என் மலர்
நீங்கள் தேடியது "பலி"
- இந்த சம்பவம் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது.
- வெடிவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீப்பிடித்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இருந்து 13 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே வெடிவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன.
- கனடா எல்லையில் இருந்து டெக்சாஸ் நோக்கி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ பரவுகிறது. மறுபுறம் புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை இன்னலில் தள்ளியுள்ளன. இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 26 பேர் வரை பலியாகி உள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மிசவுரி உள்ளது. சூறாவளி பாதிப்புக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதில், பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் கவிழ்ந்து கிடந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளும் இடிந்து விழுந்தன. சுவர்கள் மீது மக்கள் நடந்து செல்லும் அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளது.
அர்கான்சாஸ் மாகாணத்தில் 3 பேர் பலியானார்கள். 8 கவுன்டி பகுதிகளை சேர்ந்த 29 பேர் காயமடைந்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் அமரில்லோ பகுதியில் புழுதி புயலின்போது, கார் விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருவதுடன், கடுமையான புழுதி புயலும் வீசி பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன. வானிலை பாதிப்புகளால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கனடா எல்லையில் இருந்து டெக்சாஸ் நோக்கி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், குளிரான பகுதிகளில் குளிர் காற்றும், வெப்ப பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் ஆபத்தும் காணப்படுகின்றன. மின்னசோட்டா மற்றும் தெற்கு டகோடா பகுதிகளில் அதிக குளிருடன் கூடிய பனி சூறாவளி பாதிப்புக்கான எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. ஓரடி வரையிலான பனிப்படலம் ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டுத்தீயால் 689 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான நிலம் எரிந்து போயுள்ளது. டெக்சாஸ், கன்சாஸ், மிசவுரி மற்றும் நியூ மெக்சிகோ மாகாணங்கள் அதிக பாதிப்படைந்து உள்ளன. இதேபோன்று, கிழக்கு லூசியானா, மிஸ்ஸிஸ்ஸிப்பி, அலபாமா, மேற்கு ஜார்ஜியா மற்றும் புளோரிடா பான்ஹேண்டில் உள்ளிட்ட பகுதிகள், சூறாவளி மற்றும் புயல் பாதிப்புக்கு இலக்காகும் பகுதிகளாக அறியப்பட்டு உள்ளன. டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ், மிசவுரி, இல்லினாய்ஸ், இன்டியானா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
- சைக்கிள் மீது பைக் மோதி 2 பேர் பலியானார்கள்.
- இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி குமார் (வயது 45). இவரது மைத்துனரான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கோபால்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (40) இருவரும் மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதியில் இருந்து கோட்டையூர் நோக்கி சென்றனர்.
கே.புதுப்பட்டிக்குள் வரும்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி அழகன் என்பவர் சைக்கிளை ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக பைக்கும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகராஜ், அழகன் ஆகியோர் படுகாய மடைந்தனர். இருவரும் ஆம்புலன்சு மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அழகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நாகராஜ் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலையில் டாரஸ் லாரியில் உள்ள தார்ப்பாய் கயிறுகளை அவிழ்க்கும் போது 40 கிலோ எடையுள்ள எட்டு நெல் மூடைகள் பிரம்ம நாயகத்தின் மீது சரிந்து விழுந்தது.
- உடனடியாக அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
ஆரல்வாய்மொழி, அக்.27-
நாகர்கோவிலை அடுத்த சுசீந்தரம் யோகீஸ்வரர் தெருவை சேர்ந்தவர் பிரம்ம நாயகம் (வயது 54). இவர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த பாபு என்பவர் க்கு சொந்தமான டாரஸ் லாரியை ஓட்டி வருகிறார்.கடந்த மாதம் 22-ந் தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான நெல் மூட்டைகளை ஏற்றி ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் நவீன அரிசி ஆலைக்கு கொண்டு சென்றார்.
ஆலையில் டாரஸ் லாரியில் உள்ள தார்ப்பாய் கயிறுகளை அவிழ்க்கும் போது 40 கிலோ எடையுள்ள எட்டு நெல் மூடைகள் பிரம்ம நாயகத்தின் மீது சரிந்து விழுந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இவருக்கு சத்யகலா என்ற மனைவியும் ஹரிகனேஷ் என்ற மகனும் உமாமகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நெல் மூடை கீழே விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நாமக்கல்லில் கார் மோதி முதியவர் பலியானார்.
