என் மலர்
நீங்கள் தேடியது "மாணவன் பலி"
- விஷ்ணுவின் தலையில் பலத்த காயமடைந்தது.
- அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் விஷ்ணு (15). அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த விஷ்ணு கடந்த 15-ந்தேதி அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாணாபுரம் புத்துமாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விஷ்ணுவின் சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்ணுவின் தலையில் பலத்த காயமடைந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகிய 2 பேர் மீதும் பகண்டை கூட்டுச்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- வழக்கம்போல் மாணவர் திவாகர் இன்று காலை 7.40 மணி அளவில் குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்தார். வேன் வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றார்.
- வேன் தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி செல்ல கோனேரிபட்டி பேரேஜ் நோக்கி சென்றது. அப்போது வேனில் ஏறிய மாணவர் திவாகர் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்தார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு என்ற பகுதியை சேர்ந்தவர் மாதையன், மில் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு திவாகர் (13), ஜீவா (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
திவாகர் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் இவர் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வந்தார்.
வழக்கம்போல் மாணவர் திவாகர் இன்று காலை 7.40 மணி அளவில் குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்தார். வேன் வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றார்.
வேன் தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி செல்ல கோனேரிபட்டி பேரேஜ் நோக்கி சென்றது. அப்போது வேனில் ஏறிய மாணவர் திவாகர் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்தார். வேன் கோனேரிபட்டி பேரேஜ் கதவணை மின்நிலைய சோதனை சாவடி அருகே சென்றபோது டிரைவர் திடீர் பிரேக் போட்டார்.
அப்போது வேனுக்குள் இருந்த மாணவர் திவாகர் நிலைதடுமாறி முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்தார். அப்போது அந்த வேனின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் திவாகர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த மற்ற மாணவர்கள் அலறி சத்தம் போட்டனர். இதையடுத்து டிரைவர் வேனை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது திவாகர் பின்பக்க சக்கரத்தில் சிக்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது.
பின்னர் சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான மாணவர் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் பள்ளி வேன் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்
- அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
போளூர்:
போளூர் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் பாபு, இவர் எதப்பட்டு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி மஞ்சுளா, கட்டுப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர்.
இவர்களது கடைசி மகன் அரவிந்த் (16) ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் வீட்டு மாடியில் அரவிந்த் மற்றும் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேல் செல்லும் உயிர் அழுத்த மின் கம்பி அரவிந்த் மேல் பட்டு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடிக்க உடல் கருகி இறந்தார். இது குறித்து போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
ஜெயபிரகாஷ் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி போளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து போளூர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் சென்று அரவிந்த் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
- 30 அடி தொலைவில் கரை ஒதுங்கிய உடல் மீட்பு
- குளித்த போது விபரீதம்
செய்யாறு:
செய்யாறு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சிவா என்ற மகனும், சில்பா என்ற மகளும் உள்ளனர்.
சிவா செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நண்பர்களுடன் சிவா செய்யாற்றில் குளிப்பதற்காக சென்றார். ஆற்றில் யானை பள்ளம் என்ற இடத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் ஆழமாக இருந்ததால் சிவா தண்ணீரில் மூழ்கினார்.
நண்பர்கள் முயற்சி செய்தும் சிவா கிடைக்காததால் அவரது அம்மாவிற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் உறவினர்கள் மற்றும் செய்யாறு தீயணைப்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். தீயணைப்பு வீரர்கள் இரவு 10 மணி வரை தேடியும் மாணவன் கிடைக்காததால் திரும்பி சென்றனர்.
பின்னர் இன்று காலை யானை பள்ளத்தில் இருந்து சுமார் 30 அடி தொலைவில் சிவாவின் உடல் கரை ஒதுங்கியது.
