என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரர்"
- போலீஸ்காரர் பிரபுராஜ் காரின் முன்பகுதி பானேட்டில் விழுந்தார்.
- காரின் பேனட்டில் இழுத்து செல்லப்படும் காட்சிகள் வீடியோ பதிவாகி இருந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் சிமோகா கிழக்கு போக்குவரத்து பிரிவு போலீசில் பிரபுராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு கல்லூரி அருகே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் போக்குவரத்து விதிகளை மீறி பஸ் நிலையம் நோக்கி சென்றது. இதை கவனித்த போலீஸ்காரர் பிரபுராஜ் அந்த காரை நிறுத்த முயன்றார்.
ஆனால் அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தால் போலீஸ்காரர் பிரபுராஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரம் அடைந்த காரை ஓட்டி வந்த நபர் திடீரென காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். அப்போது போலீஸ்காரர் பிரபுராஜ் காரின் முன்பகுதி பானேட்டில் விழுந்தார்.
ஆனாலும் அந்த நபர் காரை நிறுத்தாமல் ஓட்டினார். சிறிது தூரம் போலீஸ்காரர் பிரபுராஜ் பேனட்டில் தொங்கியப்படி இழுத்து செல்லப்பட்டார். ஒரு கட்டத்தில் காரை நிறுத்தியதும் போலீஸ்காரர் பிரபுராஜ் காரில் இருந்து இறங்கி அதிர்ஷ்ட வசமாக தப்பினார்.
அந்த நேரத்தில் அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. இந்த காட்சிகளை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதில் போலீஸ்காரர் பிரபுராஜ் காரின் பேனட்டில் இழுத்து செல்லப்படும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது காரை ஓட்டி வந்தது மிதுன்ஜக்டேல் என்பவர் என்று அடையாளம் தெரிந்தது.
மேலும் போலீஸ்காரர் மீது மோதி காருடன் இழுத்து சென்ற மிதுன் ஜக்டேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிமோகா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.மிதுன்குமார் கூறினார்.
- போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- போலீஸ் ஏட்டு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் கைது.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனூர் அருகே கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது தம்பி பிரதீப். இவர்கள் இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வில்லியனூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போதைப் பொருள் ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு வசந்த் மற்றும் வில்லியனூர் போலீசார் கோபாலன் கடை பகுதிக்கு சென்றனர். வில்லியனூர் போலீசாரை சற்று தூரத்தில் நிற்க வைத்து விட்டு சதீஷ் வீட்டுக்கு போலீஸ் ஏட்டு வசந்த் சென்றார்.
அங்கு சதீசை மடக்கி பிடித்து கை விலங்கிட்டு போலீஸ் ஏட்டு வசந்த் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது சதீசின் மனைவி ராஜேஸ்வரி சதீசை அழைத்து செல்ல விடாமல் தடுக்க முயன்றார்.
மேலும் சதீசின் தம்பி பிரதீப் மற்றும் 17 வயதுடைய மற்றொரு தம்பி, ராஜேஸ்வரி, சதீஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து போலீஸ் ஏட்டு வசந்த்தை சரமாரியாக தாக்கினர். அதோடு குக்கரின் மூடியால் வசந்த்தின் முகத்தில் குத்தினர். இதில் நிலை குலைந்து போன வசந்த் அலறல் சத்தம் போட்டார்.
இந்த சத்தம் கேட்டு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த வில்லியனூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த போலீஸ் ஏட்டு வசந்த்தை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து போலீஸ் ஏட்டு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடி சதீஷ், அவரது மனைவி ராஜேஸ்வரி, தம்பி பிரதீப் மற்றும் 17 வயதுடைய மற்றொரு தம்பி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார்.
- போலீசார் விரைந்து வந்து நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருநின்றவூர்:
திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் நரேந்திரன்(48). போலீஸ்காரரான இவர் திருமுல்லை வாயல் போலீஸ் நிலையத்தில் தனிப்படைபிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில நேற்று இரவு அவர் திருமுல்லை வாயல் ஏரிக்கரை அருகே சென்றார். அப்போது அங்கு 8 பேர் கும்பல் மதுகுடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை நரேந்திரன் கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.
இதனால் போதை கும்பலுக்கும் போலீஸ்காரர் நரேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது. நரேந்திரன் சாதாரண உடையில் இருந்ததால் அவர் போலீஸ்காரர் என்று தெரியாமல் போதை கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அருகில் கிடந்த இரும்பு கம்பியாலும் தலையில் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார்.
