search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடலுக்கு ஊர்வலமாக சென்று தி.மு.க.வினர் அஞ்சலி
    X

    ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய தி.மு.க.வினர்.

    முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடலுக்கு ஊர்வலமாக சென்று தி.மு.க.வினர் அஞ்சலி

    • தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல் நல குறைவால் மரணம் அடைந்தார்.
    • உபயதுல்லாவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் நேற்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா (வயது 83) உடல் நல குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று உபயதுல்லாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலமாக சென்று அஞ்சலி

    முன்னதாக தஞ்சை மேரிஸ் கார்னர் பகுதியில் இன்று காலை தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ , தஞ்சை மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மாநகர பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார், அருளானந்தசாமி உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.

    பின்னர் மேரிஸ் கார்னர் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த உபயதுல்லாவின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    டி.ஆர்.பாலு எம்.பி

    இதேபோல் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எஸ்.எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உபயதுல்லாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் வக்கீல் அன்பரசன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்க ணக்கானோர் முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

    இரங்கல் பேரணி

    முன்னாள் தி.மு.க. அமைச்சர் உபயதுல்லா மறைவையொட்டி தஞ்சையில் அனைத்து கலை இலக்கிய அமைப்புகளின் சார்பில் இரங்கல் பேரணி இன்று நடைபெற்றது.

    இதில் வெற்றி தமிழர் பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் செழியன், மாவட்ட பொறுப்பாளர் ஆசிப் அலி, முனைவர் இளமுருகு, வெற்றி தமிழர் பேரவையின் நிர்வாகிகள் கவிஞர் இனியன், புலவர் சிவனேசன், ராகவ மகேஷ், மணிபாலா, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×