என் மலர்
நீங்கள் தேடியது "தி.மு.க"
- மங்கலம் தி.மு.க.வினருக்கு திராவிட மாடல் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மங்கலம் கிளை இளைஞர்அணி அமைப்பாளர் இப்ராஹிம் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
மங்கலம் :
மங்கலத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.இளைஞரணி சார்பில் தி.மு.க. கட்சியின் முன்னாள் மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் தம்பிரஹீம் தலைமையில் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர்அணி திலக்செல்வராஜ் , தி.மு.க. மூத்த நிர்வாகி தம்பணன், பொதுக்குழு உறுப்பினர்கள் காதர்பேட்டை சலீம்,மங்கலம் ரபிதீன், முன்னிலையில் மங்கலம் தி.மு.க.வினருக்கு திராவிட மாடல் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர்கள் சிராஜ்தீன்,ஜீனைத், மங்கலம் கிளை இளைஞர்அணி அமைப்பாளர் இப்ராஹிம் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
ஒன்றிய நிர்வாகிகள் அப்துல்பாரி, சர்புதீன், சிவசாமி, சுல்தான்பேட்டை கோபால்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாதுரை , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் தாஹாநசிர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகளான ஹக்கீம்,பாருக், மற்றும் மங்கலம் தி.மு.க.வை சேர்ந்த ஷேக்முஜிபுர்ரகுமான், ஆர்பி.நகர்.முகமுதுசாலி ,நூர்முகமது,முகமுதுஜக்கிரியா,முபாரக்ராஜா,முருகசாமி,பழக்கடைசலீம்,இந்தியன்நகர் சலீம்,தண்டபாணி,மணிகண்டன்,சுல்தான்பேட்டை கிட்டான்,பாசித்,அஸ்கர்,உம்மத்,பழக்கடை சுல்தான் ,நீலி செல்வம்மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மங்கலம் தி.மு.க.வினருக்கு தீபாவளி பரிசும் வழங்கப்பட்டது.
- திருத்துறைப்பூண்டியில் வடக்கு, தெற்கு அ.தி.மு.க. சார்பில் பாமனி கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திருத்துறைப்பூண்டி:
சொத்து வரி, மின்கட்டணம், பால் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் திருத்துறைப்பூண்டியில் வடக்கு, தெற்கு அ.தி.மு.க. சார்பில் பாமனி கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட துணை செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.
வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் , தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, நகர செயலாளர் சண்முகசுந்தர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுரேந்தர், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ்குமார், தொகுதி முன்னாள்செயலாளர்அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய அவைத்தலைவர் பாலதண்டாயுதம், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சின்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் கார் கண்ணாடி ஆகியவற்றை மர்ம நபர்கள் அடித்துச் சேதப்படுத்தி உள்ளனர்.
- திமுக அமைச்சரை குறித்து சசிகலா புஷ்பா மிரட்டலாக பேசியதாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடி ஆகியவற்றை மர்ம நபர்கள் இன்று அடித்துச் சேதப்படுத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியில் நேற்று பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில், திமுக அமைச்சரை குறித்து சசிகலா புஷ்பா மிரட்டலாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது வீட்டு கதவு, ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள், கார் கண்ணாடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சிப்காட் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று பாஜக சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட உதவிகள் வழக்கும் நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா பேசும்போது, அமைச்சர் கீதா ஜீவன், தனது தலைவர் அண்ணாமலையை அவதூறாக பேசினால் வெளியில் வர கால்கள் இருக்காது, பேச நாக்கு இருக்காது என்று எச்சரிக்கை விடுத்து பேசியதால் திமுக-வினர் தாக்குதல் நடத்தி உள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
- மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- செயல் வீரர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
குன்னூர் நகர தி.மு.க சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வி.பி. தெரு கலைஞர் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி மற்றும் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் நகர கழக செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ரவிக்குமார், லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, குன்னூர் நகரமன்ற தலைவர் ஷீலாகேத்தரின், செல்வம், காளிதாஸ் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா, குன்னூர் நகர நிர்வாகிகள் தாஸ், சாந்தா, முருகேஷ், ஜெகநாத் ராவ், மாவட்ட பிரதிநிதிகள் பழனிசாமி, மணிகண்டன், சார்லி, காட்டேரி செல்வராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகீர் உசேன், கலீம், முரசொலி வெங்கடேஷ், குன்னூர் நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், ஜெகநாதன், கோபி, ராபர்ட், குமரேசன், நாகராஜ், சுசீலா, வசந்தி, பாக்யவதி, சித்ரா, செல்வி, காவேரி, செல்வி, ஜெகதளா பேரூராட்சி செயலாளர் சஞ்சீவ்குமார், கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்ட்டின், குன்னூர் நகர இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன், உளிக்கள் பேரூராட்சி தலைவர் ராதா, கிளை செயலாளர்கள் ரஹீம் சண்முகம், ஜாகீர், சிக்கந்தர், சண்முகம், தொரை, சுந்தர், மூர்த்தி, கர்ணன், அப்துல் காதர் மற்றும் கழக நிர்வாகிகள் பிருந்தா, லியாகத் அலி, கோபு, அபி, ரவி, மூர்த்தி, வினோத், கிப்சன், ரிஸ்வான், உட்பட கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். குன்னூர் நகர துணைச் செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.
