search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர்"

    • அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 452 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரிநீராக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 122.85 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு ௪௦ ஆயிரத்து 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரத்து 327 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 83.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 386 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கறது.

    அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 452 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 58ஆயிரத்து 779 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டி இருந்தது.

    அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 79ஆயிரத்து 682 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி ஏற்கனவே நிரம்பி விட்டது.
    • நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    கர்நாடகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி படுகையில் நல்ல மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    தொடர் கனமழையால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி ஏற்கனவே நிரம்பி விட்டது. கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி இந்த அணைக்கு 33,640 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 33,625 கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரி தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் சங்கமித்து கரைபுரண்டு ஓடியவாறு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் கே.ஆர்.எஸ் அணையின் மொத்த நீர்மட்டம் கொள்ளளவு 124.80 அடி ஆகும். நேற்று மாலை நிலவரப்படி இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35,977 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து இன்று 36,674 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் 105.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 110.60 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து உள்ளூர் குடிநீர் மற்றும் உள்ளூர் பாசன தேவைக்காக வினாடிக்கு 2,361 கன அடி நீர் கால்வாயில் திறந்து விடப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடவில்லை.

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, பெரியபாணி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நள்ளிரவில் இருந்து ஒகேனக்கல்லுக்கு உபரி நீர் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் நேற்று முதல் பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 577 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரத்து 910 கன அடியாக அதிகரித்து தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட நீர் திறப்பு அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணி அளவில் 43.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 46.80 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் நீர் இருப்பு 15.85 டி.எம்.சி. உள்ளது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள், குடிநீர் பெறும் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது.
    • மீன் பண்ணை, பாம்பு, முயல் பண்ணைகளையும் குடும்பத்துடன் பார்வையிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாத நிலையில் வறண்ட வானிலையே நிலவுகிறது. ஆனாலும் பகலிலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், சேர்வராயன் கோவில் என அனைத்து பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். மேலும் படகு குழாமில் படகுகளில் குடும்பத்துடன் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது. இயற்கையான சூழலில் மாசற்ற காற்றை சுவாசித்தபடி பூங்காவை சுற்றி பார்ப்பது மனதுக்கு புத்துணர்வை ஊட்டுகிறது. மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு பல்வேறு சாதனங்களுடன் குழந்தைகள் பொழுதுபோக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு இதமான ரம்மியமான சூழல் நிலவுவதால் குழந்தைகளுடன் இன்று காலை முதலே ஏராளமானோர் உயிரியல் பூங்கா வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மான்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், முதலைகள், பாம்புகள், பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று என அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.

    இதே போல சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மேட்டூர் அணைக்கு சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அணை பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்குகளிலும் சிறுவர்கள் ஏறி உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். மீன் பண்ணை, பாம்பு, முயல் பண்ணைகளையும் குடும்பத்துடன் பார்வையிட்டனர்.

    அணை பவள விழா கோபுரத்தில் ஏறி அணையையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இதனால் கடைகளிலும் கூட்டம் அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,200 கனஅடியாக சரிந்தது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,200 கனஅடியாக சரிந்தது. இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.

    அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 715 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,178 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1040 அடியாக சரிந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.54 அடியாக உள்ளது.

    • கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காவிரி ஆற்றின் ஒரு கரையிலும் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியம் காவிரி ஆற்றின் மறுக்கரையிலும் அமைந்துள்ளது.
    • இந்த போக்குவரத்து மூலம் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருவார்கள்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காவிரி ஆற்றின் ஒரு கரையிலும் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியம் காவிரி ஆற்றின் மறுக்கரையிலும் அமைந்துள்ளது. கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டையூர் மற்றும் பண்ணவாடி பரிசல் துறை பகுதிகளில் இருந்து தர்மபுரி மாவட்டம் நாகமரை பெண்ணாகரம் ஆகிய பகுதிகளுக்கு காவிரி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு பரிசல் மற்றும் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வந்தது.

    இந்த போக்குவரத்து மூலம் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருவார்கள். தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து திடீர் திடீரென அதிகரித்து வருகிறது.

