என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்லைன்"
- புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு செய்ய முடியும்.
- டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரெயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மின்சார ரெயில்கள் மற்றும் பறக்கும் ரெயில்களில் பயணம் செய்ய காலை, மாலை நேரங்களில் டிக்கெட் எடுப்பதற்கு வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக செயலி மூலம் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
வீடுகளில் இருந்தவாறே யூ.டி.எஸ். செயலியில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு செய்ய முடியும்.
டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரெயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க ரெயில் நிலையத்திற்கு வெளியே அல்லது ரெயில் நிலையங்களுக்கு அருகாமையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்று முந்தைய விதிமுறை இருந்தது.
இந்த புதிய செயலியை ஊக்குவிக்கவும், கவுண்டர்களில் கூட்ட நெரிசலை குறைக்கவும் இது இப்போது தளர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பயணிகள் நலச்சங்க ஆர்வலர் சடகோபன் கூறுகையில், பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பே டிக்கெட் எடுத்து கொள்ள இதன் மூலம் முடியும். இதனால் விரைவாக பயணத்தை தொடர முடியும் என்றார்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோரின் எண்ணத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2 மணிநேரத்திற்கு முன்பு பயணம் செய்வது உறுதியாக இருந்தால் வீடுகளில் இருந்தோ அல்லது நிலையத்திற்கு வெளியில் இருந்தோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றார்.
- கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
- ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது
கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.
ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.
- போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
- முடிவு விபரம் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி. கடந்த 24-ந்தேதி மான்வியின் 10-வது பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடினர்.
அதற்காக சிறுமி தனது தந்தையிடம் கேக் கேட்டுள்ளார். அவர் பாட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஆன்லைன் மூலமாக கேக்கை ஆர்டர் செய்துள்ளார்.
அதன்படி வினியோகிக்கப்பட்ட கேக்கை குடும்பத்தினர் முன்பு வெட்டி பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அப்போது ஒவ்வொருவருக்கும் மான்வி கேக் ஊட்டி உள்ளார்.
பின்னர் அவரும் கேக் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மான்விக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டு உள்ளது. உடனே அவரது தொண்டையும் வறண்டு போனதாக கூறியதோடு, அவர் மாறி மாறி வாந்தி எடுத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் இது போன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுமி மான்வியை அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மான்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக் கெட்டு போனதாலும், அதை சாப்பிட்டதுமே சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதன் முடிவு விபரம் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- உலர் பழங்களை ஆர்டர் செய்தபோதும், பாலிசி எடுத்து தருவதாக கூறியும் ரூ.2½ லட்சம் சுருட்டல்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் வயதான முதியவர்களை குறி வைத்து ஆன்லைன் வாயிலாக 2 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜெ.எல்.என். சர்மா என்பவரிடம் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர் தனியார் வங்கி யின் இன்சூரன்ஸ் நிறுவனத் தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். நீங்கள் செலுத்தும் பாலிசி தொகை 45 நாட்களில் திருப்பி தரப்படும் என்று அவர் ஆசை காட்டியுள்ளார்.
இதனை நம்பி சர்மா, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் மறுநாள் மனைவியின் வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சம் பணத்தை அனுப்பி வைத்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி எதுவும் நாங்கள் பேசவில்லையே? ஏன் பணத்தை அனுப்பினீர்கள்? என்று கேட்டுள்ளனர்.
இதன்பிறகே சர்மா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதுபற்றி சூளைமேடு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 70 வயதான ஜெயஸ்ரீ என்பவர் ஆன்லைனில் உலர் பழங்களை ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் ஆர்டர் செய்ய முடியாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீ பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டில் இருந்து 6 முறை தலா ரூ.10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரும் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, "அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினால் அவர்களிடம் எச்சரிக்கையோடு பேச வேண்டும். இல்லையென்றால் இதுபோன்று இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளனர்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது.
- தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான தேர்வுக் கூட நுழைவு சீட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20-ந்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று 'ஆன்லைன்-போர்டல்" என்ற வாசகத்தினை கிளிக் செய்து user ஐ.டி. பாஸ்வேர்டை கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதே போல பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டினை 19-ந்தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மட்டும் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
- வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும்.
- இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும்.
சென்னை:
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவரும் மற்றும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இணையவழியில் திட்ட அனுமதி வழங்கப்படுவதால் விண்ணப்பங்கள் விரைவாக முடிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு, வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும்.
இது திட்ட அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். திட்ட அனுமதி விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி மூலமே பெறப்பட்டு கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்கும் முறை செயல்பாட்டிற்கு வந்தபின், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உயர்ந்துள்ளது மற்றும் இணையவழி ஒப்புதல் வழங்கியது 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் உயரமான கட்டடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதி பொறுத்தவரையில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 65 விண்ணப்பங்கள் பெறப்படும். இணையவழி திட்ட அனுமதி மென்பொருள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக முன்பு எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 100-க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் விண்ணப்பதாரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார்.
- ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த கண்ணன்-அனுப்பிரியா தம்பதியின் மகள் தன்மயா (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது சிறு வயது முதலே தமிழ் ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழிகளை கற்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
இதற்காக யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார். பிரான்ஸ், பிரட்டிஷ், ஆஸ்த்திரேலியா, அமெரிக்கன் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆங்கில மொழிகளை இலக்கணப் பிழையின்றி எழுதி படிக்க கற்றுக் கொண்டார். உச்சரிப்பு, எழுத்து, வாக்கியம், இலக்கணம் ஆகியவற்றை வீடியோ வடிவிலும், பி.டி.எப்., டெக்ஸ்ட் வடிவிலும் புதிர் கேள்விகள், வினாடி வினா மூலம் கற்றுத் தேர்ந்தார்.
இது குறித்து ஆன்லைன் மூலம் நடந்த தேர்விலும் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றார். இவரது திறமையை கண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இவர் மொழித் திறன் பயிற்றுவிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார். 5 வெளிநாட்டு ஆங்கில மொழியை அந்த நாட்டின் நளினத்தில் உரையாற்றி கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து அவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் எந்தவித தயக்கம் மற்றும் கூச்சம் இருக்க கூடாது என்று கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். இவர் பேசும் ஆங்கில உச்சரிப்புக்கு கல்லூரி பேராசிரியர்கள் கூட பேசுவதற்கு திணறி வருகின்றனர் என்பது கூடுதல் விஷயமாகும்.
தமிழகத்தில் பிற மொழிகளை கற்கக்கூடாது என்று ஒரு சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்திய மொழிகளைக் கடந்து அயல்நாட்டு மொழிகளையும் கற்று அதனை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து 8ம் வகுப்பு மாணவி அசத்தி வருவதோடு இந்த காலத்திலேயே வருவாயும் ஈட்டி வருகிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.
- பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
சென்னை:
சென்னையில் மாநகர பஸ்களில் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக பல்லாவரம் பஸ் டெப்போவில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக பல்லாவரத்தில் உள்ள மாநகரபோக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்களுக்கு, யுபிஐ மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த தொடுதிரை சாதனங்கள் மூலம், பயணிகள் ஏறும் பஸ் நிறுத்தத்தின் பெயரையும் அவர்கள் சேருமிடத்தையும் கண்டக்டர் தேர்வு செய்யலாம். அவர்கள் தேர்வு செய்தவுடன், பயணிகள் பணம், கார்டுகள் மற்றும் யுபிஐ உள்ளிட்ட பல்வேறு வகைகளில் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம். யுபிஐ முறை தேர்ந்தெடுக்கப்பட்டால், கியூஆர் குறியீடு திரையில் காட்டப்படும். பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
மேலும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அனைத்து மாநகர போக்குவரத்து கழக பஸ்களுக்கும் கியூஆர் அடிப்படையிலான டிக்கெட் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்கள் மொபைல் செயலியை பயன்படுத்தி தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்யலாம். மேலும் பயணிகள் தங்களுக்கான கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் உள்ளூர் ரெயில்களிலும் பயணிக்கலாம்.
