என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தேகம்"

    • அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.
    • 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்து செம்பனார்கோயில் காவல் நிலைய எல்லைக்குள் தனிப்படை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, ரமேஷ் மற்றும் போலீசார் நரசிம்ம பாரதி. அசோக் குமார், செந்தில், கார்த்திக், விஜயன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்ப டையில் விசாரித்தனர். விசாரணையில் அவர் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் மேலபாதியை தெற்கு தெருவை சேர்ந்த மனோகர் (வயது 40) என்பதும் அவர் மயிலாடுதுறையில் 2 மோட்டார் சைக்களிலும், மணல்மேட்டில் ஒரு மோட்டார் சைக்கிள், செம்பனார் கோயிலில் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள் திருடியது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தமிழ்ச்செல்வன் கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணி செய்து வருகிறார்.
    • தாயார் இன்பவள்ளி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    கடலூர்:

    சிதம்பரத்தை அடுத்த குமராட்சி கோப்பாடியில் வசித்து வந்தவர் இன்பவள்ளி (வயது 38). இவர் சத்துணவு கூடத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (45) என்பவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழ்ச்செல்வன் கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி கோயம்புத்தூரில் வசிக்கிறார். இளைய மகள் இலக்கியா தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். மகன் 10-ம் வகுப்பு முடித்து விட்டு கம்பி பிட்டர் வேலை செய்கிறார்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்ச்செல்வன் கிராமத்திற்கு வந்தார். அது முதல் இங்கேயே தங்கியுள்ளார். இதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. குறிப்பாக இன்பவள்ளியின் நடத்தையில் தமிழ்ச்செல்வனுக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நர்சிங் கல்லூரிக்கு சென்ற இலக்கியா, கல்லூரி முடித்து நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது அவரது தாயார் இன்பவள்ளி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இலக்கியா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குமராட்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்ட இன்பவள்ளியின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக புகாரின் பேரில் தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    நான் கேரளாவில் பணி செய்து வந்தேன். பொங்கலை முன்னிட்டு வீட்டிற்கு வந்தேன். அதிலிருந்து எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. எனது மனைவி இன்பவள்ளியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூறினேன். வேலை இருக்கிறது என்று வெளியில் சென்று விடுவார். இதையடுத்து நானே சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் எனது மனைவி, மாலையில் வீட்டிற்கு வருவார். உடனே வேலை இருக்கிறது என்று கூறிவிட்டு வெளியே சென்று விடுவார். இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வருவார். நான் ஏதாவது கேட்டால் என்னிடம் சண்டையிடுவாள்.

    சத்துணவு கூடத்தை பொருத்தவரையில் மாணவர்களுக்கு சமையல் செய்து முடித்து விட்டு மதியமே வீட்டிற்கு வந்து விடலாம். ஆனால், இன்பவள்ளி வீட்டிற்கு வருவதே இல்லை. இது சம்பந்தமாக எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இந்நிலையில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரை வாங்கிக் கொண்டு நேற்று மதியம் வீட்டிற்கு வந்தேன். அப்போது வீட்டில் இருந்த இன்பவள்ளி, என்னை பார்த்தவுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். அவரை தடுத்த நான் எங்கு செல்கிறாய் என்று கேட்டேன். வேலை இருக்கிறது. வெளியே செல்கிறேன் என்று கூறினார். வெளியே சென்றால் கத்தியால் வெட்டி விடுவேன் என்று நான் மிரட்டினேன். அதனை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல இன்பவள்ளி முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் கத்தியால் இன்பவள்ளியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு தமிழ்ச்செல்வன் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    • போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அப்போது அவ்வழியாக வந்த 3 நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனா ம்பட்டினம் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் ஆகியோர் கே.கே நகர் பகுதியில் இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் 3 நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என்பதனை முகம் அடையாளம் கண்டறியும் போலீஸ் ஆப் மூலம் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

    அப்போது இந்த நபர்கள் போலீசார் புகைப்படம் எடுக்க விடாமல் தடுத்து பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் வண்ணாரபாளையம் சேர்ந்தவர்கள் முகிலன், முரளி, முத்தையன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

    • தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்
    • தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவரது மகன் தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள வாலிபால் விளையாடும் மைதானத்தில் உள்ள வாலிபால் போஸ்டரில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியடி உயிரிழந்த நிலையில் இருந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரியதர்ஷினி விசாரணை செய்தார். அப்போது தனது மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உடலை எடுக்க விடாமல் முற்றுகை யிட்டனர். இவரை அடித்து கொலை செய்து யாரோ தூக்கில் மாட்டி இருக்கி றார்கள் எனவும், இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு இணங்கிய பொதுமக்கள் உடலை எடுக்க விட்டனர். உடனடியாக உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.

    • சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் புகார்
    • திருமணம் நடந்து 4 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோட்டை அடுத்த தாழத்துவிளையை சேர்ந்தவர் ராஜேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (வயது 37).

    இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணி அளவில் அப்பகுதியில் உள்ள காடேற்றி குளத்தில் சித்ரா பிணமாக கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சித்ரா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் கமலம், இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன், இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார்

    விசாரணை நடத்தினர். ஏற்கனவே ராஜேஷ் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக சித்ரா மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதாக தெரிகிறது.

    ராஜேஷ், சித்ரா திருமணம் நடந்து 4 ஆண்டுகளே ஆவதால், தக்கலை பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் சித்ரா எப்படி இறந்தார் என்பது தெரியவரும். திருமணம் நடந்து 4 ஆண்டுகளுக்குள் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விஜயா (வயது 20) இவருக்கும் முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றார்
    • அவரது கணவர் முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மோ. வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 20) இவருக்கும் தியாகதுருகம் அருகே பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆன 3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா மோ. வன்னஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்   இதனை யடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு விஜயாவை பலமுறை முருகன் அழைத்துள்ளார். அதற்கு விஜயா முருகனுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் இதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயாவை மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு முருகன் அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் நேற்று மாலை கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து மோ. வன்னஞ்சூர் கிராமத்திற்கு தனியார் மினி பஸ்சில் விஜயா சென்றார்.

    அப்போது மழை பெய்ததால் பஸ்சிலிருந்து இறங்கி விஜயா அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜயா துடித்துடித்து உயிரிழந்தார். மேலும் விஜயாவை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற முருகனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலனையும் முருகன் கத்தியால் குத்தினார். பின்னர் முருகனை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கொலை செய்ததை முருகன் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியதோடு விசாரிக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்திய முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் தாய் செல்வி புகார் கொடுத்தார்.
    • விக்னேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் மகன் விக்னேஷ் (வயது 19) கூலி வேலை செய்துவந்தார். கடந்த 21-ந் தேதி வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அருகிலுள்ள இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடி எங்கேயும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில்விக்னேஷ் தாய் செல்வி புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன விக்னேசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பொட்டியம் சுடுகாட்டில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது இவர் காணாமல் போன விக்னேஷ் என்பது தெரியவந்தது . இது குறித்து கொலையா? அல்லது விக்னேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அவ்வகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    • சிலம்பரசனுக்கும் ரோஜாவிற்கும் கடந்த மே மாதம் 4-ந்தேதி திருமணமானது.
    • தகராறில் சிலம்பரசன் வீட்டிலிருந்த பிளேடை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சிலம்பரசன் (வயது 35). துபாயில் பணி செய்து திரும்பியவர். இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் அரசூரை சேர்ந்த கந்தசாமி மகள் ரோஜாவிற்கும் கடந்த மே மாதம் 4-ந்தேதி திருமணமானது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வந்தது. இந்நிலையில் நேற்று சிலம்பரசனுக்கும், ரோஜா விற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் சிலம்பரசன் வீட்டிலிருந்த பிளேடை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்தார். ரோஜாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

    அப்போது ரத்தவெள்ளத்தில் ரோஜா இறந்து கிடந்தார். அங்கிருந்து வெளியேறிய சிலம்பரசன் கிள்ளை போலீஸ் நிலையம் சென்று, நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். தொடர்ந்து கீழ் அனுகம்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்ற கிள்ளை போலீசார் ரோஜாவின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். திருமணமாகி 2 மாதமே ஆனதால், சிதம்பரம் சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.

