என் மலர்
நீங்கள் தேடியது "உண்ணாவிரதம்"
- சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
ஈரோடு:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் இன்று சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சுப்புலட்சுமி, செல்வி, கவுரி, சாந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த போராட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.
காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
மணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம்மும், உதவியாள ர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
- ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழிய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பியூலா எலிசபெத் ராணி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வித்யாவதி வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் சேகரன் விளக்க உரையாற்றினார்.
சத்துணவில் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது பணிபுரியும் ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர், உதவியாளர் ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.
ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,850 வழங்க வேண்டும். சத்துணவு மானியத்தை உயர்த்த வேண்டும். காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
உதவியாளர், சமையலர் 5 ஆண்டுகள் பணி முடித்து இருந்தால் அவரவர் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
- கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் ஊராட்சி மன்ற தலைவர் ஈடுபட்டுள்ளார்.
- போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வணிகர் சங்கத்தினர் முழு கடையடைப்பில் ஈடுபட்டனர்.
அரூர்,
அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தீர்த்தமலை ஊராட்சியில் கட்டவடிச்சாம்பட்டி, பொய்யப்பட்டி, குரும்பட்டி, தீர்த்தமலை ஆகிய கிராமங்கள் உள்ளன.
பொய்யப்பட்டியில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் பழுதடைந்து உள்ளதால், புதிய கட்டிடம் கட்ட ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை, சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதையடுத்து, அங்கு கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொய்யப்பட்டி யில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்திற்கு, தற்போது தீர்த்தமலையில் செயல் பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் ஊராட்சி மன்ற தலைவர் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள், தீர்த்தமலையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும். பொய்யப்பட்டியில் கட்ட கூடாது என
கோரிக்கை வைத்து, தீர்த்தமலை பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வணிகர் சங்கத்தினர் முழு கடையடைப்பில் ஈடுபட்டனர்.
- சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
- கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார்.
புதுச்சேரி:
ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீ நிவாஸ் அசோக் தனது தொகுதியில் நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராாட்டம் நடத்தி வந்தார்.
அவரது உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேசுவதற்காக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் ஏனாம் புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் சந்தித்தனர். அப்போது கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் நள்ளிரவில் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
- புஞ்சைபுளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது.
- இந்த கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் சுகாதாரக் கேடு நோய் தொற்று ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இதையொட்டி இந்த கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாரச்சந்தையில் மாட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது.
சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் மீண்டும் வைக்கவும் விற்பதற்கு அனுமதிக்க வேண்டும். மற்றும் அந்த பகுதியில் கடைகள் கட்டி தர வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
- 4 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
- 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இன்று நடந்தது.
மாவட்ட தலைவர்கள் வேலூர் அருணகிரிநாதன், திருவண்ணாமலை பாபு, ராணிப்பேட்டை பாஸ்கர், திருப்பத்தூர் விநாயகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட செயலாளர்கள் கோபி கண்ணன் சங்கரன் கோவிந்தராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மாரிமுத்து உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்யும் ஆணையை வழங்க வேண்டும் மத்திய அரசு அறிவித்த நாளில் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊர் புற நூலகங்கள் மற்றும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.
- அரசு அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார்.
- பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு அரசு சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர்கள் சங்கர், ஆலீஸ் ஷீலா, தமிழ்நாடு அரசு அலுவலர் மாநிலத் துணைத் தலைவர் அரங்க ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 100க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்த அதே நாளில் வழங்கப்பட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர்கள் காலம் வரை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் பொது சுகாதார மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றப்பட்ட அனைத்து பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், ஒட்டுமொத்த அரசு அலுவலர் சமுதாயத்தை பலி கொடுக்கும் அரசாணை 115, அரசாணை எண் 152, அரசாணை எண் 139 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்... உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- புலவநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.
- நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கூறி அப்பகுதியினர் நெல் மூட்டைகளுடன் உண்ணாவிரதம் இருந்தனர்.