உடனே போதை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு வந்த அவ்வழியே வந்தவர்கள் நரேந்திரன் படுகாயத்துடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டனர். தற்போது அதே போல் மீண்டும் சம்பவம் நடந்து உள்ளது.
இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காவலரை தாக்கிய 8 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.
- பாளை ஜெயிலில் அடைப்பு
- கடந்த 2017-ம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
நாகர்கோவில், அக்.21-
ராஜாக்கமங்கலம் அருகே விளாத்திவிளையை சேர்ந்தவர் கண்ணன் என்ற ஜிம் கண்ணன். இவர் மீது ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஜெகநாதன் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் கண்ணன் பெயர் இடம் பெற்றுள்ளது. ஜெகநாதன் கொலை வழக்கில் கைது கைது செய்யப்பட்ட கண்ணன் ஜாமீனில் விடுதலை ஆனார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.
இதேபோல் பழவூர் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றிலும் கைது செய்யப்பட்ட கண்ணன் தலைமறைவாக இருந்து வந்தார். பழவூர் போலீசார் கண்ணனை தேடி வந்தனர். இந்த நிலையில் பழவூர் போலீசார் கண்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை பழவூர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கண்ணனை பாளையங்கோட்டை ஜெயில் அடைத்தனர்.
- லாரி சக்கரத்தில் சிக்கிய போலீஸ்காரர் உடல் நசுங்கி பலியானார்.
- திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 32). நரிக்குடி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் இன்று காலை போலீஸ் நிலையத்தில் இருந்து மானாசாலை செக் போஸ்ட்டிற்கு பணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மறையூர் பாலத்தை கடந்து வளைவில் சென்ற போது ராஜேசுவரனுக்கு எதிர் திசையில் வேகமாக வந்த லாரி ராஜேசுவரன் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்திற்குள் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ்காரர் மீது தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.
- சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே உள்ள நகரி 4 வழிச்சாலையில் சம்பவத் தன்று சோழவந்தான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு சென்றவர்கள் விதிகளை மீறி பொதுமக்களை அச்சு றுத்தும் வகையில் கூச்ச லிட்டபடி சென்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் போலீஸ்காரர்களிடம் தகராறு செய்து தாக்கியது அம்பலத்தடி கிராமத்தை சேர்ந்த அசோக்கு மார்(வயது21), பிள்ளை யார்நத்தம் கிராமத்தை சேர்ந்த திருச்செந்தில்(20) ஆகிய 2 பேர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டார்.
- மற்றொரு சம்பவத்தில் மகனும் சிக்கினார்.
மதுரை
மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருபவர் வரதராஜன். இவர் மதுரை ஆயுதப்ப–டையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
இவர்கள் புதிய அரசு மருத்துவமனை பின்புறம் நின்று கொண்டு அந்த பகுதியில் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று பிடித்தனர்.
உடனே அந்த பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்களும் தாங்கள் அணிந்து இருந்த ஹெல்மெட்டை கழற்றி, போலீஸ்காரர் மணி கண்டனை சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்கச்சென்ற தலைமைக் காவலர் வரதராஜனையும் சரமாரியாக தாக்கி உள்ள னர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு விசாரணை நடத்தியபோது இருவரும் சிவகங்கை மாவட்டம் சிதலூரை அடுத்த பில்லூரை சேர்ந்த நிறைகுளம் என்பவரது மகன்கள் அண்ணன், தம்பிகளான பிரவீன்குமார் (வயது 27) மற்றும் நவீன்குமார் (24) என்று தெரிய வந்தது. அவர்களை போலீ சார் கைது செய்தனர்.
மதுரை போக்குவரத்து திட்ட பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜான்துரை (59). இவரது மகன் ஆரோக் கிய ஜெயமுத்து. இவர் திருமங்கலம் சியோன் நகர் 2-வது தெருவில் வசித்து வருகிறார். அவர் பழங்காநத்தம் ஆர்.சி. தெருவில் உள்ள பள்ளி ஒன்றில் தற்காலிக ஊழியராகவும் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களில் தந்தை, மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினையில் மனவருத்தம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மகனை பார்க்க அவர் வேலை செய்யும் பள்ளிக்கு தந்தை சென்றுள்ளார்.
