என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.
    • புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது.

    புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் உயரலாம் என்றும் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.

    புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

    சந்திரன் நம் மனதை ஆள்பவன். மனதின் எண்ண ஓட்டத்துக்குக் காரணகர்த்தா சந்திர பகவான். புத்திக்கூர்மையைத் தருபவன் புதன் பகவான். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தலம் திங்களூர். புதன் பகவானுக்கு உரிய தலம் திருவெண்காடு.


    புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை. புத பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் என்றும் வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு என்றும் வஸ்திரம் பச்சை நிற வஸ்திரம் என்றும் அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் அவருக்கு பாசிப்பருப்புப்பொடி கலந்த அன்னத்தால் நைவேத்தியம் செய்யவேண்டும் என்றும் புதன் பகவானுக்கான உலோகம் பித்தளை என்றும் விவரிக்கிறது திருவெண்காடு ஸ்தல புராணம்.

    ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே

    சுக ஹஸ்தாய தீமஹி

    தன்னோ புத : பிரசோதயாத் !

    எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபடுங்கள் என்கிறார் வைத்தியநாத குருக்கள்.

    புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசியையும் ஆட்சி பெறும் மாதமாக ஆனி மாதத்தையும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீட்டில் இருந்துகொண்டு, புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபடலாம்.

    இதேபோல், புதன் கிழமைகளில் புதன் ஓரையில் வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரவல்லது. புதன் கிழமையன்று புதன் ஓரை என்பது காலை 6 முதல் 7 மணி வரையும் பின்னர் இரவு 8 முதல் 9 மணி வரையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    எனவே, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தனை பெருமை மிக்க புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும் என்கிறார்கள் பக்தர்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுக்க மக்கள் செலவீனங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
    • இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    ஜன்மாஷ்டமியை முன்னிட்டு நாடு முழுக்க ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி நாடு முழுக்க மக்கள் செலவீனங்கள் அதிகரித்து இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

    அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொது செயலாளரும், எம்பி-யுமான பிரவீன் கந்தேல்வால் குறிப்பிட்ட இந்த பண்டிகை காலக்கட்டத்தில் அதிகளவிலான வியாபாரம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக பூக்கள், இனிப்பு வகைகள், ஆடைகள், அலங்கார பொருட்கள், பால், தயிர், வெண்ணெய் மற்றும் உலர் பழ வகைகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ள என்று தெரிவித்தார்.

    நாடு முழுக்க ஜன்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்ட நிலையில், வடக்கு மற்றும் மேற்கத்திய மாநிலங்களில் இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஜன்மாஷ்டமி கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஜன்மாஷ்டமி தினத்தில் விரதம் இருந்து, கோவில் மற்றும் வீடுகளை அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    • கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் 11 முகூர்த்த நாட்கள் மட்டுமே இருந்தன.
    • இந்த சீசனில் டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.

    புதுடெல்லி:

    வருகிற 12-ந்தேதி முதல் டிசம்பர் 16-ந்தேதி வரை கார்த்திகை மாத திருமண சீசன் ஆகும். எனவே அடுத்த வாரம் முதல் திருமண சீசன் களைகட்ட உள்ளது.

    கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் இந்தியா முழுவதும் 35 லட்சம் திரும ணங்கள் நடைபெற்றன. அதன் மூலம் ரூ.4.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

    ஆனால் இந்த ஆண்டு சுமார் 48 லட்சம் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு திருமண சீசனில் வர்த்தகம் 41 சத வீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் 11 முகூர்த்த நாட்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இந்த ஆண்டு திருமண சீசனில் 18 முகூர்த்த நாட்கள் உள்ளன. எனவே வர்த்தகம் அதிகரிக்க இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் ஆகும்.

    ஒட்டுமொத்த திருமண சீசன் வர்த்தகத்தில் டெல்லியின் பங்களிப்பு மட்டும் ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீசனில் டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.

