என் மலர்
நீங்கள் தேடியது "சந்திப்பு"
- மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார். விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்றார். 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் படித்தவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். தலைமையாசிரியர் செல்வின் ஆசிர்வாதம், சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையார் விடுதி காப்பாளர் ராஜா, கூட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் காவேரி உள்ளிட்ட பலர் பேசினர். சி.எஸ்.ஐ. ஆலய சபைகுரு ஞான ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். இம்மானுவேல் நன்றி கூறினார்.
- 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை படித்த மாணவ - மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
- 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
பெருமாநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை படித்த மாணவ - மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் தங்களுக்கு பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் பீரோ, மின்விசிறி மற்றும் பல பொருள்களை பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கினர். 18 ஆண்டுகளுக்கு முன் 5½ ஏக்கர் நிலத்தை பெருமாநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பால சமுத்திரத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கிய நன்கொடையாளர் ரத்தினசாமி நினைவுகூர்ந்து அவரது மகன் முரளிகுமரேசனை கவுரவப்படுத்தினர்.
இந்த சந்திப்பில் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
- பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "ஏ.கே.சி.இ.-கே.எல்.யூ. முன்னாள் மாணவர் சங்கம்'' சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா, பல்கலைக்கழக துணைத்தலைவர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் தலைமையில் நடந்தது. பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சங்கதலைவர், பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப்பார்த்து பேராசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அவர்களை இன்னாள் மாணவர்கள் இன்னிசை மழையில் வரவேற்றனர். பேராசிரியர்கள் முத்துக்கண்ணன், கைலாசம், பாலமுருகன், கார்த்திகாதேவி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை சந்தித்தனர்
- அச்சுறுத்தல், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் பாஸ்கரன், மூர்த்தி மற்றும் தொழிலாளர் அலுவலர் சாந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.இதே போல் திருச்சி தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் திவ்யநாதன், பெரம்பலூர் அஸ்வின்ஸ் தொழிற்சாலை மற்றும் கம்பெனிகள், ஓட்டல்கள் போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம், பணிபுரியும் இடத்தில் குறைபாடு மற்றும் வசதிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.அப்போது அவர்களிடம் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை வாட்ஸ்-அப் மூலமாகவோ, போன் மூலமாகவோ உங்கள் குடும்பத்திற்கு தகவல் தெரியபடுத்துங்கள். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின்போது தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன், தொழிலாளர் அலுவலர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
- இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர்.
- தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் சிட்கோ முதலிபாளையத்தில் அமைந்துள்ள நிப்ட்-டீ காலேஜ் ஆப் நிட்வேர் பேஷன் கல்லூரி 25-வது ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நாளை 1-ந் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இந்த கல்லூரியில் 1997-ம் ஆண்டு முதல் படித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரேநாளில் சந்திக்கும் வாய்ப்பு இந்தநிகழ்ச்சி மூலம் சாத்தியமாகிறது. மேலும் தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- 2009ம் ஆண்டு சட்ட படிப்பை முடித்தவர்கள்
- தற்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்
திருச்சி,
திருச்சி சட்டக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2004-2009 ஆம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர்.இதில் தற்போது நீதிமன்ற நடுவர்களாக இருக்கும் முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது முன்னாள் மாணவர்களான நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் பழைய நினைவுகள் மற்றும் தற்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் முனீஸ்வரன், மணிவண்ண பாரதி, ஜீவானந்தம், அஸ்வின் குமார், இக்பால் நாசின் , கோபிநாத், சாகர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
- நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் பழைய மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
- கல்வியை போதித்த ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டினர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் 1981-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை பயின்ற பள்ளி மாணவர்கள் சுமார் 75 பேர் 40 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
பூலாங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் 75 பழைய மாணவர்களும் தங்களின் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது.