இதற்காக அனைத்து பஸ்கள் மற்றும் ரெயில்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் கியூஆர் ஸ்கேனர்கள் நிறுவப்பட உள்ளது. மேலும் பயணிகள் பயணம் செய்யும் போது கியூஆர் குறியீடுகளை பஸ் கண்டக்டர்கள் மற்றும் ரெயில் டிக்கெட் பரிசோதகர்களிடம் காண்பிக்கலாம்.
- ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
- போலீசார் விசாரணை நடதி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு பலரும் அடிமையாகி இருக்கின்றனர். இதன் காணமாக பலர் கடன் வாங்கிக்கூட ஆன்லைன் ரம்மி விளையாடுகிறார்கள். இவ்வாறு விளையாடுபவர்கள் பலர் ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கான பணத்தை இழப்பதாகவும் கூறப்படுகிறது.
அப்படி பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழக சட்ட சபையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தடை சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஆன்லைன் ரம்மியில் ரூ.3 லட்சத்தை இழந்த வாலிபர் ஒருவர், அந்த பணத்தை திருப்புவதற்காக திருட்டில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம கோட்டயம் பாளை பரங்கனம் பகுதியை சேர்ந்த அமல் அகஸ்டின் என்ற வாலிபர் ரம்மி விளையாட கடனுக்கு பணம் வாங்கியிருக்கிறார்.
ரம்மி விளையாட்டில் அவர் 3 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். வாங்கிய இடத்தில் பணத்தை திருப்பி கொடுக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு அமல் அகஸ்டின் தள்ளப்பட்டார். இதனால் பணத்துக்கு என்ன செய்வதென்று யோசித்த அவர், திருட்டில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
அதன்படி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட அமல் அகஸ்டின் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவருக்கு எந்தெந்த திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கிறது? என்று போலீசார் விசாரணை நடதி வருகின்றனர்.
- கிராமத்தில் ஒருவர் இறந்து போனால் உறவினர்கள் கூடுவார்கள்.
- வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் இறுதி யாத்திரையில் பங்கெடுப்பார்கள்.
வாழும் வரை வாழ்ந்து முடித்த பிறகு வெற்றுடலை சுடுகாட்டுக்கு தூக்கி செல்ல நாலு பேர் தேவை!
ஆனால் அந்த நாலு பேரை கூட சம்பாதித்து வைக்காததாலும், நகர்ப்புற வாழ்க்கை மாற்றத்தாலும் பிணத்தை தூக்கி செல்லவும், இறுதிச் சடங்குகள் செய்யவும் தொழில் நுட்பங்களை தேட வேண்டிய காலம் வந்திருக்கிறது.
தொழில் ரீதியாக இதற்காக நிறுவனங்கள் வந்து விட்டன. தலைநகர் டெல்லி முதல் நாடு முழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த நிறுவனங்களும் லாபம் கொழிக்கும் நிறுவனங்களாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.
ஒரு நிறுவனம் உறுப்பினராக சேர ரூ.37,500 கட்டணமாக வசூலிக்கிறது. ஊரார், உறவினர்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
செத்துப்போனால் அந்த நிறுவனத்தில் இருந்து வந்து உரிய சடங்குகளை நடத்தி தகனமோ, அடக்கமோ செய்துவிடுகிறார்கள்.
