என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குபதிவு"

    • கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
    • தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கலையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 80) கூலித் தொழிலாளி, இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் வாரச்சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குச் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த குமார் (வயது40) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அய்யாசாமி மற்றும் குமார் ஆகியோர் சாலையில் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அய்யாசாமி சம்பவ இடத்தில் இறந்து போனார். குமார் லேசான காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் இவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வெண்டலிகோடு சந்திப்பில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கிகொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். 2 நாட்கள் சிகிட்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று மாலை இறந்துவிட்டார்

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியில் வசிப்பவர் பொன்னையன் வயது (65). இவர் மாற்றுதிறனாளி கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

    இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெண்டலிகோடு சந்திப்பில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கிகொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது வலியாற்று முகத்தில் இருந்து குலசேகரம் நோக்கி அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் வந்து கொண்டு இருந்தார். நடந்து சென்ற தொழிலாளி பொன்னை யன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் பொன்னையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியோடு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். 2 நாட்கள் சிகிட்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று மாலை இறந்துவிட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கு தலை காலில் காயம் ஏற்பட்டது. அவர் குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார். இவர் குலசேகரம் அருகே செறுதிக்கோணம் பகுதியை சேர்ந்த ஜெனிஷ் (35) என்பது தெரியவந்தது. பொன்னையனின் மனைவி அமராவதி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார்.
    • முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கும்பகோணம் சுவாமிமலை மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் விஜயக்குமார்(வயது32). கார் டிரைவரான இவர், காரைக்கால் அருகே கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார். மேலகாசாகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையோரம் இருட்டில் நிறுத்தப்பட்ட காரில் தெரியாமல் மோதியதில், தூக்கியெறியப்பட்ட விஜயக்குமார் தலையில் பலத்த காயமுற்றார். உடனே அருகில் இருந்தோர், விஜயக்குமாரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் விஜயக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய போலீசார், சாலையோரம் காரை நிறுத்திய நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி கவரைத் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 45) கூலிதொழி லாளி, இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று சோமண் டார்குடி பகுதியில் உள்ள தடிகார கோவில் அருகே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலைசெய்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    • சதீஷ்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறச்சி:

    ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது27). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார் உள்பட 4 பேர் சேர்ந்து சதீஷ்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார், கருணாநிதி, விஜயகுமார், குமார் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் பூண்டு வியாபாரம் செய்வதற்காக திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • சுயநினைவு இழந்ததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை .

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52). பூண்டு வியாபாரி. இவர் நேற்று மாலை ஏழுமலை தனது மோட்டார் சைக்கிள் பூண்டு வியாபாரம் செய்வதற்காக திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். பெரியசெவலை அருகே செல்லும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏழுமலை பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

    எதிரே மோதிய 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்ததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை .அவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டல்.
    • 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாரிக்குளம் சுடுகாட்டில் சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி அந்த வழியாக சென்ற பொது மக்களை மிரட்டி அச்சுறுத்தி கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாள் காட்டி மிரட்டிய தஞ்சை விளார் ரோடு காயிதே மில்லத் நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 30), மோகன் (42), அண்ணா நகரை சேர்ந்த கதிரவன் (30), மூலை அனுமார் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினகுமார் (40), ரவிச்சந்திரன் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
    • வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.  இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 34 பேர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தனபால் கட்சி நிர்வாகிகளுடன் அம்பேத்கார் நகர் பகுதியை பார்வையிடுவதற்காக வந்தார்

    . அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தற்போது அம்பேத்கார் நகரை பார்வையிட செல்ல வேண்டாம் என்று கூறினர்  அப்போது பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களு டைய கோரிக்கைகளை கேட்ப தற்காக மட்டுமே செல்கி றோம், எங்களை தடுக்க வேண்டாம் என்று கூறி அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்  இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு காவலர்கள் அனுமதி அளித்ததை தொடா்ந்து அவர்கள் அம்பேத்கர் நகர் பகுதிக்குள் சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் தனபால் கூறும்போது, வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். அப்போது காட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
    • இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது.34). இவரது நண்பரான தர்மராஜ் உடன் சேர்ந்து இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் மங்கலம்பேட்டையில் இருந்து கர்ணத்தம் பகுதிக்கு சென்றனர். அப்போது கும்பகோணத்திலிருந்து மங்கலம்பேட்டை பைபாஸ் வழியாக கார் ஒன்று வந்தது. இந்த காரை சுரேஷ் (34) என்பவர் ஓட்டி வந்தார்.  இந்நிலையில் கர்ணத்தம் பைபாஸ் சாலை அருகே கார் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது

    . இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து விஜயகுமாரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்க்ள், விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் விஜயகுமாரின் அண்ணன் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சுரேஷ் மீது மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • விஜயகுமாருக்கும், எட்டிகுழி பகுதி யை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • அந்த பெண்ணை விஜயகுமார் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அடுத்துள்ள எட்டிகுழி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். கட்டிட மேஸ்திரியான இவரும், ஆயாமரத்துப்பட்டியை சேர்ந்த காமாட்சி என்கிற ரேவதி என்பரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இருவரை வீட்டை விட்டு வெளியேறி பழனியில் திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் விஜயகு மாருக்கும், எட்டிகுழி பகுதி யை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை விஜயகுமார் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

    இந்த சம்பவம் பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் விஜயகுமார், கோவி ந்தராஜ், கயலநாதன் மற்றும் எதிர்தரப்பினர் மாயமான இளம் பெண்ணின் உறவினர்களும் மோதி கொண்டு தாக்கியுள்ளனர்.

    இது தொடர்பாக பெரும்பாலை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கட்டிட மேஸ்திரி கோவிந்தராஜ், விஜயகுமார், கயலநாதன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    • பண்ருட்டி அடுத்த பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மேல்மாம்பட்டு அருள்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பாலாஜியை தாக்கியுள்ளனர்.
    • இதனால் காயம் அடைந்த பாலாஜி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 6-ந்தேதி பண்ருட்டியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேல்மாம்பட்டு அருள்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பாலாஜியை தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த பாலாஜி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் உள்ளூர் கோவில் பண்டிகையின் போது பல்வேறு நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
    • இந்த நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் அனுமதி பெறவேண்டும். ஒரு சில இடங்களில் அனு மதி பெறாமல், உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    தமிழகத்தில் உள்ளூர் கோவில் பண்டிகையின் போது பல்வேறு நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படும். கரகாட்டம், நையாண்டி மேளம், ஒயிலாட்டம் மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

    இந்த நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் அனுமதி பெறவேண்டும். ஒரு சில இடங்களில் அனு மதி பெறாமல், உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஒருவந்துார் ஊராட்சி செல்லிபாளை யத்தில், மதுரை வீரன் திருவிழா, நேற்று தொடங்கி 2 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து விழா தொடங்குவதற்கு முதல் நாள், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெறவில்லை என தெரிகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் மோகனுார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்திய கோவில் தர்கர்த்தா மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் இது போன்று அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×