இதில் தங்களுக்கு பள்ளியில் கல்வியை போதித்த குருவாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டி கவுரவித்து அவர்களுடன் சேர்ந்து குழுபுகைப் படத்தை ஆர்வமுடன் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பொழுது தங்களின் பள்ளி படிப்பு காலத்தில் நண்பர்கள் உணவருந்தியதை நினைவு கூறும் வகையில் உணவினை ஒருவருக்கொருவர் பரிமாறிய நிகழ்ச்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியப் படுத்தியது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் குழு செய்திருந்தனர்.
- கரூர்அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது
- 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து கொண்டனர்
கரூர்,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1999-2002ம் கல்வியாண்டில் வரலாற்று துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்து உரை யாடியதோடு, பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில், கரூர், திருச்சி, கோவை, சென்னை என தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் அரசுத் துறைகளில் தாசில்தார், வழக்கறிஞர் போன்ற பதவிகளில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், முன்னாள் மாணவர்கள் அனைவரும் தாங்கள் பயின்ற வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
- திருச்சி தனியார் மேல்நிலைப்பள்ளியில் நெகிழ்ச்சி சந்திப்பு
- இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்
திருச்சி,
திருச்சி டவுன் ரெயில் நிலையம்அருகே யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1996-98ம் ஆண்டில் முதல் முதலாக, 11 மற்றும் 12-ம் வகுப்பில் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டது. அப்போது படித்த மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக கூடுகின்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவில், தலைமை ஆசிரியர்கள் ராமர், பிச்சை, சேவியர், சந்தானம், தமிழாசிரியர் மு.வைத்தியநாதன், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், ராஜேந்திரன், கிருஷ்ணன், பிரகாசம், அசோக் குமார், சந்திர ரவி, வெங்கடேசன், தமிழ்வாணன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.பள்ளி மாணவர்களாக மாறிய பெரியவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியர்கள் குறித்தும், பள்ளியில் படித்த இனிய அனுபவங்கள் குறித்தும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். விழாவின் ஆரம்பம், ஆசிரியர்களை போற்றுவதாகவும், அவர்களது அறிவுரைகளை ஏற்பதாகவும் அமைந்திருந்தது. அதனைத்தொடர்ந்:து முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள், அவர்களின் குழந்தைகளின் உற்சாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சதுருதீன், டோமினிக், கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், ஜான்சன், சரவண முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இப்பள்ளி தொடங்கிய நாளில் இருந்து, முன்னாள் மாணவர் சந்திப்பு என்ற நிகழ்வு நடைபெறுவது என்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- விருதுநகரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பள்ளி செயலரின் வகுப்புத் தோழர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாணவி லட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட, ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களும், இந்நாள் ஆசிரியர்களும் பங்கேற்று பேசினர்.
முன்னாள் மாணவர்களும் அவர்களுடைய குடும்பத்தினருடன் வருகை புரிந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன.முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கணிப்பொறி வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் இளையபெருமாள் மற்றும் 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
- புதிய நிர்வாகிகள், ஊட்டி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட திமுக., இளைஞர் அணி புதிய அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை மாநில இளைஞர் அணி செயலா ளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி மாவட்ட அமைப்பாளராக இமயம் சசிகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
துணை அமைப்பாளர்களாக பாபு,நௌபுல், நாகராஜ், முரளிதரன், பத்மநாபன், வினோத்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞரணி புதிய நிர்வாகிகள், ஊட்டி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பில்லன், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- ஆம்புலன்ஸ்-சரக்கு வாகனம் மோதியதில் போக்குவரத்து கடும் பாதிப்பு
- காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் பறக்கை சந்திப்பு சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். அந்த கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரோட்டில் தாறுமாறாக ஓடியது.
அது ரோட்டோரம் நிறுத் தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியது. இதில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. கார் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் நின்ற மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் சரக்கு வாகனத்தின் டயரும் ஆம்புலன்சின் டயரும் பலத்த சத்தத்துடன் வெடித்தது. விபத்தில் சிக்கிய இருவாகனங்களும் நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலை மையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.