என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிப்படை வசதிகள்"

    • திருமங்கலம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கிராமசபை கூட்டத்தில் தலைவர் ரம்யா முத்துக்குமார் உறுதியளித்துள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் முதல் பகுதி சபா கூட்டம் 5 மற்றும் 6-வது வார்டுகளை இணைத்து கங்கன் காலனியில் காளியம்மன் கோவில் அருகே நடைபெற்றது.

    நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். ஆணையாளர் டெரன்ஸ் லியோன், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சில் குழுத்தலைவர் ஜஸ்டின் திரவியம் கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், நகர தி.மு.க. நிர்வாகிகள் முத்துக்குமார், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பகுதி சபா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், தெருவிளக்கு வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. நாங்கள் பொறுப்பேற்று 6 மாதங்கள் தான் ஆகிறது. விரைவில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வோம் என தெரிவித்தார். இதனை த்தொடர்ந்து பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் டெரன்ஸ் லியோனிடம் மனுக்களை கொடுத்தனர்.

    இதே போல் 7-வதுவார்டு 8-வது வார்டு மற்றும் 11-வது வார்டு மற்றும் 12-வது வார்டுகளிலும் நேற்று நகராட்சி தலைவர் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த வார்டுகளிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    • அடிப்படை வசதிகள் தயாராக இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
    • மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பை பார்வையிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு உபகரணங்களை கலெக்டர்அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குடிமை பொருள் வழங்கல் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இணைந்து பணியாற்ற 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஊட்டி, குன்னூர் உள்பட 6 தாலுகாக்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு எற்படக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிப்பு ஏதேனும் ஏற்படும் போது உடனடியாக அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.அங்கு பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.மேலும் அடிப்படை வசதிகள் தயாராக இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இயற்கை இடர்பாடுகளினால் சாலைகளில் மரம் விழுந்தால், உடனடியாக அகற்ற பயன்படுத்தும் எந்திரங்கள் மற்றும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பை பார்வையிட்டார்.

    ேமலும் உபகரணங்கள் இயங்கும் நிலையில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது குன்னூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கண்ணன், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், குன்னூர் தாசில்தார் சிவக்குமார், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் மற்றும் அரசுத்துறை பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் 32-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 32-வது வார்டு மடவார் வளாகம் பகுதிக்குட்பட்ட தன்யா நகர்பகுதியில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, மற்றும் சாலை வசதிகள் பிரதான குறைகளாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 500 குடியிருப்புகள் இருக்கும் தன்யா நகருக்கு செல்வதற்கும் தன்யா நகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்பகுதிக்கு செல்வதற்கும் ஒரே ஒரு பாதை வசதி மட்டுமே உள்ளது. தன்யா நகரில் சில இடங்களில் 20 அடி ரோடு வசதியும், பல தெருக்களில் 16 அடி அகலம் கொண்ட ரோடு வசதியும் மட்டுமே உள்ளது.

    குறிப்பாக தன்யாநகர் உள்ளே நுழையும் சுமார் 50 அடி நீளமுள்ள பாதையில் அகலமானது 10 அடிக்கும் குறைவாக உள்ளதால் இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தன்யா நகருக்கு இப்பாதையை தவிர்த்து வேறு ஒரு மாற்றுப் பாதை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தன்யா நகர் உட்புறம் உள்ள பாரதி நகர் மற்றும் குறிஞ்சி நகர் தெருக்களுக்கு பேவர் பிளாக், மின்கம்பம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. 500 குடியிருப்பு உள்ள இப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

    பூங்கா மற்றும் உடற்பயிற்சி மைதானம் தேவை என்ற கோரிக்கையும், தன்யா நகர் பகுதி முழுவதிலும் சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளதால் அதையும் சரி செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    • மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகள்

    பெரம்பலூர்:

    வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் நலன்காக்கும் மகத்தான அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு திகழ்கின்றது. மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அவற்றிற்கு தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் தனிக்கவனம் செலுத்தி செயல்படவேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் பெரம்பலுார் மாவட்டத்தில் மக்களின் தேவை அறிந்து அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.1.13 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முடிவுற்ற பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், பெரம்பலுார் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிகுழு துணைத்தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருணாநிதி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னப்பையன், செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமாந்துறை ஒன்றிய குழு உறுப்பினர் பெரு. கருப்பையா , ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு, கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், அசூர் செல்வி முருகேசன்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சார்பில் பள்ளியை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
    • நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள மூன்றோடு சின்னப்பெரிச்சி பாளையத்தில் பவானி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் இந்த பள்ளியின் வளாகத்தில் சத்துணவு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    சத்துணவு மையக் கட்டிடம் பழுதாகிய நிலையில் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரியும், அதேபோல் பள்ளியின் வளாகத்தில் உள்ள கிணற்றில் பாதுகாப்பு வசதி செய்து தரக்கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சார்பில் பள்ளியை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களான கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று கூடியிருந்த பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பள்ளியில் உள்ள கிணறு தூர் வாராமல் உள்ளது. பாதுகாப்பு வசதி குறைபாடு உள்ளது. அதை நிவர்த்தி செய்து தர வேண்டும். சமையல் கூடம் புதுப்பித்து தர வேண்டும்.

