என் மலர்
நீங்கள் தேடியது "slug 169049"
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
- திருப்பூர் மாவட்டத்தில் 80 கோவில்கள், 65 மசூதிகள் போன்றவற்றில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
திருப்பூர் :
கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையே கோவை மாவட்டத்தின் அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்திலும் சம்பவம் தொடர்பாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் நேரடி மேற்பார்வையில் 2 துணை கமிஷனர்கள் ,4 உதவி கமிஷனர்கள் தலைமையில் மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 80 கோவில்கள், 65 மசூதிகள் போன்றவற்றில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபோல் வெளிமாவட்டத்தில் இருந்து வருகிற கார்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகள் போன்றவற்றிலும் சோதனை நடந்து வருகிறது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளார்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபோல் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் லாட்ஜில் அறை எடுத்து தங்கினாலோ அல்லது பொதுமக்களுக்கு அவ்வாறு தோன்றும் நபர்கள் யாரையாவது பார்த்தாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசியகாவலர்தியாகதினம் அனுசரிக்கப்பட்டது.
- இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசியகாவலர்தியாகதினம் அனுசரிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், இந்தியாவில் 1959-ம்ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி இந்திய-சீனா எல்லையான லடாக்கில் நடந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் 10 பேர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர். அதனால் அக்டோபர் 21-ந்தேதி தேசியகாவலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
காவலர்களின் பணி, செயல்பாடு, தினசரி கடமைகள், வழக்குப்பதிவுசெய்யும்முறை, விசாரணை, புலனாய்வு, குற்றசெயல்பாடுகளை கண்டறியும் தன்மை, போதைதடுப்பு, சட்ட விதிகளை பின்பற்றும்வழிமுறைகள் பற்றி விளக்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், வாண்டையார், (பயிற்சி) சக்தி கணேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், ஸ்டாலின் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவர்கள் கலந்துகொண்டனர்.
எழுத்தர் நாகராஜன் நன்றி கூறினார். முன்னதாக வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பணியின் போது கடந்தஆண்டு இறந்த போலீஸ்காரர் கச்சைகட்டி மகேந்திரன் படத்திற்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.
திருப்பூர் :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் முக்கிய சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.
சாலையோர கடைகள் அனைத்தும் மக்கள் தொகை இருப்புக்கு தகுந்தவாறு அனைத்து சாலைகளிலும் சம அளவில் பிரித்து கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் தங்களது சரக்கு பொருட்களை காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாநகரில் இறக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற நேரங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டது.
தீபாவளியையொட்டி திருப்பூர் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பிரதான ரோடுகள் என பல இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். இதையொட்டி ஆயுதப்படை, பயிற்சி போலீசார், பட்டாலியன் போலீசார் என மாவட்டம் முழுவதும் 1100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி விற்பனையையொட்டி நேற்றிரவு முதல் இன்று காலை வரை போலீசார் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளர்கள் பலர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஒரு வாரம் கழித்துதான் அவர்கள் திருப்பூர் திரும்புவார்கள். எனவே போலீசார் ஒரு வாரம் வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்து சென்றால் அந்த பகுதியில் ரோந்து பணியை தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.
- நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு நாள் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
- பணியின் போது மரணமடைந்த காவல் மற்றும் காவல்படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி.
நாகப்பட்டினம்:
நீத்தார் நினைவு நாளை யொட்டி, பணியின்போது உயிர் நீத்தகாவலர்களுக்கு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலின் போது, காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் வீரமரணமடைந்தனர்.
அவர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21- ம் தேதி காவலர்கள் வீரவணக்க தினம் (நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் பணியின் போது மரணமடைந்த காவல் மற்றும் காவல்படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதன்படி, நீத்தார் நினைவு நாளான நேற்று நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்திலுள்ள உயிர் நீத்தோர் நினைவுத்தூனுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்.
கப்பல்படை லெப்டினன்ட் கமாண்டர் கர்மேந்தர் சிங், மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ஆயுதப்படை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை கலெக்டர்மற்றும் எஸ்.பி வழங்கினர்.
- அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- டிரைவர் லோகேஸ்வரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த லாரி பல்லடம் அருகேயுள்ள பருவாய் சாலை பகுதியை சேர்ந்த ஜெபர்சன் வைஸ் (வயது 33) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதனை தேனி மாவட்டம் உத்தமபாளையம் கன்னிசேரவாடி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் லோகேஸ்வரன் (23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். லோகேஸ்வரன் தற்போது சின்ன கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள பி.சி.ஆர் தோட்டத்தில் வசித்து வருகிறார். அவர் கண்டெய்னர் லாரியை எடுத்துக் கொண்டு காரணம்பேட்டை வந்தபோது போலீசாரின் வாகன சோதனையில் சிக்கியுள்ளார். டிரைவர் லோகேஸ்வரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தார். அதனை யாரிடம் கொடுக்க இருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- 54 மனுக்களுக்கு தீர்வு
- காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காண குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காணகுறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குளச்சல், இரணியல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை ஆகிய போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் குளச்சலில் நடந்தது.
இதில் குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு) சுந்தர மாணிக்கம், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, மகளிர் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் சப் - இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 54 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
- பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது.
