என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223615"
- கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று காலை 6 மணி அளவில் கார்த்திகேயன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்தார். அகரம்சேரி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததது. இதில், கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்ட பின்பு சாதாரண பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் நர்சுகள் தையல் போட்டுள்ளனர். மாலை 4 மணி ஆகியும் டாக்டர் வராததால் கார்த்திகேயன் வலியால் துடித்துள்ளார். முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் உறவினர்கள் கார்த்திகேயனை, நேற்று மாலை அரியூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கார்த்திகேயனுக்கு மீண்டும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கார்த்திகேயன் தலையில் சிக்கிக்கொண்ட நட்டு அகற்றப்பட்டது.
இதனை அறிந்த கார்த்திகேயனின் உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு டாக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி கூறியதாவது:-
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். இதற்காக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு அனைத்திற்கும் விளக்கம் தெரியும். குற்றம் நிரூபனமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் ஓட்டுபுற தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 51), பெயிண்டர்.
இவர் நேற்று வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், சுதர்சன், மதுபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றியதாகவும், அப்போது அங்கு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருடன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர், பஸ் நிலையத்தில் நிலைதடுமாறி விழுந்தபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.
இதனை தொடர்ந்து விபத்து தொடர்பாக அருமனையை சேர்ந்த பஸ் டிரைவர் ஸ்ரீரெங்கநாதன் (50) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார்.
- அரசு பஸ்சை டிரைவர் கட்டி பிடித்து அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது57). இவர் பண்ருட்டி அரசு பணிமனையில் உள்ள பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக பண்ருட்டியில் உள்ள பணிமனையில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வந்தது. ஆனால் டிரைவர் அய்யப்பனுக்கு பணிமனை அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அடிக்கடி ஆப்சென்ட் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதி சம்பளம் பெற முடியாமல் அய்யப்பன் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் 6 நாள் முழுவதும் வேலைக்கு வந்தும் வருகை பதிவேட்டில் 6 நாளும் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அய்யப்பன் பணிக்கு வந்தார். அப்போது வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கிளை மேலாளரிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் கேட்ட போது அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த அய்யப்பன் திடீரென தான் ஓட்டும் பஸ்சை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ் டிரைவருக்கு வருகை பதிவேட்டில ஆப்சென்ட் போடப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து ஊழியர்களின் நலன் காக்க வேண்டும் என அய்யப்பன் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு பஸ்சை டிரைவர் கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கார் மோதி டிரைவர் பலியானார்.
- வடுகபட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது36). இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள ஒரு பீரோ கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்தார். நேற்று இரவு வேலை முடித்து விட்டு வாடிப்பட்டிக்கு வரும் டவுன் பஸ்சில் பயணம் செய்து வடுகபட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- அரசு பஸ்சை தொட்டு கும்பிட்டு கண்ணீர் மல்க டிரைவர் விடைபெற்றார்.
- டிரைவர் வேலையால் சமூகத்தில் மதிப்பு கிடைத்தது
மதுரை
மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. அரசு பஸ் டிரைவரான இவர், திருப்பரங்குன்றம் போக்கு வரத்து பணிமனையில் 30 வருடங்களாக பணியாற்றிய முத்துப்பாண்டி நேற்று ஓய்வு பெற்றார்.
முன்னதாக பயணிகளை ஏற்றிக் கொண்டு இறுதியாக பயணம் மேற்கொண்ட முத்துப்பாண்டி பின்னர் பணிமனையில் தான் ஓட்டிவந்த அரசு பஸ்சை நிறுத்தினார்.
பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் நெகிழ்ச்சி யுடன் காணப்பட்ட முத்துப்பாண்டி நீண்ட நாட்களாக தான் இயக்கி வந்த அரசு பஸ்சை வாஞ்சையுடன் பார்த்து கண் கலங்கினார். தொடர்ந்து பஸ் என்ஜின், படிக்கட்டுகளை தொட்டு கும்பிட்டார்.