தகவல் அறிந்த செய்யாறு போலீசார் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த யானை பள்ளத்தில் ஏற்கனவே 3 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
- மாடு திடீரென ஜெகதீஷை முட்டி தூக்கியது. அதில் அவனது மார்பில் கொம்பு குத்தி காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். ஊராட்சி பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெகதீஷ் (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலை ஜெகதீஷ் அவரது வீட்டில் வளர்க்கும் காளை மாட்டுக்கு தண்ணீர் காட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது மாடு திடீரென ஜெகதீஷை முட்டி தூக்கியது. அதில் அவனது மார்பில் கொம்பு குத்தி காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவன் கீழே சரிந்து விழுந்தான். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் வீட்டில் வளர்த்து வரும் மாட்டினை எருது விடும் திருவிழாவுக்காக தயார்படுத்தி வந்ததாக தெரிகிறது. அப்போது மாடு அவனை குத்தியதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே இது குறித்து தெரியவரும் என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:-
ஜெகதீஷ்க்கு சொந்தமான ஒரு மாட்டினை அவருக்கு சொந்தமான நிலத்தில் மேய்ப்பதற்காக கொண்டு செல்லும் வழியில் மாடு அவரை முட்டியது. அதில் காயமடைந்த சிறுவனை உடனே நாராயணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
நாராயணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்வானது மாடு விடும் திருவிழாவால் ஏற்பட்டவில்லை. மாடு மேய்க்க கொண்டு செல்லும் போது சிறுவன் இறந்துள்ளான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
- 3 நாட்களுக்கு டெங்கு கொசுக்களை ஒழிக்க மருந்துக்கள் தெளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி 19-வது வார்டு ஜோதி நகர் பாலசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது40). இவரது மனைவி தேவி (35). தம்பதியின் மகன் ஹரிஹரன் (14). அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13-ந்தேதி சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் சிறுவனை அருகில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 23-ந்தேதி சிறுவனுக்கு கடுமையான வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் சிறுவனை சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தபோதும், உடல்நிலை மோசமானது. உடனடியாக 24-ந் தேதி சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனை தொடர்ந்து, ராணிப்பேட்டை சுகாதாரத்துறை சார்பில் இன்று முதல் அப்பகுதியில் தூய்மை மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், 3 நாட்களுக்கு டெங்கு கொசுக்களை ஒழிக்க மருந்துக்கள் தெளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜி.டி.ஆர். அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து மோட்டர்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
- செம்மேடு தனியார் லாட்ஜ் அருகே மோட்டார்சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திண்ண–னுார்நாடு சின்ன சோளக்கண்ணிப்பட்டியை சேர்ந்தவர் ரஜினி. இவருடைய மகன் அகிலன் (வயது 17).
கொல்லிமலை அருகே உள்ள வாழவந்திநாடு, பெருமாபட்டியை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருடைய மகன் வசந்த் (17).
இவர்கள் 2 பேரும் செம்மேடு ஜி.டி.ஆர். அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து மோட்டர்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வாழவந்திநாடு தண்ணிமாத்தி பகுதியை சேர்ந்த பாசகுமார், (48) என்பவர் செம்மேட்டில் இருந்து சோளக்காட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
செம்மேடு தனியார் லாட்ஜ் அருகே மோட்டார்சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் பள்ளி மாணவன் அகிலன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு மாணவன் வசந்த் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சில் நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவன் அகிலன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி–றார்கள்.
கார் மோதி பிளஸ் -2 மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அடையாளம் தெரியாத பேருந்து ஒன்று அம்மாணவன் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே புளியூர் ஏரிக்கரை பகுதியில் இன்றுகாலை 6 வயது மாணவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பேருந்து ஒன்று அம்மாணவன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்கை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்
- போலீசார் விசாரணை
ராணிபேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காமராஜ் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்.இவரது மகன் சஞ்சய் (வயது 16). இவரும் இவரது தங்கை நிரஞ்சனா (14) ஆகிய இருவரும் அம்மூர் லாலாப்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சஞ்சய் தனது தங்கை நிரஞ்சனாவை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சஞ்சய் லாரி சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது தங்கை நிரஞ்சனா தலையில் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
இது குறித்து தகவல் அறந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறிய காயங்களுடன் நிரஞ்சனாவை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோனிஷ் தண்ணீரில் மூழ்கியது பற்றி எதுவும் தெரியாதது போல் நண்பர்கள் இருந்துவிட்டனர்.