திருவாரூர்:
மணக்கால் ஊராட்சி புலவநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்த ஆண்டும் அந்த இடத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விவசாயிகளும் அந்த இடத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக வைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த கருத்து வேற்றுமைகள் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த இடத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் நிறுத்தப்பட்டுள்ளது.
உடனடியாக அந்த இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கூறி அப்பகுதியினர் நெல் மூட்டைகளுடன் உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த உண்ணாவிரதத்திற்கு மணக்கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்துரு தலைமை வைத்தார்.
இந்த உண்ணாவிரதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம், மணியன், அதிமுகவை சேர்ந்த சந்துரு, வளரும் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய செல்வம் மற்றும் தியாகு, மகேஷ், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இரட்டைக்கொலை வழக்கில் துப்புதுலக்காததை கண்டித்து தேவகோட்டையில் நாளை உண்ணாவிரதம்-கடையடைப்பு நடைபெறும்.
- இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் பொதுமக்கள், வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலை நேரத்தில் கனகம், அவரது மகள் வேலுமதி, பேரன் மூவரசு ஆகிய 3 பேரை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டு கனகம் தனது பேத்தி திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 60 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இந்த கொள்ளை சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட வேலுமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். கனகம் மருத்துவ மனையில் சிகிச்சை பல னின்றி இறந்தார். மேலும் மூவரசு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கண்ணங்கோட்டை கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கிராம மக்கள் நகை கொள்ளைபோனதால் கனகம் பேத்தியின் திருமணம் நின்று விடக்கூடாது. அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
மேலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் 25 நாட்களாக போலீசார் துப்பு துலக்காததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி நாளை (7-ந்தேதி) அடையாள உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய காரைக்குடி டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.
- சம்பவ இடத்திற்கு வந்த வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் மற்றும் வி.களத்தூர் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மரவநத்தம் அம்பேத்கர் தெருவில் கழிவுநீர் கால்வாய் சரியாக அமைத்து தராததால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கால்வாய் அமைக்கும் பணி தொடங்காததால் நேற்று பொதுமக்கள் ஒன்று திரண்டு மரவநத்தம் கிராமத்தின் பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் மற்றும் வி.களத்தூர் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக பொக்லைன் எந்திரம் கொண்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து இந்தப்பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2020-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
- நொறுக்கு தீனியை சாப்பிட்டுவிட்டு, உண்ணாவிரதம் இருப்பதாக பொய் சொல்கின்றனர் என்று ஜெயில் சூப்பிரண்டு கூறினார்.
சேலம்:
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி நள்ளிரவில் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கொலையாளிகள் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம்(32), கோட்டாறை சேர்ந்த தவுபிக் (32) ஆகியோரை கர்நாடகாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்தது போல் பல்வேறு இடங்களில் சதிச்செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் உயர் பாதுகாப்பு அறையில், தனித்தனியே அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், சிறையில் கீழ் தள அறையில் அடைக்க வேண்டும், நடைபயிற்சி செல்ல அனுமதிப்பதோடு சக கைதிகளுடன் பேசி பழக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக்கூறி நேற்று மதியம் முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதை அறிந்த சிறை அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது அவர் தெரிவிக்கையில், இருவரும் முறையாக மனு அளிக்காமல் சிறை நிர்வாகத்தை மிரட்டி பார்க்கின்றனர். நொறுக்கு தீனியை சாப்பிட்டுவிட்டு, உண்ணாவிரதம் இருப்பதாக பொய் சொல்கின்றனர், என்றார்.
- மார்ச் 1-ம் தேதி முதல் 5-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும்.
- உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார கிளை செயற்குழு க்கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
முன்னாள் வட்டாரச்செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன், பொதுக்குழு உறுப்பினர் சீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் முருகேசன் கலந்துகொண்டு பேசினார்.
தீர்மானங்களை வட்டார செயலாளர் செல்வசிதம்பரம் வாசித்தார். கூட்டத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் 5-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும்.
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 18-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் வட்டார பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.