முதல் நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019-ல் ஐ.என்.எஸ். காந்தேரி, 2021-ல் ஐ.என்.எஸ். கரஞ்ச், ஐ.என்.எஸ். வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன.
இந்த வரிசையில் 5-வது நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வகிர் இன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் புதிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பலாகும்.
ஐ.என்.எஸ். வகிர் நீர்மூழ்கி கப்பல் 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல், மின்சாரத்தில் இயங்கும்.
எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டு உள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான்பகுதி, நிலப்பகுதிகளை குறி வைத்தும் தாக்குதல் நடத்த முடியும்.
இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கி இருக்க முடியும். அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகள் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது.
கல்வாரி ரகத்தில் 6-வது மற்றும் இறுதி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வகிர் அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தென்சீன கடல் பகுதியில் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சியில் சீன கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளன.
- வியட்நாமின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியை சீன கப்பல்கள் நெருங்கி வந்தன.
பீஜிங்:
தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே முதல் ஆசியான்-இந்தியா கடற்படை போர் பயிற்சி தென் சீனக்கடலில் கடந்த 2 நாட்களாக நடந்து முடிந்தது.
இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புனே, வியட்நாம் ஆகிய நாடுகள் இணைந்து ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியை நடத்தின. இதில் அந்நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்றன.
இந்த நிலையில் தென்சீன கடல் பகுதியில் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சியில் சீன கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளன.
வியட்நாமின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியை சீன கப்பல்கள் நெருங்கி வந்தன. ஆனால் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சிகளை தடுக்கவில்லை. சீன விமானங்களும் அப்பகுதியில் பறந்து உள்ளன.
இதன்மூலம் ஆசியான்-இந்தியா போர் பயிற்சியை சீன கண்காணிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறும்போது, ஆசியான்-இந்தியா பயிற்சிகளை பாதிக்கும் அளவிற்கு சீன கப்பல்கள் எங்கும் வர வில்லை. எந்த எச்சரிக்கையும் எழுப்புவதற்கு அவசியம் ஏற்படவில்லை. ஆனாலும் சீன கப்பல்கள் கவனமாக கண்காணிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் சாங்கி கடற்படை தளத்தில் நடந்த இப்பயிற்சியில் இந்தியாவின் ஐ.என்.எஸ். டெல்லி மற்றும் ஐ.என்.எஸ் சத்புரா கப்பல்கள் பங்கேற்றன.