என் மலர்
நீங்கள் தேடியது "வீதி உலா"
- இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது
- திரளான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் இன்று 4-வது நாளான இன்று காலை நாக வாகனத்தில் அண்ணாமலையார் மாடவீதியில் உலா வந்தார்.
இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பகவிருட்சகம், வெள்ளி காமதேனு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளன.
நேற்று 3-ம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடந்தது
- கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 100 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோ றும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை4-30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது.பின்னர் அபிஷேகமும் தீபாராதனையும்நடந்தது.
மாலை6-30மணிக்கு சாயரட்சை தீபாராதனையும்பின்னர்அம்மன்பலவண்ண மலர்க ளால்அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அம்மன் வாக னம் வரும்போது அங்கு உள்ள முத்தாரம்மன் கோவிலிலும் வாகன த்தில் ்எழுந்தருளிஇருந்தபகவதி அம்மனுக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடந்தது.
வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சார்த்தி வழி பட்டனர்அதன்பிறகு10-30 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 100 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.10 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் ராமச்சந்திரன் திருக்கார்த்திகை மண்டகப்படி கட்டளை தாரர்கள் பாலன், மோகன், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் அஷ்டமி சப்பர விழா நடந்தது.
- சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் அஷ்டமி சப்பரத்தை முன்னிட்டு இன்று சொக்கநாதர்-மீனாட்சி, பிரியாவிடைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் விதமாக அஷ்டமி சப்பர வீதி உலா நடந்தது.
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான சொக்க நாதர்-பிரியாவிடை, மீனாட்சி மற்றும் விநாய கருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் அஷ்டமி சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அஷ்டமி சப்பரத் தின்போது பூஜிக்கப்பட்ட அரிசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கோவில் சிறப்பு பூஜைகளை சங்கர நாராயண பட்டர் செய்திருந்தார். விழாவிற் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷினி, தக்கார் சக்கரை அம்மாள் செய்திருந்தனர். விழா கட்டளைதாரர் மாரியப்பன் குடும்பத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- அஷ்டமியை முன்னிட்டு ராமேசுவரத்தில் வீதி உலா வந்த சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு படி அளக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- பகல் 12 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கோவிலுக்கு சென்று அடைந்தவுடன் கோவில் திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடை பெற்றது.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அதன்படி இன்று (16-ந் தேதி) அஷ்டமி பூப்பிரத ஷணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் நடந்தன. 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து திருப்பள்ளி, கால சாந்தி பூஜைகள் நடைபெற்றது.
அதன்பின் பக்தர்களுக்கு படியளக்கும் நிகர்ச்சி நடைபெற்றது. காலை 7 மணிக்கு ராமநாதசாமி பிரியாவிடையுடனும், பர்வதவர்த்தினி அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழி நெடுகிலும் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அஷ்டமி வீதி உலாவை முன்னிட்டு கோவிலில் இன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடை சாத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கோவிலுக்கு சென்று அடைந்தவுடன் கோவில் திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடை பெற்றது.
காலையில் நடை சாத்தப்பட்டிருந்ததால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் ரத வீதி, அக்னிதீர்த்த கடற்கரையில் காத்திருந்தனர்.
- கமலஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா 23-ந் தேதி தொடங்குகிறது.
- கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது.
மதுரை
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
முதல் நாள் காலை 6 மணிக்கு விஷ்வக்சேன பூஜை, கலச ஆராதனை, ஹோமம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது. 12.30 மணிக்கு சமாராதனையும், மாலை 6.30 மணிக்கு ஆஞ்சநேயர் வீதி உலாவும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.
இதேபோல் 2-வது நாள் இரவு 7 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. இதனை தொடர்ந்து 12 ராசிகளுக்கான பலன் மற்றும் பரிகாரங்கள் கூறப்படுகிறது. 3-வது நாளில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டியம், கோலாட்டம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
- 5-ந்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
நாகர்கோவில்:
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. 3-ம் திருவிழாவன்று இரவு 10.30 மணிக்கு கோட் டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமா ரசுவாமி ஆகியோர் தமது தாய், தந்தையருக்கு நடக் கும் திருவிழாவில் பங்கேற்க வந்த 'மக்கள்மார் சந்திப்பு' நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முன்தினம் (1-ந்தேதி) காலை கருட தரிசனம் நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு ரிஷப கருட அன்னவாகனத் தில் சுவாமி திருவீதி உலா, பஞ்சமூர்த்தி தரிசனம் நடந் தது. பின்னர் தாணுமாலய சுவாமி, அம்பாள், பெரு மாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீர மார்த்தாண்ஆயிரக்கணக்கான பக்தர் கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் கோவில் முன் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளினர்.
அதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில் சுவாமிகளையும், கோவில் ராஜகோபுரத்தையும் கருடன் சுற்றி வந்த 'கருட தரிசனம்' நடந்தது. இதைக்கண்ட ஆயிரக்கணக்கான பக்தர் கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை உஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நடந்தது.