- 8 இடங்களில் தி.மு.க கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் சில்லாரஅள்ளி மற்றும் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் 8 இடங்களில் தி.மு.க கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சிக்குமேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட மேற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி சித்தார்த்தன், பேரூராட்சி தலைவர் மணி, வக்கீல் முனிராஜ் , நகர செயலாளர் மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், ஜலபதி, பச்சியப்பன், அன்பரசு, மலர்க்கொடி மாரிமுத்து, தங்கராஜ், ஆதாம், சுகுணா ஆறுமுகம்,கார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்களின் பணிகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் மனோகரன், மாவட்ட வக்கில்கள் பிரிவு தலைவர் முனிராஜ், நகர செயலாளர் மோகன், பேரூராட்சி தலைவர் கேஸ்.மணி, அவை தலைவர் ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் செந்தில்குமார், மாரிமுத்து. நடராஜன், தங்கராஜ், கவுன்சிலர்கள் கார்த்தி, சரவணன், ராமகிருஷ்ணன், மாரியப்பன், கண்ணன், மதன் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அண்ணா சிலைக்கு தி.மு.க- அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
- தலைவர் பழனிதுரை, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. செயலாளர் பால் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலா ளர் பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கஜேந்திரன், முரளி வினோத், ராஜசேகர், அரவிந்த் முருகன் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். அண்ணா வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.
அழகர்கோவில் கோட்டைவாசல் முன்புள்ள அண்ணா சிலைக்கு பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி முன்னாள் சேர்மன் வெற்றிச்செழியன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் குலோத்துங்கன்.
மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, மேலூர் நகர் துணைச் செயலாளர் சரவணகுமார், மேலூர் நகர் அம்மா பேரவை செயலாளர் சாகுல் ஹமீது, அ.வலையபட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளைச்சாமி, அய்யாபட்டி நயினான், சென்னகரம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிதுரை, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது
- தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ள நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது" என்று கமல் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
- தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அ.தி.மு.க.வோ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக் கணிப்பதாக அதிரடி அறி விப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக" தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. விலகி உள்ளதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. களத்தில் இல்லாத நிலையில் தி.மு.க.-பா.ம.க. இடையிலேயே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. வைத்துள்ள ரகசிய உடன்பாடு இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் இது மறைமுக ஆதரவு என்றும் அவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கணிசமாக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் போட்டியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளதால் அது பா.ம.க.வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப் பதாகவே கூறப்படுகிறது.
இதனால் பா.ம.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி போட்டியில் இருந்து விலகியுள்ள போதிலும் தி.மு.க. வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. நிச்சயம் உறுதியாக இருக்கும்.
அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வினரின் செயல் பாடுகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க., பா.ம.க. வேட்பா ளர்களோடு நாம் தமிழர் கட்சியின் அபிநயாவும் தனித்து போட்டியிடுகிறார். தி.மு.க., பா.ம.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் வழக்கம் போல கணிசமான ஓட்டுகளை வாங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 3 பேர் மட்டுமே களத்தில் நிற்பதால் நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் பிரிக்கும் ஓட்டுகளும் விக்கிரவாண்டி தொகுதி யில் முக்கியத்துவம் பெறும் என்றே எதிர்பார்க்கப்ப டுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத ஓட்டுகளை வாங்கி அங்கீகரிக்கப்பட்ட கட்சி யாக மாறி இருக்கும் நாம் தமிழர் கட்சியும் விக்கிர வாண்டி தொகுதியில் உற்சாகமாக களம் இறங்கியுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் அதிக வாக்குகளை நாங்கள் வாங்குவோம் என்று அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு, தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிக ஓட்டு கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெறுவோம் என்று தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் பெரிய வெற்றியை பெறுவதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. வேகம் காட்டி வருகிறது. அந்த கட்சி நிர்வாகிகளும் சுறுசுறுப்போடு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
பா.ம.க., நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
- தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது.
