என் மலர்
நீங்கள் தேடியது "slug 181850"
- ராஜபாளையத்தில் தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 1 ½ வயது குழந்தை பலியானது.
- ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மணிகண்டன்-மாரீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் பரமேசுவரன் என்ற ஆண் குழந்தையும், 1½ வயதில் முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று மாலை மாரீஸ்வரி துணி துவைத்து மொட்டை மாடியில் காய போட சென்றார். அப்போது வீட்டின் கீழே விளையாடிக் கொண்டிருந்த 1 ½ வயது பெண் குழந்தை முத்துலட்சுமி தவழ்ந்து சென்று தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை எட்டிப் பார்த்தாள்.
இதில் குழந்தை எதிர்பாராத விதமாக பக்கெட்டில் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது. துணியை காயப்போட்டுவிட்டு கீழே இறங்கி வந்த மாரீஸ்வரி குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்துகிடந்ததை கண்டு அலறி துடித்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்தது அந் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- நாளை 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை குறித்து இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியையும் பார்வையிட்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
மேட்டூர் அணையில் இருந்து இன்று 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவு நீர்வரத்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1 லட்சம் கன அடி அளவுக்கு வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வெள்ள நிவாரண முகாம்களை ஏற்படுத்தி வருகிறோம். நாளை 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தங்களது கால்நடைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வின் ேபாது வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
- பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையிலிருந்து வருகின்ற தண்ணீ ரானது அனந்தனார் கால் வாய் வழியாக சம்பகுளத்திற்கு வருகிறது.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி யிருப்பதாவது:-
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சூரங்குடி பகுதி யில் சம்பகுளம் உள் ளது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை யிலிருந்து வருகின்ற தண்ணீ ரானது அனந்தனார் கால் வாய் வழியாக சம்பகுளத்திற்கு வருகிறது.
இக்குளத்திலிருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீரானது சம்பகுளம் சானல் வழியாக சுற்று வட்டாரப் பகுதிகளான ஈத்தாமொழி, புதூர், மேல கிருஷ்ணன் புதூர், நைனாபுதூர், புத்தளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன டைந்து வருகின்றன. மேலும் இச்சானலின் மூலம் வருகின்ற தண்ணீரினால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் உப்புதன்மை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் அனந்த னார் கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டி ருக்கின்ற நிலை யில் சம்பகுளம் முழு கொள்ளவை எட்டிய நிலை யிலும், கடந்த 1 மாத கால மாக சம்பகுளம் சானலில் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடுவதை காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் இச்சானலின் வருகின்ற தண்ணீர் மூலம் பயனடைந்து வந்த நெற் பயிர் மற்றும் தென்னை விவசாயம் செய்த விவசாயி கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி யுள்ளனர். மேலும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் உப்புதன்மையும் அதிக ரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
எனவே விவசாயிகளின் நலன் கருதியும் பொது மக்களின் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கும் விதத்தி லும் முழு கொள்ளளவை எட்டியுள்ள சம்ப குளத்திலிருந்து, சம்பகுளம் சானல் வழியாக உடனே தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
- பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல்லடம் - திருப்பூர்மெயின் ரோடு அருகில் தெற்குபாளையம் பிரிவு பகுதியில் பிராமிஸ் நகர் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.இதன் அருகே பல்லடம் ராயர்பாளையத்திலிருந்து தெற்கு பாளையம் பிரிவில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் மெயின் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் பிராமிஸ் நகர் வழியாக செல்கிறது.
இந்தநிலையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மெயின் வாய்க்காலில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பிராமிஸ் நகர் வாய்க்காலில் வந்து கொண்டு இருந்த நிலையில் கிளை வாய்க்காலில் மரம், செடி, கொடிகள் புதர்கள் மண்டி கிடந்ததால்தண்ணீர் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வழித்தடங்களிலும், வாய்க்கால் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
மேலும் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளிலும் வாய்க்கால் தண்ணீர் கலந்து நிரம்பி வழிகின்றது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் நகருக்குள் வந்து மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் இப்பகுதி பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. ராமேசுவரத்தில் 75.20 மி.மீ. கொட்டியது.
- தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ராமநாதபுரம்
தென் கடலோர பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சூழச்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மாலையில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்யத் தொடங்கியது. ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெய்த கன மழையால் குளுமையான சூழல் காணப்பட்டது.
மழை காரணமாக தாழ்வான பகுதியில் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8மணி வரை அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 75.20 மி.மீ மழையும், குறைந்தபட்சமாக கமுதியில் 7.60 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.
வீடுகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. போக்குவரத்து மிகுந்த சாலைகள், தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று காலையும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-ராமநாதபுரம்-8, மண்டபம்-23.60, ராமேசுவரம்-75.20, பாம்பன்-37.30, தங்கச்சிமடம்-40.20, பள்ளமோர்குளம்-20, திருவாடானை-24.80, தீர்த்தாண்டதானம்- 40.20, தொண்டி-19.70, வட்டாணம்-23.50, ஆர்.எஸ்.மங்கலம்-67.20, பரமக்குடி-58.80, முதுகுளத்தூர்-28, கமுதி-7.60, கடலாடி-35.20, வாலிநோக்கம்-21.60.
- பெரிய கோவில் குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் புதிதாக விட்டு நிரப்பப்டும்.
- குளத்தை பராமரிக்காமல் தண்ணீர் விட்டதால் சாக்கடை நீர் மற்றும் பாசி படிந்து கிடைக்கிறது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டத்துக்கு உள்பட்ட நெடும்பலம் கிராமத்தில் திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் புதிதாக குளத்தில் விட்டு நிரப்பப்டும்.
அதுபோல் இந்த ஆண்டும் குளத்தில் தண்ணீர் விடப்பட்டது.
குளத்தில் மழை பெய்து சாக்கடை நீர் மற்றும் பாசி படிந்து கிடைக்கிறது.
அதை பராமரிக்காமல் தண்ணீர் விட்டதால் பாசி படிந்த தண்ணீருடன் கலந்து கிடைக்கிறது.
அதனால் துர்நாற்றம் வீசுகிறது.
அதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவில் நிர்வாகம் தண்ணீரை இறைத்து விட்டு புதிதாக நீர் விட்டு கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இடலாக்குடி , வடிவீஸ்வரம் , வாகையடி, கோட்டார் , வடசேரி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் 7 நாட்கள் தாமதம் ஆகும்.
- நான்கு இடங்களில் பழுது ஏற்பட்டு தண்ணீர் விரையம் ஆவதால் பழுதுகளை சரி செய்ய வேண்டி உள்ளது .
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான முக்கடல் அணையிலிருந்து கிருஷ்ணன் கோவில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் 600 எம்.எம். பிரதான குழாயில் நாகர்கோவில் திட்டுவிளை ரோட்டில் துவரங்காடு பெட்ரோல் பங்க் அருகில் , இசாந்திமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் மற்றும் அருகுவிளை வெள்ளாளர் தெரு ஆகிய நான்கு இடங்களில் பழுது ஏற்பட்டு தண்ணீர் விரையம் ஆகுவதால் மேற்படி பழுதுகளை சரி செய்ய வேண்டி உள்ளது .
இதனால் நகரில் இடலாக்குடி , வடிவீஸ்வரம் , வாகையடி, கோட்டார் , வடசேரி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் 7 நாட்கள் தாமதம் ஆகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- 7,219 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
- கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
உடுமலை :
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், உடுமலை புதுப்பாளையம் கிளைக்கால்வாய் வாயிலாக 7,219 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.கால்வாயில் முதல் சுற்றுக்கு அக்டோபர் 28ல் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் சுற்று நிறைவு பெற்றது. இந்நிலையில் இரண்டாம் சுற்றுக்கு, பிரதான கால்வாயில் பூசாரிபட்டி ஷட்டர் வழியாக, புதுப்பாளையம் கிளைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது :- முதல் சுற்று தண்ணீர் திறப்பின் போது, தொடர் மழை பெய்தது. தற்போது மழை இடைவெளி விட்டுள்ளதால், கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.மேலும் போதிய இடைவெளி இல்லாமல், தண்ணீர் திறக்கப்படுவதால், மக்காச்சோள பயிர்கள் கதிர் பிடிக்கும் போது போதுமான தண்ணீர் வழங்கவும் அதிகாரிகள் திட்டமிட வேண்டும் என்றனர்.
- அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
- மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த சாரல் மழையின் காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 1014 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தோவாளை சானல், அனந்த னார் சானல் உள்பட அனைத்து சானல்களிலும் ஷிப்டு முறையில் வெளி யேற்றப் பட்டு வருகிறது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.95 அடியாக உள்ளது. அணைக்கு 632 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 439 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.11 அடியாக உள்ளது. அணைக்கு 304 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 425 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.02 அடியாக உள்ளது. அணைக்கு 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
சிற்றார்-2 அணை நீர்மட்டம் 11.12 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.70 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.55 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.70 அடியாக உள்ளது. அணையில் இருந்து பொதுமக்களுக்கு தங்குதடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- இவர், காலை திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திக்குட்பட்ட பகோடு பனம்பழஞ்சி விளையை சேர்ந்தவர் வல்சலா (வயது 68) மகன் வீட்டில் வசித்து வந்த இவர், காலை திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த போது ஞாறான்விளை பகுதி ரெயில்வே லைன் அருகில் உள்ள வாய்க்காலில் மூழ்கி வல்சலா இறந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது மகன் கிரீஸ் மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- நீர்வழிப் பாதையை அளவீடு செய்வதே பெரும் போராட்டமாக உள்ளது.
உடுமலை :
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
மவுனகுருசாமி:பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வழிப் பாதையை அளவீடு செய்வதே பெரும் போராட்டமாக உள்ளது. அதற்கென தனி அளவையர் நியமிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மூலம் அளவீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். பூளவாடி ஊராட்சியில் 10 கிலோ மீட்டருக்கு மேல் மண் சாலைகளாக உள்ளது.அவற்றை தார்சாலைகளாக மாற்ற வேண்டும்.
பரமசிவம்: நாய்கள் தொல்லை அதிகரித்து விட்ட நிலையில் எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் வெறி நாய்க்கடி தடுப்பூசி போட வேண்டும். எலையமுத்தூர் பகுதியில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததுடன் தண்ணீர் திருட்டிலும் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் போராடும் நிலை ஏற்படும். ஜம்புக்கல் கரடு மலைப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை ஆவணங்களின் அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரணி வாய்க்கால் பாசனத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேப்போல் பல்வேறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
- கொள்ளிடத்தில் மணல் குவாரி செயல்பட்ட போது மணல் ஏற்றிய லாரிகளும் சென்று வருகின்றன.
- குண்டும் குழியுமாக பாலத்தில் செல்லும் போது பாலம் மேலும் சிதிலமடைய வாய்ப்புள்ளது.
பூதலூர்:
பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் விண்ண மங்கலம் கிராமத்தின் அருகில் வெண்ணாற்றில் பாலம் ஒன்று உள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பாலத்தின் வழியாக திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, லால்குடி, தஞ்சை, செங்கிப்பட்டி, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களுக்கு பயணிகள் பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.
திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையோரத்தில் இருந்து செங்கல்கள் ஏற்றிய லாரிகளும், கொள்ளிடத்தில் மணல் குவாரி செயல்பட்ட போது மணல் ஏற்றிய லாரிகளும் சென்று வருகின்றன.
குறுகிய பாலமாகவும் பழுதடைந்து உள்ள பாலமாகவும் இருப்பதால் பாலத்தின் இரு புறமும் வலுவிழந்த பாலம் என்ற நெடுஞ்சாலை துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டு உள்ளது.
பாலத்தின் மேற்பகுதியில் வாகனங்கள் செல்லும் தார்சாலை ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக பல்லாங்குழி போல காட்சி தருகிறது.
அதிக பாரத்துடன் குண்டும் குழியுமாக பாலத்தில் செல்லும் போது பாலம் மேலும் சிதிலமடைய வாய்ப்பு உள்ளது.
மழை பெய்தால் குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்வடைகிறது.
பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில் பல்லாங்குழி ஆக காட்சி அளிக்கும் விண்மங்கலம் வெண்ணாற்று பால சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.