என் மலர்
நீங்கள் தேடியது "அஞ்சலி"
- நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை ரசிகர்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- பீலே பிரேசில் அணிக்காக 3 உலக கோப்பையை (1958, 1962, 1970) வென்று கொடுத்துள்ளார்.
சாண்டோஸ்:
பிரேசில் கால்பந்தின் ஜாம்பவான் பீலே புற்று நோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார். அவரது இறப்பு பிரேசிலின் தேசிய துக்கமாக அனுசரிக்கப்பட்டது.
பீலேயின் உடல் பிரேசில் நாட்டின் சாவ் பாலோ ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு சாண்டோஸ் நகரில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.
நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை ரசிகர்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கானோர் பெல் மிரோ ஸ்டேடியத்தில் குவிந்தனர். ஒருவர் ஒருவராக கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு பீலேயின் உடல் அப்பகுதியில் உள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள நெக்ரோ போல் எகுமெனிகா கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
பீலேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.
பீலே பிரேசில் அணிக்காக 3 உலக கோப்பையை (1958, 1962, 1970) வென்று கொடுத்துள்ளார். 12 கோல்கள் உலக கோப்பையில் அடித்துள்ளார்.
- பிராா்த்தனை நடைபெற்றது.
- பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
ஊட்டி,
சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளரான ஜே.ஜே.குட்வின் நினைவிடம் ஊட்டி புனித தாமஸ் தேவாலயத்தில் உள்ளது. அவரது நினைவிடத்தில் தனியாா் தொண்டு நிறுவனம் மற்றும் ராமகிருஷ்ண மடம் சாா்பில் பிராா்த்தனை மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஊட்டி ராமகிருஷ்ண மடம் சுவாமி பரகீா்த்தமானந்தா மகராஜ் பேசுகையில், சுவாமி விவேகானந்தரின் வாா்த்தைகள் உலகுக்குக் கிடைக்க ஜே.ஜே. குட்வின் பணி மிகவும் முக்கியமானதாகும். இளைய சமூகத்தின் ஒழுக்கமான வாழ்க்கைக்கும், மனவலிமை மிக்க தெளிவான சிந்தனைக்கும் விவேகானந்தரின் வாா்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாா்.
இதில் அருட்தந்தை இமானுவேல் வேளவேந்தா், பிரிக்ஸ் பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
- மொழிப்போர் தியாகிகளுக்கு அ.ம.மு.க. அஞ்சலி செலுத்தப்பட்டது.
- மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே கண்ணங்குடி ஒன்றிய தலைவரும், மாவட்ட மாணவரணி செயலாள ருமான சித்தானூர் சரவணன், மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் அ.ம.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொறியாளர் அணி காரைக்குடி சரவணன், தேவகோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், காரைக்குடி நகர செயலாளர் அஸ்வின், தேவகோட்டை ஒன்றிய கவுன்சிலர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் அம்சகண்ணன், நகர பேரவை செயலாளர் தில்லைராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜம்செல்வா, கண்ணங்குடி ஒன்றிய தகவல் நுட்ப செயலாளர் தாய்மடி செந்தில், அருண், வன்மீகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தியாகிகள் தினத்தையொட்டி இன்று காலை சரியாக 11 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டன.
- அஞ்சலி செலுத்திய பிறகு சிக்னல்கள் வழக்கம் போல் இயங்கியதும் வாகன ஓட்டிகள் சென்றனர்.
சென்னை:
இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ந் தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று காலை 11 மணி முதல் 11.02 மணி வரை 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த நேரத்தில் சென்னை நகரின் போக்குவரத்து 2 நிமிடங்கள் நிறுத்தப்படும் என்றும் இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படியும் போலீசார் ஏற்கனவே கேட்டுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தியாகிகள் தினத்தையொட்டி இன்று காலை சரியாக 11 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டன. அனைத்து வாகனங்களும் அப்படியே நின்றன. வாகன ஓட்டிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் சிக்னல்கள் வழக்கம் போல் இயங்கியதும் வாகன ஓட்டிகள் சென்றனர்.
ஸ்பென்சர் சிக்னல், வேப்பேரி, அண்ணாசிலை, சென்ட்ரல், எழும்பூர் பாத்தியன் சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம் டவுட்டன், அடையாறு, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து சிக்னல்களிலும் வாகன ஓட்டிகள் 2 நிமிடம் மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.