- நாம் தமிழர் கட்சியில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
கோவை:
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினர்.
இந்த நிலையில் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை தி.மு.கவில் இணைத்து கொண்டனர்.
தி.மு.க.வில் இணைந்தவர்களை, அமைச்சர் செந்தில்பாலாஜி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
அதனை தொடர்ந்து ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாங்கள் சரியான தலைமை உள்ள கட்சியில் இணைய வேண்டும் என நினைத்தோம்.
அதன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு சரியான, வலுவான தலைமை உள்ள தி.மு.கவில் தங்களை இணைத்து கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது. அது தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது. அவரது சிரித்த முகத்துடனான பண்பு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. அது எங்களையும் ஈர்த்துள்ளது.
அதன் காரணமாக நாங்கள் தி.மு.கவில் இணைந்துள்ளோம். நாம் தமிழர் கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எங்களுடன் பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் விரைவில் தி.மு.கவில் இணைவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், மாநில மாணவரணி தலைவர் வக்கீல் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல் உள்பட பலர் உள்ளனர்.
- மேயர் பிரியா தலைமையில் சென்னை மாமன்ற உறுப்பினர் கூட்டம்.
- ரிப்பன் மாளிகையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு.
சென்னை மாமன்ற உறுப்பினர் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் நடுவே பா.ஜ.க.வை சேர்ந்த சென்னை 134 வது வார்டு கவுன்சிலர் உமா ஆனந்த், மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.
அப்போது அங்குள்ள தி.மு.க. கவுன்சிலர் சொக்கலிங்கம் என்பவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்காக கொடுக்குறீர்களா என கேட்டார். அதற்கு உமா ஆனந்த், நான் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றிக்காக கொடுக்குறேன். நீங்கள் வேண்டுமானால் உதயநிதி பிறந்த நாள் இனிப்பாக நினைத்துக்கொண்டு சாப்பிடுங்கள் என்று கூறினார். இதனால் அங்கு சிறிதுநேரம் சிரிப்பலை எழுந்தது.
ஏற்கனவே மாமன்ற கூட்டம் தொடங்கிய போது பிரியங்கா காந்தியின் வெற்றி குறித்து காங்கிரஸ் உறுப்பினர் திரவியம் உயர்வாக பேசும் போது, உமா ஆனந்த் தனக்கும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. வெற்றி குறித்து பேச அனுமதி வேண்டும் என்று கூறியதால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
- ஒரு அடிப்படை கட்டமைப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் செய்யவில்லை.
- மாற்றத்திற்கான தேர்தலாக கருதி நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக இன்று 2-வது நாளாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காளை சிலை, மரப்பாலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் சீமான் பேசியதாவது:-
தமிழ் தேசிய மக்கள் பல நெடுகாலமாக வாழ்விடத்தை இழந்த நிலையில் தாங்கள் அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கி றார்கள். தமிழக மக்கள் பாதுகாக்க எந்த நடவடி க்கையும் இல்லை. நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன், அணு உலை, மின்சாரம் போன்ற அனைத்தும் பிரித்து கொடுக்கப்படுகிறது.
ஆனால் காவிரி நதிநீர் உரிமையில் ஒரு சொட்டு நீர் பெற முடியவில்லை. இத ற்காக போராடும் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுகிறார்கள். ஆனால் அதை தடுக்க ஆள் இல்லை. எல்லா உரிமைகளையும் பறிகொடுத்து விட்டு மருத்துவத்தை கனவாக கொண்டு உள்ள தம்பி, தங்கை கனவுகள் நனவாகமால் போனதற்கு நீட் கொண்டு வந்தது காங்கிரஸ்.