    இதனால் கோட்டையூர் மற்றும் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் இருந்து இயக்கப்பட்ட விசைப்படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்திற்கு தர்மபுரி மாவட்டம் நாகமரை, பென்னாகரம், பூச்சியூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தற்போது சாலை போக்குவரத்து மூலம் மேட்டூர், தர்மபுரி வழியாக சென்று வருகிறார்கள்.

    மேட்டூர் அணையில் சுமார் 2000 க்கு மேற்பட்ட மீனவர்கள் மேட்டூர் மீனவ கூட்டுறவு சங்கம் மூலம் உரிமம் பெற்று மீன்பிடிப்புத் தொழில் நடத்தி வருகிறார்கள். தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க இயலாத நிலமை ஏற்பட்டுள்ளது. மேலும் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளதால் மீனவர்களுக்கு மீன்கள் கிடைப்பது என்பது மிகவும் அரிதாகி உள்ளது. இதனால் மீன்பிடிப்புத் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . 

    • மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வந்து சேரவில்லை என்று அய்யாகண்ணு புகார் மனு அளித்துள்ளார்.
    • பொதுப்பணித்துறை அதிகாரியிடம் அய்யாகண்ணு புகார்

    திருச்சி:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு , மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் பலர் இன்று திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை ராமமூர்த்தியை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு 48 நாட்கள் ஆகிறது. ஆனால் முசிறி தாலுகாவில் உள்ள மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், கட்டளை வாய்க்கால், வடகரை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. அதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருதாண்டாகுறிச்சி வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை . அனைத்து பகுதிகளிலும் கடைமடை வரை தண்ணீர் செல்ல 25 ஆயிரம் கன அடி நீர் திறக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை பூங்காவை நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒரே நாளில் 12 ஆயிரத்து 600 பேர் பார்வையிட்டனர்.

    சேலம்:

    மேட்டூர் அணை பூங்காவுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் . நேற்று விடுமுறை நாள் என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    மேட்டூர் அணையை பார்வையிட்டவர்கள் காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப் பனை தரிசித்தனர். பின்னர் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். குடும்பத்துடன் அனைவரும் பூங்காவிற்கு வந்து உண்டு மகிழ்ந்தனர்.

    கடைகளில் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையால் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை அதிகரித்தது. வண்ணமீன் காட்சி சாலை, பாம்பு பண்ணை, மீன் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனர். சிறியவர்கள் உடன் பெரியவர்களும் ஊஞ்சல் ஆடி விளையாடி மகிழ்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவிற்கு 12,598 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர் .இதன்மூலம் நுழைவு கட்டணமாக 62 ஆயிரத்து 990 வசூலானது.மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு 1237 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.இதன் மூலம் 6 ஆயிரத்து 185 பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

    சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 5 பேரை வெள்ளம் அடித்துச் சென்ற நிலையில், தீயணைப்புத்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். #Cauvery #Mettur
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெட்டியூர் என்ற பகுதியில் இன்று ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 5 பேரை தண்ணீர் அடித்துச் சென்றது. அவர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், 5 பேரையும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடி வருகின்றனர்.
    மேட்டூர் பகுதியில் பராமரிப்பு பணி நாளை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்யோகம் இருக்காது.
    மேட்டூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் வினியோக கழகம் சார்பில் மேட்டூர் நகர் துணைமின்நிலையம் மற்றும் கொளத்தூர் துணைமின் நிலையம் ஆகிய மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (12-ம்தேதி) மேற்கொள்ளப்படுகிறது. 

    ஆகவே இந்த துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட மேட்டூர்நகரம், மாதையன்குட்டை, நவப்பட்டி, கோல்நாயக் கன்பட்டி, புதூர், கொளத்தூர், பெரியதிண்டா, நீதிபுரம், காவேரிபுரம், சின்னதன்டா, கண்ணாமூச்சி, காவிந் தபாடி, தின்னப்பட்டி, பாலமலை, அய்யம்புதூர், ஆலமரத்துப்பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ண வாடி, குரும்பனூர், சவேரி யார்பாளையம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(12-ம்) தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் வினியோகம் இருக்காது. 

    இந்த தகவலை மேட்டூர் செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்தார்.
    ×