என் மலர்
நீங்கள் தேடியது "slug 166567"
- கஞ்சா மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினர்.
- நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி தலைமையில் கஞ்சா ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்ட் பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கஞ்சா மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினர்.
அப்போது காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் கூறியதாவது:- தமிழக அரசு கஞ்சா இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதனால் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய குட்கா புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனே எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.கஞ்சா புகையிலை போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவோர் பயமின்றி திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதனால் நாம் கஞ்சா, புகையிலை இல்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் கஞ்சா பயிர் செய்வதில்லை. ஆந்திரா மாநிலங்களில் மலைப்பிரதேசங்களில் தான் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆந்திராவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு ஆயுதம் வாங்க கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதற்காக ஆந்திராவில் மலைப்பகுதியில் இதை பயிரிட்டு கஞ்சா விற்பனை செய்கின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆந்திரா சென்று வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கி வரும் கஞ்சாவை சிகரெட் மூலம் பயன்படுத்துகின்றனர். ஆகவே இதை முதலில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்காக வெள்ளகோவிலில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தனியாக ஒரு காவலர் நியமிக்கப்படும். அவரிடம் தங்களது பகுதியில் உள்ள குற்றச்சம்பவங்கள் பற்றி தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்.
அது மட்டுமின்றி வீட்டை பூட்டிவிட்டு பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது விலை மதிப்பு மிக்க நகை மற்றும் பணத்தை பீரோவில் வைத்து விட்டு செல்ல வேண்டாம். வங்கியிலோ அல்லது பாதுகாப்பான மறைவான இடத்திலேயே வைத்துச் செல்ல வேண்டும். அப்படி வெளியில் செல்லும்போது வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லிவிட்டு சென்றால் நாங்கள் கண்காணிக்க ஏதுவாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.
நகர் மன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் தங்களது வார்டுகளில் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை செய்தாலோ யாரேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டாலோ புகார் தெரிவிக்கலாம். வீடு மற்றும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கே. ஆர். முத்துக்குமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- நெற்குப்பையில் மலைப்பாம்பு பிடிபட்டது
- தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள 5-வது வார்டில் பொன்னமராவதி- திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள சாத்தப்பா செட்டியார் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 10 அடி நீளம் கொண்ட வெங்கனத்தி வகையைச் சேர்ந்த மலை பாம்பு ஒன்று வீட்டின் பின்புறம் இரை தேடி வந்தது.
இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தீயணைப்பு துறையினர் உடனடியாக வரவில்லை. இதைத்தொடர்ந்து நெற்குப்பை பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர் சேர்க்கப்பன் தூய்மை பணியாளர்களை அழைத்தார். அதன்பேரில் வந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு தலைமையிலான தூய்மைப்பணியாளர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வேலங்குடி வனப் பகுதியில் விட்டனர்.
- தீபாவளி பண்டிகையையொட்டி, 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் கதா் விற்பனையைத் தொடங்கியுள்ளோம் என்று கூறினார்.
- 52 நெசவாளா்களுக்கு நேரடியாகவும், சுமாா் 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது
திருப்பூர்:
திருப்பூா் குமாா் நகா் கதா் அங்காடி வளாகத்தில் காந்தியடிகள் பிறந்தநாள் விழா மற்றும் கதா் சிறப்பு விற்பனை தொடக்கவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலெக்டர், காந்தியடிகளின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அனைத்து கதா், பட்டு மற்றும் பாலியஸ்டா் ரகங்களுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
பல ஆயிரம் கிராமங்களைக் கொண்ட நமது நாட்டில், விவசாயத் தொழிலில் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முடிகிறது. மீதமுள்ள நாள்களில் உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு நூல் நூற்பு, நெசவு மற்றும் சோப்பு தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தச்சு உள்ளிட்ட கிராமத் தொழில்களில் வருவாய் ஈட்டவும், கிராமப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் காந்தியடிகளால் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த கதா் கிராமத் தொழில் திட்டங்கள்.
திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் 7 கதா் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 346 பெண் நூற்பாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ப்பட்டு, ரூ. 60.89 லட்சம் மதிப்பிலான கதா் மற்றும் பாலியஸ்டா் நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், 52 நெசவாளா்களுக்கு நேரடியாகவும், சுமாா் 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 1.27 கோடி மதிப்பிலான கதா் மற்றும் பாலியஸ்டா் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் மற்றும் அவிநாசியில் செயல்படும் 2 காதி கிராப்ட்கள் மூலம் 2021- 22 ஆம் ஆண்டுக்கு ரூ. 2.53 கோடி கதா் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டதில், ரூ. 1.76 கோடிக்கு கதா் பட்டு மற்றும் பாலியஸ்டா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாவட்டத்தில் 2022- 23 ஆம் ஆண்டில் ரூ. 2.53 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் கதா் விற்பனையைத் தொடங்கியுள்ளோம் என்று கூறினார். நிகழ்ச்சியில், கதா் கிராம தொழில்கள் உதவி இயக்குநா் வி.வி. ரவிக்குமாா், மொழிப்போா் தியாகிகளின் வாரிசுதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- 5 வாக்குச் சாவடிகள் மறு சீரமைப்பு செய்யப்ப டுகின்றன.
- இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாா் செய்து இந்திய தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகள் பகுப்பாய்வு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஊரகப்பகுதி மற்றும் நகா்ப்புறத்தில் 1,500 வாக்காளா்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு செய்து வாக்குச் சாவடிகள் பட்டியல் வெளியிட இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணிமே ற்கொ ள்ளப்பட்டுதற்போது இறுதியாக வெளியி டப்பட்ட வரைவு மறுசீரமை க்கப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியலின் மீது அங்கீகரிக்க ப்பட்ட அரசியல் கட்சியினரிடமிருந்து கருத்துகள் கோரப்பட்டன. இதைத்தொடா்ந்து கலந்தா லோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
பாபநாசம் தொகுதியில் 59, 60, திருவையாறு தொகுதியில் 148, 149, தஞ்சாவூா் தொகுதியில் 292 ஆகிய பாகங்களில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கையின் அடிப்ப டையில் பிரிவுகள் சீரமைக்க ப்பட்டு ஒழுங்கமை க்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 வாக்குச் சாவடிகள் மறு சீரமைப்பு செய்யப்ப டுகின்றன.
இதேபோல, பாபநாசம் தொகுதியில் 1, 2, 168, 226, 229, தஞ்சாவூா் தொகுதியில் 103, 104, பேராவூரணி தொகுதியில் 111, 147 ஆகிய பாகங்களில் வாக்குச் சாவடிகளின் அமைவிடங்கள் மாற்றிய மைக்கப்பட்டுள்ளன.
மேலும், பாபநாசம் தொகுதியில் 3, 14, 29 ஆகிய பாகங்களில் கட்டடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் மறுசீரமை க்கப்பட்டு, தற்போது 8 தொகுதிகளிலும் 2,305 சாவடிகள் உள்ளன. மறுசீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகள் இறுதிப்படுத்தப்பட்டு, இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாா் செய்து இந்திய தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வட்டாட்சியர் (தேர்தல் )ராமலிங்கம், தி.மு.க. (மாவட்ட பொருளாளர்) அண்ணா, ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன், அ.தி.மு.க. காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் (பொருளாளர்) பழனியப்பன், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் ஜெய் சதீஷ், மாவட்ட செயலாளர் அமிர்த்அரசன், இந்திய கம்யூனிஸ்ட் (செயலாளர்) முத்து உத்துராபதி, முத்துக்குமரன், (செயலாளர்) மு.ஆ.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குருசாமி, மக்கள் விடுதலை (மாவட்டச் செயலாளர்) அருணாச்சலம், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.8,215 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம்களை நடத்தி விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கல்விக் கடன்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மக்களவை உறுப்பினா்கள் கே.சுப்பராயன், கு.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் 2022-23ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.21,530 கோடியாகும். இதில், வேளாண்மைத் துறைக்கு 38 சதவீதமாக ரூ.8,206 கோடியும், சிறு வணிகத் துறைக்கு 60 சதவீதமாக ரூ.12,496 கோடியும், பிற முன்னுரிமைக் கடன்களுக்கான வீட்டுக் கடன், மரபுசாரா எரிசக்தி கடன், கல்விக் கடன் மற்றும் இதர கடன்களுக்காக ரூ.478 கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.8,215 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களை நடத்தி மாணவா்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக கல்விக் கடன்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம், வங்கியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி உள்வட்டம், திருக்கோலக்குடி குரூப், பழைய திருக்கோலக்குடி கிராமத்தில் நாளை (14-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.
மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
- விருதுநகர் மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
- இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற அனைத்து ஆண், பெண் இருபாலரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக ரூ.17.50 லட்சம் வரையிலான மானித்துடன் கடனுதவி பெற்று புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 18 வயதிற்கு மேல் இருக்கவேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ. 10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைப் பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரையிலும் உற்பத்திப் பிரிவிற்கு ரூ. 50 லட்சம் வரையிலும் தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.
2022-23-ம் நிதி ஆண்டிற்கான குறியீடு 216 நபர்களுக்கு ரூ.6.24 கோடி மானியம் என விருதுநகர் மாவட்ட தொழில் மையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் வழி முறைகளைப் பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.