- இவர் இன்று காலை நாமக்கல் புதன் சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் கார் மோதி முதியவர் பலியானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60).
இவர் இன்று காலை நாமக்கல் புதன் சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி தலையில் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி உயிரிழந்தார்.
இது குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அறிந்த ரங்கசாமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலியானார்
- அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
புதுக்கோட்டை
விராலிமலை தாலுகா வடுகப்பட்டி பூங்கா நகரை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவருடைய 3-வது மகன் பொன் ஆதவன் (வயது 15). இவர் விராலிமலை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்த தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். வேலூர் சாலையில் உள்ள திருமலை நகர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர கட்டிடத்தின் மீது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மேலும், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த பொன் ஆதவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் பொன் ஆதவன் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழந்தார்
- கூலி வேலை செய்து வந்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவமூர்த்தி(வயது 62). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு செல்லும் மின் இணைப்பில் மரத்தின் இலைகள் சிக்கியிருந்தது.
இதைக்கண்ட கேசவமூர்த்தி, அந்த இலைகளை அகற்றிவிட முயற்சி செய்துள்ளார். அப்போது கேசவமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கேசவமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
- கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருந்தது.
- நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பார்வதி புரத்தைச் சேர்ந்தவர் சுஷ்மா (வயது 26). சாப்ட்வேர் என்ஜினீயர்.
டெல்லி துவாரகா நகர் பகுதியைச் சேர்ந்த ஷியாம் (28) சாப்ட்வேர் என்ஜினீயர். இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுஷ்மாவும் ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஷியா முக்கும் சுஷ்மாவுக்கும் தலை தீபாவளி என்பதால் அதனை கொண்டாடு வதற்காக பார்வதிபுரத்திற்கு வந்திருந்தனர். தலை தீபா வளியை கொண்டாடிய இவர்கள் நேற்று காலை காளிகேசம் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் இருந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சுஷ்மா எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சுஷ்மா கூச்சலிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சுஷ்மா தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார். மனைவியை காப்பாற்று வதற்காக ஷியாம் ஆற்றில் குதித்தார்.
அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள சூழலில் சிக்கிக்கொண்டார். இவருக்கும் நீச்சல் தெரியாது. இதனால் தண்ணீரில் இருந்த சூழலில் இருந்து ஷியாமால் வெளியே வர முடியவில்லை. ஆனால் சுஷ்மா அந்த பகுதியில் உள்ள செடி ஒன்றை பிடித்துக் கொண்டு கரைக்கு பத்திரமாக வந்தார்.மனைவி கண்ணெதிரே ஷாயாம் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.இதனால் சுஷ்மா கூச்சலிட்டார். அங்கிருந்த சுற்றுலா பயணி கள் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து நாகர் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஷியாம் பிணமாக மீட்கப்பட்டார். ஷியாம் உடலை பார்த்து சுஷ்மா கதறி அழுதார். இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஷியாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலை தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கார் மோதி முதியவர் பலியானார்.
- பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் பருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). சேந்தகனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(65). இவர்கள் திருவாடானையை அடுத்த சின்னக்கீரமங்கலம் ரவுண்டானா பகுதியில் உள்ள கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இதில் ஒரு கார் வேகமாக வந்தது. அது கடை முன்பு நின்று கொண்டிருந்த சிதம்பரம், வேல்முருகன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். வேல்முருகன் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சை்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் மீது மோதிய காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
- பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பாளையம்:
பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சத்யா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் திடீரென சாலையில் நடந்து சென்ற கலா மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த கலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
- சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவ்னீத் கவுர் தெரிவித்தார்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். அமராவதியில் உள்ள பிரபாத் டாக்கீஸ் திரையரங்கம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவ்னீத் கவுர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள துணை முதல்வர், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை மாநில அரசு ஏற்கும் என்றும், விசாரணை நடத்த கோட்ட ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
- விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
பெங்களூரை சேர்ந்தவர் ஜன்னபாவா (வயது 30). அவரது மனைவி பிரியா (23). இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜன்னபாஷ்வா தனது மனைவியுடன் பணிபுரியும் தினேஷ், புபாலன், நிஷ்த்தா ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டனர்.காரை ஜன்னபாஷ்வா ஓட்டினார். கோயமுத்தூர் வழியே வந்த கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர் பின்னர் அடிபட்டவர்களை சின்ன சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.