- இயக்குனர் திரு இயக்கத்தில் அஞ்சலி நடித்த வெப்தொடர் ‘ஜான்சி’.
- இந்த வெப்தொடரின் இரண்டு சீசன்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஜான்சி வெப்தொடர் குழு
இவர் இயக்குனர் திரு இயக்கத்தில் 'ஜான்சி' என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். நடிகர் கிருஷ்ணா தயாரித்திருந்த இந்த வெப்தொடரின் முதல் சீசன் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து தற்போது இதன் இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது.

ஜான்சி வெப்தொடர் குழு
முதல் சீசன் போலவே இரண்டாவது சீசனுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்த நிலையில், இந்த வெப்தொடர் குறித்து நடிகர் தயாரிப்பாளர் கிருஷ்ணா பேசியதாவது, "முதல் சீசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் நல்ல ஹிட். இப்போது இரண்டாவது சீசன் நன்றாக போகுமென்று நம்புகிறேன். சீசன் 1 விட 2 எனக்கு நிறைய பிடித்திருக்கிறது. திரு அசத்தியிருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி முழு காய்ச்சலோட வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். இதை முதலில் 6 மாசத்தில் முடித்துவிடலாமென்று தான் ஆரம்பித்தோம். ஆனால் 2 வருடம் ஆகிவிட்டது. ஆனால் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன் சீசன் மூன்றும் வரும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்" என்று பேசினார்.
- கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
- காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு அரசு உதவி பெறும் சுந்தரேசவிலாஸ் தொடக்கப்பள்ளியில் சிரியா மற்றும் துருக்கி நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் பள்ளி ஆசிரியர் வசந்தா, ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்திரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல் நல குறைவால் மரணம் அடைந்தார்.
- உபயதுல்லாவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் நேற்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா (வயது 83) உடல் நல குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று உபயதுல்லாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலமாக சென்று அஞ்சலி
முன்னதாக தஞ்சை மேரிஸ் கார்னர் பகுதியில் இன்று காலை தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ , தஞ்சை மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மாநகர பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார், அருளானந்தசாமி உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.
பின்னர் மேரிஸ் கார்னர் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த உபயதுல்லாவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
டி.ஆர்.பாலு எம்.பி
இதேபோல் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எஸ்.எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உபயதுல்லாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் வக்கீல் அன்பரசன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்க ணக்கானோர் முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவுக்கு இறுதி மரியாதை செய்தனர்.
இரங்கல் பேரணி
முன்னாள் தி.மு.க. அமைச்சர் உபயதுல்லா மறைவையொட்டி தஞ்சையில் அனைத்து கலை இலக்கிய அமைப்புகளின் சார்பில் இரங்கல் பேரணி இன்று நடைபெற்றது.
இதில் வெற்றி தமிழர் பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் செழியன், மாவட்ட பொறுப்பாளர் ஆசிப் அலி, முனைவர் இளமுருகு, வெற்றி தமிழர் பேரவையின் நிர்வாகிகள் கவிஞர் இனியன், புலவர் சிவனேசன், ராகவ மகேஷ், மணிபாலா, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர்
- 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லடம் :
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி கருப்பாத்தாள் ஆகியோர் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர். சாவிலும் இணைபிரியாத அந்த தம்பதியருக்கு, காரணம்பே ட்டை மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை ,திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். கோடாங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிசாமி,விசைத்தறி சங்க பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மகிழ்வனம் அமைப்பின் செயலர் சோமு என்ற பாலசுப்பிர மணியம், தாவரவியல் அறிஞர் மாணிக்கம், கூப்பிடு பிள்ளையார் கோயில் கமிட்டி தலைவர் சின்னசாமி, ஊராட்சி செயலர் கண்ணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 11-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கேர் கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
- சென்னையில் அவரது உருவ படத்திற்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஸ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
திருச்சி,
தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான மறைந்த கே.என். ராமஜெயத்தின் 11-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு , திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள ராமஜெயம் உருவ சிலைக்கு சகோதரர் ரவிச்சந்திரன், அமைச்சர் கே.என். நேருவின் மகனும், தொழிலதிபருமான கே.என்.அருண் நேரு, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, ஒன்றிய சேர்மன் துரைராஜ், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, நாகராஜன், கமால் முஸ்தபா, மாமான்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜய், வெ.ராமதாஸ், தில்லைநகர் கண்ணன், டாக்டர் சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா, டோல்கேட் சுப்பிரமணி, வக்கீல் மணிவண்ண பாரதி, பி.ஆர்.பால சுப்பிரமணியன், தென்னர் ராஜா, பூபதி,மாமான்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ராமஜெயம் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னையில் தனது இல்லத்தில், ராமஜெயம் உருவ படத்திற்கு தமிழக அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்திரபாண்டியன், தியாகராஜன், ஸ்டாலின், பழனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- திருச்சி வரகனேரியில் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி
- நினைவு இல்லத்தை பார்வையிட்டார்
திருச்சி,
தமிழ்நாடு அரசின் உத் தரவிற்கிணங்க திருச்சி வரகனேரி அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள வ.வே.சுப்பிரமணிய அய்யர் நினைவு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அலங்கரித்து வைக் கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மரியாதைபின்னர் அந்த நினைவு இல்லத்தில் வைக்கப்பட் டுள்ள வ.வே.சுப்பிரமணிய அய்யரின் வாழ்க்கை வர–லாறு தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் கிளை நூலகத்தின் செயல்பாடுகளையும் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன், மண்டலத் தலைவர் மதிவாணன், மாவட்ட மைய நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், வருவாய் வட்டாட்சியர் (கிழக்கு) கலைவாணி, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், வ.வே.சுப்பிரமணிய அய்யரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய அய்யர் என் கிற வ.வே.சு.அய்யர் 02.04.1881 அன்று பிறந்தார். இவர் வரகனேரி சிங்கம் என்றழைக்கப்பட்டார். இவர் தனது 12-வது வய–தில் தனது மாமன் மகள் பாக்கியலெட்சுமியை திரு–மணம் செய்து கொண்டார். 12 வயதில் மெட்ரிக்குலேசன் தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்றார். 16 வயதில் பி.ஏ. பட்டம் பெற் றார். 1901 ஆம் ஆண்டு சட்டம் பயின்று 19 வயதில் வழக்கறிஞர் ஆனார்.திருவள்ளுவர் இயற்றிய 1330 குறள்களையும், கம்பராமாயணக் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1917ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் புதுச்சேரி வருகையின்போது காந்தியடிகளின் சக்தியால் பயங்கரவாதி என்ற போர்வையைக் களைத்து எரிந்துவிட்டு அகிம்சா வாதியாக மாறியவர்.
1921-ல் தேசபக்தர் என்னும் தமிழ் தினசரியில் ஆசிரியராக இருந்தபோது வேறொருவர் எழுதிய தலையங்கத்துக்காக ராஜதுரோகம் குற்றம் சாட்டப்பட்டு பெல்லாரி சிறையில் ஒன்பது மாதங்கள் அடைக்கப்பட்டார். 1923-ல் சேரன்மாதேவியில் குருகுலம் துவங்கி குருகுலக் கல்வியை புகட்டினார்.
1925 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 3 ஆம் நாள் தமது குருகுல மாணவர்களை உல்லாசப் பயணமாக பாபநாசத்திற்கு அழைத்துச்சென்ற போது தனது மகள் சுபத்திரை கல்யாண தீர்த்தத்தில் தவறி விழுந்த போது காப் பாற்றச் சென்ற வ.வே.சு.அய்யர் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.இவர் வாழ்க்கை முழுவதும் மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார். வ.வே.சு.அய்யர் நாட்டின் விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து போராடி தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர் ஆவார். திருச்சியில் வரகனேரியில் உள்ள இவர் வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு உள்ளது.
- கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் வக்கீல் செல்வநாயகம், பட்டியல் அணி மாநில செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இரட்டைமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர், கக்கன், சகஜானந்தா, வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், வீரதமிழச்சி குயிலி ஆகியோரின் உருவபடங்களுக்கு கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், துணை தலைவர் சர்தார்சிங், பொருளாளர் குமரவேல், மாநில சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், ஒன்றிய தலைவர் முத்து, பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்
- உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரம்பலூர்:
நாடு முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர் ஹக்கீம் பாஷா, நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். வருகிற 20-ந் தேதி வரை தீ தொண்டு வார விழா "தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்" என்ற தலைப்பின் கீழ் கடைபிடிக்கப்படவுள்ளது. அப்போது மாவட்டம் முழுவதும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, தீ விபத்து, பேரிடர்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்.