என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி மாயம்"

    • தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி கிராமம், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் 17 வயது மகள் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைகாததால் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரி வாகனத்தில் சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
    • சுப்ரமணி மகன் திலகராஜ். இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள செம்ம–நத்தம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் திலகராஜ். இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தனது மகள் ரஞ்சனி (வயது 20), சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரி வாகனத்தில் சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டூடியோ நடத்தி வரும் கார்த்தி என்பவர், எனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்றி–ருக்கலாம் என தெரிவித்து உள்ளார்.

    இந்த புகாரின் பேரில், ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர். 

    • மைதிலி (வயது 18). இம்மாணவி , நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார்.
    • இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை, குள்ளப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (வயது 18). இம்மாணவி , நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறியவர், களியக்காவிளையில் உள்ள ஒரு பேக்கரியில் ‘கூகுள் பே’ செய்து பணம் பெற்றார் என தெரிய வந்தது.
    • மாணவி மும்பை சென்றது ஏன்? அவர் தானாக சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    நித்திரவிளை:

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கல்லூரியில் முதுகலை பயின்று வந்தார்.

    அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை உறவினருடன், பொழியூர் கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் உறவினரின் பார்வையில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்.

    மாணவியின் கைப்பை மற்றும் காலணிகள் கடற்கரையிலேயே கிடந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் பொழியூர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் வீட்டில் சோதனை செய்தபோது, தற்கொலை செய்து கொள்ள மாணவி முடிவெடுத்ததாக எழுதப்பட்ட கடிதம் கிடைத்தது.

    இதனால் மாணவி தற்கொலை செய்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மரைன் போலீசாரும் கடற்கரை பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது, சந்தேகம் அளிக்கும் வகையில் பர்தா அணிந்த ஒருவர் ஆட்டோவில் ஏறிச் செல்வது தெரிய வந்தது. அது மாணவியாக இருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆட்டோ டிரைவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறியவர், களியக்காவிளையில் உள்ள ஒரு பேக்கரியில் 'கூகுள் பே' செய்து பணம் பெற்றார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 'கூகுள் பே' பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து, போலீசார் விசாரணை தொடங்கினர்.

    இதில் தற்போது அந்த செல்போன் சிக்னல் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மாணவி மும்பையில் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து பொழியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிகுமார் தலைமையில் போலீசார் மும்பை சென்றுள்ளனர்.

    மாணவி மும்பை சென்றது ஏன்? அவர் தானாக சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது மாணவி, கல்லூரிக்கு வருகை குறைவு காரணமாக தேர்வு எழுதவில்லை என்பதும் அதனால் அவர் ஊரை விட்டு சென்றிருக்கலாம் என்ற தகவலும் கிடைத்து உள்ளது.

    இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை சென்ற போலீசார், மாணவியுடன் திரும்பினால் தான், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    • மரக்காணம் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயமானார்.
    • கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராம த்தைச் சேர்ந்தவர் குண சேகரன். இவரது மகள் ஆர்த்தி (வயது 18). இவர் புதுச்சேரி மாநிலம் வில்லி யனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். கல்லூரிக்கு காலை 7 மணிக்கு புறப்ப டும் இவர் மாலை 5.30 மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவார்.

    இந்நிலையில் கடந்த 3-ந் தேதி கல்லூரிக்கு சென்ற ஆர்த்தி இரவு 7 மணியாகியும் வீடு திரும்ப வில்லை. கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை. இதை யடுத்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே சின்னத்தேவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் மகள் விஷ்வஸ்ரீ (வயது 16). இவர் மந்திசுனை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • இவர் நேற்று 6-ந்தேதி வீட்டை விட்டு மாயமானார்.
    • எனது மகளை கடிபாளையம் பகுதியை சேர்ந்த குமரேஷ் (20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி சிப்பால்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி. இவர் நேற்று 6-ந்தேதி வீட்டை விட்டு மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் எனது மகளை கடிபாளையம் பகுதியை சேர்ந்த குமரேஷ் (20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • கடந்த 20 -ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜாத்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். வழக்கம் போல் கடந்த 20 -ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து பெற்றோர்கள் ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    • சந்தியா நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
    • சந்தியாவின் தாயார் உமாதேவி அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கடலூர்:

    சிதம்பரத்தை அடுத்த வரகூர்பேட்டை ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவரது மகள் சந்தியா (வயது 19). நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல நேற்றிரவு வீட்டில் தூங்கியவர், காலையில் காணவில்லை. இது குறித்து சந்தியாவின் தாயார் உமாதேவி அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • பால் வாங்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி இவருடைய மகள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த போது யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார் இதனைகண்ட அப்பா மகளை கண்டித்துள்ளார்.

    மேலும் இளம்பெண்ணிற்கு தாய்மாமனுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காலையில் பால் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற அந்த பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்திலுள்ள உறவினர் வீடுகளிலும் தேடி கிடைக்காததால் இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    இதே போல் சின்னப்பள்ளி குப்பம் கிராமத்தை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி அகரம் கூட்ரோட்டில் இருக்கும் அரசு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என மாணவியின் தாய் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதன் சம்பந்தமாக வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • தீபா கல்லூரிக்கு செல்வதாக அவரது உறவினரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்
    • அவர் வீட்டுக்கு வந்து அக்கம் பக்கம் மற்றும் உறவின ர்களிடம் விசாரித்தும், தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை

    ஈரோடு,

    அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ராதாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராதாமணி கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது பெரிய மகள் சத்தியாவுக்கு திருமணமாகி விட்டது.

    இவர்களது இளைய மகள் தீபா (19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ராதா மணி ஆதிரெட்டியூரில் உள்ள அவரது அண்ண னுக்கு உடல்நிலை சரியி ல்லாததால் அவருடன் இருந்து அவரை பராமரித்து வருகிறார். வீட்டில் ராதாமணியின் இளைய மகள் தீபா மட்டும் தனியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தீபா கல்லூரிக்கு செல்வதாக அவரது உறவினரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் தீபா வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ராதாமணிக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து அக்கம் பக்கம் மற்றும் உறவின ர்களிடம் விசாரித்தும், தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் அவர் கல்லூரிக்கு சென்று விசாரித்தார். ஆனால் கல்லூரி விடுமுறை என தெரிய வந்தது.

    இது குறித்து ராதாமணி வெள்ளி திருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தீபா குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காயத்ரி (வயது 20). திருச்செங்கோ ட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், சி.ஏ. படித்து வருகிறார்.
    • இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரி சென்ற அவர் மறுபடியும் மாலை வீடு திரும்பவில்லை.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் . இவரது மகள் காயத்ரி (வயது 20). திருச்செங்கோ ட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், சி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரி சென்ற அவர் மறுபடியும் மாலை வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×