என் மலர்
நீங்கள் தேடியது "குடிபோதை"
- காரில் இருந்து வெளியே இறங்கி வந்த சௌராசியா "மாமா", "இன்னொரு ரவுண்ட்",மற்றும் "ஓம் நம சிவாய" என்று உச்சக் குரலில் கத்தத் தொடங்கினார்.
- பொதுமக்களிடம் இருந்து சௌராசியாவை மீட்டு போலீசார் அழைத்துச்சென்றனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
எம்எஸ் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டம் பயிலும் மாணவர் ரக்ஷித் சௌராசியா. இவர் நேற்று இரவு வதோதராவில் அம்ரபாலி வளாகம் அருகே வேகமாக காரில் வந்துகொண்டிருந்தபோது அவ்வழியே பெண் ஒருவர் ஓட்டிவந்த ஸ்கூட்டரின்மேல் இடித்துள்ளார்.
மேலும் 2 இருசக்கர வாகனங்கள் வழிப்போக்கர்கள் மீதும் கார் இடித்துள்ளது. இதில் 1 குழந்தை உட்பட 4 பேர் வரை காயமடைந்தனர். காரில் முன்பகுதி சேதமடைந்து உள்ளே ஏர்பேக் திறக்கும் அளவுக்கு மிகவும் பலமாக ஸ்கூட்டரின் மேல் இடித்துள்ளது. இதனால் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேதமடைந்த காரில் இருந்து வெளியே இறங்கி வந்த சௌராசியா "மாமா", "இன்னொரு ரவுண்ட்", மற்றும் "ஓம் நம சிவாய" என்று உச்சக் குரலில் கத்தத் தொடங்கினார். பின்னர் தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்த மக்கள் பிடித்து அடித்துள்ளனர். சௌராசியா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
காயடமைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து சௌராசியாவை மீட்டு கைது செய்து அழைத்துச்சென்றனர்.
சௌராசியா குடிபோதையில் இருந்தானா என்பதை அறிய ரத்த பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவருடன் காரில் வந்த மற்றோரு இளைஞன் தப்பியோடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். குஜராத்தில் மது விலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து.
- ஆட்டோ டிரைவர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 57).இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரும் இவரது மனைவி மஞ்சுளா (50). ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்துபோ திண்டிவனம் போலீஸ் நிலையம் எதிரில் வந்து கொண்டிருக்கும்போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஆட்டோ ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தலைமையாசிரியர் ராஜவேல், அவரது மனைவி மஞ்சுளா, ஆட்டோவில் பயணம் செய்த ராஜன் தெருவைசேர்ந்த யாகவல்லி, ஆட்டோ டிரைவர் வேங்கை பகுதியை சேர்ந்த பாஸ்ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்றனர். மேலும் ஆட்டோ டிரைவர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார். இதுகுறித்து திண்டி வனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார்.
- ராமலிங்கம் மனைவி முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் தெரி வித்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கீழ கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். மேலும் ராமலிங்கத்திற்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு தன் வீட்டிற்கு வந்தார். அப்போது போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடி ஏற்பட்டது. இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் ராம லிங்கத்தை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமலிங்கம் மனைவி முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது போதையில் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டனர்
- போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை
கன்னியாகுமரி:
திருவட்டார் பஸ் நிலையம் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் அதன் அருகில் போஸ்ட் ஆபிஸ், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. காலை, மாலை வேளைகளில் பஸ் ஏறுவதற்கு மாணவ, மாணவிகள் அதிகம் பேர் இந்த பஸ் நிலையத்தில் காத்து நிற்பது வழக்கம். அதன் அருகில் தென் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஆதிகேசவன் பெருமாள் கோவிலும் அமைந்து உள்ளது.
இந்த நிலையில் பஸ் நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான மதுபான கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால் இளை ஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் மது அருந்திக் கொண்டு பஸ் ஏறுவதற்கு இங்குதான் வருவார்கள்.