    குறைந்தபட்சமாக தலா ரூ.3 லட்சம் செலவில் 10 லட்சம் திருமணங்களும், அதிகபட்சமாக ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட செலவில் 50 ஆயிரம் திருமணங்களும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருமணத்தின்போது பொருட்கள் மற்றும் சேவைகளை பெற அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். தங்கத்துக்கு 15 சதவீதம், ஆடைகளுக்கு 10 சதவீதம், வீட்டு உபயோக சாதனங்களுக்கு 5 சதவீதம், உலர் பழம், இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதம், மளிகை மற்றும் காய்கறிகளுக்கு 5 சதவீதம், பரிசு பொருட்களுக்கு 4 சதவீதம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

    சேவையை பொருத்தவரையில், திருமண மண்டபத்துக்கு 5 சதவீதம், கேட்டரிங் சர்வீசுக்கு 10 சதவீதம், அலங்காரம், போக்குவரத்துக்கு 3 சதவீதம், போட்டோ, வீடியோவுக்கு 2 சதவீதம் செலவிட வேண்டியிருக்கும்.

    இந்த தகவலை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

    • தாம்சன் மீது சுடப்பட்ட தோட்டாக்களில் 'Deny, defend, depose' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.
    • நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும்

    அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [சிஇஓ] பிரையன் தாம்சன் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி [புதன்கிழமை] மன்ஹாட்டனில் நிறுவனம் முதலீட்டாளர் தினத்தை நடத்தும்போது நியூயார்க் ஹில்டன் மிட்டவுன் ஹோட்டலுக்கு வெளியே வைத்து மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    50 வயதான தாம்சன், யுனைடெட் ஹெல்த் கேர், யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் காப்பீட்டுப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஏப்ரல் 2021 முதல் தாம்சன் செயல்பட்டு வந்தார். தாம்சன் மீது சுடப்பட்ட தோட்டாக்களில் 'Deny, defend, depose' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.

     

    இந்த கொலை தொடர்பாகக் கடந்த வாரம் முதல் குற்றவாளியைத் தேடி வந்த எப்.பி.ஐ. போலீஸ் 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை இன்று கைது செய்துள்ளது.

    முன்னதாக இவரின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டிருந்தது. அதன்படி அல்டூனா பகுதியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவக ஊழியர் ஒருவர் இவரை அடையாளம் கண்டு போலீசிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஜினீயர் மான்ஜியோனை மடக்கிப் பிடித்துள்ளது.

    கைது செய்யப்பட்டபோது மான்ஜியோன் "கார்ப்பரேட் அமெரிக்காவிற்கு" எதிராக என்ற கையால் எழுதப்பட்ட ஒரு அறிக்கையை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

     

    அதிகாரிகள் கூற்றுப்படி, அந்த இரண்டு பக்க அறிக்கையில், [மருத்துவ] சுகாதாரத் துறை நோயாளிகளின் நலனை விட லாபத்தையே முதன்மை நோக்கமாக வைத்திருப்பதை விமர்சித்ததும், இதற்கு வன்முறைதான் பதில் என்ற முடிவை பரிந்துரைத்துள்ளது.

    நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக  வேண்டும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இது நடக்க வேண்டியதுதான் [These parasites had it coming] என்று அதில் எழுதி வைத்துள்ளார். இன்ஜினியர் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் தன்னிச்சையாகவே இந்த கொலையை செய்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

    • கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
    • மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார்.

    அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [சிஇஓ] பிரையன் தாம்சன் [50 வயது] கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஹோட்டல் வாசலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

     

    இந்த கொலை தொடர்பாக கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் கடையில் வைத்து 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை எப்.பி.ஐ. போலீஸ் கைது செய்தது. வீட்டிலேயே 3டி பிரிண்டர் மூலம் துப்பாக்கியை செய்து அதன்மூலம் இந்த கொலையை அவர் செய்ததாக போலீஸ் தெரிவித்தது.

     

    லைஃப் இன்சூரன்ஸ் சார்ந்த யுனைடட் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் அணுகுமுறை மக்களின் உயிரை பணமாக பார்ப்பதாக வெகு மக்களிடையே கோபம் இருந்து வந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த கொலையை செய்யவில்லை என்று மாஞ்சியோன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    கொலை, பயங்கரவாத செய்லபாடுகள் உள்ளிட்ட 11 பிரிவுகளின்கீழ் மாஞ்சியோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மான்ஹாட்டனில் உள்ள நியூ யார்க் மாகாண குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று [திங்கள்கிழமை] மாஞ்சியோன் ஆஜர்படுத்தப்பட்டார்.

