என் மலர்
நீங்கள் தேடியது "slug 166361"
- இது குறித்து கைலாசம் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே வெள்ளக்குடியை சேர்ந்தவர் கைலாசம். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
இந்த நிலையில் கைலாசம் தனது பேரக்குழந்தை சர்வேஷை விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் சேர்க்க உள்ளதால் அதற்கு முன்பாக கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மனைவி வளர்மதி, மருமகள் பிரவீனா ஆகியோருடன் சென்றுள்ளார்.
சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் வீட்டில் உள்ள ஒரு மர பீரோ மற்றும் இரண்டு ஸ்டீல் பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் நகைகள் திருடு போயிருந்தன.
இது குறித்து கைலாசம் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- ஐந்து விமான நிறுவனங்கள் மற்றும் 10 விமான நிலையங்களின் ஊழியர்கள் ராணுவச் சேர்க்கை பதிவு குறித்து அலுவலகங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- 50- 80% ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படலாம் என்று மூன்று நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போர் வேண்டாம்.உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போலீசார் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவோர் கைது செய்யப்படுகின்றனர்.
நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்.
ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. ராணுவச் சட்டம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ரஷிய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட (போருக்கு தகுதியான வயது) ரஷிய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியாகின.
இந்நிலையில், ரஷியன் ஏர்லைன்ஸ், விமான நிலைய ஊழியர்கள் ராணுவத்தில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஷ்யாவில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாய அறிவிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. குறைந்தபட்சம் ஐந்து விமான நிறுவனங்கள் மற்றும் 10 விமான நிலையங்களின் ஊழியர்கள் ராணுவச் சேர்க்கை பதிவு குறித்து அலுவலகங்களுக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் தலைசிறந்த விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் குழுமம் உட்பட ஐந்து ரஷ்ய விமான நிறுவனங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் பணியாளர்கள் ராணுவத்திற்கு சேவை செய்ய சம்மன் பெற்றனர். இதில், 50- 80% ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படலாம் என்று மூன்று நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏரோஃப்ளோட் குழுமத்திற்கு நெருக்கமான ஆதாரத்தின்படி, குழுவின் மூன்று விமான நிறுவனங்களின் ஊழியர்களில் பாதி பேர் பணியமர்த்தப்படலாம் என்றும் இவர்களில் ரோசியா ஏர்லைன்ஸ் மற்றும் போபெடா ஏர்லைன்ஸ் ஊழியர்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஏரோஃப்ளோட் அதிகாரப்பூர்வமான கருத்தை வழங்கவில்லை என்றாலும், குழு இப்போது வெவ்வேறு சிறப்புகளில் இடஒதுக்கீட்டிற்கான பட்டியலைத் தயாரிக்க பணிக்குழுக்களை அமைத்துள்ளது.
இதைத்தவிர, குறைந்தபட்சம் ஐந்து நிறுவனங்கள், வரைவில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டிய ஊழியர்களின் பட்டியலைத் தொகுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றில் இரண்டு விமான நிறுவனங்கள் பட்டியலை அனுப்பியுள்ளன. இதில் ஒன்று உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்கியது. மற்றொன்று போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. விமானக் கட்டுப்பாட்டாளர்கள், விமானிகள் மற்றும் பிற வணிக, தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இந்த விலக்கு முக்கியமானதாகக் கூறப்படுகிறது.
- குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வு பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்பட்டு வருகிறது.
- முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் தங்களது சிறார்களை ராணுவ பணிகளில் சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்திலிருந்து ராணுவப் பணியில் சேர்ந்து பயிற்சி பெறும் முன்னாள்படைவீரர்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் வகையில் தொகுப்பு நிதியிலிருந்து தொகுப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, முப்படையில் நிரந்திர படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப்பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.50000மும் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளின் பணிக்காக தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.25000மும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீர ர்கள்மற்றும் கைம்பெண்கள் தங்களது சிறார்களை இந்திய இராணுவ பணிகளில்சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறீர்கள்.
மேலும் விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகதரைத்தளத்தில் அறை எண். 10 மற்றும் 11-ல் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசிமூலமாகவோ (04365-299765) தொடர்பு கொள்ளலாம் எனதெரிவித்துள்ளார்.
- அக்கினி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
- 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்கினி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருதுநகர், காரைக்கால், பெரம்பலூர் உட்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
நாளை 1-ந்தேதி ஆள் சேர்ப்பு நடைபெறுவதற் கான கடைசி நாளாகும். ஏற்கனவே 36 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப் பட்டிருந்த நிலையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க வில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஓட்ட பயிற்சிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் உடல் தகுதிகள் மற்றும் மருத்துவ பரிசோதனை நாளை நடக்கிறது. நாளை மறுநாள் அதிகாலையுடன் இந்த முகமானது நிறைவு பெறும். இந்த முகாமில் பங்கேற்க வந்த ராணுவ வீரர்கள் அனைவரும் அதன் பிறகு இங்கிருந்து புறப்பட்டு செல்வார்கள்.
