என் மலர்
நீங்கள் தேடியது "பெயிண்டர் பலி"
- திருமங்கலம் அருகே லாரி மோதி பெயிண்டர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள திருவாழவாயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் முனுசாமி (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி சுந்தரலட்சுமி, 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் முனுசாமி மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் விமான நிலைய பகுதியில் பெயிண்டிங் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கம்பி மீது பட்டதால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
- கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 29).இவர் கிருஷ்ணகிரி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் தங்கியுள்ள வீட்டின் முன்புறம் சென்ற மின்கம்பி ஒன்று மிகவும் தாழ்வாக சென்றுள்ளது.
எதிர்பாராத விதமாக ரஞ்சித்தின் கை அந்த கம்பி மீது பட்டதால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல தளி அருகேயுள்ள குமார பாளையம் பகுதியை சேர்ந்த மாரப்பா (57) என்ற பெயிண்டிங் தொழிலாளி தான் வேலை பார்த்த கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- பூ மார்க்கெட் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 40). பெயிண்டர். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் மணிகண்டன் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார்.
பின்னர் போதை தலைகேறிய நிலையில் மேட்டுப்பாளையம் ரோடு பூ மார்க்கெட் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள சாக்கடையில் தவறி விழுந்து இறந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமையாகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
- தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த அடிபட்டது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள தென் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52). பெயிண்டர். இவருக்கு ஆகாஷ் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.இவர் சின்னசேலத்திற்கு பெயிண்ட் அடிக்கும் கூலி வேலைக்கு தினமும் சென்று வருவார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை தென் பொன்பரப்பி கிராமத்தில் இருந்து சின்ன சேலத்திற்கு இரு சக்கர வாகனத்தில் ராஜேந்திரன் சென்றார்.அவர் அமையாகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த அடிபட்டது.
பின்னர் அருகில் இருந்த வர்கள் ராஜேந்திரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்ன சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப் பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இது குறித்து ராஜேந்திர னின் மகன் ஆகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார்.
- பஸ் படிகட்டில் பயணம் செய்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 45). இவர் பெங்களூருவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு இவர் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் வந்ததார். பின்னர் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை சுமார் 2 மணி அளவில் அரசு பஸ்சில் பெரணம்பாக்கம் நோக்கி சென்றார். பஸ்சில் அதிக அளவில் பயணிகள் இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையை அடுத்த இனம்காரியந்தல் அருகில் உள்ள சுங்கச்சாவடி வழியாக பஸ் செல்லும் போது படியில் தொங்கிக் கொண்டிருந்த சேட்டு எதிர்பாராத விதமாக அங்கிருந்த தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அப்புசாமி லேஅவுட் பகுதியில் உள்ள வீட்டிற்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார்.
- அஜாக்கிரதையாக செயல்பட்ட வீட்டின் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
கோவை,
கோவை புலியகுளம் சவுரிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன்(58). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் கோவை அப்புசாமி லேஅவுட் பகுதியில் உள்ள வீட்டிற்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அப்போது அங்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒரு இரும்பு கேட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பத்மநாபன் மீது இரும்பு கேட் விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மகன் விஷ்னு கோபால் (28) ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலீசார் அஜாக்கிரதையாக செயல்பட்ட வீட்டின் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீேழ விழுந்து விட்டார்.
- வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடவள்ளி,
கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
முரளி என்ற பெயிண்டர் தன்னுடன் அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் (50), சாய்பாபா காலனி ஹரிதாஸ் ஆகிய 2 பேரை இன்று வேலைக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தார். 9.30 மணி அளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்க தொடங்கினர். சாரத்தில் சந்திரன் தொங்கிய படி பெயிண்ட் அடித்தார். மற்ற இருவரும் கயிறை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீழே விழுந்து விட்டார்.
நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்ததின் தலையின் பின் பகுதி சுவரில் மோதியது. காயம் அடைந்த அவரை உடன் வேலை பார்த்தவர்களோ, அக்கம்பக்கத்தினரோ மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று இருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஒரு மணி நேரத்துக்கு பின் 108 ஆம்புலன்சு அங்கு வந்து சந்திரனை மீட்டுச் சென்றது. அரசு ஆஸ்பத்திரியில் சந்திரனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுபற்றி வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மனித நேயம் மறத்து போய் விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
- பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரும்பாக்கத்தில் பிரபல நட்சத்திர விடுதி உள்ளது. 100 அடி சாலையை ஒட்டி உள்ள இதன் வளாகத்தில் 2 மாடியில் புதிய கட்டிடம் உள்ளது. அங்கு பெயிண்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஜய்(18) என்பவர் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் பணியில் ஈடுபட்ட போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அய்யப்பனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
இந்த வணிக வளாகத்தில் ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இங்கு 4- வது மாடியில் உள்ள ஒரு கடைக்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு இந்த பணியில் அய்யப்பன் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார்.
கயிற்றில் தொங்கியபடியே அவர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து விழுந்தது. இதில் தொழிலாளி அய்யப்பன் தவறி கீழே விழுந்தார்.
இதில் கீழே விழுந்த அய்யப்பனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அய்யப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த அய்யப்பனின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் ஆகும்.
அய்யப்பன் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னைக்கு உடலை வாங்க விரைந்துள்ளனர்.
- ஊராட்சி மன்ற அலுவலக த்தின் மேல் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டி ருந்தார்.
- உயர் மின்னழுத்த கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீச ப்பட்டு உயிரி ழந்தார்.
பெரும்பாறை:
திண் டுக்கல் மாவட்டம் பெரும் பாறை அருகே உள்ள மங்களம் கொம்பு கிரா மத்தை சேர்ந்த மூர்த்தி மகன் மங்களகார்த்தி (வயது 38). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இவர் கும்பரையூர் ஊராட்சி மன்ற அலுவலக த்தின் மேல் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டி ருந்தார். அப்போது சுவர் அருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீச ப்பட்டு உயிரி ழந்தார்.
- குடி பழக்கத்துக் அடிமையான வாலிபருக்கு இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.
- தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து மயங்கினார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்தவர் கணபதி (வயது42). திருமண மாகாதவர். குடி பழக்கத்துக் அடிமையானவர். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.
பெயிண்டிங் வேலை பார்த்து வந்த கணபதிக்கு சம்பவத்தன்று சீலையம்பட்டி சமத்துவ புரத்தில் வேலை பார்த்தபோது வலிப்பு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து விட்டார்.
தேனி க.விலக்கு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் கருப்புத்துரை கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தூக்கி வீசப்பட்ட சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
- அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) பெயிண்டர்.
இவர் நேற்று இரவு சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பெங்களூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவரை தேடி வருகின்றனர்.