என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223728"

    • தக்கலை போலீசில் புகார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள மிருந்தவிளை பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி ஐடா (வயது 48).

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜ், இறந்து விட்டார். நேற்று ஐடா, தனது மகனுடன் வீட்டில் இருந்தார்.

    இரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, யாரோ மர்ம நபர் பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள்ளே புகுந்து உள்ளார். அவர் ஐடாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐடா கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர், 2பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஒடிவிட்டான்.

    இதுகுறித்து தக்கலை போலீசில், ஐடா புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • நகையின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
    • புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறியை அடுத்த கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் ஹைஜின்ஜோஸ் (வயது 40). இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுஜா (38), நுள்ளிவிளையில் வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டின் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    அதிகாலை சுமார் 1.45 மணி அளவில் இந்த வீட்டு மாடியின் கதவை உடைத்து 2 பேர் வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர். அதில் ஒருவன் சுஜாவின் வாயை பொத்தி சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளான்.

    அப்போது மற்றொருவன் சுஜா கழுத்தில் கிடந்த சுமார் 11 பவுன் தங்கத்தாலி சங்கிலியை பறித்துள்ளான். பின்னர் 2 பேரும் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து இரணியல் போலீசில் சுஜா புகார் செய்தார். அதில் நகையின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 மகன்களும் வீட்டை பூட்டி விட்டு கோபிக்கு தேர்வு எழுத சென்று விட்டனர்.
    • பீரோவில் இருந்த 5¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

    குன்னத்தூர் :

    குன்னத்தூர் அருகே சேரன் நகர் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சண்முக ஜீவா. தனியார் கல்லூரியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுசீலா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது 2 மகன்களும் வீட்டை பூட்டி விட்டு கோபிக்கு தேர்வு எழுத சென்று விட்டனர். தேர்வு எழுதிவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து குன்னதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    • மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.
    • வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் (டி.என்.யு.எச்.டி.பி.,) வீடு பெற, பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக 10 சதவீத தொகை செலுத்த வேண்டும்.பயனாளிகள் பங்களிப்பு தொகையை வங்கி கடனாக பெற்று செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.

    கனரா, இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., - எச்.டி.எப்.சி., வங்கிகள் சார்பில் தனித்தனியே முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இந்தியன் வங்கி சார்பில் கடன் முகாம் நடத்தப்பட்டது.வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.2 நாள் முகாமில் தகுதியுள்ள 78 பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான முதல்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பயனாளிகள் 437 பேருக்கு மொத்தம் 2.90 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு கடன் வழங்கப்படும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

    • புறம்போக்கு இடத்தில் சுமார் 23 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.
    • பயனாளிகள் வீட்டிற்கே சென்று இலவச பட்டா வழங்கல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே கீழதிருப்பூந்துருத்தி ஊராட்சி மணக்கொல்லை பகுதியில் ரசுப் புறம்போக்கு இடத்தில் சுமார் 23 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.

    நீண்ட காலமாக அவர்கள் வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி வந்த நிலையில் நேற்று ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன் முன்னிலையில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாவட்ட வருவாய் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் ஆகியோர் 23 பயனாளிகள் வீட்டிற்கே சென்று இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் பழனியப்பன், ஒன்றியச் செயலாளர் கௌதமன், திருப்பூந்துருத்தி பேரூராட்சித்துணைத் தலைவர் அகமதுமைதீன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டததில் 2 வீடுகளில் கொள்ளை நடந்தது.
    • ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வீரார்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். சம்பவத்தன்று பூட்டியிருந்த இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் செல்போன், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் காரியாபட்டி ராயல்கார்டனைச் சேர்ந்த ஜெயபாலன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் தெற்குரத வீதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (52). கணவரை இழந்த இவர் இட்லி மாவு வியாபாரம் செய்து தனது மகன் சுரேஷ், மகள் பிரியாவை வளர்த்தார். இருவருக்கும் திருமணமாகி கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். சுரேஷ் கடந்த சில மாதங்களாக சம்பள பணத்தை சரியாக கொடுக்கவில்லை. இதனை அவரது தாய் முருகேஸ்வரி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் தாயை சரமாரியாக அடித்து உதைத்தார். தடுக்க வந்த சகோதரி பிரியாவையும் அவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.

    • அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
    • பல்வேறு இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அவினாசி :

    திருப்பூர்மாவட்டம் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அவினாசியை அடுத்து சேவூர் பாலிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி- கலா தம்பதியினர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இன்றுஅதிகாலை நேரத்தில் திடீரென அடுத்தடுத்து 2 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் பழனிசாமி மற்றும் கலா ஆகியோர் லேசான காயமடைந்தனர் .கலாவின் தாயார் மாகாளி(வயது 70) மீது சுவர் இடிந்து விழுந்ததால் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சேவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    • மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், ரசம் சாதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • மாணவர்களுக்கு சிலர் வயிற்றுப்போக்கும், மயக்கமும் அடைந்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே உள்ள அவினாசி ரோட்டில் பூண்டி ரிங் ரோட்டில் ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த சேவாலயத்தில் ஆதரவற்ற மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மாணவர்கள் மற்றும் சிலர் தங்கி வருகிறார்கள். இதில் மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், ரசம் சாதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்டு மாணவர்களுக்கு ஒருவர் பின் ஒருவராக வாந்தி ஏற்பட்டுள்ளது. சிலர் வயிற்றுப்போக்கும், மயக்கமும் அடைந்து ள்ளனர். இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் இதில் 10-ம் வகுப்பு மாணவன் மாதேஷ் (15), 6-ம் வகுப்பு மாணவன் பாபு (13), 4-ம் வகுப்பு மாணவன் ஆதிஷ் (8) ஆகிய 3 பேர் பலியாகினர். மேலும், வாந்தி, மயக்கத்துடன் வெள்ளகோவிலை சேர்ந்த தரணீஸ் (11), திருப்பூரை சேர்ந்த கவுதம் (17), நெல்லையை சேர்ந்த சபரீஸ் (10), திருப்பூரை சேர்ந்த குணா (9), திருப்பூரை சேர்ந்த சதீஸ் (8), பொங்கலூரை சேர்ந்த ரித்தீஸ் (7), சின்னாண்டிபாளையத்தை சேர்ந்த அர்சத் (8), மதுரையை சேர்ந்த பிரகாஷ் (11), திருப்பூரை சேர்ந்த கவின்குமார் (13), ஸ்ரீகாந்த் (12), மணிகண்டன் (15) மற்றும் காப்பக காவலாளி ஜெயராமன் (63) ஆகிய 12 பேர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூரண சிகிச்சை பெற்ற நிலையில் 6 பேர் வீடு செல்ல விருப்பம் தெரிவித்ததன் காரணமாக 6 பேர் வீடு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது என டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

    திருப்பூர் அவிநாசி ரோடு திருமுருகன் பூண்டியில் உள்ள காப்பகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அருகில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித் ஆகியோர் உள்ளனர்.

    • செப்டம்பர் 21 ந்தேதி அன்று வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
    • வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைபுதூர் ரேசன் கடை வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (46) இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21 ந்தேதி அன்று வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1/4 பவுன் தங்க கம்மல் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் ஆறுமுகம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆலாங்கிர் மகன் முகமது (சுபியர்27) என்பவரை ஆறுமுகம் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜார்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கிராம சபை கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா அப்பகுதியில் மயானம் அருகில் வழங்கியதாக கூறப்படுகிறது.
    • பண வசதி இல்லாத காரணத்தால் அரசு தொகுப்பு வீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில் தற்பொழுது வீடு ஓதுக்கிய நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சி சிக்கனுத்து பகுதியில் வினிதா , ராஜேஸ்வரி, துளசிமணி ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கிராம சபை கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா அப்பகுதியில் மயானம் அருகில் வழங்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் மேற்கண்டவர்களுக்கு பண வசதி இல்லாத காரணத்தால் அரசு தொகுப்பு வீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில் தற்பொழுது வீடு ஓதுக்கிய நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தி.மு. க. வினர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பணிகள் செய்ய விடாமல் தடுத்தி தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் . ஆகையால் அரசு வழங்கிய வீட்டு மனை பட்டாவில் தொகுப்பு வீடு கட்டுவதற்கு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் தற்கொலை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.
    • திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலத்தை சேர்ந்தவர் மாதவன்.

    சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.

    திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் ரொக்கம், 2 தங்க மோதிரம், வெள்ளி பொருட்கள் மாயமாகியது.

    மர்ம நபர்கள் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது குறித்து அவர் வலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • இது குறித்து கைலாசம் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே வெள்ளக்குடியை சேர்ந்தவர் கைலாசம். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இந்த நிலையில் கைலாசம் தனது பேரக்குழந்தை சர்வேஷை விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் சேர்க்க உள்ளதால் அதற்கு முன்பாக கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மனைவி வளர்மதி, மருமகள் பிரவீனா ஆகியோருடன் சென்றுள்ளார்.

    சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் வீட்டில் உள்ள ஒரு மர பீரோ மற்றும் இரண்டு ஸ்டீல் பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் நகைகள் திருடு போயிருந்தன.

    இது குறித்து கைலாசம் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×