என் மலர்
நீங்கள் தேடியது "பெட்ரோல்"
- பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாகும்.
- சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது
இந்தியாவில் 2024-25ம் நிதியாண்டில் டீசல் கார்களைக் காட்டிலும் சிஎன்ஜி கார்களையே மக்கள் அதிகம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நிதியாண்டில் 7,87,724 சிஎன்ஜி கார்களும், 7,36,508 டீசல் கார்களும் விற்பனையாகியுள்ளன.
கடந்த நிதியாண்டில் பயணிகள் கார் விற்பனையில் 15 சதவீதமாக இருந்த சிஎன்ஜி கார் விற்பனை இப்போது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாக உள்ளதால் பலரும் சிஎன்ஜி கார்களை விரும்புகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
மொத்த சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்வு.
- 2008ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது கடுமையாக சரிந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது.
விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது.
2008ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது கடுமையாக சரிந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.5 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
- வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலோனார் முறையாக ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரை பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் போலீசார் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தீவிரப்படுத்த திருவள்ளூர் மாவட்ட போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
அதன்படி மாவட்ட காவல்துறை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வருகிற ஏப். 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர்.
இதனை தீவிரமாக செயல்படுத்த பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் கூறியதாவது:-
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்.
முதற்கட்டமாக தற்போது திருவள்ளூர் நகர் பகுதிகளில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாசகம் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் பங்க்குகளுக்கு பெட்ரோல் போட வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
- தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு,
அரியலூர்
தமிழ்நாடு இந்திய தொழிற்சங்க மையத்தின் 15-வது மாநில மாநாடு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி சி.கோவிந்தராஜன் நினைவு ஜோதி பிரசார பயண வாகனத்திற்கு ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் தமிழ்நாடு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை பாதியாக குறைக்க வேண்டும். முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது. நேரடியாக உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாகுபாடு இன்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமானம், ஆட்டோ, தையல் உள்ளிட்ட அனைத்து நலவாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் தெரிவித்து இந்திய தொழிற்சங்க மைய நிர்வாகிகள் பேசினர். இதில் மாநிலத் துணைத் தலைவர் கருப்பையா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்."
- அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கண்டிப்பாக பாட்டில்களில் பெட்ரோல் விற்பதில்லை என்பதில் பங்க் உரிமையாளர்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர்.
திருப்பூர்:
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ., விசாரணை துவங்கியுள்ளது. அதில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்ட சதி வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையிலும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். முக்கிய கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்படுகிறது.விடுதிகள், கூரியர் சர்வீஸ்கள், வாகன பார்க்கிங் மையங்கள் என சந்தேகப்படும் விதமாக புதிய நபர்கள் நடமாட்டம் கண்காணிக்கும் வகையில் உரிய அறிவுரைகள் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அசம்பாவிதங்களுக்கு திட்டமிடும் நபர்கள் முக்கியமான எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்கள் தவிர தனியாக பாட்டில், கேன் போன்றவற்றில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.இது குறித்த அறிவிப்பு பெட்ரோல் பங்க்குளில் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பாட்டில்களில் பெட்ரோல் விற்பதில்லை என்பதில் பங்க் உரிமையாளர்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர்.
- புத்தன்கடை பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெபஸ்டின்
- கண்ணன் மது போதையில் வேலைக்கு வந்துள்ளார். அவரை மேலாளர் ஜெபஸ்டின் கண்டித்துள்ளார்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெபஸ்டின் (வயது 26). அதே பங்கில் கண்ணனூர் உடையார்விளை பகுதியை சேர்ந்த கண்ணன் (36), உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு கண்ணன் மது போதையில் வேலைக்கு வந்துள்ளார். அவரை மேலாளர் ஜெபஸ்டின் கண்டித்துள்ளார். மேலும் பணியிருந்தும் நீக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் மறுநாள் பெட்ரோல் பங்கிற்கு வந்து ஜெபஸ்டினை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருவட்டார் போலீசில் ஜெபஸ்டின் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2022 முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலத்தில் 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு அதன் மூலம் 281 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
தற்போது தலைக்கவசம் அணியாமல் வரும் பொது மக்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படு வதுடன், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது குறித்தும், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், பெட்ரோல் பங்கில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்க ளுக்கு பெட்ரோல் வழங்காமல் இருப்பது குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து சாலை பாதுகாப்பு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் இருசக்கர வாகன விபத்தில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்களே அதிக அளவில் இறப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருசக்கர வாகன விபத்துகளின் மூலம் ஏற்பட்ட 126 மனித உயிரிழப்புகளில் 99 சதவீதம் மனித உயிரிழப்புகள் தலைக் கவசம் அணியாததால் ஏற்பட்டுள்ளது.
எனவே மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனத்தினை இயக்குபவரும், உடன் பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், 2 நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடாது. நகர எல்லைக்குள் இரு சக்கர வாகனத்தினை இயக்கும் போது 40 கி.மீ., வேகத்திற்கு மிகாமல் மித வேகத்தில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 50 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு ரூ.100-க்கு பெட்ரோல் இலவசமாகவும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.50-க்கு பெட்ரோல் இலவசமாகவும் வழங்கப்பட்டது.
- திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி இலக்கியவாதிகள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தின் 6-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லியில் பெட்ரோல் பங்க் நிர்வாகத்துடன் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை சுத்தமல்லி பங்கில் 50 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு ரூ.100-க்கு பெட்ரோல் இலவசமாகவும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.50-க்கு பெட்ரோல் இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதையடுத்து சுத்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் அங்கு திரண்டு வந்து திருக்குறளை ஒப்புவித்தனர். அவர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சார்பில் ரூ.100-க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுத்தமல்லி திருவள்ளுவர் கழக தலைவர் சொக்கலிங்கம் செய்திருந்தார்.
உலக பொதுமறையை கற்றுக் கொடுக்கும் திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இலக்கியவாதிகள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.
- தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- அதேபோல், உங்கள் தந்தை, கணவன் மற்றும்– உறவினர்களிடமும் அறிவுறுத்துங்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஜோதி அறக்கட்ட ளை, தஞ்சை நகர போக்கு வரத்து காவல்துறை யுடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து வரும் குடும்ப தலைவிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சை பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த குடும்ப தலைவிகளை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா 1 லிட்டர் இலவச பெட்ரோலுக்கான கூப்பன்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்:-
குடும்ப தலைவிகளான நீங்கள் எப்படி அரசின் சட்டதிட்டங்களை மதித்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து வருகிறீர்களோ அதேபோல், உங்கள் தந்தை, கணவன் மற்றும்– உறவினர்களிடமும் அறிவு றுத்துங்கள் என்றார்.
நிகழ்ச்சியில்போக்கு வரத்து உதவி இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன், போக்கு வரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெ க்டர்கள் ரமேஷ், ரமேஷ்குமார், ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாளர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர் .
- பெட்ரோல் பங்குகளில் இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
- மீறுவோருக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த வாரம் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலை செய்யப்பட்டனர்.
நொய்டாவை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற வாலிபர் 4 பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வந்து அதனை பயணிகள் மீது ஊற்றி தீவைத்துள்ளார். வழக்கமாக ரெயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்பும் ஷாருக் ஷைபி, பாட்டிலில் பெட்ரோல் எடுத்து சென்று, அதனை பயணிகள் மீது ஊற்றி தீவைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில்களில் இதுபோன்று யாராவது எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்து செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பெட்ரோல் பங்குகளில் இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனை மீறுவோருக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளது.
அரசின் இந்த உத்தரவு காரணமாக இனி இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் எங்காவது பெட்ரோல் தீர்ந்து விட்டால் பெட்ரோல் பங்க் வரை வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்றுதான் பெட்ரோல் வாங்க வேண்டும். பாட்டிலில் வாங்க சென்றால் அபராதத்திற்கு ஆளாவார்கள். இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வாலிபர் தப்பி ஓட்டம்
- எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்துவிட்டு, எனக்கே பழம் தர மாட்டாயா என மிரட்டல்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடி தட்டான் விளை பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 30). இவர் ராமன்புதூர் பகுதி யில் பழக்கடை வைத்துள்ளார்.
நேற்று பிரேம் ஆனந்த் வழக்கம்போல் கடையை திறந்து இருந்தார். இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வதற்கு தயாரானார். இதையடுத்து கடையில் இருந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிரேம் ஆனந்த், பழங்களை கடையில் உள்ளே வைத்து விட்டதால் தற்பொழுது எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்துவிட்டு, எனக்கே பழம் தர மாட்டாயா என்று கூறி பிரேம் ஆனந்திடம் அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டார். திடீரென தான் கையில் பாட்டிலில் வைத்தி ருந்த பெட்ரோலை பிரேம் ஆனந்த் மீது ஊற்றினார். பின்னர் கையில் வைத்தி ருந்த தீப்பெட்டியால் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்தார். பிரேம் ஆனந்த் உடலில் தீ எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.
அவர்கள் பிரேம் ஆனந்த் உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் தீ வைத்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற் கொண்டனர். ஆஸ்பத்திரி யில் பிரேம் ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பிரேம் ஆனந்த் கூறிய தகவல் மற்றும் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணை யில் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.
போலீசார் தேடுவது அறிந்த அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட் டுள்ளனர். இது குறித்து பிரேம் ஆனந்த் கொடுத்த புகாரின்பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடைக் காரர் மீது பெட் ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெட்ரோல் இல்லாததால் தீ வைத்ததாக வாக்குமூலம்
- போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (வயது 35). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 6-ந்தேதி இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து கிடந்தது. இதுகுறித்து ஹரிஹரசுதன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் ஹரிஹரன்சுதன் மோட்டார் சைக்கிள் எரித்தது வாகையடி தெருவை சேர்ந்த தாணு மூர்த்தி (21), மீனாட்சி செட்டிதெருவை சேர்ந்த ராம்கி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்திய போது பைக்குக்கு பெட்ரோல் இல்லாததால் ஹரிஹரசுதன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை எடுக்க முயன்றோம். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை. இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பெட்ரோல் இல்லாத மோட்டார் சைக்கிள் எதற்கு என்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தோம் என்று கூறினார்கள். கைது செய்யப்பட்ட தாணுமூர்த்தி, ராம்கி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.