     

    மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார். தனது கட்சிக்காரரை மனித பிங்பாங் பந்துபோல் அதிகாரிகள் நடத்துவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாஞ்சியோன் தான் குற்றம் செய்யவில்லை [NOT GUILTY] என்று தெரிவித்தார்.

     

    இதனையடுத்து வழக்கு விசாரணை 2025, பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுவரும் இந்த வழக்கில் மாஞ்சியோன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    முன்னதாக [மருத்துவ] சுகாதாரத் துறை நோயாளிகளின் நலனை விட லாபத்தையே முதன்மை நோக்கமாக வைத்திருப்பதை விமர்சித்து, இதற்கு வன்முறைதான் பதில் என்றும் நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இது நடக்க வேண்டியதுதான் [These parasites had it coming] என்று கைது செய்யப்பட்டபோது மான்ஜியோனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அறிக்கையில் எழுதியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. இந்த நிலையில், வருடம் தோறும் தீபாவளி பண்டிகை யை முன்னிட்டு சுமார் ஒரு வார காலத்திற்கு பல்லடத்தின் ஒரே கடைவீதியான என்.ஜி. ஆர். ரோடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், நகைகள் என வாங்குவதற்கு மக்கள் ஆர்வமுடன் கடைவீதியில் கூடுவார்கள். வியாபாரிகளும் தங்களது கடைகள் முன்பு அலங்கார பந்தல்கள் அமைத்து, பொது மக்களை கவரும் வண்ணம் புதிய ஆடைகளை பார்வைக்கு வைத்து வியாபாரம் செய்வார்கள்.

    இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. விசைத்தறி தொழில், பனியன் தொழில்கள் முடங்கிப் போய் உள்ளதாக பேச்சு நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக திடீர் என மழை பெய்வதால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்னும் பல நிறுவனங்களில் போனஸ் வழங்கப்படவில்லை. எனவே கடைசி நேர விற்பனையை எதிர்பார்த்து பல்லடம் வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.

    • வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வகையில் தொல்லைகள் நடக்கிறது.
    • முக்கிய இடங்களில் கேமராக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய போன் நம்பரை வைத்திருக்க வேண்டும்.

    வல்லம்:

    தஞ்சை மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை மனு அளித்தனர்.

    பின்னர் இது பற்றி மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் கூறியதாவது ;-

    ஜி.எஸ்.டி. வரி வருவதற்கு முன்னர் பொருட்கள் அனைத்தும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்தது.

    தற்போது பொருளாதார நெருக்கடியால் கடைகளே விற்பனையாகி வருகிறது. வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வணிகர்கள் மீண்டும் சற்று தலைதூக்கி வியாபாரம் செய்து வருகிறோம்.

    தற்போது வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வகையில் தொல்லைகள் வந்து கொண்டுள்ளது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட தஞ்சை கரந்தை பகுதியில் சமூக விரோதிகளால் வணிகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

    தற்போது சிலர் ஆயுதபூஜை அன்று பல இடங்களில் கடைகளுக்கு வந்து மிரட்டி மாமூல் கேட்டு வாங்கி சென்றுள்ளனர்.

    சில திருநங்கைகள் கடையில் வாசலில் நின்றும், கடைக்குள் வந்தும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் சில சமூக விரோதிகளும் மிரட்டி பணம் கேட்டனர். தற்போது இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது.

    அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வரவுள்ளது.

    தீபாவளி பண்டிகை நேரத்திலும் இவர்களால் மாமூல் தொல்லை ஏற்படும்.

    மாமூல் கேட்டு வணிகர்கள் மிரட்ட படும் அபாயம் உள்ளது.

    அது போன்ற சூழலில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

    இது தொடர்பாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளோம்.

    சங்கம் சார்பாகவும் தஞ்சை, பட்டுக்கோட்டை, உள்ளிட்ட அந்தந்த ஊர்களில் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம்.

    வணிகர்கள் மிரட்டப்பட்டால் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    கடைகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும்.

