என் மலர்
நீங்கள் தேடியது "பணம் திருட்டு"
- சம்பவத்தன்று மர்ம நபர்கள் சிலர் கோவில் பூட்டு உடைத்து அங்கு இருந்த உண்டியலை வெளியே எடுத்து சென்றனர்.
- இதை தொடர்ந்து அவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மல்லிபாளை யம் பகுதியில் அன்னமார் கோவில் உள்ளது. இந்த கோவில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் திறக்கப்பட்டு சிறப்பு பூைஜகள் நடப்பது வழக்கம்.
அதே போல் கடந்த அமா வாசை அன்று கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று மர்ம நபர்கள் சிலர் கோவில் பூட்டு உடைத்து அங்கு இருந்த உண்டியலை வெளி யே எடுத்து சென்ற னர். தொடர்ந்து அவர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.1500 பணத்தை திருடி விட்டு உண்டியலை அங்கேயே ேபாட்டு விட்டு சென்று விட்டனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கோவில் பூசாரி தெய்வசிகாமணி (55) என்பவர் கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து அவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீஸ் போல் நடித்து செல்போன் கடையில் வாலிபர் பணத்தை திருடிச்சென்றார்.
- ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்தது.
மதுரை
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன் (வயது 43). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் மொபைல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தபோது ஒரு வாலிபர் வந்தார். அவர் "தான் மதுரை மத்திய ஜெயிலில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதாகவும், எனக்கு செல்போன் கவர் வேண்டும்" என்று தோரணையாக கேட்டார்.
உடனே பாவா பக்ருதீன் செல்போன் கவர் எடுப்பதற்காக கடையில் இருந்து வெளியே சென்றார். அப்போது கடையில் யாரும் இல்லாததை பயன்படுத்தி அந்த வாலிபர் மேஜையில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றார்.சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த பாவா பக்ருதீன் அந்த வாலிபர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது அவர் மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப் பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் கடைக்கு வந்த வாலிபர் ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. அவர் யார்? என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கியில் விவசாயி வாங்கிய ரூ.1½ லட்சம் கடன் பணம் திருடு போனது.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள குன்னூர் புதூர் ரோட்டை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 62). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு வங்கியில் வேளாண் கடன் கிடைத்தது. இந்த பணத்தை எடுப்பதற்காக கருப்பசாமி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றார்.
வங்கி கொடுத்த கடன் பணத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். பணத்தை மோட்டார் சைக்கிள் லாக்கரில் வைத்திருந்தார். மார்க்கெட் அருகே சென்ற போது கருப்பசாமி அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு நகைக்கடைக்கு சென்றார்.
அங்கு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் லாக்கரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், பான் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் ஆவணங்கள் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கருப்பசாமி கொடுத்தபுகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கருப்பசாமி நகைக்கடையில் இருந்தபோது மர்மநபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- ரூ.5 ஆயிரம் அபேஸ்
- கதவை உடைத்து துணிகரம்
திருப்பத்தூர்:
கந்திலியை அடுத்த காக்கங்கரை ஆரம்ப சுகாதார நிலையத் தில் நர்சாக பணிபுரிபவர் சங்கீதா (வயது 31). இவர் அருகே உள்ள நர்ஸ் குடியிருப்பில் தங்கி வருகிறார்.
நேற்று வழக்கம்போல பணி முடிந்து வீட்டுக்கு சென்று மீண்டும் தனியாகபடுத்துக்கொள்ள பயந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வந்து தூங்கினார்.
அப்போது குடியிருப்பு வீட் டில் முன்பக்க கதவை உடைத்து அவரது அலமாரியில் வைத் திருந்த ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கணக்கிடப்படுவது வழக்கம்.
- கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பொகலூர் அருகே சொக்கட்டாம்பள்ளி கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கணக்கிடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் மதியம் கோவிலை மீண்டும் திறக்க பூசாரி வந்தார்.
அப்போது உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த உண்டியல் திருட்டு போயிருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவிலுக்கு வெளியே வந்து பார்த்தார்.
அங்கு உடைக்கப்பட்ட நிலையில் உண்டியல் கிடந்தது. இதுகுறித்து பூசாரி சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து திருட்டு போன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் துப்பு துலக்கப்பட்டு வருகிறது
- போலீசார் விசாரணை
கலசபாக்கம்:
கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் ஆதிமூலம் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், அவரது மனைவி மணிமேகலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு டீக்கடை வியாபாரத்திற்காக சென்று விட்டனர்.
இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு அங்கேயே தங் கிய அவர்கள் மறுநாள் காலை வந்தபோது வீட்டின் முன் பக்க மரக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப் பட்டு அதில் வைத்திருந்த நெக்லஸ், டாலர் செயின், கம்பல், மோதிரம் உட்பட 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக் கம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு மர்ம கும்பலின் கைரேகை களை பதிவு செய்தனர். திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் வரை இருக்கும் என கூறப்படு கிறது.
கொள்ளையடிகளை பிடிப்பதற் காக கூட்ரோடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- சோழவந்தான் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சார்பில் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது மேட்டு நீரேத்தான் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் நேற்று நள்ளிரவு 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் புகுந்து சன்னதிக்கு முன்புள்ள உண்டியலை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து தப்பினார்.
அவர் மஞ்சள் டி-சர்ட், ப்ளூ கலர் ட்ராக் சூட் அணிந்திருந்தார். கண்களை தவிர்த்து முகம் முழுவதையும் துணியால் மறைத்திருந்தார். அவர் உண்டியலை உடைத்து பணம் திருடும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இந்தக் கோவில் ஊரின் முகப்பு பகுதியில், இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்தி ருப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதே கோவிலில் ஏற்கனவே இந்த சம்பவத்தையும் சேர்த்து 3 முறை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. மேலும் உற்சவர் சிலையும் திருடு போனது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவும் இல்லை. பொருட்கள் மீட்கப்படவும் இல்லை. இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சார்பில் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார், கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தன் குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
- பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை,ரொக்கம் 25 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
சரவணம்பட்டி,
கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (48) கட்டிட காண்ட்ராக்டர். இவர் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தன் குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்றார்.இந்த நிலையில் அருகில் உள்ள வீட்டுக்காரர் பழனிச்சாமிக்கு போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக கூறினார். போனில் வந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி உடனடியாக வீடு திரும்பினார். தனது வீட்டின் முன்புற கதவு உடைந்திருப்பதை கண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்துகிடந்தது.பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை,ரொக்கம் 25 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க்கில் பணம் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருபத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் மினிவேனில் டீசல் நிரப்ப வந்தனர்.
திருமங்கலம்
மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருஅ பத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் மினிவேனில் டீசல் நிரப்ப வந்த 2 வாலிபர்கள், தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க் அலுவலக மேஜேயில் இருந்த ரூ.40 ஆயிரத்து 400 பணத்தை திருடி சென்று விட்டனர்.
பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர்கள் பணம் திருடிவிட்டு, தாங்கள் வந்த வாகனத்தில் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.
அதில் அவர்கள் மதுரை சாமநத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கார்த்திக்(வயது29), சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் காமாட்சி(30) என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மினிவேனில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். மற்றொருவரான காமாட்சி அந்த வேனில் டிரைவராக இருந்துள்ளார். இருவரும் சம்பவத்தன்று வியாபாரம் செய்வதற்கு சென்றபோது பெட்ரோல் பங்க்கில் இருந்த ஊழியர் ராஜேஷ் கவனிக்காத நேரத்தில் பணத்தை திருடியது தெரியவந்தது.
- அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருண். இவர் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- தேவகோட்டை அருகே நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பபட்டது.
- தேவகோட்டை அருகே நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பபட்டது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கோவில் பூசாரி தியாகராஜன் நேற்று காலை வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மதிய நேரத்தில் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் கோவில் சன்னதி முன்பு இருந்த உண்டியலை பெயர்த்து கொண்டு அங்கிருந்து தப்பினர்.
மாலையில் கோவிலுக்கு வந்த தியாகராஜன் உண்டியல் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் மர்மநபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணங்கோட்டையில் கடந்த 11-ந் தேதி 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு தாய், மகள் கொலை செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் மர்மநபர்கள் காம்பவுன்டு சுவர் ஏறி திருட முயன்றனர். இதை பார்த்து அப்பகுதி நாய்கள் கூச்சலிட்டதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர்.
கடந்த சில மாதங்களாகவே தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை-கொள்ளை, வழிப்பறி, நகைபறிப்பு போன்றவை சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. கொள்ளையர்கள் இப்பகுதியில் முகாமிட்டு இதுபோன்ற துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- ஒரு பையில் அடுக்கி கொடுக்கப்பட்ட பணத்தை என்ஜினீயர்கள் வாங்கி அவர்கள் தங்கி இருந்த அலுவலக வீட்டில் வைத்திருந்தனர்.
- 6-ந்தேதி ரூ.35 லட்சத்தில் 25 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட்டதாக என்ஜினீயர்கள் தொழிலதிபர் ஹரிஷுக்கு தகவல் தெரிவித்தனர்.
சேதராப்பட்டு:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ். தொழிலதிபரான இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கட்டுமான பணியினை காண்ட்ராக்ட் எடுத்து மேற்கொண்டு வருகிறார்.
100-க்கும் மேற்பட்டவர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தெலுங்கானா, தமிழகம், புதுவை பகுதியைச் சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களும், என்ஜினீயர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
காலாப்பட்டு பங்களா தெருவில் சிறிய அலுவலகத்துடன் கூடிய வீடு ஒன்றை தொழிலதிபர் ஹரிஷ் வாடகைக்கு எடுத்து அங்கு புதுவை மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 4 என்ஜினீயர்களை தங்க வைத்து கட்டுமான பணியை மேற்கொண்டு வந்தார்.
கடந்த 4-ந்தேதி ஹரிஷ் ஐதராபாத்தில் இருந்து காலாப்பட்டில் உள்ள என்ஜினீயர்களுக்கு போன் செய்து முக்கிய நபர் ஒருவர் ரூ.35 லட்சம் பணம் தருவார். அதை வாங்கி பாதுகாப்பாக வைக்கும்படி கூறினார். அதன்படி புதுவையைச் சேர்ந்த ஒருவர் ரூ.35 லட்சத்தை அங்கு தங்கியிருந்த என்ஜினீயர்களிடம் கொடுத்து விட்டு சென்றார்.
ஒரு பையில் அடுக்கி கொடுக்கப்பட்ட அந்த பணத்தை என்ஜினீயர்கள் வாங்கி அவர்கள் தங்கி இருந்த அலுவலக வீட்டில் வைத்திருந்தனர். இந்த நிலையில் 6-ந்தேதி ரூ.35 லட்சத்தில் 25 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட்டதாக என்ஜினீயர்கள் தொழிலதிபர் ஹரிஷுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த ஹரிஷ் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தனச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த பணம் திருட்டு போன சம்பவத்தில் அறையில் தங்கி இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு என்ஜினீயர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 3 என்ஜினீயர் உட்பட 4 பேரிடம் துருவி துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.