அங்கு தந்தை ஜான் துரையை ஆபாசமாக பேசிய மகன் அவரை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஜான்துரை சுப்பிரமணியபுரம் போலீ–சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தந்தையை தாக்கிய மகன் ஆரோக்கிய ஜெயமுத்துவை கைது செய்தனர்.
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு போலீஸ்காரர்கள் தாக்கப் பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
- சோதனையில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு ஒரு பயணி நின்றார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வெளிப்பாளையம் போலீஸ் ஸ்டேசன் ஏட்டு கோடீஸ்வரன்(33) அந்த பயணியிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏட்டு கோடீஸ்வரன் அந்த பயணியை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அந்த பயணியை லத்தியால் தாக்கி யது சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் பயணியை தாக்கியது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்கிற்கு தகவல் தெரிந்தது. உடனே இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜிடம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய எஸ்பி உத்தரவிட்டார். இதன்பே ரில் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் போலீஸ் காரர் பயணியை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு கோடீஸ்வரனை சோதனை செய்ய நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் குழுவினர் சோதனை செய்ததில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் மது அருந்தி ஒழூங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஏட்டு கோடீஸ்வரனை சஸ்பெ ண்ட் செய்து எஸ்பி ஹர்ஷ்சிங் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
- ஒருவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்து வந்தனர்.
- பிடிபட்ட வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் குடிபோதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக கோட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். டாஸ்மாக் பாரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிருடன் அந்த வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டனர். உடனே ஒருவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்து வந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர், போலீசார் மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதை தடுத்தார். பின்னர் அந்த வாலிபர் போலீசாரை திடீரென தாக்கினார். இதில் போலீஸ்காரர் நிலை தடுமாறினார். பின்னர் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பிடிபட்ட வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசை தாக்கி விட்டு தப்பி சென்ற வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகளை ஆய்வு செய்து அவரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
குடிபோதை தகராறில் போலீசாரை தாக்கிய சம்பவம் கோட்டார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீஸ்காரர் சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றார்.
- போலீஸ்காரரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை,
கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், பிரசவத்திற்காக பெண்களும், குழந்தைகள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற ஏராளமான குழந்தைகளும் வந்து செல்கின்றனர்.
கோவை சங்கனூரை சேர்ந்த ருக்மணி என்ற பெண் தனது 2-வது பிரசவத்திற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ருக்மணியுடன் அவரது மகன் 4 வயது சிறுவனும் வந்திருந்தான்.
நேற்று மாலை அந்த சிறுவன் திடீரென மாயமானன். சிறுவனை அவரது தந்தை மணிகண்டன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி அலைந்தனர்.அப்போது மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஸ்ரீதர், மருத்துவமனையின் வெளிப்பகுதியில் திருச்சி சாலையில் ஒரு குழந்தை நிற்பதை பார்த்து அந்த குழந்தையிடம் பேசினார். 4 வயதே ஆன அந்த சிறுவனால் தன்னை முறையாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றார். அப்போது அந்த சிறுவன் தனது தாய் இருக்கும் வார்டை அடையாளம் காட்டினான். தொடர்ந்து விசாரித்ததில் சிறுவன் ருக்மணி மற்றும் மணிகண்டன் ஆகியோரது மகன் என்பது தெரியவந்தது.
பின்னர் போலீஸ்காரர் ஸ்ரீதர் அந்த சிறுவனை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்துச் சென்றார். போலீஸ்காரரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- போலீஸ்காரர் சாவு சம்பவத்தில் வர்ம மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
- திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது.
மதுரை
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). ஆயுதப்படை காவலரான இவருக்கு கண்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலியால் அவதிப்பட்ட காவலர் ராஜபாண்டி வில்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவருக்கு அளித்த வர்ம சிகிச்சையில் தவறு ஏற்பட்டு தான் இறந்ததாக காவலர் ராஜபாண்டியின் மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில் இன்று காவலரின் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வந்ததை அடுத்து வர்ம மருத்துவமனை மருத்துவர் சிவசுப்பிரமணியத்தை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.
- ராஜீவ்காந்தியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
- இதில் திடுக்கிடும் தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சித்தோடு பகுதிகளில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக பல்வேறு திருட்டு, கொள்ளை சம்பவங்களும், வழிப்பறியும் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக பெருந்து றை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பெருந்துறை, பவானி ரோட்டில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்து சென்ற 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் அளித்த தகவலை கேட்டு போலீசாரே அதிர்ச்சி யடைந்தனர்.