    அதேபோல் அனைவரும் அந்தந்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய போன் நம்பரை வைத்திருக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று உதவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட‌ செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் பாஸ்கரன், ஊடக தொடர்பாளர் இராம.சந்திரசேகரன், மாவட்ட இணை செயலாளர் முருகையன், மாவட்ட கூடுதல் செயலாளர் தாமரை செல்வன், தியாக சுந்தரமூர்த்தி, மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமி வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் செயின் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    • வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே, கொள்ளை சம்பவத்தில் உள்ளுர் கொள்ளையர்களு க்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது.

    தக்கலை, ஆக.13-

    தக்கலை அருகே திருவிதாங்கோடு தைக்கா பள்ளி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசிம் (வயது 70).

    இவர் சிறுதொழில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. நேற்று இரவு இவர் தனது மகன் இக்பால் என்பவரின் வீட்டுக்கு தூங்க சென்றுள்ளார்.

    இந்நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமி வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் செயின் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை இவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு முன் கதவு உடைக்க பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே, கொள்ளை சம்பவத்தில் உள்ளுர் கொள்ளையர்களு க்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சம்பந்தப்பட்ட நபரின் அங்க அடையாளங்களுடன் கூடிய விபரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் அமர்த்தப்படும் நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட உள்ளது.
    • அடையாள அட்டை மற்றும் வியாபாரம் செய்தவற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    தமிழக சாலையோர வியாபாரிகள் திட்டம் மற்றும் விதிகள் 2015-ன் படி "தமிழ்நாட்டில்த குதியான சாலையோர வியாபாரிகளின் சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட, நடப்பாண்டில் புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் எவ்வித சிரமும் இன்றி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மற்றும்கு ம்பகோணம் மாநகராட்சி, பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி பகுதிகளில்உ ள்ள சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

    இக்கணக்கெடுப்பின் போது சாலையோர வியாபாரிகளை அவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்கே வயது கைபேசி செயலி மூலம்இ டக்குறியீட்டுடன், சம்பயதப்பட்ட நபரின் அங்க அடையாளங்களுடன் கூடிய விபரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் அமர்த்தப்படும்நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட உள்ளது.கணக்கெடுப்பு பணி முடிவுற்ற பின் தகுதியான சாலையோர வியாபாரிகளுக்கு திட்டவிதிகளின்படி, அடையாள அட்டை மற்றும் வியாபாரம் செய்தவற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்டநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட உள்ளது.

    இந்த திட்ட விதிகளின்படி சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை மற்றும்சான்றிதழ் பெற தகுதியானவர்கள் விபரம் பின்வருமாறு:

    சாலையோர வியாபாரம் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள நபர்கள்.14 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். தனி நபர் அல்லது அவரது குடும்பத்தார் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும்.

    இத்திட்டத்தில் சாலையோரங்களில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், நிரயதரமாககடைகள் வைத்திருப்பவர்கள், பல இடங்களுக்கு வாகனமின்றி மற்றும் வாகனங்களில் சென்றுவியாபாரம் செய்பவர்கள், வாராந்திர சந்தை, மாத சந்தை, இரவு சந்மதை மற்றும் விழாக்கால சந்தைகளில் வியாபாரம் செய்பவர்கள், என சாலையோர வியாபாரிகள்வ கைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    திட்ட விதிகளின்படி சாலையோர வியாபாரிகளால், வியாபாரம் செய்யப்படும்கடைகளின் அளவு, நேரம் மற்றும் முறைகளின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளால் விதிக்கப்படும் வியாபார கட்டணத்தை செலுத்திட வேண்டும்.

    மேலும், சாலையோர வியாபாரிகளால், அவரவர் வியாபாரம் செய்யும் பகுதிகள் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். அவர்களால் உருவாக்கப்படும் கழிவுகளை, உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதல்படி அப்புறப்படுத்திட வேண்டும். இதற்காக நகர்ப்புறஉள்ளாட்சி அமைப்புகளால் விதிக்கப்படும் பராமரிப்பு கட்டணத்தை செலுத்திட வேண்டும்.

