என் மலர்
நீங்கள் தேடியது "பெயிண்டர்"
- முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்யும் போது திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சிவகுருநாதர் கீழே விழுந்தார்.
- படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே ஆழ்வார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு நாதர் (வயது51). பெயின்டர் வேலை செய்து வருகின்றார்.
நேற்று மாலை சிவகுருநாதர் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் வரும் போது முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்யும் போது திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சிவகுருநாதர் கீழே விழுந்தார்.படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி எழில் நேச சந்தியா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேந்தமங்கலம் அருகே முட்டாஞ்செட்டி அருந்த தியர் தெருவை சேர்ந்தவர் நாமக்கல்லில் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
- வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது மோகனூரில் இருந்து வளையபட்டி நோக்கி வந்த லாரி நடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முட்டாஞ்செட்டி அருந்த தியர் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது 60). இவர் நாமக்கல்லில் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் தனது மகள் சண்முக வள்ளியின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அவரது வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது மோகனூரில் இருந்து வளையபட்டி நோக்கி அதி வேகமாக வந்த லாரி நடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
லாரியை ஒட்டி வந்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து நடேசன் மகன் செந்தில்குமார் மோகனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.
- ஆத்திரமடைந்த வாலிபர் அரிவாளில் வெட்டினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 46) .
இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் கீழவாசல் முள்ளுக்கார தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22) என்பவருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பிலோபாநந்தவனம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆனஸ்ட்ராஜிடம், எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.
இதில் ஆனஸ்ட்ராஜ் ஆத்திரமடைந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்குப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தக்கலை தீயணைப்பு துறையினரும், இரணியல் காவல் துறையினரும் உடலை மீட்டனர்
- இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43) பெயிண்டர். இவரது நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதை கொண்டாட நண்பர்களுடன் நேற்று வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்டுவிட்டு மதியம் அணையில் குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆழப்பகுதிக்குச் சென்ற சுரேஷ் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் சுரேஷ் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தக்கலை தீயணைப்பு துறைக்கும், இரணியல் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தண்ணீரில் இறங்கி பல மணி நேரம் தேடி சுரேஷின் உடலை மீட்டனர். இரணியல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீரில் மூழ்கி பலியான சுரேஷிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கான உணவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேற்று காலை உறவினர்கள் கூறியுள்ளனர். நண்பர்களுடன் வில்லுக்குறி சென்று விட்டு உடனடியாக வந்து மருத்துவமனைக்கு செல்வதாக சுரேஷ் கூறிச் சென்றுள்ளார். ஆனால் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.
- சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
- சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்.
கன்னியாகுமரி:
தெங்கம்புதூர் அருகே உள்ள வடக்குஅஞ்சு குடியிருப்பு சாஸ்தான் கோயில் விளையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனுஷ் (23), ஜெகன் (35), வினோத் (24), சுயம்புலிங்கம் என்ற லிங்கம் (30) ஆகியோர்க்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நி லையில் நேற்று முன்தினம் இரவு விஷ்ணு தனது வீட்டின் அருகில் உள்ள கோவில் மடத்து சொத்தில் வைத்து மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த தனுஷ், ஜெகன், வினோத், சுயம்புலிங்கம் என்ற லிங்கம் ஆகியோர் விஷ்ணுவை தகாத வார்த்தைகள் பேசி, கத்தியால் குத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் 4 பேரும் அங்கி ருந்து தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த விஷ்ணு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விஷ்ணுவை தாக்கிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
- மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
- கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிஅருகே உள்ளஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 52) பெயிண்டர். இவருக்கு மனைவியும் 2 மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் இறந்து விட்டாள்.
இந்த நிலையில் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த குடும்ப பிரச்சினை காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த மனோகர் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி அவரது மனைவி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆனந்த ரூபன் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
- பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பல்லடம் :
பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ஆனந்த ரூபன் (வயது 48). பெயிண்டராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆனந்த ரூபன் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனிமையில் இருந்த அவர் சாணி பவுடரை கரைத்து குடித்து உள்ளார். இதில் மயக்கம் அடைந்தார். இதனைப் பார்த்த அவரது வீட்டினர் உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த ரூபன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் ஓட்டுபுற தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 51), பெயிண்டர்.