ஆன்லைனில் தொடர்பு கொண்டு பதிவு செய்தாலும் போதும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர் என்று எந்த சமூகமாக இருந்தாலும் சரி. அந்த சமூகத்துக்கு உரிய முறையில் இறுதிச் சடங்கை செய்கிறார்கள். பின்னர் உடலை ஆம்புலன்சில் தூக்கி சென்று தகனம் செய்கிறார்கள். சாம்பலை சேகரித்து எங்கு கரைக்க வேண்டும் என்கிறோமோ அங்கு கரைக்கவும் செய்கிறார்கள்.
உடலை எடுத்து செல்வது, பிரீசர் பாக்ஸ், அலங்காரம் செய்தல், பண்டிதர்களை ஏற்பாடு செய்தல், பிரார்த்தனை செய்தல், இரங்கல் நிகழ்ச்சி நடத்துவது, பஜனை குழுக்களை ஏற்பாடு செய்தல், உணவு, தேனீர் ஏற்பாடு செய்தல் உள்பட இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை சொல்லி அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் உள்ளது.
தாய்-தந்தையரை முதியோர் இல்லங்களில் சேர்த்து விட்டு வெளிநாடுகளில் சொகுசாக வாழும் பிள்ளைகள் தாய்-தந்தை பெயரில் பணம் கட்டி உறுப்பினராக்கி விடுகிறார்கள். இந்த தகவலை முதியோர் இல்லத்திலும் பதிவு செய்து விடுகிறார்கள். இறக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து இறுதி காரியங்களை செய்துவிட்டு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார்கள்.
அவர்கள் விரும்பினால் வீடியோ பதிவு செய்தும் கொடுத்து விடுகிறார்கள்.
அதேபோல் சொந்த, பந்தம், உற்றார், உறவினர் என்ற எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டு நகர வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டவர்களும் அந்த மாதிரி கடைசி கட்டத்தில் இந்த நிறுவனங்களையே நாடுகிறார்கள்.
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், உணவு, மருந்து, மளிகைப்பொருள், துணி மணி, காய்கறி என்று தேவையான எல்லாமும் வீடு தேடி வருவது போல் இப்போது இறுதிக் கடமை செய்யவும் வீடு தேடி வந்து விடுகிறார்கள்.
இந்த மாற்றத்தை முன்னேற்றம் என்பதா...? அல்லது...?
தாய், மகன், அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, நண்பர்கள், உறவினர்கள், ஊரார் என்ற எல்லா உறவுகளில் இருந்தும் ஒவ்வொருவரும் விலகி தனி மனிதனாகி கொண்டிருக்கிறார்கள்.
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை என்ற வாழ்க்கை நியதியை கூட கைவிட்டோம்.
கிராமத்தில் ஒருவர் இறந்து போனால் உறவினர்கள் கூடுவார்கள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் இறுதி யாத்திரையில் பங்கெடுப்பார்கள். கண்ணீர் சிந்துவார்கள், சுமந்து செல்லும் நாலு பேர், சுற்றி செல்லும் பலர் என்று ஊரே கூடி தன்னோடு வாழ்ந்தவரை மரியாதையோடு வழியனுப்பி வைக்கும்.
அதுதான் மனிதனாக பிறந்து வாழ்ந்ததன் அடையாளம்.
ஆனால் பணமும், ஆடம்பரமும் மட்டுமே வாழ்க்கை என்ற தவறான முடிவால் முற்றிலும் மாறுபட்ட, சம்பந்தமில்லாத வாழ்க்கை முறையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் நடந்து முடிந்த பின்னே நல்லது, கெட்டது தெரிந்து என்ன லாபம்?
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2024-ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலம் வரும் 31ந்தேதிக்குள் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
- அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
சேலம்:
ஓசூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் என்.சபீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2024-ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலம் வரும் 31ந்தேதிக்குள் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்கள் தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்கப்பட்டு ஆன்லைன் முறையிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை. உரிய காலத்தில் உரிம கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளு மாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- 2024ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும்.
- ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருப்பூர்:
திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இைண இயக்குனர்கள் சரவணன், புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2024ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும். புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31-10-2023 ஆகும். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று உரிய உரிம தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்