என் மலர்
நீங்கள் தேடியது "டேபிள் டென்னிஸ்"
- டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியா சார்பாக 5 முறை ஒழும்பிக் போட்டிகளில் விளையாடிய தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வை அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த WTT ஸ்டார் போட்டியாளர் போட்டியின் 16வது சுற்றில் தோல்வியடைந்த பிறகு ஓய்வு பெறுவதாக சரத்கமல் அறிவித்தார்.
42 வயதானால் சரத்கமல் 20 ஆண்டுக்கும் மேலாக இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்திவந்தார்.
சரத் கமல், இதுவராவ் ஐந்து காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் பல வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சிறப்பாக விளையாடியதற்காக கேல் ரத்னா விருதை அவர் வென்றுள்ளார், மேலும் 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
- இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா சக நாட்டு வீராங்கனையான கிருத்விகா ராய்யிடம் சரண் அடைந்தார்.
- தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் ஆஸ்திரேலியாவின் நிகோலஸ் லுமை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சென்னை:
உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் 11-8, 11-8, 11-9 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் நிகோலஸ் லுமை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வைல்டு கார்டு ஜோடியான இந்தியாவின் சரத்கமல்-சினேஹித் சுரவஞ்ஜிலா ஜோடி அரை இறுதியில் போராடி தோற்றது. தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கொரியாவின் லிம் ஜொங் ஹூன்-ஆன்கே ஹியூன் ஜோடியிடம் 11-9, 8-11, 9-11, 6-11 என்ற கணக்கில் தோற்றது.
பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா 7-11, 10-12, 11-7, 9-11 என்ற செட் கணக்கில் ஹூவாங் யூ ஜியிடம் (சீனதைபே) அதிர்ச்சி தோல்வி கண்டார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 6-11, 9-11, 11-6, 11-4, 7-11 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான கிருத்விகா ராய்யிடம் சரண் அடைந்தார்.
- திருச்சியில் நடைபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம் பிடித்தது
- இறுதி ஆட்டத்தில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, திருவாரூர் மஞ்சக்குடி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்றது
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான மாணவர்களுக்கான மேஜை பந்து போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் 6 கல்லூரி அணிகள் பங்கேற்ற மாணவர்களுக்கான மேஜை பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, திருவாரூர் மஞ்சக்குடி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்று முதலிடம் பெற்று பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மேஜை பந்து போட்டியில் தொடர்ந்து 7-வது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழக துறைகள் அணியை 3-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது இடத்தை பிடித்தது.
மேஜை பந்து போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி வீரர்களை கல்லூரியின் செயலாளரும், தாளாளருமான ஏ.கே.காஜா நஜிமுதீன், பொருளாளர் எம்.ஜமால் முகமது, முதல்வர் எஸ்.இஸ்மாயில் முகைதீன்,
கவுரவ உறுப்பினர் கே.என்.அப்துல் காதர் நிஹல், கே.என்.முகமது பாஷில், உடற்கல்வி இயக்குனர் பி.எஸ்.ஷாஇன்ஷா மற்றும் உதவி உடற்கல்வி இயக்குனர் கே.பிரதீப்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
- டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் இந்திய வீராங்கனை 44-வது இடத்தில் உள்ளார்.
- காலிறுதி ஆட்டத்தில் சீன தைபே வீராங்கனையை இந்திய வீராங்கனை வீழ்த்தினார்.
பாங்காங்:
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சென் சூ-யு-வை எதிர் கொண்டார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-11, 11-6, 11-5, 11-7, 8-11, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.
மேலும் இந்தியாவின் சேத்தன் பாபூருக்குப் பிறகு சாம்பியன்ஷிப் போட்டி கடைசி நான்கு சுற்றுக்குள் வந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் மணிகா பெற்றுள்ளார். கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையே நடைபெறும் காலிறுதி சுற்றில் வெற்றி பெறும் வீராங்கனையை, அரையிறுதியில் இந்திய வீராங்கனை மணிகா எதிர்கொள்கிறார்.
- டேபிள் டென்னிசில் தமிழக வீராங்கனைகள் ஆர்.லத்திகா, ஆர்.உத்பிரக்ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.
- சென்னை பெரம்பூரில் உள்ள கே.ஆர்.எம். பள்ளியில் படித்து வரும் மாணவிகள் லத்திகா, உத்பிரக்ஷா இருவரும் மாநில பயிற்சியாளர் ராஜேஸ்குமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
சென்னை:
3-வது சர்வதேச பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் நடந்து வருகிறது. டேபிள் டென்னிஸ், சிலம்பம், கைப்பந்து, யோகா, கூடைப்பந்து, தடகளம், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.
இதில் டேபிள் டென்னிசில் தமிழக வீராங்கனைகள் ஆர்.லத்திகா, ஆர்.உத்பிரக்ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.