பின்னர் பஸ்சின் முன்புறம் வந்த முத்துப்பாண்டி இரு கரங்களால் கும்பிட்டு பஸ்சை வணங்கி கண்ணீர் மல்க விடை பெற்றார். அப்போது அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை தேற்றி வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முத்துப் பாண்டி கூறுகையில், எனது பெற்றோருக்கு அடுத்தபடி யாக டிரைவர் தொழிலை நேசித்து 30 வருடங்களாக பயணிகளை பாது காப்பாக ஏற்றிக் கொண்டு உரிய இடங்க ளுக்கு அழைத்துச் சென்றேன். டிரைவர் வேலையால் சமூகத்தில் மதிப்பு கிடைத்தது என கூறினார்.
- ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது54), ஆட்டோ டிரைவர். இவர் அண்ணா பஸ் நிலையம் அருகில் நின்றபோது சிறுவன் உள்பட 2பேர் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ரவிக்குமாரை, 2 பேரும் தாக்கினர்.
இது குறித்து ரவிக்குமார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தாக்கிய சக்கிமங்கலம் இளமனூரை சேர்ந்த வினோத்குமார் (32) என்பவரையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.
- எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.
- வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே முத்தூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் கௌதம் (25) என்பவர் வேன் டிரைவராக பணியாற்றி வருகின்றார். கௌதம் நேற்று இரவு முத்தூரிலிருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.
அந்த வழியாக வந்தவர்கள்கௌதமை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பார்த்தபோது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 3 பேரும் வேனில் வேதாரண்யம் நோக்கி சென்றனர்.
- லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 39).
அதே பகுதியை சேர்ந்த பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேரும் லோடு வேனில் வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வேனை செந்தில் ஓட்டினார்.
அப்போது வேதாரண்யம் சாலையில் காமேஸ்வரம் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் செந்தில், பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பிரபு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கிழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வினோத் கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
- சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ இறங்கியது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது28). ஆட்டோ டிரைவர். இவர் காசிதர்மத்தில் இருந்து கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆட்டோ கவிழ்ந்து விபத்து
மேட்டுப்பள்ளி வாசல் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ இறங்கியது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த வினோத் சாலையில் தவறி விழுந்தார். அப்போது ஆட்டோ கவிழ்ந்து அவர் மீது விழுந்தது. இதில் வினோத் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
- சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
மதுரை
மதுரை அய்யப்பநாயக் கன்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43), அரசு பஸ் டிரைவர். மகாலிங்கம் சித்திரை திருவிழாவை யொட்டி பணியில் இருந்தார். அப்போது திண்டுக்கல் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சை வழிமறித்தனர்.
இதனை மகாலிங்கம் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த 2 ேபரும் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக மகாலிங்கம் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவியின் கையை பிடித்து இழுத்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் இசக்கிராஜா(வயது26), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பானுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பானுபிரியா, குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து இசக்கிராஜா, விருதுநகரை சேர்ந்த பாண்டியம்மாள்(20) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் புதுப்பாளையம் மாரி யம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதனை காண்பதற்காக இசக்கிராஜா, அவரது மனைவி பாண்டியம்மாள் மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மங்காபுரம் தண்ணீர் தொட்டி அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி(25) என்பவர் பாண்டியம்மாள் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். இதனை இசக்கிராஜா தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி பைப்பை எடுத்து இசக்கிராஜாவை சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி இசக்கிராஜா ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை தேடி வருகிறார்.
- மதுரை அருகே டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
- இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.
மதுரை
மதுரை முரட்டன்பத்திரியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 45). கால் டாக்சி டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக கரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு தரப்பினரும் சமரசம் ஆகிவிட்டனர். சம்பவத்தன்று மாலை செல்லப்பாண்டி புது ஜெயில் ரோட்டில் சென்றார். அங்கு வந்த 2 பேர் அவரிடம் வழிமறித்து தகராறு செய்தனர்.
இதை செல்லப்பாண்டி தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த இருவரும் அவரை கத்தியால் குத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுஜெயில் ரோட்டை சேர்ந்த சிவகுமார் மகன் கட்டாரி கார்த்திக் (23), ராம்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்