அந்த 3 பேரும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பகலில் பணிபுரிந்து கொண்டும், இரவில் கொள்ளை யடிக்கும் தொழி லிலும் ஈடுபட்டு வந்துள்ள னர்.
அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஈராேடு ஆயுதப்ப டையில் காவலராக பணி புரிந்து வந்த ராஜீவ்காந்திக்கு சொந்தமானது என்றும், அவர்கள் கொள்ளையில் ஈடுபடுவதற்கு திட்டம் வகுத்து கொடுத்ததே ராஜீவ்காந்தி தான் என்றும் கூறியுள்ளனர்.
பிடிபட்ட 3 பேரில் ஒருவரான நெல்லை மாவட்டம், திசையன்விளை, மகாதேவன்குளத்தை சேர்ந்த கார்த்திக் என்கிற செந்தில்குமார் கடந்த 2021-ல் பெருந்துறையில் மோட்டார்சைக்கிள் திருடிய குற்றத்துக்காக கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த ராஜீ வ்காந்தி, செந்தில்குமாரை அழைத்து வந்தார்.
செந்தில்குமாரிடம் பேச்சு கொடுத்த ராஜீவ்காந்தி, போலீசாரிடம் சிக்காமல் திருடுவது எப்படி? என்று நான் சொல்லித்தருகிறேன். சிறை தண்டனை முடிந்ததும் என்னை வந்து பார் என்று கூறியுள்ளார்.
அதன்படி சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார், ராஜீவ்காந்தியை நேரில் சந்தித்தார். பெருந்துறை, பெருமாநல்லூர், சித்தோடு என அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளைய டிப்பதற்கு திட்டம் வகுத்து தந்தார் ராஜீவ்காந்தி, செந்தில்குமார் தனது நண்பர்களான மதுரை மேலூரை சேர்ந்த மணி கண்டன் என்கிற பாலசுப்பிரமணி (42), நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி (31) ஆகியோ ருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவங்க ளில் ஈடுபட்டார்.
பெருந்துறையில் ஒரு வீட்டில் இருந்து 6 பவுனும், சித்தோடில் முகமூடி அணிந்து உதவி கோட்ட மின்பொறியாளர் ஒருவரின் வீட்டில் இருந்து 24 பவுன் நகைகளையும் கொள்ளை யடித்தனர்.
இதுதவிர பல வழிப்பறி சம்பவங்களிலும் இந்த கும்பல் ஈடுபட்டதும் தெரிய வந்தது. எந்தந்த இடத்தில் திருடினால் போலீசாருக்கு சந்தேகம் வராது. எங்கெல்லாம் சி.சி.டி.வி. கேமிரா இருக்காது, போலீசார் ரோந்து வராத பகுதிகள் என்பது போன்ற தகவல்களுடன் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக இருந்தவர் ராஜீவ்காந்தி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த காவலர் ராஜீவ்காந்தி முதலில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்தார்.
அப்போதே கஞ்சா வியாபாரிகள், லாட்டரி சீ்ட்டு விற்பவர், சீட்டாட்ட கிளப்கள், சாராயம் விற்பவர்களுடன் தொடர்பில் இருந்ததால் கணிசமாக சம்பாத்தியம் செய்து சொந்த வீடு, நிலம் போன்றவற்றை வாங்கினார்.
அங்கு பணிபுரிந்த பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக அந்த பெண் காவலர் காெடுத்த புகாரின்பேரில் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு ராஜீவ்காந்தி பணிமாற்றம் செய்யப்பட்டார்.
அங்கும் பல்வேறு புகார்கள் வந்ததால் ராஜீவ்காந்தி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து ஆயுதப்படை பிரிவுக்கு தூக்கியடிக்கப்பட்டார்.
அதன் பின்னர் தான் பழைய குற்றவாளியான செந்தில்குமார் தலைமையில் 3 பேரையும் களம் இறக்கி பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன் மூலம் ராஜீவ்காந்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதனையடுத்து ராஜீவ்காந்தி உள்பட 4 பேரும் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ராஜீவ்காந்தியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி பெருந்துறை போலீசார் நீதிமன்றத்தில் அணுகி போலீஸ்காரர் ராஜீவ்காந்தி யை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கூறினர்.
இதற்கு போலீசாரு க்கு அனுமதி கிடைத்தது. இதனையடுத்து போலீசார் ராஜீவ்காந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்