17 வயதுக்குட்பட்டோர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் லத்திகா 3-0 என்ற செட் கணக்கில் இலங்கை வீராங்கனையையும், 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உத்பிரக்ஷா 3-1 என்ற செட் கணக்கில் நேபாளம் வீராங்கனையையும் தோற்கடித்தனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள கே.ஆர்.எம். பள்ளியில் படித்து வரும் மாணவிகள் லத்திகா, உத்பிரக்ஷா இருவரும் மாநில பயிற்சியாளர் ராஜேஸ்குமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
- அரையிறுதியில் சீன தைபே அணியிடம் தோல்வி
- சரத் கமல், சத்தியன் நேர்செட்டில் தோல்வியடைந்தனர்
ஆசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங்கில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் அணிக்கான அரையிறுதியில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது.
இந்திய அணியில் சரத் கமல், ஜி. சத்தியன், ஹர்ப்ரீத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். சரத் கமல் சுயாங் சி-யுயானை எதிர்கொண்டார். இதில் சரத் கமல் 6-11, 6-11, 9-11 என தோல்வியடைந்தார்.
சத்தியன் 5-11, 6-11, 10-12 என லின் யுன்-ஜுவிடம் தோல்வியடைந்தார். ஹர்ப்ரீத் 6-11, 7-11, 11-7, 9-11 என தோல்வியடைந்தார்.
இதனால் இறுதி வாய்ப்பை இழந்த இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தோடு விடைபெற்றது.
- டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
- இந்திய ஜோடி வட கொரியாவிடம் 3-4 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது.
ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணி 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி சகோதரிகள், வடகொரிய வீராங்கனைகளுடன் மோதினர். இதில் 3-4 என்ற கணக்கில் தோற்றனர். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கம் பெற்றனர். டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.
இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில் ;
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி ஒய்.எம்.சி.ஏ. மற்றும் நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆண்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் பார்வதிபுரம் ஈடன்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தினக்ஷ் குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். 2-ம் இடத்தை கிறிஸ்டோ வில்மோகன் பெற்றார்.
பெண்கள் பிரிவில் அனிலா பானு வெற்றி பெற்றார். 19 வயதிற்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் வைஷ்ணவி, ஆண்கள் பிரிவில் தருண், 17 வயதிற்குட்பட்டோர்களில் டிரிபோன்ஸா, தருண் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஒய்.எம்.சி.ஏ.தலைவர் டட்லிபென், செயலர் ரஞ்சித் அம்பலோஸ், விஜயகுமரி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கால் இறுதிக்கு முன்னேறி இருந்தார்.
- கால் இறுதியில் மணிகா பத்ரா, 5-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹினா ஹயாட் டாவுடன் மோதினார்.
சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் போட்டி ஜெட்டா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கால் இறுதிக்கு முன்னேறி இருந்தார்.
இதன் மூலம் எலைட் உலக டேபிள் டென்னிஸ் தொடரில் கால் இறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
கால் இறுதியில் மணிகா பத்ரா, 5-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹினா ஹயாட் டாவுடன் மோதினார்.இதில் மணிகா பத்ரா 11-7 6-11 4-11 11-13 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
- ஒவ்வொரு அணியும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வீரர்களை கொண்டிருக்கும்.
- எதிர் பிரிவில் உள்ள 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
சென்னை:
இந்தியன் பிரீமியர் டேபிள் டென்னிஸ் லீக் என்று அழைக்கப்படும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரால் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இதுவரை 4 சீசன்கள் முடிந்துவிட்டன. 5-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யு.யு.டி.) லீக் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 7 வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இந்த சீசனில் புதிதாக 2 அணிகள் பங்கேற்கின்றன.இதன் மூலம் முதன்முறையாக 8 அணிகளுடன் டேபிள் டென்னிஸ் லீக் நடத்தப்படுகிறது.
இதில் கோவா சேலஞ்சர்ஸ், சென்னை லயன்ஸ் , தபாங் டெல்லி, யு மும்பா , புனேரி பல்தான், பெங்களூரு ஸ்மாஷர்ஸ் மற்றும் இரண்டு புதிய அணிகளான அகமதாபாத் எஸ்.ஜி பைபர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.
ஒவ்வொரு அணியும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வீரர்களை கொண்டிருக்கும்.
8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு அணியும் லீக் கட்டத்தில் 5 ஆட்டங்களில் விளையாடும். ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறைமோத வேண்டும். மேலும் எதிர் பிரிவில் உள்ள 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இந்த 2 அணிகளும் குலுக்கல் முறையில் தீர்மானிக்கப்படும்.
- பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வென்றார்.
- பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென்னும், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மித் தேசாய், ஜோர்டான் வீரர் அபோயமானுடன் மோதினார்.
இதில் தேசாய் 11-7, 11-9, 11-5, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
- கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட்ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியிருந்தார்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார். டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரான்ஸ் வீராங்கனை பிரித்திகா பவாடேவை எதிரிகொண்ட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, 4-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு [pre-quarterfinals] முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஆடிய மறக்கமுடியாத ஆட்டமாக நேற்று நடந்த ஆட்டம் மாறியுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதி பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.