மேலும் இந்த திட்டத்தில் திருத்திய வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் பேரில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சார்ந்த தொழில் தொடங்க இந்த அலுவலகம் மூலம் கடன் வசதி செய்து தரப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த ஆர்வம் உள்ள தொழில் திறமையுள்ள ஆண், பெண் தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது ஆதார் எண், பெயர் ஆகியவற்றை பதிவு செய்யும் போது ஏஜென்ஸி என்ற option வரும்போது DIC என தேர்ந்தெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் (89255 34036) என்ற முகவரியில் அணுகி பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை 9 தாலுகாவில் ரேசன் பொருட்கள் வினியோக குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
- இந்த தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
தமிழக அரசின் ஆணை க்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் இ-சேவை மைய கட்டிடம், ராமேசுவரம் வட்டம் நடராஜபுரம் ரேஷன் கடை, திருவாடானை வட்டம் பதனக்குடி ரேஷன் கடை, பரமக்குடி வட்டம் மஞ்சக்கொல்லை இ-சேவை மைய கட்டிடம், முதுகுளத்தூர் வட்டம் கொழுந்துரை இ-சேவை மையக் கட்டிடம், கடலாடி வட்டம் நரிப்பையூர் ரேஷன் கடை, கமுதி வட்டம் கீழராமநதி ஊராட்சிமன்ற கட்டிடம், கீழக்கரை வட்டம் குத்துக்கல்வலசை ரேஷன் கடை (கலையரங்கம்), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் செங்குடி ரேஷன் கடை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நியாயவிலைக்க டைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளை (10-ந்தேதி) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
- பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- பரமக்குடி நகா் முழுதும் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அஞ்சலி செலுத்துவோரின் நலனுக்காக பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
அதன்படி விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அரசு சாா்பில் பரமக்குடி நகா் முழுதும் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. காவல் துறை சாா்பில் பரமக்குடி நகா் மற்றும் சுற்றுப்புறங்களில் 75 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு மேற்கொ ள்ளப்படும்.
பரமக்குடி நகா் முழு வதும் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் கண்காணிப்பதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. பரமக்குடியில் உள்ள இமானுவேல்சேகரன் நினைவிடம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- காற்றின் வேகத்தால் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது.
- தீயை கட்டுப்படுத்த முடியாததால் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஈசானிய தெருவில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை அங்கு தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரவு திடீரென குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
காற்றின் வேகத்தால் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சிய ளித்தது.
தீயை கட்டுப்படுத்த முடியாததால் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
- அரவைக்கொப்பரை 1000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும்.
திருப்பூர் :
குறைந்தபட்ச ஆதார விலைத்திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு (டான்பெட்) அனுமதி அளித்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்தில் கொப்பரை கொள்முதல் செய்திட பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு அரவைக்கொப்பரை 1000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாவிபாளையம் முத்தூர் வளாகத்தில் பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கொப்பரையை அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலைத்திட்டத்தின்படி கிேலா ரூ.105.90 என்ற விலையில 6 சதவீதத்திற்குள் ஈரப்பதத்துடன் சீரான சராசரி தரத்தில் உள்ள கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயிடமிருந்து மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயிடமிருந்து 216 கிலோ கொப்பரை (50 கோணிகள்) மட்டும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக விவசாயிகள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்களை சம்ரிதி என்ற போர்டலில் பதிவு செய்து கொள்ள ஏக்கர் மற்றும் விளைச்சல் விவரங்களுக்கான சான்றிதழுடன் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தை அணுகி கொப்பரையை கொண்டு வந்து வருகிற 30-ந்தேதி வரை விற்பனை செய்யலாம். இத்தகவலை திருப்பூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க இணைப்பதிவாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
- ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
- தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தஞ்சாவூர்:
சேலம் மாவட்டம் எடப்பா டி தாலுகா இருப்பாலி கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வன்(வயது 18), சேலம் ஜலகண்டபுரம் தினேஷ்குமார்(18) உள்பட 50 பேர் திருவாரூரில் தொடங்கிய இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கலந்து கொள்ள பஸ்சில் புறப்பட்டனர்.
அந்த பஸ், தஞ்சை வழியாக சென்றபோது பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
அப்போது தாமரை செல்வன், தினேஷ்குமார் ஆகிய இரண்டு பேர் மட்டும் பெரிய கோவில் அருகே உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றில் குளித்தனர்.
இதில் ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தினேஷ்குமாரை மட்டும் உயிருடன் மீட்டனர்.
ஆற்றில் அடுத்து செல்ல ப்பட்ட தாமரைச்செ ல்வனை தொடர்ந்து தேடி வந்தனர்.
நேற்று இரவு வரை தேடினர். பின்னர் போதிய வெளிச்சம் இல்லாததால் இன்று மீண்டும் தேட முடிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் மேம்பாலம் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள ஆற்றில் தாமரை செல்வன் உடல் பிணமாக மிதந்து வந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.