என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "slug 168822"
- ஆட்டோவில் பெண் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என ஆட்டோக்களுக்கு தாம்பரம் காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் பெண் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க காவல் துறை சார்பில் முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி:-
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.
* காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே கிளாம்பாக்கம் எதிரில் இருந்து இயக்க வேண்டும்.
* கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன் பயணிகள் ஓட்டுனரின் பதிவுச் சான்றிதழை பரிசோதிக்கலாம்.
* பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மாநகரில் 1 லட்சம் வாகனங்களில் மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் தொடங்கி வைத்தார்.
மதுரையில் ஆகஸ்ட் 20 ந் தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க திருப்பூர் அ.தி.மு.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதன்படி திருப்பூர் மாநகரில் ஆட்டோக்களில் விளம்பர பதாகைகள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் பணியை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் தொடங்கி வைத்தார். மாநகரில் 1 லட்சம் வாகனங்களில் மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் பணிகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கட்சி நிர்வாகிகள் கருணாகரன், திலகர் நகர் சுப்பு, ஏ.எஸ்.கண்ணன், வி.பி.என்.குமார், சி.எஸ்.கண்ணபிரான், ஆண்டவர் பழனிசாமி, சின்னசாமி, யுவராஜ் சரவணன், தனபால், அன்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- க்யூ ஆர் கோடு செயலி மூலம் ஆட்டோக்களை இயக்க கருத்து கேட்பு கூட்டம் தஞ்சையில் நடை பெற்றது.
- தஞ்சாவூரில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் க்யூ ஆர் கோடு செயலி மூலம் ஆட்டோ க்களை இயக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகரில் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி புதிய செல்போன் செயலி மூலம் ஆட்டோக்களை இயக்குவது தொடர்பாக "ஊர் கேப்ஸ்" என்ற நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாகி மரிய ஆண்டனி பேசியதாவது:
தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிலையான வருமானமும், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமும் அதே நேரத்தில் இருவரும் பேரம் பேசாமல் உரிய கட்டணத்தில் இயக்க ஊர் கேப்ஸ் என்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்மார்ட் போனில் புதிய செயலியில் ஆட்டோக்களை இயக்க முன் வந்துள்ளது.
கோவையில் இந்த திட்டம் கடந்த 80 நாட்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே போல் தஞ்சாவூர் மாநகரிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஒத்துழைப்பு தேவை என பேசினார்.
இதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில்: தஞ்சாவூரில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.
தற்போது நாங்கள் சில பேர் மட்டுமே இந்த கூட்டத்துக்கு வந்துள்ளோம்.
எனவே எல்லா ஆட்டோ ஓட்டுநர்களிடமும் இந்த திட்டம் தொடர்பாக கலந்து பேசி விரைவில் அதற்கான முடிவை தெரிவிக்கிறோம் என்றனர்.
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையத்தில் ‘பிரீபெய்டு’ ஆட்டோ சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. டீசல், பெட்ரோல் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த சேவை 2 முறை நிறுத்தப்பட்டது.
இதனிடையே காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் ‘பிரீபெய்டு’ ஆட்டோ சேவை தொடங்குவது குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சித்தூர் பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
இதில், சுமார் 120 ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். மண்டலக்குழு முன்னாள் தலைவர் சுனில்குமார் மற்றும் பலர் பேசினர்.
கூட்டத்தில், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது, மதுபோதையில் ஆட்டோ ஓட்டக்கூடாது, சீருடை அணிந்து தான் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் ‘பிரீபெய்டு’ ஆட்டோ சேவை தொடங்க ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை காட்பாடி ரெயில் நிலைய வணிக மேலாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் ஆட்டோ டிரைவர்கள் வழங்கினர்.
இதையடுத்து இன்று காலை முதல் பிரீபெய்டு ஆட்டோக்கள் இயக்கபட்டன. குறைந்த கட்டணத்தில் ஆட்டோக்கள் இயக்கபடுவதால் பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.
சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன இந்நிலையில் நேற்று இரவு பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ், ஏட்டு மதியழகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஆட்டோவை சோதனை செய்தனர். அதில்கஞ்சா மறைத்து வைத்து விற்றது தெரிந்தது.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த ஐசிஎப் பகுதியைச் சேர்ந்த பாலு, டிபி சத்திரம் சேட்டு என்கிற மனோகர், ஷெனாய் நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பா என்கிற ஞானசேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1கிலோ 100கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை போலிசார் பறிமுதல் செய்தனர். #tamilnews
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்காக ஆட்டோக்கள் வந்து செல்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இந்த ஆட்டோக்கள் பாலத்தின் மீதும் அதனை ஒட்டி ரெயில் நிலையம் செல்லும் போதும் மின்னல் வேகத்தில் செல்கின்றன.
