என் மலர்
நீங்கள் தேடியது "ஆண் பிணம்"
- ஆற்றின் மணல் திட்டு நடு பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
- நெல்லிக்குப்பம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் சொர்ணாவூர் மேல்பாதியில் தடுப்பணைக்கட்டு உள்ளது. இந்த தடுப்பணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் இருகரை களை தொட்டும் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றின் மணல் திட்டு நடு பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வள வனூர் போலீ சாருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முருகன், நெல்லிக்குப்பம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாராவது அடித்து கொன்று உடலை வீசி விட்டு சென்றார்களா? அந்த பகுதியில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மரத்தில் 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மரத்தில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து குப்புச்சிபாளையம் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கடந்த 16-ந் தேதி அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரி ழந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீசார் அடை யாளம் தெரியாத நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓமலூர் அரசு மருத்துவமனை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அடிபட்டு கிடந்தார்.
- அவருக்கு கடந்த ஒருமாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அடிபட்டு கிடந்தார்.
அவரை மீட்ட ஓமலூர் போலீசார், ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கடந்த ஒருமாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில், இறந்தவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்தை அணுகி தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் பெரிய ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதப்பதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார் அவரை கொலை செய்து இங்கே வீசி சென்றனரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த சம்பவம் கொலையா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் காடு குட்டை பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியாற்றி கொ ண்டிருந்தனர். அப்போது தோட்டத்தின் கம்பிவேலி பகுதி அருகே ஆண் பிணம் ஒன்று நிர்வாண நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு நிர்வாண கிடந்த ஆணின் உடலை பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவருக்கு 30 வயது இருக்கும் என தெரிந்தது.
உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தோட்டத்தில் பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் இவர் பெண் விவகாரத்தில் கொலை செய்யபட்டரா? மதுபோதையில் யாராவது அடித்து கொன்று யாராவது உடலை இங்கு கொண்டு வந்து வீசி சென்றனரா? அல்லது போதை தலைக்கேறிய நிலையில் இறந்தாரா? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யார்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
திருத்தணி - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில், பந்தி குப்பம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 51 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்ப தாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆனந் தன் தலைமையிலான போலீ சார் பிணத்தை மீட்டு அரக் கோணம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக் குப் பதிவு செய்து இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.
- ரெயில்வே பாதையின் நடுவில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இறந்து கிடந்தார்.
- ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஆணைவாரி பகுதியில் ரெயில்வே பாதை உள்ளது. இப்பகுதி மக்கள் இன்று காலை அங்கு சென்ற போது ரெயில்வே பாதையின் நடுவில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இறந்து கிடந்தார். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
திருவெண்ணைநல்லூர் போலீசார் விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலையில் சென்ற ராமேஸ்வரம் அஜ்மீர் ரெயில் இவர் மீது மோதியிருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? ரெயிலில் தற்கொலை செய்து ெகாண்டாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலத்தில் 2 இடங்களில் ஆண் பிணங்கள் மீட்கப்பட்டன.
- பிணமாக கிடந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சேலம்:
சேலம் டவுன் பஸ் நிலையத்துக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இது பற்றி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து இடத்தை கைப்பற்றி பிரேத சோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் கம்பி வேலி அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடல் அழுகி காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த முதியவர் பெயர் மற்றும் ஊர் விபரங்கள் குறித்து விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது பற்றி பெரியேரி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த முதியவர் பற்றி தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
- பொதுமக்கள் காங்கயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காங்கயம் :
காங்கயம் அருகே மடவிளாகம், நந்தவனக்காடு பகுதியில் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காங்கயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீசாா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்கும் எனவும், பெயா், முகவரி போன்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- தென்பெண்னை ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது.அங்கே, அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
- நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர்,
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் தென் பெண்ணையாறு உள்ளது. ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த போது அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
இத்தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு ஆற்றில் கரையோரம் தூக்கி வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- ஆண் இறந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது.
- பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி நகர பேருந்துகள் நிற்கும் பஸ் நிலையத்தில் பென்னாகரம் பேருந்து நிற்கும் இடத்தில் ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக நகர போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், போலீசார் ராஜேஷ்கண்ணன், குமார் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.
அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் இறந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆம்புலன்சை வரவழைத்த போலீசார் அவர்களே அந்த ஆண் உடலை தூக்கி ஏற்றி பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எவ்வாறு உயிரிழந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.