இதில் போதை தலைக்கு ஏறிய ஆசாமிகள் சிலவேளைகளில் அரு வருப்பான செயல்களில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலையில் குமரன்குடி, செம்பருத்தி காளை விளை பகுதியை சேர்ந்த சுனில் (வயது 34) மற்றும் ராஜேந்திரன் (43) 2 பேரும் சேர்ந்து மது போதையில் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வந்தனர் இதனால் அந்த பகுதியில் பஸ் ஏறுவதற்கு நின்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்ப்பட்டது. உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து 2 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசா ரனை நடத்தினார்கள் திருவட்டார் உதவி ஆய்வா ளர் ஜெயராம் சுப்ரமணியன் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினார்.
- மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
- நாராயணன் மீது ரிஷிவந்தி யம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மேலப்பழங்கூரை சேர்ந்த வர் நாராயணன். இவரது மனைவி அய்யம்மாள் (40). இருவரும் கரும்பு வெட்டும் தொழிலாளிகள். மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் அய்ய ம்மாள் மற்றும் பிள்ளை களை ஆபாச வார்த்தை களால் திட்டியதோடு கூரை வீட்டுக்கும் தீ வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீயை அணைத்தார். பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாராயணன் மீது ரிஷிவந்தி யம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ஆத்திரம் அடைந்த மார்ட்டின் ஜெயராஜ் அவரது அண்ணன் ஜார்ஜ் எடிசனை நெஞ்சில் சரமாரியாக குத்தினார்.
- பிடிபட்ட மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்திய போது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர் ஜார்ஜ் எடிசனை குத்தியதாக கூறினார்
நாகர்கோவில் :
பூதப்பாண்டி அருகே திட்டுவிளை ஜோசப் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் எடிசன் (வயது 42), கொத்தனார்.
இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று வீட்டிற்கு வந்தார். இவருக்கும் அவரது சகோதரர் மார்ட்டின் ஜெயராஜ் (40) என்பவருக்கு இடையே குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின் ஜெயராஜ் அவரது அண்ணன் ஜார்ஜ் எடிசனை நெஞ்சில் சரமாரியாக குத்தினார்.
இதில் ஜார்ஜ் எடிசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அண்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தைப் பார்த்த மார்ட்டின் ஜெயராஜ் அதிர்ச்சி அடைந் தார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத் தார். உடனடியாக ஜார்ஜ் எடிசனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அப்போது அங்கு டாக்டரிடம் தனது அண்ணன் ஜார்ஜ் எடிசன் விபத்தில் சிக்கியதாக கூறினார்.டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர். இதுபற்றி ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அங்கு வந்து மார்ட்டின் ஜெய ராஜிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் அவர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.
பின்னர் இது குறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மார்ட் டின் ஜெயராஜை பூதப் பாண்டி போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.பின்னர் ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
பிடிபட்ட மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்திய போது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர் ஜார்ஜ் எடிசனை குத்தியதாக கூறினார். இதிலிருந்து தப்பிக்க விபத்தில் சிக்கி யதாக நாடகம் ஆடியதாக ஒப்புக்கொண்டார்.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசா ரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமா னோர் அங்கு திரண்டு இருந்தனர். சகோதரரை தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் பூதப்பாண்டி பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிளை நிறுத்திய ஏட்டு அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்ததால் வாயை ஊதச் சொன்னார்.
- போலீசுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை:
தேனாம்பேட்டை போக்குவரத்து பிரிவு போலீஸ் ஏட்டு ராமமூர்த்தி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
நேற்று அதிகாலையில் அவர் சோதனையில் ஈடுபட்டபோது பெண் ஒருவர் மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் வாலிபர் ஒருவரும் இருந்தார்.
மோட்டார் சைக்கிளை நிறுத்திய ஏட்டு அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்ததால் வாயை ஊதச் சொன்னார். அவர் மது குடித்து இருந்ததால் ஊத மறுத்தார். இதனால் போலீசுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெண் ஏட்டுவை தாக்கினார்.
இதையடுத்து இருவரிடமும் போலீசார் குடிபோதையில் இருந்ததற்கான பரிசோதனை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ஷெரின் பானு (48). தனியார் நிறுவனத்தில் நிதி ஆலோசகராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.
நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் அவர் மும்பையைச் சேர்ந்த ஆண் நண்பர் விக்னேஷ் (30) என்பவருடன் ஓட்டலுக்கு சென்று விட்டு மது போதையில் வாகனத்தில் வரும்போது போலீசாரிடம் சிக்கி கொண்டது தெரிய வந்தது.