குறிப்பாக கீழ் பாலத்தில் அதிக மக்கள் நடமாட்டமும், பல்வேறு குறுக்கு சந்துகளும் உள்ளன. இந்த சந்துகளில் இருந்து நடந்து வருபவர்களும், இரு சக்கர வாகனங்களில் வருபவர்களும் இந்த ஆட்டோக்கள் மீது மோதி விபத்தை சந்தித்து வருகின்றன.
ரெயில் செல்லும் முன்பாக பயணிகளை ரெயில் நிலையம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சாலையில் நடந்து செல்பவர்களை பற்றி கவலைப்படாமல் இது போன்ற வேகத்தில் செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை கடக்கவே பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் வி.எஸ்.கோட்டையைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 33). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கனரக ஓட்டுனர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இன்று காலை போக்குவரத்து பணிமனை முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த போது அசுர வேகத்தில் வந்த ஆட்டோ இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். மேலும் ஆட்டோவும் தலைகுப்புற கவிழ்ந்தது.
படுகாயமடைந்த பத்மநாபன்அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது போன்ற தொடர் விபத்துகளை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். விதி மீறும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராஜபாளையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் விதிகளை மீறுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
காந்தி சிலை, ரெயில்வே பீடர் சாலை மற்றும் மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும், பள்ளி கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், தனியார் வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் சோதனை நடைபெற்றது.
50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நடைபெற்ற சோதனையில், தகுதி சான்று இல்லாமல் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ மற்றும் தனியார் சுற்றுலா வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 6 ஆட்டோக்கள் மற்றும் புகை சான்று, முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் விதிகளை மீறி இயக்கிய 7 சுற்றுலா வாகனங்கள் மற்றும் வேன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத்தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி.எப்., பாட்டாளி, விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி, தே.மு.தி.க. போன்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன.
![](https://img.maalaimalar.com/InlineImage/201808061344357219_1_auto._L_styvpf.jpg)
இதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளரும் சாலை போக்குவரத்து சம்மேளன தலைவருமான ஆறுமுக நயினார் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக நாளை ஒருநாள் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக வேலைநிறுத்தம் நடக்கிறது. ஆளும்கட்சி தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து சங்கங்களும் இதில் பங்கேற்கின்றன. அதனால் நாளை ஆட்டோ, கால்டாக்சி, உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது. தமிழகத்தில் 3 லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. சென்னையை பொறுத்தவரை 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அண்ணாசாலை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #MotorVehiclesAmendmentBill
வேடசந்தூர், எரியோடு, அய்யலூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் ஆட்டோக்களில் உரிய ஆவணங்கள் இல்லாமலும் அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதனையடுத்து வேடசந்தூரில் போக்குவரத்து ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் ஆட்டோக்கள் சோதனை இடப்பட்டன. இந்த சோதனையில் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோக்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் பொது மக்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் உரிய ஆவணங்கள் இன்றியும், பெர்மிட் இல்லாமலும் இயங்கும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டது.
அதே போல் புதுவையிலும் முழு அடைப்பு நடத்தப்படும் என்று தி.மு.க.வினர் அறிவித்து இருந்தனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. புதுவையில் கடைகள் நிறைந்து காணப்படும் நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, மிஷன் வீதி, சின்ன சுப்புராயப் பிள்ளை வீதி, பாரதி வீதி, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, எஸ்.பி. பட்டேல் சாலை, புஸ்சி வீதி, கடலூர் சாலை, விழுப்புரம் சாலை, வழுதாவூர் சாலை என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
அதேபோல் பெரிய மார்க்கெட், முத்தியால் பேட்டை மார்க்கெட், சின்னக்கடை மார்க்கெட், முதலியார் பேட்டை மார்க்கெட் ஆகியவையும் மூடப்பட்டு இருந்தன.
ஒரு சில இடங்களில் மட்டும் பெட்டிக்கடைகள் திறந்து இருந்தன. அனைத்து கடைகளையும் மூடும்படி வற்புறுத்தி தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிளில் வீதி, வீதியாக சென்றனர். இதனால் திறந்து இருந்த ஒன்றிரண்டு சிறு, சிறு கடைகளும் மூடப்பட்டன.
காமராஜர் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இதை பார்த்த தி.மு.க.வினர் பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. இதன் பிறகு அந்த பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.
இதே போல் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டன.
புதுவையில் இன்று முற்றிலும் பஸ்கள் ஓடவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தமிழக அரசு பஸ்கள் நேற்று இரவே நிறுத்தப்பட்டன.
சென்னையில் இருந்து புதுவை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படும். இன்று அவையும் நிறுத்தப்பட்டன. தமிழக அரசு பஸ்கள் எதுவுமே புதுவைக்கு வரவில்லை.
அதே போல் புதுவையில் அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்களும் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
பஸ்கள் முற்றிலும் ஓடாததால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள்.
ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல முடியாம் மிகவும் சிரமப்பட்டனர். முழு அடைப்பையொட்டி அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
முழு அடைப்பினால் புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது.