என் மலர்
நீங்கள் தேடியது "வழக்கு விசாரணை"
- கடந்த 2015ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஒரு வழக்கு ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது.
- வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கண்ணன் கோர்ட்டில் ஆஜராகுமாறு பல முறை அறிவுறுத்தல் வழங்கினார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 2015ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கண்ணன். தற்போது இவர் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஒரு வழக்கு ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கண்ணன் கோர்ட்டில் ஆஜராகுமாறு பல முறை அறிவுறுத்தல் வழங்கினார்.
ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், டி.எஸ்.பி. கண்ணன் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
- 27 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 22 -ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
நாகர்கோவில் :
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய மந்திரி ராஜாவை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்த கோட்டார் பகுதியில் அப்போதைய மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். தேர்தல் விதிமுறை அமலில் இருந்த நிலையில் நிர்வாகிகள் திரண்டதால் எஸ்.ஏ.அசோகன் உட்பட 27 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் ஜே.எம்.2 கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. எஸ்.ஏ.அசோகன் மற்றும் கிருஷ்ணதாஸ், ஆர்.ஜே.கே. திலக், ஜெயசீலன், டாரதி சாம்சன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 22 -ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
- விசாரணை மயிலாடுதுறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
- வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
குத்தாலம்:
மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக 2003-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் இருந்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கலவரம் ஏற்பட்டது.
இது தொடர்பான விசாரணை மயிலாடுதுறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொல்.திருமாவளவன் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், வக்கீல்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக வி.சி.க. தரப்பில் வக்கீல்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து, இந்த வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
- செந்தில்பாலாஜி உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
- அமலக்கத்துறை தரப்பில் வாதிட்ட வக்கீல்கள் தங்கள் தரப்பில் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றனர்.
புதுடெல்லி:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்த செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.
நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்த போது செந்தில்பாலாஜி தரப்பில் அமைச்சரான பின்னர் அவர் ஜாமீன் பெற்றது தொடர்பாக விளக்கம் பெற்று வந்துள்ளோம். ஆனால் இந்த வழக்கில் வாதம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஜாமீன் பெற்றவுடன் அமைச்சராக பதவியேற்றது ஏன்? என்பது தொடர்பாக செந்தில்பாலாஜி உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றே கூறினோம். அதனால்தான் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை.
ஆனால் தற்போது வாதம் செய்ய வேண்டும் என்று நிலைப்பாட்டை மாற்றி கூறுகிறீர்கள். எனவே அதனை ஏற்க முடியாது என்றனர். இது தொடர்பாக வாதிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல்கள் விளக்கம் அளிக்கிறோம். ஆனால் தற்போது வாதம் செய்யக்கூடாது என்பது ஏற்கதக்கதல்ல என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், கூடுதலாக இந்த விசயத்தில் எதுவும் கூற விரும்பவில்லை. வழக்கை வருகிற 18-ந் தேதி (புதன்கிழமை) ஒத்தி வைக்கிறோம் என்றனர்.
அமலக்கத்துறை தரப்பில் வாதிட்ட வக்கீல்கள் தங்கள் தரப்பில் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஜூன் 6-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அலுவல்கள் தொடர்பாக முடிவெடுக்கும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் இருந்த கவர்னருக்கான அதிகாரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் முதல் விசாரணை வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. #DelhiHC #ADMK
பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா நிறைவேறியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமத்துவத்துக்கான இளைஞர்கள் (Youth for Equality) என்ற அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதுதவிர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் டெஹ்சீன் பூனாவால்லா மற்றும் வேறு சில தொண்டு நிறுவனங்களும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முன்னர் நடந்த விசாரணையின்போது 10 சதவீதம் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோரை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று மீண்டும் விசாரணையை தொடங்கியது.
இவ்வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்னும் மனுதாரரின் புதிய கோரிக்கை தொடர்பாக வரும் 28-ம் தேதி பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் மறுவிசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர். #SC #10pcreservation #economicalweakersection
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (44). ஆட்டோ டிரைவர். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் பாண்டுரங்கன் மனைவி விவாகரத்து கேட்டு கோவை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இதனால் பாண்டு ரங்கன் மன வேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று கோவையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் ஆஜராக பாண்டு ரங்கன் வந்தார். திடீரென அவர் கோர்ட்டு வளாகத்தில் தான் கொண்டு வந்த சாணிப்பவுடரை குடித்து விட்டார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாண்டு ரங்கனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோர்ட்டு வளாகத்தில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.
இந்த வழக்கு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கைதான 3 பேர் மீதும் 1360 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நீதிபதி முத்து சாரதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இந்த வழக்கின் விசாரணை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக கூறிய நீதிபதி முத்து சாரதா விசாரணையை வருகிற 3-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி உள்பட 3 பேரும் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
நீதிபதிகளை வழக்கு தொடர்பாக தனிப்பட்ட முறையில் அவர்களது செல்வாக்கை பெறுவதற்கு யாரும் அணுகுவதில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி ஒருவரையே இதுபோல் ஒரு வழக்கில் சிலர் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி அணுகிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி (சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்) ஆகியோர் ஓட்டல் ராயல் பிளாசா தொடர்பான ஒரு வழக்கை விசாரித்தனர்.
அப்போது நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், “வக்கீல்களை சந்திக்கும் சாதாரண நிகழ்வுகளின்போது, சில மூத்த வக்கீல்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக பேச ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு இதே விஷயத்தை பேசுகின்றனர். இதுபோல் நீதிபதிகளின் செல்வாக்கை வழக்கு விசாரணைக்காக பெற முயற்சிப்பது தீவிரமானதாக எடுத்துக் கொள்ளப்படும்” என்றார்.
இதையடுத்து, மூத்த வக்கீல் ஷியாம் திவான், “இந்த வழக்கை விசாரணை செய்வதில் இருந்து நீதிபதி இந்திரா பானர்ஜி விலகி விடக் கூடாது. அப்படிச் செய்தால் மற்ற நீதிபதிகளும் இதைப் பின்பற்றும் நிலை உருவாகும்” என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது, நீதிபதி அருண் மிஸ்ரா, “வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளின் செல்வாக்கை பெறுவதற்கு முயற்சிப்பது, கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும்” என்று எச்சரித்தார்.
பெண் நீதிபதியின் இந்த குற்றச்சாட்டு சுப்ரீம் கோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SupremeCourt #IndiraBanerjee
வழக்கு விசாரணைகளில் ஒளிவு, மறைவற்ற தன்மைக்காக நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.
குறிப்பாக, டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணைகளை நேரடியாகவும், பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பவும் மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவரான சுவப்னில் திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக, மத்திய அரசின் கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பும் வழக்கம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதை ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு, நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்புவது தொடர்பாக தேவையான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் பரிந்துரைக்குமாறு மத்திய அரசையும், வழக்கு தொடர்ந்தவரையும் அறிவுறுத்தியுள்ளது. #Livestreaming #Livestreamingofcourtproceedings