என் மலர்
நீங்கள் தேடியது "slug 223470"
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக விற்றது
- தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 111 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த கடைகளில் ரூ.2 கோடி முதல் ரூ.2½ கோடி வரை தினமும் மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை அதிகமாக நடைபெறும்.
தீபாவளி பண்டி கையையொட்டி கடந்த 3 நாட்களாக டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுபான பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.பீர் வகைகள் மதுபான வகைகள் அதிக அளவு விற்பனையாகி உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகளவு மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன. 23-ந் தேதி ரூ.5 கோடியே 50 லட்சத்திற்கு மது பானங்கள் விற்று தீர்ந்து உள்ளது. கடந்த 22-ந் தேதி ரூ.4 கோடியே 75 லட்சத்திற்கும்,
24-ந்தேதி ரூ.3 கோடியே 75 லட்சத்திற்கு என மொத்தம் 3 நாட்களில் ரூ.14 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
இந்த ஆண்டு விற்ப னையை பொருத்தமட்டில் கடந்த ஆண்டு விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 225 மதுபாட்டில்கள் பறிமுதல்
- காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.
நாகர்கோவில்:
காந்தி ஜெயந்தியொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.இதையடுத்து அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.இதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி நாகர்கோவில் தக்கலை குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 23 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 225 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஆசாரிப்பள்ளம் போலீ சார் வசந்தம் நகர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு அனுமதியின்றி மது விற்ற செல்வக்குமார் என்பவரை கைது செய்தனர் .அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களும் ரூ. 4400 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கோட்டார் போலீசார் வட்டவிளை பகுதியில் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த கண்ணன் என்பவரையும் தாமஸ் என்பவரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பார்வதிபுரம் பகுதியில் மதுவிற்ற காந்திமதி நாதன் என்பவரை போலீசார் கைது செய்தவுடன் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் தக்கலை மார்த்தாண்டம் இரணியல் மற்றும் மதுவிலக்கு போலீஸ் நிலையங்களிலும் மது விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி யாரேனும் மதுவை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனரா? என்று கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் எஸ்.கைகாட்டியை சேர்ந்த நந்தகுமார்(43) என்பதும், மது விற்பதற்காக அங்கு நின்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் சுமார் 12 மது பாட்டில்கள் இருந்ததும். அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனி மாவட்டம் பல்வேறு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
- மதுபாட்டில் மற்றும் போதை பாக்குகள் விற்றவர்களை கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை டாஸ்மாக் கடை அருகே கடமலைக்குண்டு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மதுவிற்ற செல்வம்(42) என்பவரை கைது செய்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பழனிசெட்டிபட்டி போலீசார் முல்லைநகர் பகுதியில் ரோந்து சென்றபோது புகையிலை, போதை பாக்கு விற்ற முனியம்மாள்(42) என்பவரை கைது செய்தனர். மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றபோது பூதிப்புரம் பெட்டிக்கடையில் மதுவிற்ற பொன்னாங்கன்(56) என்பவரை கைது செய்து 11 மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கண்டமனூர் போலீசார் டி.மீனாட்சிபுரம் மேற்குதெரு பகுதியில் ரோந்து சென்றபோது மாயழகன்(51) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கூடலூர் வடக்கு போலீசார் ரோந்து சென்றபோது கே.எம்.பட்டி விளக்கு அருகே மதுவிற்ற பரமசிவம்(52) என்பவரை கைது செய்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
போடி நகர் போலீசார் தேவர் காலனியில் ரோந்து சென்றபோது மதுவிற்ற நாகராஜ்(48) என்பவரை கைது செய்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ராயப்பன்பட்டி போலீசார் ேராந்து சென்றபோது சின்னஓவுலாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே மதுவிற்ற முருகன்(51) என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- இருதயத்தை பாதுகாக்க மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும் என எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
- மாரடைப்பை தடுக்க 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.
ராமநாதபுரம்
உலக இருதய தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் தொடங்கிய ஊர்வலத்தை எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் தொடங்கி வைத்தார்.
பேராசிரியர்கள் ராமதாஸ், லீனா, சரவணன் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். இருதயத்தின்அவசியம், அதனை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளுடன் வழிவிடுமுருகன் கோவில், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக வந்தனர்.டாக்டர் ஹனுமந்தராவ் பேசியதாவது:-
இருதய நோய் பாதிப்பால் ஆண்டு தோறும் அதிகளவில் இறக்கின்றனர். இருதயத்தை பாதுகாக்க மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும். மாரடைப்பை தடுக்க 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். இயற்கை உணவு வகைகளை சாப்பிட வேண்டும். தினமும் உடற்ப யிற்சி, யோகா, மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 150 சாராய பாக்கெட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியில் கர்நாடக மாநில மது பாக்கெட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்த பழ வியாபாரி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர் அப்போது பையனப்பள்ளி பகுதியில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக நாட்டறம்பள்ளி போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அந்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது பையனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சாமு இவரது மகன் கமல் (வயது 38 ) என்பவர் அதே பகுதியில் பழம் வியாபாரம் செய்து வருகிறார் இவர் தனது வீட்டின் பின்புறம் கர்நாடக மாநில 150 மது பாக்கெட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இவரிடமிருந்து கர்நாடக மாநில 150 மது பாக்கெட்கள் பறிமுதல் செய்தனர்.
- சோழசிராமணி அருகே மகன் மது அருந்தி வந்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
- மது அருந்தக்கூடாது என்று தந்தை பலமுறை எடுத்து கூறியும் மகன் கேட்கவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பா ளையம், அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54) கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் தினேஷ் மது அருந்திவிட்டு வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மகனிடம் மது அருந்தக்கூடாது என அவரது தந்தை மாரிமுத்து பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரிமுத்து இரவு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கொட்டகையில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டுக்கொண்டார். தொங்கிய அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.
பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் 800 மது பாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
- போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை,
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் மதுபானங்கள் கடத்தப்படு வதாக போலீசுக்கு தகவல் வந்தது. மீனாட்சி அம்மன் கோவில் சரக உதவி கமிஷனர் காமாட்சி, தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் மாடசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கிய ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (வயது 32) என்பது தெரிய வந்தது.
அவரிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 865 மது பாட்டில்கள், ரூ.2930 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகரில் சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சரண் அடைந்த தந்தை வாக்குமூலம்
- சொத்து விவகாரத்தில் மோதல்
கன்னியாகுமரி:
திங்கள்சந்தை அருகே உள்ள சரல்விளையைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டி யன் (வயது 80). இவருக்கு 5 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.
இவரது மகன்களில் ஒரு வரான நாகராஜன் (40) கேரளாவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான நாகராஜன், அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து உள்ளார்.
நேற்றும் அவர் தகராறில் ஈடுபடவே ஆத்திரம் அடைந்த சவுந்தரபாண்டியன் கோடா ரியால் நாகராஜன் கழுத்தில் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவர் போலீசில் சரண் அடைந்தார். இந்தச் சம்பவம் திங்கள் சந்தை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெற்ற மகனையே கொலை செய்த சவுந்தர பாண்டியன் இரணியல் போலீசில் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் திருமண மாகாமல் இருந்த நிலையில், எனது பெயரில் இருந்த 8 செண்ட் நிலத்தை அவன் பெயருக்கு மாற்றிக் கொடுத்தேன். ஆனால் அவன் அடிக்கடி மது குடித்து விட்டு ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்தான். இதனால் அவன் மீது நம்பிக்கை இழந்தேன்.
இதனால் 8 செண்ட் நிலத்தை மீண்டும் எனது பெயருக்கே மாற்ற திட்ட மிட்டேன். இதுபற்றி நாகராஜ னிடம் பேசிய போது அவன் மறுப்பு தெரிவித்தான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நேற்று வீட்டுக்கு வந்த அவனிடம் மீண்டும் சொத்து பிரச்சினை குறித்து பேசி னேன். ஆனால் அவன் மது போதையில் தகாத வார்த்தைகள் பேசினான். பின்னர் அவன் வீட்டிற்குள் சென்று படுத்துவிட்டான். ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
எனவே வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துச் சென்று, மகன் என்றும் பாராமல் நாகராஜன் கழுத்தில் வெட்டிக் கொன்றேன். பின்னர் போலீசில் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- கரம்பவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தார்.
- அவரிடம் இருந்து 42 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
நாகர்கோவில்:
தென்தாமரை குளம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஹரிகுமரன் நேற்று கரம்பவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தார். இதில் அவர் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து 42 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர் பொற்றையடி பகுதியை சேர்ந்த நடேசன்(வயது 80) என்பது தெரியவந்தது.
- மதுபானம்-கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டார்.
- தேங்கிப்பட்டி மாரிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் நேற்று இரவு ரோந்து சென்ற னர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பலை பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் அவர்களை சோதனை செய்து பார்த்தனர். இதில் 2 பேரிடமும் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் பிடிபட்ட நபர்கள் ஆரப்பாளையம் முருகன் மகன் விஸ்வநாதன் (வயது 19), புட்டுத்தோப்பு, செக்கடி தெரு தங்கராமன் மகன் கிஷோர் (19) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குமாரம் வினோத், ஆனந்த் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் சோதனையில் நாகமலை புதுக்கோட்டை பள்ளிக்கூடம் அருகே மோட்டார் சைக்கிளில் குட்டி சாக்குடன் வந்த 2 பேர் சிக்கினர்.
பிடிபட்ட நபர்களிடம் சோதனை செய்தபோது கர்நாடக மதுபாட்டில்கள் 96 இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மேலக்குயில்குடி, ஆதிசிவன் நகர் சிவபாண்டி (27), கிழக்கு தெரு பசும்பொன் (27) என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தேங்கிப்பட்டி மாரிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.
- நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
- மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு அருகில் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை மது அருந்திய 2 வாலிபர்களிடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியே வந்த அவர்களிடையே கை கலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரு வாலிபரின் சட்டை கிழிந்தது. இதனால் அவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.
அவருக்கு பின்னால் கை கலப்பு செய்த வாலிபரும் சென்றார். இருவரும் அதிக போதையில் இருந்ததால்மறுநாள் காலை வருமாறு போலீசார் கூறினார். சட்டை கிழிந்த வாலிபர் போலீசார் சொல்லுக்கு கட்டுப்பட்டு திரும்பி சென்று விட்டார். உடன் வந்த வாலிபர் காவல் நிலையத்தில் அமர்ந்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஓரிடத்தில் நிற்காமல் போலீஸ் நிலையத்திற்குள்ளேயே ரகளையில் ஈடுப்பட்டார்.
அவரை கட்டுப்படுத்திய போலீசாரையும் வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசாரின் பிடியில் கட்டுப்படாத அந்த வாலிபர் தொடர்ந்து அங்குமிங்கும் திமிறி கொண்டிருந்தார். விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல் அருகே மிடாலம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதற்கிடையே தகவலறிந்த வாலிபரின் பெற்றோர் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.ஆனால் அந்த வாலிபர் அவரது தந்தையையும் அவதூறாக பேசினார்.
இதனால் செய்வதறியாத தந்தை வாலிபரை கட்டுப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றார். இதனால் தந்தை - மகனிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக வாலிபரின் நண்பர்களின் உதவியால் பெற்றோர் வாலிபரை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.