- 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதிபொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது. உடனே குழந்தையின் உடலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தையின் தாய் யார், எதற்காக வீசி சென்றார் என்று தெரியவில்லை. குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால் வீசி சென்றாரா அல்லது தகாத உறவு காரணமாக பிறந்ததால் வீசி சென்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
- செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி அருகே தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாங்குடி. கடந்த மாதம் 20-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பலால் மாங்குடி வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் கொலை செய்யப்பட்ட மாங்குடி மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு, லாட்டரி விற்பனை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மாங்குடியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அவரது செல்போனுக்கு கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்த ராணி ரமாதேவி என்பவர் மாங்குடி சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்த குறுந்தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மாங்குடி கொலை செய்யப்பட்ட மறுநாளே ராணி ரமாதேவி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் படி ராணி ரமாதேவியை பணியிடைநீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.
- இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் பெர்னாண்டஸ் புகார் அளித்தார்.
- தகவலறிந்த சூரியாவின் உறவினர்கள் சூர்யாவைமீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மன்னார்குடி. அக்.13-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசேஷம் கிராமத்தை தேர்ந்த சூர்யா (47) என்பவர் பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பெருகவாழ்ந்தான் அருகே பட்டிமார் கிராமத்தை சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் ஒரத்தூர் கிராமத்தில் இருந்து பட்டிமார் நோக்கி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது பாளையூர் எனுமிடத்தில் வந்தபோது பெர்னாண்டஸ் வந்த இருசக்கர வாகனத்தை மறித்த 6 பேர் கொண்ட கும்பல் பெர்னாண்டசை தாக்கி அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் பெர்னாண்டஸ் புகார் அளித்தார்.
அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த தனிப்பிரிவு ஏட்டு சூர்யா, பெர்னாண்டஸ்ஸை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு அசேஷத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது பாலையூர் எனும் இடத்தில் சென்ற போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தனிப்பிரிவு போலீஸ் சூரியாவை கல் மற்றும் கம்புகளால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
தகவலறிந்த சூரியாவின் உறவினர்கள் சூர்யாவைமீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து போலீசார் சூர்யாவை தாக்கிய ஜீவானந்தம், அசோகன், ராஜேந்திரன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் சோதனை நடத்தியதில் வீட்டின் முன்பு செடி கொடிகளுக்கு இடையே 4 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது.
- இதையடுத்து கஞ்சா செடியையும், கஞ்சா பொட்டலத்தையும் கைப்பற்றிய போலீசார் கண்டன்விளையைச் சேர்ந்த அஜெய்மைக்கிள் (வயது 24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல், அக். 13-
இரணியல் அருகே கண்டன்விளையில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமை யிலான போலீசார் கண்டன் விளை சென்று சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் வீட்டின் முன்பு செடி கொடிகளுக்கு இடையே 4 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடியையும், கஞ்சா பொட்டலத்தையும் கைப்பற்றிய போலீசார் கண்டன்விளையைச் சேர்ந்த அஜெய்மைக்கிள் (வயது 24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒவ்வொருவரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களிடம் பாஸ் ேபார்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்துவருவதாக தெரிவித்தார்.
- வெளிநாடு வேலை வேண்டாம், வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பகுதியில் ரகுமான் என்பவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரகுமானிடம் வெளிநாடு வேலை செல்வதற்கு பணம் கொடுத்து இதுவரை விசா வராமல் ஏமாற்றம் அடைந்ததாக 40-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுக்க சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர்.
இதில் குத்தாலம் பகுதியை சேர்ந்த ராஜதுரை, கும்பகோணம் பகுதி யாசர், திருப்பத்தூர் பகுதி மணிமொழி, மற்றும் தைக்கால், கூத்தியம்–பேட்டை, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கொடுத்ததற்கான புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தனர்.
இது குறித்த பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ரகுமான் ஒவ்வொருவரிடமும் 1 லட்சம், 90 ஆயிரம், 1 லட்சத்து 20 ஆயிரம் என வெளிநாடு வேலைக்கு தகுந்தாற்போல் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களிடம் பாஸ் ேபார்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்துவருவதாக தெரிவித்தார்.
மேலும் வெளிநாடு வேலை வேண்டாம், வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தையும், பாஸ்போர்ட்டையும் மீட்டு தர வேண்டும் என்றனர்.
- கொள்ளையன் வீட்டின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து. கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான்.
- இரவு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் சைரன் சத்தம் கேட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
சீர்காழி:
சீர்காழி அருகே சேந்தங்குடி கூட்டுறவு நகரை சேர்ந்தவர் ஜான் விக்டர் (64).தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தி வருகிறார். இவரது மகன் சார்லஸ் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஜான் விக்டர் அவரது மனைவி ரோஸ்மேரி மற்றும் மருமகள் அரசி பேரக்குழந்தைகள் ஆகியோருடன் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்
இந்நிலையில் கொள்ளையன் பூட்டி இருந்த வீட்டின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான்.
இந்நிலையில், இரவு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் சைரன் சத்தம் கேட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
மதியம் வீட்டிற்கு வந்த பணியாட்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஜான் விக்டருக்கு தகவல் அளித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் ஜான் விக்டர் வீட்டுக்கு உடனடியாக சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர்.
இதனிடையே வெளியூர் சென்றிருந்த ஜான் விக்டரும் உடனடியாக புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார்.
அதிர்ச்சியுடன் வீட்டின் உள்ளே சென்று நகை பணம் கொள்ளை போகியுள்ளதா என்று பார்த்தபோது இரண்டு அறைகளை உடைத்து இருந்த திருடன் நகை பணம் உள்ள அறையினை உடைக்காமல் சென்றது தெரிய வந்தது.
அந்த அறைகளில் சுமார் 70 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் இருந்தது என ஜான் விக்டர் தெரிவித்தார்.
கொள்ளையன் மாஸ்க் மற்றும் கையுறைகள் அணிந்து வீட்டில் நுழையும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது இதனை கைப்பற்றி சீர்காழி போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.