என் மலர்
நீங்கள் தேடியது "பெண் மாயம்"
- கடந்த 21-ந் தேதி வீட்டில் இருவருக்கும் மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டது.
- இதனால் மதியம் 2 மணி அளவில் வீட்டிலிருந்த சக்தி திடீரென காணவில்லை.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள கல்லடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது42). இவரது மனைவி சக்தி (39). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 21-ந் தேதி வீட்டில் இருவருக்கும் மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் மதியம் 2 மணி அளவில் வீட்டிலிருந்த சக்தி திடீரென காணவில்லை.
இதனால் முருகன் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து முருகன் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு எண்ணில் இருந்த மிஸ்டு கால் வந்தது.
- காரில் ஏறி சென்றது தெரிந்தது.
கோவை:
திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசு பணியாளர் நகரை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 40). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ(34). இவரும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் சுபஸ்ரீ, திடீரென மாயமானார். இதையடுத்து பழனிகுமார் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மனைவி பூண்டி அருகே உள்ள யோகா மையத்தில், 7 நாள் பயிற்சி வகுப்பிற்காக கடந்த, 11-ந் தேதி சென்றார். சம்பவத்தன்று பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர், மனைவியை அழைத்துச் செல்வதற்காக நான் வந்தேன்.
அப்போது வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் நான் யோகா மையத்தின் உள்ளே சென்று விசாரித்தேன். அங்கு பயிற்சி முடித்து, அனைவரும் கிளம்பி விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி காமிராவை ஆய்வு செய்தேன். அதில் பதிவான காட்சிகளை பார்த்த போது, பயிற்சி முடித்த பின்னர், சுபஸ்ரீ வெளியே வந்து ஒரு காரில் ஏறி சென்றது தெரிந்தது.
சம்பந்தப்பட்ட கார் டிரைவரிடம் விசாரித்த போது, சுபஸ்ரீயை செம்மேட்டில் இறக்கி விட்டதாக தெரிவித்தார்.அப்போது எனக்கு ஒரு எண்ணில் இருந்த மிஸ்டு கால் வந்தது.
அந்த எண்ணுக்கு திருப்பி அழைத்த போது மறுமுனையில் பேசியவர் ஒரு பெண் தனது கணவரிடம் பேச வேண்டும் என எனது போனை வாங்கி அழைத்ததாக கூறினார். எப்படியும் அவர் வீடு திரும்பி விடுவார் என பார்த்தேன். ஆனால் அவர் விடு திரும்பவில்லை. எனவே எனது, மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுபஸ்ரீயை தேடி வருகின்றனர்.
- கவுசல்யா தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
- கடந்த 20-ந் தேதி, வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
புதுச்சத்திரம் அருகே உள்ள தீர்த்தனகிரியை சேர்ந்தவர் சங்கர். அவரது மனைவி விஜயா. இவர்களது மகள் கவுசல்யா, (வயது 24) இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவக்கும், கடந்த3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மணிகண்டன் திருப்பூரில் வேலை செய்து வருவதால், கவுசல்யா தாய் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த 20-ந் தேதி, வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஜயாஅளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- தேன்மொழி கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
கடலூர்:
கோண்டூர் ராதா கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தேன் மொழியை அவரது மகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. தேன்மொழியை கண்டு பிடிக்கும்படி அவரது மகள் கடலூர் புதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
- பல்வேறு இடங்களில் தேடியும் இளம் பெண் சுக்கிளாரா மற்றும் குழந்தை பவியா கிடைக்கவில்லையாம்.
- பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேல்(வயது31). டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆனது. சுக்கிளாரா(வயது26) என்ற மனைவியும், பவியா(வயது3) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுக்கிளாரா தனது குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு கடைவீதிக்கு சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் இளம்பெண் சுக்கிளாரா மற்றும் குழந்தை பவியா கிடைக்கவில்லையாம்.
இதனால் காணாமல் போன தனது மனைவி மற்றும் குழந்தையை கண்டுபிடித்து தருமாறு டிரைவர் தமிழ்வேல் நேற்று பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காதல் திருமணம் செய்த இளம் பெண் திடீர் மாயமானார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுகந்தி மீரியம்(வயது 30 ). இவர் ராஜேசை கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு செல்வதற்காக திருச்சிக்கு வந்துள்ளனர். மத்திய பஸ்நிலையத்தில் சுகந்தி மீரியம் கழிவறைக்குச் சென்றார்.பின்னர் திரும்பி வரவில்லை இது குறித்து அவரது கணவர் ராஜேஷ் கன்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை.
- பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.
சென்னை:
பெரிய கோவிலம்பாக்கம், 1-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஜோதி (வயது 32).
கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை. இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதியை தேடி வருகிறார்கள்.
- தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
- டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரியவந்தது,
கடலூா:
பண்ருட்டி அருகே தோ ப்புக்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் ஆஷா (எ) சுபா (வயது 23). இவர்அ தேபகுதியிலுள்ள தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில்தேடினர்.எங்கும் கிடைக்கவில்லை
. அதே பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரது தந்தை சின்னையன் முத்தாண்டி க்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காடா ம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
- மைதிலி தேவி தான் வீட்டை விட்டு செல்வ தாக வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல் அனுப்பினார்.
- இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்த சீனாபுரம், வீரணம்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி. இவரது மனைவி மைதிலி தேவி (வயது 39). இவர்கள் சொந்த மாக வீரணம் பாளையம் பகுதியில் தறி போட்டு தொழில் செய்து வருகின்ற னர்.
இவர்களுக்கு வெற்றி என்ற மகனும், நிவேந்திரா என்ற மகளும் உள்ளனர். வெற்றி கருக்குபாளையம் பகுதியில் உள்ள தனது தாத்தா செல்வராஜ் வீட்டில் தங்கி துடுப்பதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரு கிறார்.
இந்த நிலையில் வெற்றியின் செல்போனுக்கு அவரது தாய் மைதிலி தேவி தான் வீட்டை விட்டு செல்வ தாக வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல் அனுப்பினார். இதை யடுத்து வெற்றி மற்றும் அவரது தாத்தா செல்வராஜ் ஆகியோர் உடனடியாக வீரணம் பாளையம் வந்து பார்த்தனர்.
அங்கு மைதிலி தேவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை அக்கம், பக்கம் மற்றும் உற வினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான மைதிலி தேவியை தேடி வருகிறார்கள்.
- புன்னைநகரில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் முதியோர் இல்லம் திரும்பவில்லை.
- விண்ணரசி (39) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் தேடி வருகின்றனர்
கன்னியாகுமரி :
களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சிலுவை ஸ்த்திரி (வயது 34). இவர் பார்வதி புரம் அருகே கிறிஸ்டோபர் காலனியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று புன்னைநகரில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் முதியோர் இல்லம் திரும்பவில்லை.
இது குறித்து அவரது சகோதரி விண்ணரசி (39) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் தேடி வருகின்றனர்.குளச்சல் அருகே பத்தறை காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (53).இவரது மகள் ஷைனி (23).பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த ஷைனி திடீரென மாயமா னார். உடனே வீட்டினர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து ராஜ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷைனியை தேடி வருகின்றனர்.
- சொப்னா 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
- 2 குழந்தையுடன் தாய் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி மதினா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். இவர் பொன்னேரி பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சொப்னா இவரது மகள்கள் மோனிகா (8), கன்னிகா (6). சொப்னா செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதை கணவர் பரசுராமன் கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த சொப்னா 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே மேல்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது மனைவி அங்கம்மாள் (28) மற்றும் மகள் (8) ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கினார். மீண்டும் அதிகாலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.