கடந்த 10 நாட்களாக அண்ணா விளையாட்டு அரங்கம் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நாளை மறுநாள் காலையுடன் முடிவடைவதை தொடர்ந்து மீண்டும் அண்ணா விளை யாட்டு அரங்கத்திற்குள் பொதுமக்கள் நடை பயிற்சிக்கு அனும திக்கப்படுவார் கள் என்று தெரிகிறது.
- வெளி மாவட்டங்களில் இருந்து வந்த இளைஞர்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குவிந்தனர்
- செப்டம்பர் 1-ந் தேதி வரை ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த 36 ஆயிரம் இளைஞர்களுக்கு அழைப்பு அனுப்ப்பட்டு, தினமும் 3 ஆயிரம் பேர் தேர்வுக்கு அழைக்க ப்பட்டு உள்ளனர்.போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த தேர்வு நள்ளிரவில் மட்டுமே நடக்கிறது.
நேற்று முன்தினம் தொடங்கிய ஆட்கள் தேர்வு, இன்று ( திங்கட்கிழமை) 3-வது நாளாக நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்ப தற்காக வெளிமாவட்ட இளைஞர்கள் தினமும் ரெயில் மூலம் நாகர்கோவில் வருகின்றனர்.
அவர்கள் தேர்வு முகாமில் பங்கேற்று விட்டு மீண்டும் ரெயில் மூலம் ஊருக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.
இரவில் தேர்வில் பங்கேற்று விட்டு காலையில் ரெயில் நிலையம் வருபவர்களுக்கு இரவில் தான் ரெயில் உள்ளது என்பதால் அங்கேயே தங்கி ஓய்வு எடுக்கின்றனர்.
இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையம் கடந்த சில நாட்களாக களை கட்டி காணப்படுகிறது. செப்டம்பர் 1-ந் தேதி வரை ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.
- வெளியூரில் இருந்து இளைஞர்கள் குவிந்தனர்
- இன்று இரவு 2-வது நாளாக ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருதுநகர், காரைக்கால், பெரம்பலூர் உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.
முதல் நாளான இன்று நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் 3000 பேர் கலந்து கொள்வதற்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய ரானுவத்திற் கான ஆள் சேர்ப்பு முகாம் விடிய விடிய நடந்தது. அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்ததால் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட வர்கள் வந்திருந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு 1600 மீட்டர் ஓட்டம் மற்றும் உடல் தகுதிகள், சான்றிதழ்கள், சோதனை செய்யப்பட்டது. ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்கள் 1600 மீட்டர் தூரத்தை ஒட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 160-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய ஆட்கள் சேர்ப்பு முகாம் இன்று அதிகாலை 6 மணி வரை நடந்தது. தேர்வு பணி நடந்ததையடுத்து இரவை பகலாக்கும் வகையில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தது. இன்று இரவு 2-வது நாளாக ராணு வத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராள மான இளைஞர்கள் காலையிலேயே நாகர்கோவி லுக்கு வந்தனர். பஸ் மற்றும் ெரயில் மூலமாக அவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். வடசேரி பஸ் நிலையப் பகுதியில் ஏராளமான இளை ஞர்கள் வந்து அமர்ந் திருந்தனர்.
வருகிற 1-ந்தேதி வரை ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடை பெறுகிறது. ராணுவத்திற் கான ஆள் சேர்ப்பு முகாம் நள்ளிரவு நடைபெற்று வருவதையடுத்து பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது.
- அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாளை மறுநாள் நடைபெறும்
- 120 ராணுவ வீரர்கள் வந்தனர்
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணு வத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை மறுநாள் 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களிலிருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள். விண்ணப்பதாரர்கள் அனை வருக்கும் ஆன்லைன் மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் ராணு வத்திற்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறுவதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் நடந்து வருகிறது. பந்தல் அமைக்கும் பணி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் ராணுவத்தின் கட்டுப்பாட் டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அண்ணா விளையாட்டு அரங்கத்திற்குள் பொது மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.அங்கு இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இன்றி இரவு நேரத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெறு கிறது. ராணுவ வீரர்கள் தேர்வு வருபவர்கள் அமரும் வகையில் உழவர் சந்தை திடல், அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து நீச்சல் குளத்திற்கு செல்லும் பகுதி, மாநகராட்சி புதிய கட்டிட பகுதிகளில் ஷெட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.தினமும் 3000 பேருக்கு நேர்முக தேர்வை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
தேர்வு குழுவினர் நேற்று இரவு அனைவரும் வந்து சேர்ந்தனர். திருவனந்தபுரம்,கோவை, சென்னையிலிருந்து 120 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் இங்கேயே முகாமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று மாலைக்குள் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தேர்வு
- சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து ராணுவ வீரர்கள் வருகிறார்கள்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற
21-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை நடக்கிறது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மயிலாடுதுறை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள். விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள் ளது. அங்கு நடைபயிற்சி, விளையாட்டுபயிற்சி உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விளை யாட்டு அரங்கத்திற்குள் செல்ல அடுத்த மாதம் 5-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு நடைபெறுவதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
வடசேரி உழவர் சந்தை திடல்,அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளம் பகுதி,மாநகராட்சி புதிய கட்டிடம் பகுதி யில் ஷெட்டுகள் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் ராணுவத்திற்கு இரவு நேரத்தில் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. தினமும் 3000 பேர் பங்கேற்கும் வகையில் தேர்வு நடக்கிறது. இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்கு வசதிகளும் அங்கு செய்யப்பட்டு உள்ளது.ஆள் தேர்வு முகாம் நடை பெறுவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் நாகர்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
திருவனந்தபுரம், கோவை, சென்னையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் இன்று மதியத்துக்கு பிறகு இங்கு வருகை தருகிறார்கள். அண்ணா விளையாட்டரங்கம் ராணு வத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதையடுத்து ஆட்கள் தேர்வுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படும் போது உடற்பயிற்சி தேர்வு நடைபெறும்.அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. ராணுவ வீரர்கள் மேற்பார்வை யில் இந்த பணிகள் அனைத்தும் மேற் கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்த பணிகளை நாளைக்குள் முடிக்க திட்ட மிட்டு உள்ளனர்.
- அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர சேலம், நாமக்கல் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
- இதில் கடந்த 30-ந்தேதி வரை 2.72 லட்–சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சேலம்:
முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. 17½ வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பின்னர் இந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியபோதும், இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது என மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆள் எடுக்கும் பணிகளை விமானப்படை கடந்த மாதமே தொடங்கியது. இதில் கடந்த 30ந்தேதி வரை 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பட்டப்படிப்பு படித்த இளம்பெண்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடற்படை மற்றும் ராணுவத்துக்கும் ஆள்சேர்க்கும் பணிகள் நேற்று முன்தினம் (1ந்தேதி) தொடங்கி விட்டது. குறிப்பாக ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் சேர தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் இந்திய ராணுவம், கப்பற்படை, விமான படையில் அக்னிவீரர்களாக சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.
- இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயகத்திற்கு விரோதமாக சர்வதிகார ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது.
- உற்பத்தி செலவினங்களை கணக்கீட்டு அதனை காட்டிலும் 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
பாபநாசம்:
பாபநாசத்தில் நடை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- இந்திய நாட்டில் மக்கள், ஜனநாய கத்திற்கு விரோதமாக, சர்வதிகாரத்துடன், பாசிச முறையில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. ஆகவே, மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன் வைத்து, வரும் ஆக. மாதம் 6-ம் தேதி் முதல் 9-ம் தேதி வரை திருப்பூரில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் சிபிஐ அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மத்திய அரசான பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ், இந்தியாவில் மதக்கலவரங்களை உருவாக்குகிறது. அக்னி பாதை என்ற திட்டத்தை கண்டித்து இளைஞர்கள் கொந்தளித்து போராடி வருகிறார்கள். இந்ததிட்ட த்தை ரத்து செய்ய வேண்டும். ராணுவ தளபதிகள், போராட்ட க்காரர்களுக்கு எதிராக பேட்டியளித்திருப்பது, வரலாற்றில் நடைபெறாத, நடக்ககூடாத சம்பவம். ராணுவத்தை தவறான பாதையில், மத்திய அரசு இட்டுச்செல்கிறது. இதனால் மக்களுக்கும், ராணுவத்திற்கும் மோதலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது ஜனநாயக்கிற்கு நல்லதல்ல.
நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை போதுமானதாக இல்லை. பாஜக தேர்தல் வா க்குறுதியில் அறிவித்ததின் படி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியினுடை.ய பரிந்துரை அடிப்படையில் விலையினை தீர்மானிக்க வேண்டும். உற்பத்தி செலவினங்களை கணக்கீட்டு, அதனை காட்டிலும் 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு, தரமான விதைகள், உரங்களை தட்டுப்பாடின்றி கூட்டுறவுத்துறை மூலம் வழங்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து யஸ்வன்சின்ஹாவை வேட்பாளராக நிறுத்தியு ள்ளோம். இவர் வெற்றி பெறுவதின் மூலமாக நாட்டினுடைய இறையாண்மை காக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.