search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சம்"

    • காதல் விவகாரம் பற்றி அறிந்த மகாலட்சுமியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மணப்பெண் மகாலட்சுமி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் மனோகரன் மகள் மகாலட்சுமி (வயது 19). இளங்கலை படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் தமிழ்வாணன் (24) என்பவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பற்றி அறிந்த மகாலட்சுமியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேறொரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    இதனால் மனமுடைந்த மகாலட்சுமி நேற்று தமிழ்வாணனுடன் வீட்டை விட்டு வெளியேறி, திருவந்திபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மணக்கோலத்தில் இருவரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். மணப்பெண் மகாலட்சுமி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    அதில் உள்ளதாவது, எனக்கும், தமிழ்வாணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது பெற்றோர் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் எனக்கும், தமிழ்வாணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மணக்கோலத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரெயில் பயணத்தில் காதல் மலர்ந்தது
    • பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிறிஸ்டியன் காலனியை சேர்ந்தவர் விவேக் (வயது 30). இவர் கோவை யில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தினசரி விவேக் ரெயில் மூலமாக வேலைக்கு வந்து சென்றார். ரெயில் பய ணத்தில் போது இவருக்கு காரமடை வெள்ளியங் காட்டை சேர்ந்த ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அர்ச்சன பிரியா (22) என்பவரும் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் கடந்த 7 மாதங்களாக 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் விவேக்கின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மணப்பெண்ணை தேடி வந்தனர்.

    இதனையடுத்து காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் காதலர்கள் சிறுமு கையில் உள்ள ஒரு கோவி லில் வைத்து திருமணம் செய்தனர்.

    திருமணம் செய்து கொண்ட கையோடு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்
    • பெற்றோர்களை போலீசார் அழைத்த போது வராததால் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்

    பெரம்பலூர்,

    கடலூர் மாவட்டம், விருதாச்சலம் தாலுகா, மங்களுர்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் நமச்சிவாயம்(வயது 24). கோவில் சிலை செய்யும் ஸ்பதியான இவரும், அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து மகள்அனிதா (வயது 23) என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அனிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நமச்சிவாயமும், அனிதாவும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி, அவரது நண்பர்கள் முன்னிலையில், பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரடி முனியப்பன் கோவிலில், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து நமச்சிவாயம் - அனிதா ஆகியோர் உரிய பாதுகாப்பு கோரி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ்ஸ்டேசனில் தஞ்சமடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தம்பதியின் பெற்றோர்களை விசாரணை அழைத்தார். ஆனால் பெற்றோர்கள் வரவில்லை. இதனை தொடர்ந்து காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரிடம் பேசி அனுப்பி வைத்தனர்.

    • பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்து வெளியேறினார்
    • பாதுகாப்பு கேட்டு நெகமம் போலீசில் தஞ்சம்

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள குருநெல்லிபாளையத்தை சேர்ந்தவர் அகிலாதேவி (வயது 19).

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் அகிலாதேவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகனை தேடி வந்தனர்.

    இது குறித்து அகிலாதேவி தனது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    சம்பவத்தன்று அகிலா தேவி, கார்த்திகேயன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் வேட்டைக்காரன்புதூரில் உள்ள கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

    இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு நெகமம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். நெகமம் போலீசார் காதலர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • மணக்கோலத்தில் காவல் நிலையத்தல் காதல் ஜோடி தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது
    • இருவரும் திருமண வயதை எட்டி விட்டதால் அவர்களின் பெற்றோ ர்களை அழைத்த போலீசார் சமரசம் செய்தனர்

    புதுக்கோட்டை,

    ஆலங்குடியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தலைமறைவான காதல் ஜோ டி,மணக்கோ லத்தில் வந்து காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த நிலை யில் போலீசார் அவர்களின் பெற்றோர்க ளிடம் சமரசம் செய்து மண மக்களை அனுப்பி வை த்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த தேவகி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், படித்த பட்டதாரிகள் என்ற போதிலும் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகினர்.இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான காதல் ஜோடிகளை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் பெங்க ளூரில் தலைம றைவாக இருந்த காதல் ஜோடி திடீரென மண க்கோலத்தில் நேற்று ஆலங்குடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு தேடி தஞ்சம் அடைந்தனர்.இருவரும் திருமண வயதை எட்டி விட்டதால் அவர்களின் பெற்றோ ர்களை அழைத்த போலீசார் சமரசம் செய்தனர். இதனை தொடர்ந்து பெ ற்றோர்களால் இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட க்கூடாது என்று எழுத்து ப்பூர்வமாக உத்தரவாதத்தை வாங்கிக் கொண்டு மணம க்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

