என் மலர்
நீங்கள் தேடியது "திருமண ஆசை"
- வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் போக்சோவில் கைது
- திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பவுன் குமார் (வயது 30).
இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்தார். அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியபோது அதை ஏற்க மறுத்தார்.
பின்னர் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தகவலை அறிந்த சிறுமி தன் தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
சிறுமியின் தாயார் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்ப டையில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் போக்சோ சட்டத் தின் கீழ்வழக்குப்பதிவு செய்து பவன் குமாரை கைது செய்தனர்.
மேலும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மீனம்பநல்லூர் கிராமத்தில் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் மையம் நடத்தி வருகிறார்.
- 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமண ஆசை கூறி கடத்திச் சென்றுள்ளார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவர் மீனம்பநல்லூர் கிராமத்தில் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் மையம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி யில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமண ஆசை கூறி கடத்திச் சென்றுள்ளார்.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ்கண்ணா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் தனபாலன். இவரது மகள் ஓவியா (வயது 25). வக்கீலான இவர், மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை வண்டியூர் பாண்டிக்கோவில் தெருவைச் சேர்ந்த வக்கீல் தேவக்குமாரும் (29) நானும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். தற்போது பெற்றோரின் தூண்டுதலால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் தேவக்குமார், அவரது தந்தை விஜய நடராஜன் (60) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள ஆராத்திரி வேலூரை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மூர்த்தி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த மாணவின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரேகாமதி மற்றும் போலீசார் மூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மூர்த்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே வருஷநாடு அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் ராமராஜ் (வயது 23). இவருக்கும் பிள்ளைமுகம்பட்டியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
அந்த பெண்ணின் தந்தை இறந்து விட்டார். தாய் மறுமணம் செய்து கொண்டதால் அந்த பெண் தனது தாத்தாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக பூ வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராமராஜ் இளம்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பின்னர் ராமராஜ் இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராமராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை:
மதுரை அண்ணாநகர் அருகேயுள்ள கரும்பாலையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 22). இவர் சக்கிமங்கலம் அஞ்சுகம் நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார்.
இதையடுத்து அவர் சிறுமியின் பெற்றோரிடம் பெண் கேட்டு வந்தார். ஆனாலும் அவர்கள் முத்துப்பாண்டிக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் முத்துப்பாண்டி சம்பவத்தன்று நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு சிறுமியின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் இருந்தனர்.
அப்போது முத்துப்பாண்டி சிறுமியிடம், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். என்னுடன் வா’ என்று அழைத்து உள்ளார். அதற்கு சிறுமிக்கு விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து முத்துப்பாண்டி வீட்டில் இருந்த தாய்-சகோதரியை அடித்து உதைத்து சிறுமியை கடத்திச் சென்று விட்டாராம்.
இது தொடர்பாக சிறுமியின் தாய் ஊமச்சிக்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டி மற்றும் சிறுமியை தேடி வருகிறார்.
பேரையூர்:
திருமங்கலம் மறவன்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மச்சக் காளை. இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). இவர் வயிற்று வாலியால் அவதிப்பட்டார். இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தபோது மகாலட்சுமி வயிற்றில் 8 மாத குழந்தை இறந்த நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகளிடம் விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகன் குமரேசன் (25) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மகாலட்சுமி தெரிவித்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2 பேரும் காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குமரேசன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும் மகாலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூரில் வேலை பார்த்து வரும் குமரேசனை தேடி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை, மேலூர் அருகேயுள்ள மெய்யப்பன் பட்டியைச் சேர்ந்த ராசு மகள் ரவிதா (வயது 19). இவர் மேலூரில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ரவிதா சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது மேலூர் சருகு வளையப்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (20) என்பவர் திருமண ஆசை காட்டி ரவிதாவை கடத்திச் சென்று விட்டார்.
இதற்கு மனோஜின் தந்தை வெள்ளைக்கண்ணு, தாய் மலர், உறவினர்கள் செல்வம், நாச்சம்மாள் மற்றும் தங்கம் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக ரவிதாவின் தாய் லட்சுமி கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரை ஊமச்சிக்குளம் அருகிலுள்ள செல்லாயி புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகள் வந்தனா. இவர் நேற்றிரவு டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கவுதம், பகத்சிங், விஜய், திருப்பதி, பிரசாந்த், அஜித்பாண்டி ஆகிய 6 பேரும் வந்தனாவை கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது.
இதனை தங்கராஜ் தட்டிக்கேட்டார். எனவே 6 வாலிபர்களும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இது தொடர்பாக தங்கராஜ் ஊமச்சிக்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சாந்த மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை-கும்பகோணம் சாலையில் உள்ள திட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்(வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவர் மகேஸ்வரனிடம் சென்று தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மகேஸ்வரன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருடன் சென்று வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியிடம் முறைகேடாக பழகி அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகியதில் அவர் கர்ப்பமானது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மகேஸ்வரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சின்னகரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 19). இவர் கல்லூரியில் படிக்கும்போது, கும்பகோணம் மேல விசலூரை சேர்ந்த தமிழரசன் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தமிழரசனை வற்புறுத்தி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழரசன் மகேஸ்வரியை சந்திப்பதை தவிர்தது வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதனை தமிழரசன் ஏற்கவில்லை.
அவர் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றி விட்டதை அறிந்த மகேஸ்வரி இதுபற்றி நன்னிலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தமிழரசனை தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி கனகமூலம், புதுத்தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது21). நாகர்கோவில் மணிமேடை பகுதியில் சந்தோஷ் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 18 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்தார்.
இந்த பெண்ணுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் பெண்ணின் தாயார் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார், கர்ப்பத்திற்கான காரணம் பற்றி கேட்டார். அப்போது கடை உரிமையாளர் தன்னை திருமண ஆசைக்காட்டி கற்பழித்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து பெண்ணின் தாயார் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் செய்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் மணிமேடையில் உள்ள கடையில் வேலை பார்த்த போது கடையின் உரிமையாளர் சந்தோஷ் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் என்னை அனந்தன் நகர் பகுதியில் உள்ள அவரது நண்பரின் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் அடிக்கடி என்னை அங்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். எனவே என்னை திருமணம் செய்யுமாறு கூறினேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இது பற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கடையின் உரிமையாளர் சந்தோசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே நத்தத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
அந்த பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டம் மினாத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
அப்போது விக்னேஷ்வரன் திருமணம் செய்து கொள்வதாக கூறிய ஆசிரியையை பாலில் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது திருமணத்திற்கு ஆசிரியை வற்புறுத்தியபோது விக்னேஷ்வரன் மறுத்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்தனர்.