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில்மட்டுமே வியாபாரம் செய்யப்பட வேண்டும்.சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் 5 வருட காலம் அல்லது மறு கணக்கெடுப்பு காலம் வரை செல்லத்தக்கதாகும்.

    தமிழக அரசின் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில்ந கர்ப்புற பகுதிகளில் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், கணக்கெடுப்பின்போது முழு ஒத்துழைப்பினை வழங்கிடவும், திட்டத்தின் வழிகாட்டுதலின்படி சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
    • ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தைக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகா ராஷ்டிரா, போன்ற வெளி மாநிலங்கள் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் ஜவுளி சந்தையில் கடந்த சில நாட்களாக பள்ளி சீருடை, முகூர்த்த ஜவுளிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. மேலும் உள்ளூர் திருவிழாக்களையொட்டி வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்டவைகள் விற்பனையானது.

    இந்நிலையில் முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-

    ஆனி மாதத்தின் முக்கிய முகூர்த்த நாட்கள் நிறை வடைந்து விட்டதால் ஜவுளி சந்தையில் வியா பாரம் மந்த நிலையில் காணப்பட்டது. சில்லரை விற்பனை 30 சதவீதமும், மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வழக்கமாக ஆந்திரா வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

    ஆனால் இந்தாண்டு ஆந்திரா வியாபாரிகள் யாரும் வரவில்லை. கேரளா வில் இருந்து வர வேண்டிய ஆர்டர்களும் வரவில்லை. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி னர்.

    • குளச்சல் களிமார் பாலம் அருகில் பழக்கடையில் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.22 ஆயிரம் திருட்டு.
    • குளச்சல் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல்மார்க்கெட் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). இவர் களிமார் பாலம் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் வியாபாரம் முடிந்ததும் இரவில் கடையை பூட்டிச் சென்றார். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு ராஜேஷ் கடையை திறக்க வந்தார்.

    அப்போது கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்க்கும்போது மேசை டிராயரில் வைத்து சென்ற ரூ.22 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ராஜேஷ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் பேச்சை கிண்டல் செய்ய காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் போட்ட பக்கோடா கடையிலிருத்து தற்போது 35 கிளைகளுக்கு பக்கோடா சப்ளை செய்யப்படுகிறது.
    அகமதாபாத்:

    சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, “நிறைய பக்கோடா கடைகள் தொடங்கப்பட்டுள்ளன”என வேலைவாய்ப்பு குறித்து பேச, “பக்கோடா விற்பது வேலைவாய்ப்பு என்றால், பிச்சை எடுப்பதும் வேலைவாய்ப்புதான்”என முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் அதற்கு பதிலடி கொடுத்தார்.

    பக்கோடா விவகாரம் சூடுபிடித்ததை அடுத்து, “சும்மா இருப்பதற்கு பக்கோடா வியாபாரம் செய்வது மேல்” என பாராளுமன்றத்தில் அமித்ஷா பேசினார். “பொறியியல் படித்தது பக்கோடா விற்கவா?” என எதிக்குரல் எழுந்தது. மேலும், பெங்களூரில் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அருகே, இளைஞர்கள் ‘மோடி பக்கோடா.. அமித்ஷா பக்கோடா’ என கூவிக்கூவி விற்றனர்.

    அதே சமயத்தில், குஜராத் மாநிலம் வதோதராவில் காங்கிரஸ் பிரமுகர் நாராயண்பாய் ராஜ்புத், மோடியின் பேச்சை கிண்டலடிக்கும் விதமாக பக்கோடா கடை ஒன்று போட்டார். முதல் நாளில் 200 ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், நாளுக்கு நாள் இது அதிகரித்தது.

    ஆஹா! நல்ல பிஸினஸ் கிடைத்து விட்டது என்று உணர்ந்த நாராயண்பாய் ராஜ்புத் பக்கோடா தொழிலில் முழு வீச்சாக இறங்கியதன் பலனாக, தற்போது அவரது கடையில் தினமும் 600 கிலோ பக்கோடா விற்பனையாகிறது. மேலும், அந்நகரத்தில் உள்ள 35 கிளைகளுக்கு இங்கிருந்து பக்கோடா சப்ளை செய்யப்படுகிறது.
    ×