    • திருச்சி சிறுகனூர் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்துள்ளது
    • சிறுகனூர் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கன்னியாகுடி கிராமத்தில் கீழத்தெருவை சேர்ந்த குமரேசன் (24). திருச்சி சிந்தாமணி புதுத்தெருவை சேர்ந்த ஹர்ஷவர்த்தினி(23). இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்து சிறுகனூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சிறுகனூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுடைய பெற்றோரை, சிறுகனூர் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேச்சுவார்த்தை தீர்வு கிடைக்காததால் போலீசாரிடம் ஹர்ஷவர்த்தினி கணவருடன் தான் இருபேன் என்று தெரிவித்தார். மேலும் இரு தரப்பினரிடம் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு சிறுகனூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்
    • 8 மாதங்களுக்கு முன்பு பாலக்காடு தட்டமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கேப்டன் சிட்டியை சேர்ந்தவர் சத்திய பாமா (வயது 23). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாலக்காடு தட்டமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் தங்களது காதல் குறித்து அவரவர் பெற்றோரிடம் தெரிவித்தனர். அப்போது பெற்றோர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். அதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி 2 பேருக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

    இதனை தொடர்ந்து இருவீட்டாரும் திருமணம் சம்பந்தமாக பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக 6 மாதங்களுக்கு பின்னர் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என பேசி முடித்தனர்.

    ஆனால் சத்தியபாமா வின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகனை தேடினர்.

    மாப்பிள்ளை பார்ப்பது பிடிக்காத சத்தியபாமா கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி அவரது காதலன் சக்திவேலுடன் கொடைக்கானலுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக அவரவர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சத்தியபாமாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்து விட்டனர்.

    இதனால் பயந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார்த்திக் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
    • வீட்டை விட்டு வெளியேறி நவாவூர் கோவிலில் திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை கணுவாய் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது32).

    கார்த்திக் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கோகிலா(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே காத லர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் நவாவூரில் உள்ள கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர். பின்னர் 2 பேரும் பாது காப்பு கேட்டு வடவள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 தரப்பு பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • நஸ்ரின் பாத்திமா கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி பொள்ளாச்சிக்கு வந்தார்.
    • போலீசார், இருதரப்பு பெற்றோரிடமும் கலந்து பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

    கோவை,

    தென்காசி அருகே உள்ள வி.கே.புதூரை சேர்ந்தவர் நஸ்ரின் பாத்திமா (வயது 19). இவர் பொள்ளாச்சி கஞ்சம்பட்டியைச் சேர்ந்த பெயிண்டர் கருப்பசாமி (21) என்பவரை காதலித்து வந்தார்.

    இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு வலுத்தது.எனவே நஸ்ரின் பாத்திமா கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி பொள்ளாச்சிக்கு வந்தார். அங்கு அவருக்கு காதலர் கருப்பசாமி உடன் 26-ந்தேதி திருமணம் நடந்தது.இதனை தொடர்ந்து காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

    அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இருதரப்பு பெற்றோரிடமும் கலந்து பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பது என்று முடிவு செய்து உள்ளனர்.

    • காதல் விவகாரம் பிரியதர்ஷினியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • 2 பேரும் துடியலூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையார் அணை அருகே உள்ள இடது கரையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21).

    இவர் திருப்பூரில் உள்ள பிரிண் டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணிகண்டனுக்கு திருச்சூர் மாவட்டம் மளுக்கு பாறையை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியதர்ஷினி (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் பிரியதர்ஷினியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அவர் தனது காதலனிடம் தெரிவித்தார்.

    எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் துடியலூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.

    திருமணம் முடிந்த கையோடு பிரியதர்ஷினியை, மணிகண்டன் தனது சொந்த ஊரான வால்பாறைக்கு அழைத்து சென்றார்.

    மகள் மாயமானது குறித்து மாணவியின் பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதலர்கள் பாதுகாப்பு கேட்டு ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிங்காநல்லூரில் உள்ள காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் ரேஷ்மா மற்றும் கவுதம் ஒன்றாக படித்தனர்.
    • இதுதொடர்பாக 2 தரப்பு பெற்றோரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    சூலூர்,

    சிதம்பரம் மாவட்டம் கனகசபை நகரை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 23). இவர் காது கேட்பதில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. எம்.சி.ஏ. படித்துள்ளார்.

    சூலூர் அருகே பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கவுதம் (24). இவரும் மாற்றுத்திறனாளி. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கோவை சிங்காநல்லூரில் உள்ள காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் ஒன்றாக படித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.

    இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு அவர்கள் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு சூலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த போலீஸ் நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டது. முதல் காதல் ஜோடியாக கவுதம்-ரேஷ்மா ஆகியோர் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து இன்று போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்து உள்ளனர்.

    காதல் திருமணம் செய்து கொண்ட 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழவே போலீசார் அனுமதி அளிப்பர். இதுதொடர்பாக 2 தரப்பு பெற்றோரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட பல வழக்குகள் சுமூகமாக தீர்வு காணப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
    • நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பா ளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கவியரசன் (வயது 22). இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

    அண்ணா நகர் அருகே உள்ள நெட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கார்த்திகா (21). இவர் பி.சி.ஏ பட்டதாரி.

    இவர்கள் இருவரும் உற வினர்கள் என்பதால், இவர்க ளுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் இரு வீட்டாருடைய பெற்றோருக்கும் தெரிய வந்ததால், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோருக்கு பயந்து நேற்று பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருதரப்பு பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே கார்த்திகா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அவரை கவியரசனுடன் மகளிர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ×