என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயில் தண்டனை"
- குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
- குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அட்சய திருதியை போன்ற விழா காலங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வருவதால் அதை தடுக்குமாறு அறிவுறுத்துகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்து குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்வது, எந்தவொரு குழந்தை திருமணத்தையும் நடத்துபவர், இயக்குபவர் அல்லது தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்டப் பூர்வமாக தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்ட விரோதமான வேறு எந்த நபரும், திருமணத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் செய்பவர் அல்லது அதை நடத்த அனுமதிப்பவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வது அல்லது பங்கேற்பது குற்றமாகும்.
குழந்தை திருமணம் நடத்துவதை தடுக்க தவறினால் 2 ஆண்டுகள் வரை கடுமையான ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
- போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மூலக்குளம்-வில்லியனூர் மெயின்ரோட் டைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 64). இவரது கணவர் சுப்ரமணியன் இறந்து விட்டதால், உறவுக்கார பெண் ஒருவரின் துணையுடன் வசித்து வந்தார்.
கடந்த 2016 டிசம்பர் 26-ந் தேதி சாந்தாவுடன் தங்கியிருந்த உறவுக்கார பெண் வெளியே சென்ற நிலையில் மறுநாள் காலை சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மாயமாகி இருந்தது.
இதுகுறித்து அதேபகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி எழில் என்ற எழிலரசன் (30) போலீசுக்கு புகார் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சாந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் எழிலரசன் நகைக்காக மூதாட்டி சாந்தாவை கொலை செய்து விட்டு போலீசாரிடம் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.
போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரங்கநாதன் ஆஜரானார்.
- கடந்த 2021-ம் ஆண்டு கணவரை பிரிந்து நந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
- செல்வதிருமால் நந்தினி வேலை செய்யும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி தருமாபுரியை சேர்ந்தவர் நந்தினி (வயது 30). இவர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் காலாப்பட்டு நடுத்தெருவை சேர்ந்த செல்வதிருமால் (32) என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது. 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
திருமணத்தின் போது வரதட்சணையாக 25 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்களை நந்தினி வீட்டினர் கொடுத்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் செல்வதிருமால் வேலைக்கு செல்லாமல், நந்தினியின் 25 பவுன் நகையை விற்று செலவு செய்து வந்தார். மேலும் கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு, அடிக்கடி நந்தினியை அடித்து கொடுமைப்படுத்தினார். இதற்கு செல்வதிருமால் தாயார் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த 2021-ம் ஆண்டு கணவரை பிரிந்து நந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும், செல்வதிருமால் நந்தினி வேலை செய்யும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த நந்தினி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி வில்லியனுார் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வ திருமால், அவரது தாய் மலர்கொடி ஆகியோர் மீது போலீசார் வரதட்சணை வழக்குப் பதிந்தனர். வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு சார்பில் வக்கீல் கணேஷ் ஞானசம்பந்தம் ஆஜரானார்.
விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய செல்வதிருமாலுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவரது தாய் மலர்கொடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
- நீலகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
- பெயா் மாற்று சான்று வழங்க ஜெயலட்சுமி ரூ.1, 800 லஞ்சம் கேட்டுள்ளாா்
நீலகிரி,
மஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவா் கடந்த 2008ல் புதிதாக வாங்கிய தொழிலாளா் இல்லத்துக்கு பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, பெயா் மாற்று சான்று பெற கீழ்குந்தா நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய ஜெயலட்சுமி என்பவரை அனுகியுள்ளாா்.
பெயா் மாற்று சான்று வழங்க ஜெயலட்சுமி ரூ.1, 800 லஞ்சம் கேட்டுள்ளாா்.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிவகுமாா் புகாா் அளித்தாா். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயலட்சுமியிடம், சிவகுமாா் வழங்கினாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா், லஞ்சம் பெற்ற ஜெயலட்சுமியை பிடித்தனா். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவில் ஜெயலட்சுமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
- கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்துல் ஹக்கீமை போலீசார் கைது செய்தனர்.
- வழக்கை விசாரித்த கோர்ட்டு, அப்துல் ஹக்கீமுக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவர் அங்குள்ள மதரசா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு பட்டாம்பி போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அப்துல் ஹக்கீமுக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
- சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவீந்திரன் நாயருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளியில் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தார்.
இதனை கவனித்த வகுப்பு ஆசிரியை, அந்த மாணவியை அழைத்து விசாரித்தார். அப்போது பள்ளிக்கு வரும் வழியில் முதியவர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும். அதனை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறினார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவம் குறித்து ரகசியமாக விசாரித்தனர்.
இதில் திருவனந்தபுரம் வெள்ளயம்பலம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் நாயர் (வயது 64) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவீந்திரன் நாயரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்தது.
ரவீந்திரன் நாயர் மீதான வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவீந்திரன் நாயருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
- சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது.
- பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, வாகனத்தின் பதிவுச் சான்று ஓராண்டிற்கு ரத்து செய்யப்படும்.
மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுனர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.
மேலும் புதுவையில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு முதல்முறை ரூ.ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.
வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர் உரிமத்தின் ஒரிஜினல் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை சச்சு சாம்சனை கைது செய்தனர்.
- வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சிறயின்கீழ் பகுதியை சேர்ந்தவர் சச்சு சாம்சன் (வயது 34). திருநங்கை.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரெயில் பயணத்தின் போது ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இதையடுத்து சிறுவனை சச்சு சாம்சன் திருவனந்தபுரம் தம்பானூர் பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதன்பின்பு சச்சுசாம்சனை சந்திக்க சிறுவன் மறுத்தான். இதனால் அவர் செல்போன் மூலம் சிறுவனை தன்னுடன் வருமாறு அழைத்தார்.
இதனால் பயந்து போன சிறுவன் இதுபற்றி பெற்றோரிடம் கூறினான். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை சச்சு சாம்சனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.
வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு திருநங்கை சச்சு சாம்சனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
மேலும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டாவிட்டால் கூடுதலாக ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
திருநங்கை ஒருவருக்கு கற்பழிப்பு வழக்கில் கோர்ட்டு தண்டனை விதித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
- நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது.
- அலாவுதீன், வாகித் ஆகியோர் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு முகநூலில் இருந்து துணை நடிகை பெயரில் நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் கனா தர்ஷனின் பெயரில் அவரது புகைப்படத்துடன் கூடிய பேஸ்புக் பக்கத்தில் இருந்து விடுக்கப்பட்ட நட்பு அழைப்பை ஏற்று இளம்பெண்ணும் முகநூல் வழியாக பழக தொடங்கினார்.
அப்போது முகநூல் வழியாக இளம்பெண்ணுக்கு சினிமா, தொலைக்காட்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நாங்கள் நினைத்தால் உங்களையும் பெரிய நடிகையாக்க முடியும் என்று ஆசை வார்த்தைகளை தெரிவித்து உள்ளனர். உங்களது போட்டோக்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் நடிகையாக தேர்வு செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி சினிமா நடிகையாகும் ஆசையில் இளம்பெண் தனது விதவிதமான போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதன்பிறகு இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணுக்கே அனுப்பி 2 பேர் மிரட்டி உள்ளனர். இதன்பிறகே சினிமா நடிகர் பெயரில் தொடங்கப்பட்டது போலி கணக்கு என்பது தெரிய வந்துள்ளது.
நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது. இருவரும் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து ரூ.2 லட்சம் வரை பறித்துள்ளனர். அதன் பின்னரும் தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் பேரில் போலீசார் பணம் பறித்த சகோதரர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அண்ணன்-தம்பி இருவரின் செல்போன் எண்ணை வைத்து அவர்களின் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். இருவரும் ஈரோட்டில் பி.பி.அக்ரகாரம் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்து காஞ்சிபுரத்துக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அலாவுதீன், வாகித் இருவரும் இதுபோன்று பல பெண்களை மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. இதையடுத்து இருவரது செல்போன்கள், அவர்கள் பயன்படுத்திய லேப்-டாப் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும் இருந்தன.
இதனை கைப்பற்றிய போலீசார் ரகசியமாக அப்பெண்களிடமும் புகார்களை வாங்கி மேல் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
- வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார்.
- மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சொந்தமாக செங்கல்சூளை நடத்தி வருகிறார்.
இவருக்கு சொந்தமாக 5 லாரிகள் உள்ளது. அவரிடம் லாரி டிரைவராக இரவிபுதூர்கடையை சேர்ந்த முருகேசன் என்ற முருகன் (வயது29) என்பவர் வேலைபார்த்து வந்தார். வேலைக்கு வரும் போது முருகேசன் தொழிலதிபரின் 14 வயது மகளிடம் பேசுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 11-5-98 அன்று முருகேசன் தொழிலதிபர் வீட்டிற்கு ஒரு காரில் வந்தார். காரில் மேலும் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள் திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்த தொழிலதிபரின் 14 வயது மகளை காரில் ஏற்றி கடத்தினர்.
இதனை கண்டு சிறுமியின் உறவினர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரெயில் மூலம் மும்பை சென்றுள்ளனர்.
அங்கு ஒரு வீட்டில் முருகேசனும், 14 வயது சிறுமியும் கணவன், மனைவி எனகூறி தங்கியுள்ளனர். பின்னர் முருகேசன், 14 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார். அங்கு முருகேசனின் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார். இதற்கிடையே மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.
பின்னர் குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பான வழக்கு குமரி மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ராஜ், சிறுமியை கடத்திய முருகேசனுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
- மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர்.
- ரவுடிகள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை காந்தி வீதியில் பேக்கரி வைத்திருப்பவர் சண்முகசுந்தரம். இவரது பேக்கரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் புதுவை வைத்திகுப்பத்தைச் சேர்ந்த எலி கார்த்திகேயன் (30), வாணரப்பேட்டையை சேர்ந்த மதி மணிகண்டன் (29) ஆகியோர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து எலி கார்த்தி, மதி ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட எலிகார்த்திக், மதி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.
- கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சத்யா நகர் பகுதியில் சாலையை கட க்கும்போது, எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி, கொளத்தூர் சின்னமேட்டூரை சேர்ந்த கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செல்வம் பலத்த காயமடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸ் எஸ்.ஐ. சுதாகரன் வழக்கு பதிவு செய்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்துக்கு காரணமான கருப்பண்ண னுக்கு 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.