என் மலர்
நீங்கள் தேடியது "வக்கீல்"
- 30 நாட்களுக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
- சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரி:
இரணியல் போலீஸ் நிலையம், நீதிமன்றம், அரசு வங்கி, பள்ளி க்கூடம், மருத்துவமனை என்று பொது மக்கள் வந்து செல்லும் வழியில் கழிவு நீர் தேங்கி உள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அதனை அகற்ற கோரி இரணியல் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி மற்றும் போலீசார், இரணியல் பஞ்சாயத்து செயல் அலுவலர் லெட்சுமி ஆகியோர் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் 30 நாட்களுக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறப்பட்டது. சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- நாகர்கோவில் நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி நம்பிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் வக்கீல்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
கன்னியாகுமரி :
நாகர்கோவில் வக்கீல் சங்கத்தில் வக்கீல்களுக்கான சட்டப் பயிற்சி முகாம் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க தலைவர் அசோக் பத்மராஜ் தலைமை தாங்கினார். நாகர்கோவில் நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி நம்பிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த வக்கீல்களுக்கான சட்டப் பயிற்சி வகுப்பை நிறைவேற்று மனுக்கள் சம்பந்தமாக என்ற தலைப்பில் நாகர்கோவில் முதலாவது சார்பு நீதிபதி முருகன் அனைத்து வக்கீல்க ளும் தெளிவு பெறும் வண்ணம் விளக்கினார்.
இதில் மூத்த வக்கீல்கள் ரெத்தினசுவாமி, தனிஸ்லாஸ், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் வக்கீல்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- பெற்றோர் வீட்டில் தங்கி பி.எஸ்.சி படித்து வருகிறார்.
- அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கோவை,
கோவை ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் அக்ஷய் (வயது 27). வக்கீல். இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த அனுதர்ஷினி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அனுதர்ஷினி தனது பெற்றோர் வீட்டில் தங்கி பி.எஸ்.சி படித்து வருகிறார். இந்நிலையில், அக்ஷயுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. செல்போனில் பேசும்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோன்று சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அக்ஷய் விரக்தியடைந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (31). மாநகராட்சி ஒப்பந்த பணியாளர். இவர் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 வழக்குகள் இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் ரத்தினபுரியில் பிரியாணி ஓட்டல் நடத்தி வந்தார். அதில் போதிய வருமானமில்லாமல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் மணிகண்டன் விரக்தி அடைந்த அவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே விஷம் குடித்து மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பார்வதி நாதன் தூத்துக்குடியில் ஜூனியர் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
- லோடு ஆட்டோ பார்வதிநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் பார்வதி நாதன்(வயது 25). இவர் நெல்லை சட்டக் கல்லூரியில் படித்து முடித்து தூத்துக்குடியில் ஜூனியர் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த பார்வதிநாதனை அவரது அப்பா அய்யப்பன் வீட்டிற்கு சாப்பிட வருமாறு செல்போனில் அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்த பார்வதிநாதன் ஸ்பிக்நகர் அத்திமரப்பட்டி சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த பார்வதிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்- இன்ஸ்பெக்டர் சேட்டை நாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமாரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
- பாஸ்கர் என்பவரை மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் அருகே இவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தொடர்ந்து ஆறுமுகநேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை போலீசார் மும்பையில் வைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாதுரைச் சாமிபுரத்தை சேர்ந்த தினேஷ் (29), குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூட்டாம்புளியை சேர்ந்த நாமோ நாராயணன், கோரம்பள்ளத்தை சேர்ந்த லெட்சுமணபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கொலையில் தொடர்புடைய சாத்தான்குளத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.
- ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
- பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் அமிர்நிஷா (21). இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தங்களது வக்கீல் அலுவலகத்தில் இருந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர்.அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த வக்கீல் ரகுமான்கான் (26) என்பவர் ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். மேலும் தடுக்க வந்த ஜமீலாபானுவுக்கும் தலை, கையில் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அங்கிருந்து ரகுமான்கான் தப்பினார்.
இதில் படுகாயம் அடைந்த தாய்-மகள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அமிர்நிஷா சேலம் கட்டக்கல்லூரியில் படிக்க சென்றபோது, ரகுமான் கான் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரகுமான்கானை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரகுமான் கான் கோபத்தில் தாய்-மகளை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ரகுமான் கானை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகுமான் கான் திருப்பூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு பார்கவுன்சில் அவரை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. தாய்-மகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ரகுமான் கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அத்துமீறி வக்கீல் அலுவலகத்துக்குள் நுழைந்த குற்–றத்–துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், பெண்களை தொல்லை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வழக்கில் உதவுவதற்காக பெண் வக்கீலகள் சத்யா, பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மாதத்துக்குள் சாட்சி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுபோல் கொலைமுயற்சி வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்குவது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.
- ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
- கருப்பு ‘கோட்’ மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்.
சென்னை :
கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், மார்ச் முதல் ஜூலை மாதம் வரை வக்கீல்கள் கருப்பு 'கவுன்' அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் பார் அசோசியேசன் என்ற வக்கீல் சங்கம் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை கடிதம் வழங்கும். அந்த வகையில், அண்மையில், ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த மனுவை அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "கோடைகாலம் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வருகிற ஜூன் 30-ந்தேதி வரை 'கவுன்' அணிவதில் இருந்து வக்கீல்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம் கருப்பு 'கோட்' மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்'' என்று கூறியுள்ளார்.
- மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர்.
- இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ் (56). இவரது மனைவி சாந்தி(52). இவர்கள் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பொதிகை நகரில், ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக ஷோ ரூம்கள் அமைக்க ஏஜென்டுகள் தேவை என்றும் கடந்த 2020-ம் ஆண்டு விளம்பரம் செய்தனர்.
இதனை நம்பி ஜவுளி விற்பனை மையம் அதைப்பதற்காக திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த வக்கீல் அரசபிரபாகரன் இவர்களை அணுகி உள்ளார். ஒரு கிளைக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தால், தேவைப்படும் இடத்தில் கடையின் உள்அலங்காரம் செய்து கொடுப்பதுடன், தங்கள் நிறுவனத்தின் தரமான வேட்டி, சட்டை, பனியன், ஜட்டி மற்றும் மாஸ்க் உள்ளிட்ட தயாரிப்புகளை யாரும் தர முடியாத அளவில் குறைந்த விலைக்கு விற்பனைக்காக தருவதாகவும் கூறி உள்ளனர்.
இதனை நம்பி அரசபிரபாகரன் மற்றும் அவரது 4 நண்பர்கள் சேர்ந்து 5 கிளைகள் அமைப்பதற்காக ரூ. 61 லட்சத்தை மணிராஜ்-சாந்தியிடம் கொடுத்துள்ளனர்.
மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர். அதன் பின் ஷோரூம் அமைத்துதராமல் காலம் தாழ்த்தி வந்ததால் அரசபிரபாகரன் பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மட்டும் திருப்பி தந்துள்ளனர். மீதி தொகையாக ரூ. 59 லட்சத்து 25 ஆயிரம் தராமல் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனால் அரசபிரபாகரன் ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார், ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த மணிராஜ் மற்றும் சாந்தியை நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்களின் மகள் மற்றும் மருமகனை தேடி வருகின்றனர். மணிராஜ் மற்றும் சாந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வக்கீலை மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
- இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது22). வக்கீலான இவர் சம்பவத்தன்று மேலேந்தல் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி தினேஷின் மோட்டார்சைக்கிள், செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் நாராயணன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் பறிப்பில் ஈடுபட்ட வீரசோழனை சேர்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி:
புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.
நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.
இந்த ரெயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனே கோட்டை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.
பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ரெயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டவர்.
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சங்கருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
- தலைமறைவாக உள்ள சரண்யாவின் கணவா் சங்கரை போலீசார் தேடி வருகின்றனா்.
அவிநாசி:
அவிநாசி செம்பியநல்லூா் ஊராட்சி முத்தம்மாள் நகரை சோ்ந்த லட்சுமணன் மகள் சரண்யா (வயது 25), வக்கீல். இவருக்கும் திருப்பூரை சோ்ந்த கட்டடப் பொறியாளா் சங்கருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து பெற்றோா் வீட்டில் வசித்து வந்த சரண்யா, கடந்த ஜூலை மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும், சப்-கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.இதற்கிடையில், இவ்வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவிநாசி சிஐடியூ., கட்டட கட்டுமான தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய சரண்யாவின் மாமனாரான திருப்பூா் கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மணி (65), இவரது மகள் கோபிசெட்டிபாளையம் அங்காளம்மன் நகரைச் சோ்ந்த லாவண்யா (26), இவரது கணவா் மெளலி சங்கா்(28) ஆகியோரை போலீசார் இரவு கைது செய்தனா்.
தலைமறைவாக உள்ள சரண்யாவின் கணவா் சங்கரை போலீசார் தேடி வருகின்றனா்.
- இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
- மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்
திருச்சி
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 28). இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் குட்செட் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் அவரது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரவிக்குமார் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் வக்கீலை கத்தியால் குத்தியவர் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் (25)என்பது தெரியவந்தது பின்னர் அவரை போலீசார் கைது செய்து கைது ஜெயிலில் அடைத்தனர்.