- இரவு நீண்ட நேரம் ஆகியும் மோனிஷ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் உடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வாயலூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோனிஷ் (வயது10). மெரட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றுமாலை மாணவன் மோனிஷ், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேருடன் சைக்கிளில் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.
அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற மோனிஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்து நண்பர்கள் கவனிக்கவில்லை. இதனால் மோனிஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே குளித்து விட்டு கரைக்கு திரும்பியதும் நண்பர்கள் உடன் வந்த மோனிசை தேடினர். அவர் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மோனிசின் சைக்கிள் மற்றும் ஆடைகளை குளத்தில் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மோனிஷ் தண்ணீரில் மூழ்கியது பற்றி எதுவும் தெரியாதது போல் இருந்துவிட்டனர்.
இரவு நீண்ட நேரம் ஆகியும் மோனிஷ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் உடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் மோனிஷ் குளத்தில் மூழ்கியது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினர். இரவு 11 மணியளவில் மோனிஷின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பயிற்சியாளர்களான செந்தில், சுமன் ஆகியோர் நீச்சல் குளத்தில் 15 சிறுவர்களுக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தனர்.
- திடீரென சிறுவன் தேஜா தண்ணீரில் மூழ்கினான்.
சென்னை:
சென்னை கொசப்பேட்டை பட்டாளம் ஹாஜி முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்த வர் ராகேஷ்குப்தா. இவரது மகன் தேஜா (வயது7).
வேப்பேரி அகர்வால் வித்யாலயா பள்ளியில் தேஜா 2-ம் வகுப்பு படித்து வந்தான். பெரியமேட்டில் உள்ள மைலேடி பூங்கா நீச்சல் குளத்துக்கு தினமும் சென்று தேஜா நீச்சல் கற்று வந்தான்.
நேற்று மாலை 6 மணி அளவில் தனது தாத்தாவுடன் சிறுவன் நீச்சல் குளத்துக்கு சென்றான். பின்னர் நீச்சல் குளத்தில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டான். பயிற்சியாளர்களான செந்தில், சுமன் ஆகியோர் நீச்சல் குளத்தில் 15 சிறுவர்களுக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து தேஜாவும் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டான்.
அப்போது திடீரென சிறுவன் தேஜா தண்ணீரில் மூழ்கினான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயிற்சியாளர் செந்தில் நீரில் மூழ்கிய தேஜாவை மீட்டு வெளியில் கொண்டு வந்தார். உடனடியாக மோட்டார்சைக்கிளில் வைத்து அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவன் தேஜாவை மயங்கிய நிலையில் கொண்டு சேர்த்தனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் தேஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தேஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இது தொடர்பாக பெரிய மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவன் உயிரிழப்புக்கு நீச்சல் பயிற்சியாளர்களின் கவனக்குறைவு காரணமா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் சிறுவனின் உயிரிழப்புக்கு கவனக்குறைவு காரணமாக இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நீச்சல் பயிற்சிக்கு சென்ற இடத்தில் சிறுவன் தேஜா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவனது உறவினர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள், ஆசிரியர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கோவிந்தன் என்பவரது நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கினார்.
- காப்பாற்ற நீரில் மூழ்கி தேடினர். ஆனால் பிரகாஷ் மூச்சு திணறி உயிரிழந்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் மாரண்டஅள்ளி மின்வாரிய த்தில் ஒயர்மேனாக உள்ளார்.இவரது மகன் பிரகாஷ் (வயது20). இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார்.நேற்று நண்பகலில் அதே பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரது நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற நீரில் மூழ்கி தேடினர். ஆனால் பிரகாஷ் மூச்சு திணறி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.