    அங்கன்வாடி மையத்தில் 104 குழந்தைகள் இருந்து வரும் நிலையில் உதவியாளர் ஒருவர் மட்டுமே உள்ளார். அதனால் கூடுதல் பணியாளர் நியமிக்க வேண்டும் என கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரி முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    • அடிப்படை வசதிகள் இல்லை என புகார்
    • ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையம் பல்வேறு மாநிலங்களை இணைக்கக்கூடிய முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது.

    மேலும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காகவும் வியாபாரம் சம்பந்தமாகவும் பயணிகள் ரெயில் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை, கழிவறை, குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி, பயணிகளின் நட மேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாமல் பின் தங்கிய நிலையில் இருந்து வருகிறது.

    இதுகுறித்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என ரெயில் பயணிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி., ஜோலார்பேட்டை தேவராஜி எம்.எல்.ஏ., ரெயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சி.என். அண்ணாதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. ரெயில் நிலையத்தில் நிழற்குடை குடிநீர் வசதி கழிவறை நடைமேடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரெயில் நிலையத்திற்கு தேவையான வசதிகள் குறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கும், ரெயில்வே வாரிய தலைவருக்கும் அறிக்கை சமர்ப்பிக்க ப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களில் அடிப்படை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது.

    மேலும் ஆங்காங்கே ரெயில்வே தரைப் பாலங் களில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருவதால் இது குறித்த பணிகளும் நடவடிக்கைக்காக ரெயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பணிகளும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளனர் என தெரிவித்தார்.

    • பேரூராட்சி மன்ற மாதா ந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.
    • பா.ம.க கவுன்சிலர் சுமித்ரா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற மாதா ந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.

    பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டத்தில் பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருக்கும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்திட சிறப்பு திட்டத்திற்கு உரிய முன்மொழிவு அனுப்பி வைத்தல், பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசி நாயக்கன் ஏரி என்கின்ற (முள்ளுவாடி ஏரி) கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி அளித்துள்ள நிலையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்வது, அரசு கட்டிடங்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அமைப்புகளின் கட்டிடங்கள் கட்டிட அனுமதி பெறுவது, மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரி இருக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், கமலேசன்,ஷானு, யாசின்கான், அ.தி.மு.க கவுன்சிலர் ராதிகாபாய், பா.ம.க கவுன்சிலர் சுமித்ரா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • செல்வ.பூமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நரேந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டன உரையாற்றினார்.

    கடலூர்:

    கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி நகர பா.ஜ.க . சார்பில் திட்டக்குடி நகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதை யும் செய்து தராத நகராட்சி ஆணையரை பணியிடை மாற்றம் செய்யக்கோரி திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் நகரதலைவர் செல்வ.பூமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். பொன்.பெரிய சாமி மாவட்ட தலைவர் தொழில் துறை பிரிவு முன்னிலை வகித்தார். நரேந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வெளி நாடுவாழ் தமிழ் பிரிவு சேனாதிபதி, முன்னாள் பொதுச் செயலாளர் விவசாய அணி நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் கொளஞ்சி, மாவட்ட செயலாளர் ஓபிசி அணிஎஸ்.ஆர். பூமிநாதன், மாவட்ட செயலாளர் கூட்டுறவு பிரிவு சக்திவேல், நகர பொதுச்செயலாளர்கள் ராமு மணிவண்ணன், நகரத் துணைத் தலைவர் அய்யாக்கண்ணு, நகரச் செயலாளர் முல்லை நாதன், நன்றி உரை சிவா மாவட்ட துணை தலைவர் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு உட்பட ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாதேஸ்வரா நகருக்கும் இத்திட்டத்தின்பயன் கிடைக்காமல் செய்துவிட்டார்.
    • வீட்டுவரி எங்களிடம் வாங்கவும் ஆவணம் செய்துகொடுக்க கேட்டு கொள்கிறோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதேஸ்வரா நகர் கிராம மக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2013-2014ல் அரசு நிலம் விலைக்கு வாங்கி, இடம் இல்லாத எங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கியுள்ளது.

    நாங்கள் இந்து அருந்ததியினத்தை சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எங்களில் சிலர் சொந்த செலவில் வீடுகட்டியும், சிலர் குடிசையிலும் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு 2019ல்நடந்த பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு வாக்களிக்கவில்லை என கருதிபஞ்சாயத்து தலைவர் இதுவரைவீட்டுவரி, வீட்டு எண், குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படைவசதிகளை செய்து கொடுக்க மறுத்துவருகின்றார். வீட்டுவரி கட்ட சென்றால்வாங்க மறுக்கின்றனர். குடிநீர் வசதி செய்து தரவில்லை.