    இதையடுத்து சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த ரோஜாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ரோஜாவின் கணவர் சிலம்பரசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ரோஜாவிற்கும், சிலம்பரசனுக்கும் திருமணமாகி 2 மாதம் ஆகிறது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ரோஜா 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. திருமணம் ஆவதற்கு முன்பே ரோஜா கருவுற்றுள்ளார். இது குறித்து ரோஜாவிடம் சிலம்பரசன் கேட்டுள்ளார்.

    இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வந்து ள்ளது. திருமணமாவதற்கு முன்பே கருவுற்றதை கூறாமல் மறைத்ததால் சில ம்பரசன் ஆத்திரமடைந்தார். ரோஜாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சிலம்ப ரசன், அவரது கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிலம்பரசனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தகராறு
    • கொலை செய்தபின் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்

    கேரள மாநிலம், திருச்சூர் விய்யூர் அருகே மனைவியுடன் வசித்து வந்தவர் உன்னி கிருஷ்ணன் (வயது 56). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 8-ந்தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு 46 வயதான தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மனைவியுடன் சண்டைபோட்டு வந்த அவர், திடீரென கொடூரமாக தாக்கி மனைவியை கொலை செய்துள்ளார். கொலை செய்ததும், தப்பி ஓட நினைக்கால் நேராக காவல் நிலையம் சென்ற சரணடைந்துள்ளார்.

    மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடித்தனர்.

    • திண்டிவனம் அருகே ஓட்டலில் சிலிண்டர், இரும்பு பைப்புகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாரம் லேபை அருகே திண்டிவனம் ஜக்கா பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (வயது 36) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்பக்கத்தில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 2 சிலிண்டர்கள், இரும்பு பைப்புகளை திருடி சென்றனர். இது குறித்து அசோக் கொடுத்த புகாரின் பெயரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

    அப்போது சாரம் லேபை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சாரம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 54), கலாநிதி (35) ஆகியோர் என்பதும், இருவரும் ஓட்டலில் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த சிலிண்டர் மற்றும் இரும்பு பைப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தாய் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு
    • மற்றொரு நபருக்கு மெசேஜ் அனுப்பியதால், வெட்டிக்கொலை செய்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் சந்தேகத்தின் உச்சிக்கே சென்ற 17 வயது மகன், தனது தாயை கோடறியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    17 வயது மகனுக்கு, அவனுடைய தாயாரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 35 வயதான தனது தாயாருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது தாயாருடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவனது தாயார், அவருடைய செல்போனில் இருந்து யாருக்கோ மெசேஜ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே, தனது தாயாரின் மீது சந்தேகப்பார்வை வைத்துள்ள நிலையில், தன்முன்னே மெசேஜ் அனுப்பியது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    கோபம் அதிகரிக்க அருகில் இருந்த கோடறியால், தாய் என்று கூட பார்க்காமல் வெட்டி சாய்த்தார். படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்கடர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெறும்போது அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அருகில் இல்லை.

    இந்திய தண்டனை சட்டம் 302-வது (கொலை) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர் செல்வகுமார் (42), டாக்டரான இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தகம் நடத்தி வந்தார்.
    • தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர் செல்வகுமார் (42), டாக்டரான இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தகம் நடத்தி வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

    நேற்று பிற்பகல் ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர் வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்நது செல்வகுமாரின் தந்தை வையாபுரி மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது செல்வ குமாரின் மனைவி கடந்த இரண்டரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்ததும், தற்போது அவர் வேலூரில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருவதும், மகள் சென்னையில் படித்து வரும் நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனியாக இருந்த செல்வகுமார் மன வேதனையில் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் தெரிய வந்தது.  

    ×