அதற்கு தி.மு.க கூடவே இருந்தது. நீட் ரகசிய திட்டம் உள்ளது என்று சொல்லி ஆட்சிக்கு தி.மு.க வந்தார்கள். இப்படி எல்லாம் வெற்று அறிக்கையை கொடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யவில்லை. நீண்ட காலமாக தமிழக மக்கள் மத்தியில் வாக்கு பெற்று அதிகாரத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
மாநில தன்னாட்சி, தமிழ் இன மக்கள் பெற்று அதிகாரத்தில் வந்தவர்கள் எந்த உரிமையும் மக்களுக்கு கொடுக்க வில்லை. கல்வி மாநில உரிமையை மத்திய அரசு எடுத்து கொள்ளும் போது மாநில அரசு அமைதியாக இருந்து விட்டது.
இத்தனை ஆண்டுகள் பிறகு கல்வியை மாநில பட்டியல் கொண்டு வருவோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னார்கள். வந்த பிறகு வாயை மூடி விட்டார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்க்கும் போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை.
இந்த இடத்தில் மாநில உரிமைகளை இவர்கள் பாதுகாக்கவில்லை. நாம் தமிழர் கட்சி வீதி வீதியாக வந்து வாக்கு கேட்கிறோம். ஆனால் தி.மு.க. வந்து கேட்கவில்லை. ஒரு அடிப்படை கட்டமைப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் செய்யவில்லை. தண்ணீர் சேகரிக்க ஏரி குட்டை எதையும் இவர்கள் செய்ய வில்லை.
இவர்கள் சாதித்ததாக எதை சொல்வார்கள். ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தவிர என்ன செய்தார்கள். எதுவுமில்லை அதையும் மதுக்கடைகள் மூலம் திரும்ப ஆயிரம் ரூபாய் வாங்கி கொள்கிறார்கள். பேரிடர் போது உரிய இழப்பீடு கூட பெறமுடியாமல் மாநில உரிமைகள் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம்.
ஒவ்வொரு தேர்தல் போதும் கச்சத்தீவு மீட்பு தேர்தல் வாக்குறுதியில் மட்டுமே உள்ளது. இன்று வரை மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு இல்லை. மீனவர்கள் வலை கிழிப்பு, தாக்குதல் படகுகள் பறிமுதல் போன்றவை நடக்கின்றது. ஆனால் கேரள மாநிலத்தில் மீனவர்கள் எல்லை தாண்டும் இதுபோன்ற செயல் இல்லை.
உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிற்கிறது. ஒவ்வொருவரும் மாற்றத்தை விரும்பினால் கண்டிப்பாக மாற்றம் நிச்சயமாக உருவாகும்.இந்த அரசியல் தேவையா தேவை இல்லையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் வாக்கு கேட்டு வரவில்லை வருங்கால வாழ்க்கை கேட்டு வருகிறோம்.
உங்கள் குரலாக உணர்ந்து வாக்களியுங்கள். அதிகாரம் வலிமையானது. அதனை எளிமையான கோட்பாடு கொண்ட எங்களுக்கு வழங்குகள். தேர்தல் ஆணையம் பல இடங்களில் 100 சதவீதம் வாக்கு செலுத்துவது கடமை என விழிப்புணர்வு வைக்கும் தேர்தல் ஆணையம், வாக்குக்கு காசு வாங்கினால், கொடுத்தால் தண்டனை என்று அதில் இடம் பெறவில்லை.
நீண்ட நாட்களாக தேர்தல் ஆணையம் நாடகம் கம்பெனி இருந்து வருகிறது. ஓட்டுக்கு காசு கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து யாராவது ஒருவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தால் தேர்தலில் காசு கொடுக்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி நிறுவனங்களிடம் அதிகமாக நிதி வசூல் செய்கிறது. விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் கொடுத்து விட்டு மக்கள் வரிப்பணத்தில் மிக்சி, கிரைண்டர் வாங்கி நிறுவனத்திற்கு பணம் கொடுக்கிறார்கள்.
இவர்கள் தொடர்ந்து தேர்தல் அரசியல் தான் செய்வார்கள். இதனால் காதில் தேன் ஊற்றுவது போல செய்வார்கள். 50ஆண்டுகள் மயக்கத்தில் உள்ள மக்கள் தற்போது விழித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள். இடைத்தேர்தல் என்று கருதாமல் மாற்றத்திற்கான தேர்தலாக கருதி நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.