6-ம் திருவிழாவான நேற்று காலை பூங்கோ யில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, இரவு இந்திர வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. 7ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி, அம் பாள், பெருமாள் அலங்கார கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. மாலை 4.30 மணிக்கு நடராஜ சுவா மிக்கு திருச்சாந்து சாற்று தல், 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு மண்டகப்படி, இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வதம் வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நடக்கிறது.
8-ம் திருவிழாவான நாளை (4-ந்தேதி) காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா, காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு நடராஜ பெருமாளுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அலங்கார மண்டபத்தில் அஷ்டாபிஷேகம், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா நடக்கிறது.
9-ம் திருவிழாவான 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடன ராக திருவீதி உலா நடக் கிறது. காலை 8 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயக ரும், சுவாமி தேரில் சுவாமி மற்றும் அம்பாளும், அம்மன் தேரில் அம்பாளும் அலங் காரகோலத்தில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மண் டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தருளல், இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத் தில் சுவாமி திருவீதி உலா, 12 மணிக்கு தாய், தந்தையரின் விழாவில் பங்கெடுக்க வந்த கோட்டாறு வலம்புரி விநாய கர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமார சுவாமி ஆகியோர் விடை பெறும் சப்தாவர்ண காட்சி நடக்கிறது.
10-ம் நாள் நிறைவு விழா வில் காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம், அஷ்டா பிஷேகம், மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதி உலா, இரவு 9 மணிக்கு ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- திருப்பரங்குன்றத்தில் நடராஜர்-சிவகாமி அம்மன் வீதி உலா நடந்தது.
- கடந்த 28-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மூலஸ்தானத்தில் சத்யகிரீஸ்வரர் அருள் பாலிகிறார். இதேபோல கோவிலில் நடராஜர் சிவகாமி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 28-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நிறைவு நாளான இன்று காலையில் மூலவர் நடராஜருக்கு சாம்பிராணி தைலம் சாத்துப்படி ஆனது.
தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பூச்சப்பரத்தில் திருப்பரங்குன்றத்தில் முக்கிய வீதிகள் கிரிவலப் பாதையை வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- திருவாதவூரில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர்-சிவகாமி அம்பாள் வீதி உலா வந்தனர்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி கோவில் உள்ளது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர்-சிவகாமி அம்மையாருடன் மாணிக்கவாசகர் தரிசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இங்கு வருடந்தோறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இன்று ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடராஜர்-சிவகாமி அம்மாள், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று மாலை மாணிக்கவாசகர் சட்டத்தேரில் வீதி உலா வந்தார்.
- பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு.
- செல்வ முருகன் சாமி வீதி உலா நடைபெற்றது.
திருவோணம்:
திருவோணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று திருவோணம் சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செல்வ முருகனுக்கு பால்குடம் காவடிகள் எடுத்தனர் பிறகு செல்வ முருகனுக்கு பாலாபிஷேகம் பன்னீர் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் அனுபவிக்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,
பிறகு திருவோணம் கடைவீதி முழுவதிலும் ஸ்ரீ செல்வ முருகன் சாமி வீதி உலாநடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாட்டு நகரத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், வீதியுலாவும் நடைபெற்றது.
- பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், 16 அடிநீள அலகை வாயில் குத்தியும் கோவிலை வந்தடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் கீழவீதியில் புகழ்பெற்ற மகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.
நேற்று மாலை தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆனைக்கோவில் குளத்திலிருந்து கரகம் புறப்பாடு நடைபெற்றது.
காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் அலகு காவடி எடுத்தும் 16 அடிநீள அலகை வாயில் குத்தியும், மஞ்சள் உடை உடுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.
கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
பின்னர் இந்நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்துகொன்டனர்.
தீமிதி விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து இருந்தனர்.
- காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டீஸ்வரம்:
கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற வைணவ தலங்களில் ஒன்றான சுதர்சனவல்லி தாயார், விஜயவல்லி தாயார் சமேத
சக்கரபாணி கோவிலில் மாசிமக பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கொத்தனார் சாரதிசுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
விழாவையொட்டி இன்று சிறப்பு மங்கள இன்னிசை முழங்க, வேத பாராயணம் ஒலிக்க சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரராஜா.. சக்கரராஜா.. பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனை தொடர்ந்து, அம்புஜவல்லிதாயார் சமேத ஆதிவராஹபெருமாள், ருக்மணி தாயார், சத்யபாமா தாயார், செங்கமல தாயார் சமேத ராஜகோபாலசாமி (பெரிய கடைத்தெரு) ஆகிய கோவில்களில் ரதாரோஹணமும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள், சுதர்சன பக்தர்கள் செய்திருந்தனர்.
கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் கிழக்கு,மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் அழகேசன், பேபி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- திருவரங்குளத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை:
புதக்கோட்டை திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதையடுத்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் சிம்ம வாகனம், காமதேனு வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.