இவர் நேற்று வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், சுதர்சன், மதுபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றியதாகவும், அப்போது அங்கு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருடன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர், பஸ் நிலையத்தில் நிலைதடுமாறி விழுந்தபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.
இதனை தொடர்ந்து விபத்து தொடர்பாக அருமனையை சேர்ந்த பஸ் டிரைவர் ஸ்ரீரெங்கநாதன் (50) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
- சப்- இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் ஆஸ்பத்திரி 1-வது தெருவைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 43) பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தந்தை நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்- இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.
- மாணவியின் பெற்றோர் பெயிண்டருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினர்.
- போலீசார் பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெயிண்டருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெவித்தனர்.
மேலும் பெயிண்டருடனான காதலை கைவிடுமாறு தங்களது மகளுக்கு அறிவுரை கூறினர். இது குறித்து மாணவி தனது காதலனிடம் கூறினார். இதனையடுத்து பெயிண்டர் கடந்த மாதம் 20-ந் தேதி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ராமேசுவரத்துக்கு கடத்தி சென்றார். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் மாணவியுடன் அவர் இருந்தார். கடந்த 23-ந் தேதி பெயிண்டர் மாணவியை அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் 2 பேரும் அங்குள்ள முல்லை நகரில் தனியாக வீடு எடுத்து தங்கினர். அப்போது பெயிண்டர் மாணவியை 16 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
கடந்த 8-ந் தேதி 2 பேரும் அங்கு இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிட்டாம்பாடி பிரிவில் உள்ள சந்துகாடு என்ற இடத்தில் உள்ள பெயிண்டரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.
மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். அப்போது அவர் பெயிண்டருடன் சந்து காட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். பெயிண்டரை கைது செய்து மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போது மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெயிண்டர் மாணவியை திருமணம் செய்து 16 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நர்சிங் மாணவியை கடத்தி சென்று 16 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரணியல் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
- இன்று மாலை இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு
கன்னியாகுமரி :
வில்லுக்குறி அருகே உள்ள கீழ பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை. இவரது மகன் பாபு (வயது 46), பெயிண்டர். இவர் கடந்த 8 ஆண்டுகளாக ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இவருடன் அவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38) ஆகியோரும் வசித்து வந்தனர். சகோதரிகள் 2 பேருக்கும் திருமணம் ஆக வில்லை. இந்த நிலையில் அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குளச்சல் டி.எஸ்.பி. தங்கரா மன், இரணியல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபுவும், ஸ்ரீதேவியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் உஷா பார்வதி விஷமருந்தி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாபு மற்றும் அவரது சகோதரிகள் உடலை போலீசார் யாரிடம் ஒப்ப டைப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்ட னர்.
அவரது உறவினர்கள் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை யில் திடீர் திருப்பமாக பாபுவிற்கு திருமணமாகி இருப்பது தெரியவந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இதையடுத்து போலீசார் பாபுவின் மனைவி எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பாபுவின் மனைவியை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் பாபு உட்பட அவரின் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை தெரிவித்தனர். உடலை ஒப்படைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்ட னர். இறந்தவர்கள் உடலை இறுதிச் சடங்கு செய்ய பாபுவின் மனைவி ஒப்புக் கொண்டார். போலீசார் உடல் களை பாபுவின் மனைவியிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்று 3 பேர் உடலும் பாபுவின் மனைவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் அவரது உறவினர்கள் உதவியுடன் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.
- சென்னையை சேர்ந்த சோலைராஜ் மயிலாடுதுறையில் வேைல பார்த்து வந்தார்.
- மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சென்னை அயனாவரம் சோலை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன்.
இவரது மகன் சோலைராஜ் (வயது 32). பெயிண்டர்.
இவர் தற்போது மயிலாடுதுறை காந்திஜி சாலையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வெளிச்சத்திற்காக ஒரு மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.
அப்போது மின்விளக்கை சற்று நகர்த்தியதில் எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட சோலைராஜ் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சோலைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.