போக்குவரத்து போலீசை தாக்கிய பெண் ஷெரின் பானு மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- விசாகப்பட்டினம் கடற்கரையில் நள்ளிரவில் பைக் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் பீர் குடித்துக்கொண்டு இருந்தார்.
- ஆத்திரம் அடைந்த இளம்பெண் போலீசாரை ஆபாசமாக திட்டியதுடன் தான் குடித்துக்கொண்டு இருந்த பீர்பாட்டிலால் போலீசாரை பயங்கரமாக தாக்கினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரை சாலையில் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பைக் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் பீர் குடித்துக்கொண்டு இருந்தார். போதை தலைக்கேறியதால் திடீரென அந்த பெண் அங்கு ரகளையில் ஈடுபட்டார். இதனைக் கண்ட போலீசார் இளம்பெண்ணிடம் சென்று நீங்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் போலீசாரை ஆபாசமாக திட்டியதுடன் தான் குடித்துக்கொண்டு இருந்த பீர்பாட்டிலால் போலீசாரை பயங்கரமாக தாக்கினார்.
அப்போது பீர்பாட்டில் உடைந்து அருகில் நின்று கொண்டிருந்த கோவிந்த் என்பவர் கண்ணில்பட்டு காயமடைந்தார். போலீசார் கோவிந்தை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் இளம்பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தல், அரசு ஊழியரை வேலை செய்யாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.
- இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் கீழ விடயல் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 60) விவசாயி.
சம்பவத்தன்று இவர் திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.
பின்னர் நடந்து வந்தபோது இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.
இதில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார்.
- இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12வது ஆண்டு விழா வரும் ஜனவரி 15-ந்தேதி தைப்பொங்கல் அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். அந்த டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெரு ராஜி என்பவர் இந்த பேனரை குடிபோதையில் கிழித்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.
- திருமண விழாவில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்
- பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
களியக்காவிளையை அடுத்த பாறசாலை இஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ரென்ஜித் ( வயது 40).
இவரது நண்பர்கள் விபின், றிஜூ , ரெஜி. நேற்று காலை நண்பர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமணவீட்டிற்கு சென்றனர். திருமணம் முடிந்து நண்பர்கள் சேர்ந்து மது விருந்து நடத்தினர். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்தனர்.
இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து நண்பர்கள் அந்த இடத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். ரென்ஜித் மது போதையில் வீட்டிற்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். அவரது நண்பர்களான விபின், றிஜூ , ரெஜி ஆகியோர் மீண்டும் மது அருந்தியுள்ளனர்.
மது போதையில் ரென்ஜித் வீட்டிற்கு சென்று 3 பேரும் சேர்ந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே 3 பேரும் சேர்ந்து ரென்ஜித்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு ரென்ஜித்தும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 3 பேரும் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் ரென்ஜித் தலையில் தாக்கியதோடு, அவரது கழுத்திலும் குத்தினர். இதில் ரென்ஜித் படுகாயமடைந்தார். அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.
அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த உடன் 3 பேரும் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் பாறசாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது படுகாயமடைந்த ரென்ஜித் இறந்த நிலையில் காணப்பட்டார். மேலும் போலீசார் ரென்ஜித் உடலை மீட்டுஉடல் கூறு ஆய்விற்கு பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
மேலும் நண்பர்கள் இடையே மாறி மாறி தாக்கியதில் விபின் தலையிலும் காயம் ஏற்ப்பட்டுள்ளது. அவர் பாறசாலை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து ரெஜூ, றஜி யை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் இடையே மது போதையில் நடந்த கொலை சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
- இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். (வயது 54). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டார். ஆனால் இரவுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அண்ணாமலைநகர் டாஸ்மாக் கடை அருகே கிருஷ்ணராஜ் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல்அறிந்த அண்ணா மலைநகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்ேபாது கிருஷ்ணராஜ் பிணமாக கிடந்தார். அவர் குடிபோதையில் சுருண்டு விழுந்து இறந்து இருப்பது தெரிய வந்தது. உடனே உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.