என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரம்"

    • ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை கிராமத்தில் பல விவசாய நிலங்களின் முக்கிய வடிகால் வாய்க்காலை தனிநபர் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

    அதனால் மழை காலங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்–பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாபநாசம் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்திருந்தனர்.

    இதுகுறித்த செய்தி மாலைமலரில் வெளியிடப்–பட்டது.

    இதனை தொடர்ந்து பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், மெலட்டூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், சரக வருவாய் ஆய்வாளர் கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் வடிகால் வாய்க்காலில் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

    வடிகாலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக அன்னப்பன்பேட்டை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

    • ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படுத்தல் எந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார எந்திரம் உள்ளிட்டவை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தூய்மை பணியாளரு–க்கென ஓய்வறை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டார்.

    அந்த அறிவிப்பை அடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆலோசனைபடி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த ஓய்வறையை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைப்பதற்காக வருைா தந்தார்.

    திடீரென அவர் அருகில் நின்ற தலைஞாயிறு பேருராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்துவைவை அழைத்து கட்டிடத்தை திறக்க வைத்தார் .கட்டிடத்தை திறந்த மாரிமுத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.

    ஓய்வறையை உடனடியாக கட்டிக்கொடுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனை பாராட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்தார்.

    அந்த ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படதையல் இயந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும்உணவு உண்பதற்கான டைனிங் டேபிள், கேரம் போர்டு, தாயங்கட்டை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் முதலுதவி பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார இயந்திரம் உள்ளிட்டவை அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் துப்பரவு பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    கலெக்டரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.

    • கனமழையால் மழைநீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது.
    • ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் வடிய வைக்கும் பணி.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தோட்ட மானியத்தில் சில மாதங்களுக்கு முன்பு மயான சாலை பேவர் பிளாக் முலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்கால்கள் பகுதி சாலை போடப்பட்டதால் குறுகியது.

    தற்பொழுது பெய்து வரும் கனமழையால் மழை நீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது இதனால்பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டன மேலும் விசப்பூச்சிகள், பாம்புகள் வருவதால் பேரூராட்சி நிர்வாகம் விரைவாக புதிதாக அமைக்கப்பட்ட சாலை குறுக்கே வடிகால் குழாய்களை அமைத்துமழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் மயிலாடுதுறை சிதம்பரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு வெட்டி மழை நீர் வடிய வைக்கப்பட்டது.

    • மனித கழிவுகளை அகற்றவும், கழிவு நீர் ஓடை சுத்தம் செய்யும் பணிகளிலும் மனிதர்களை பயன்படுத்த கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டம் அமல்படுத்தினார்.
    • பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாயில் உள்ள கழிவை அகற்றும் சோதனை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் :

    மனித கழிவுகளை அகற்றவும், கழிவு நீர் ஓடை சுத்தம் செய்யும் பணிகளிலும் மனிதர்களை பயன்படுத்த கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டம் அமல்படுத்தினார். அதனை நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம் செய்தல் மற்றும் கழிவு நீர் ஓடை சுத்தம் செய்தல் பணிக்கு எந்திரம் பயன்படுத்த ஆய்வு பணி இன்று நடந்தது. தனியார் நிறுவனம் மூலம் அதற்கான செய்முறை விளக்கம் நடந்தது. அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாயில் உள்ள கழிவை அகற்றும் சோதனை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், சுகாதார அலுவலர் ராம் மோகன், பொது சுகாதார குழு தலைவர் கலா ராணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் உள்ள டீக்கடை உள்பட 3 கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த செட், மேற்கூரை உள்ளிட்டவற்றை அகற்றக்கோரி சில வாரங்க–ளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் சம்பந்தபட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனால் முறையாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் இன்று மதியம் மாநகராட்சி நகரமைப்ப அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர்கள் கண்ணதாசன், ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.

    பின்னர் அந்த கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • சிறிது நேரத்தில் மளமளவென பரவி தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் வாடி வாசல் கடைத்தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 62). இவர் அதே பகுதியில் தையல் கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் இவர் திருப்பதிக்கு சென்று விட்டு இன்று அதிகாலை தஞ்சைக்கு வந்தார். பின்னர் கடையை திறந்து வாசலில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கடைக்குள் தீ பற்றியது. சிறிது நேரத்தில் மளமள வென பரவி தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. திடுக்கிட்டு எழுந்த கதிரேசன் ஓடி சென்று வாளியில் தண்ணீர் நிரப்பி ஊற்றினார்.

    இருந்தாலும் தீ மளமளவென எரிந்த தால் கட்டுப்படுத்த முடியவி ல்லை.இது குறித்து தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருந்தாலும் கடையின் பெருமளவு பகுதி எரிந்தது. தையல் எந்திரம் மற்றும் அனைத்து பொருட்கள் எரிந்து சேதமானது.