    மேலும் இந்த ஆண்டிற்கான பாரத பிரதமரின் கனவு திட்டமான ஜல் ஜீவன்திட்டத்தில் அலகுமலை பஞ்சாயத்தில் அலகுமலை சிற்றூர் (குக்கிராமம்)சேர்க்க பெற்றிருந்தும் எங்களுக்கும், மாதேஸ்வரா நகருக்கும் இத்திட்டத்தின்பயன் கிடைக்காமல் செய்துவிட்டார்.

    இந்த ஆண்டிற்கான அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில்வசிக்கும் எங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டியபோது, நீங்கள் எவனிடம்சென்று சொன்னாலும் உங்களுக்கு வீடு கொடுக்க முடியாது என கடுமையாக திட்டுகின்றார். ஆகவே தாங்கள் தயவு செய்து அரசின் மூலம் நிலம் வாங்கப்பெற்றுபட்டா வழங்கியுள்ள எங்களுக்கு வீடு கிடைக்கவும், ஜல் ஜீவன் திட்டம் மூலம்குடி தண்ணீர் கிடைப்பதற்கும், வீட்டுவரி எங்களிடம் வாங்கவும் ஆவணம் செய்துகொடுக்க கேட்டு கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • வ.உ.சி.பூங்காவில் மூன்று குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளன.

     அவினாசி:

    அவினாசி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்–தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீரமானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர் சசிகலா பேசுகையில்,

    வ.உ.சி.பூங்காவில் மூன்று குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளன. அவைகளை பாதுகாக்கும் வண்ணம் நிரந்தர காவலாளி அமைக்க வேண்டும். அதேபோல் வி.எஸ்.வி. காலனியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டியை பாதுகாக்கும் படி அதற்கு உடனடியாக கம்பி வேலி அமைக்க வேண்டும். வார்டில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தார் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் வேண்டி கடந்த ஒரு வருடமாக வலியுறுத்தியும் பணி நடைபெறவில்லை. எனவே அப்பணிகளையும் விரைந்து செய்து தர வேண்டும் என்றார். 

    • நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தில் வீடு ஒதுக்கீடு செய்ததற்காக, கடனுதவி வழங்கப்பட்டது.
    • இயக்குனர் லட்சுமணன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் அனைத்து திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், அனைத்து துறைகளில் நடைபெற்றுவரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்க ளின் தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பான முறையில், விரைவாக மேற்கொண்டு, திருப்பூர் மாவட்டத்தை முன்னோடியாக திகழச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தில் வீடு ஒதுக்கீடு செய்ததற்காக, கடனுதவி வழங்கப்பட்டது.இதில் டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸி ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • பூதலூர் அருகே உளள வளம்பகுடியில் 14-ந்தேதி நடக்க இருந்த சாலை மறியல் ரத்து செய்யப்பட்டது.
    • உசிலம்பட்டி சிமென்ட் சாலை வரும் நிதியாண்டில் செய்து தரப்படும்.

    பூதலூர்:

    பூதலூர் தாலூகா செங்கிப்பட்டி சரகம், மனையேறிப்பட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 14ம்தேதி தஞ்சை-திருச்சி சாலை வளம்பகுடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு அமைதி பேச்சுவார்த்தை பூதலூர் தாலூகா அலுவலகத்தில் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வருவாய் துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன்,

    மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்லி, பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

    உசிலம்பட்டி கிராமத்தில் மூடப்பட்ட தொடக்கப்பள்ளியை பள்ளியை திறப்பது தொடர்பாக எதிர்வரும் 15.03.23 பதிலலிக்கப்படும்.

    துருசுப்பட்டி செல்லும் கட்டனை கால்வாய் சாலையை அமைத்துதருவது தொடர்பாக நெடுஞ்சாலை துறைக்கு முன்மொழிவுகள் அனுப்பபட்டுள்ளது.

    நியாய விலை அங்காடி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அமைத்துத்தரப்படும். தற்போது இயங்கி வரும் ஏ26 எண் கொண்ட பேருந்தை கிள்ளுக்கோட்டை வரை இயக்கிட வழி செய்யப்படும்.

    உசிலம்பட்டி சிமென்ட் சாலை வரும் நிதியாண்டில் செய்து தரப்படும்.உசிலம்பட்டி-துருசுப்பட்டி கிராமங்களுக்கு தற்போது நான்கு இணைப்பாக இருப்பதை ஒரு இணைப்பாக மாற்றி உசிலம்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வர வழிவகை செய்யவழிசெய்யப்படும். வளம்பகுடியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

    உசிலம்பட்டி கிராம பள்ளி மாணவர்கள் இழப்பீடு குறித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.என்று தெரிவித்ததை ஏற்று வரும் 14-ந்தேதி நடந்த இருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

    ×