    இது பற்றிய புகாரின் பேரில் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின் கசிவால் தீப்பிடி த்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாவட்ட வருவாய் அலுவலருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
    • 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்டவைகள் கையிருப்பில் உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ், மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது :-

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24/7 இயங்ககூடிய அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல், தாசில்தார் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை கலெக்டர் நிலையிலான 10 குழுக்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    எதிர்பாராத வகையில், புயல் சீற்றங்கள் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேவையான அளவு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் 1,லட்சத்து 30 ஆயிரத்து 25, மணல் மூட்டைகளும், 84ஆயிரத்து 500 சாக்குகளும் மற்றும் 5 ஆயிரம் சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது.

    106 மரம் அறுக்கும் எந்திரங்கள், 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • உழவு எந்திரம் மற்றும் நிலக்கடலை விதை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு.
    • நிலக்கடலை விதைக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், குருங்குளம், வெட்டிக்காடு, திருவோணம், ஊரணிபுரம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் 50 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெறும்.

    கார்த்திகை மாத பருவத்தில் நிலக்கடலை விதைக்க வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

    தற்போது மானாவாரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், நிலத்தை உழவு செய்வது, அடியுரம் இடுவது, சமன்படுத்துவது, நிலக் கடலையை வாங்கி அதிலிருந்து விதையை உடைத்து எடுப்பது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறனர்.

    மானாவாரி பகுதியில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் நிலக்கடலை விதைப்புப் பணியில் ஈடுபடுவதால் உழவு இயந்திரம் மற்றும் நிலக்கடலை விதை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நிலக்கடலை விதையின் விலையும் அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து மருங்குளம் விவசாயிகள் கூறும் போது:-

    மானாவாரி பகுதியில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை விதைத்தால் மகசூல் நன்றாக இருக்கும் என்பதால் அதிக பரப்பளவில் கடலை விதைப்பில் ஈடுபடுவோம்.

    தற்போது இந்த பட்டத்தில் மழையும் பரவலாக பெய்துள்ளதால் இதனை பயன்படுத்தி நிலக்கடலை விதைக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் போதிய அளவு நிலக்கடலை விதை இல்லாததால் புதுக்கோட்டை, அரியலூர் போன்ற மாவட்டங்களில் சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்கி வர வேண்டி உள்ளது.

    எனவே இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான நிலக்கடலை விதையை வேளாண்மை துறை சார்பில் வழங்க வேண்டும்.

    மேலும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நிலக்கடலை விதைக்கும் எந்திரங்களை அதிக அளவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதுடன் துறை சார்பில் வாடகைக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கு.
    • முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஈசானிய தெருவில் அமைந்துள்ளது.

    இந்த குப்பை கிடங்கில் விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கிங் செய்து எரிபொருளாக பயன்படுத்த அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதற்கும் அபாயகரமான கழிவுகளை முறையான பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கும் குப்பைகளை அரைத்து உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் நகராட்சி மூலம் வாங்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார்.

    நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் புதிய எந்திரங்களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பாஸ்கரன், பாலமுருகன், முபாரக் அலி, ராமு, ரமாமணி, ராஜசேகர், ஜெயந்தி பாபு, கிருஷ்ணமூர்த்தி ராஜேஷ், நிர்வாகிகள் பந்தல்முத்து, திருச்செல்வன், மதியழகன், வெற்றி, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தவிட்டு மற்றும் உமி ஆகியவைகள் குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.
    • குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து இயங்கி வரும் இந்த அரிசி ஆலையின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் இங்கு எடுத்து வரப்பட்டு ஊறல் போடப்பட்டு உலர வைக்கப்பட்டு பின்னர் அரைக்கப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலையில் நெல் அரவை செய்யும்போது, அரவை இயந்திரத்தின் மூலம் வெளியேறும் தவிடு மற்றும் உமி ஆகியவைகள் அங்குள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியை சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதனை அறிந்த இரவு நேர அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உரிய நேரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பேராபத்தும் பெரும் நஷ்டமும் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • செம்மண் கடத்தியவர்கள் தப்பி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக நல்லூர் கிராம அலுவலர் செலஸ்டின் ராஜீக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது, அங்கு செம்மண் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் செம்மண் கடத்த பயன்படுத்திய டெம்போ மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரம் குறித்த கூட்டம்.
    • விவசாயிகளின் பார்வைக்கு இடு பொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த வடகாடு கோவிலூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரம் குறித்த விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா ரவி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் (வே.பொ) முருகதாஸ், தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கால்நடை மருத்துவர் மகேந்திரன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் திவ்யா, வேளாண்மை அலுவலர் சு.திவ்யா, உதவி விதை அலுவலர்கள் விஜய் கதிரேசன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் தொழில்நுட்ப தகவல்களை தெரிவித்து பேசினர்.

    மேலும், இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளங்கோவன், புலவேந்திரன், கலியமூர்த்தி மற்றும் பாரத பிரதமரின் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் கதிரவன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டது. விவசாயிகளின் பார்வைக்கு இடு பொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.

    ×