என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் பலி"

    • மாடுகளை ஓட்டி வர மீண்டும் காட்டுப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள ஜேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதலை முத்து (வயது60). இவர் நேற்று தனது மாடுகளை அருகில் உள்ள சின்னமலை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

    பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வர மீண்டும் காட்டுப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது உறவினர்கள் இன்று காலை அவரை தேடி காட்டு பகுதிக்கு சென்றபோது அங்கு மதலை முத்து யானை தாக்கி உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற அஞ்செட்டி வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே மினி வேன்-கார் மோதி முதியவர் பலியானார்.
    • துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 11 பேர் காயமடைந்தனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது தந்தை இறந்த துக்க நிகழ்ச்சிக்காக வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியை சேர்ந்த சோலையப்பன், குருசாமி, பழனிச்சாமி, முப்பிடாதி, ஆறுமுகம், அழகர்காளை, முத்துக்காளை, மணி உள்ளிட்ட 11 பேர் மினி வேனில் புறப்பட்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் அதே வேனில் விராலிப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி வளைவில் சென்றபோது திருமங்கலத்தில் இருந்து வந்த கார், மினி வேன் மீது மோதியது. இதில் மினி வேன் தலை குப்புற கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்த 11 பேரும் படுகாயம் அடைந்தனர். காரில் வந்த தென்காசி சித்தாபுரத்தை சேர்ந்த சுப்புராஜூம்(வயது59) காயமடைந்தார்.

    தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    காயமடைந்த சோலையப்பன்(68) மதுரைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.
    • இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.

    பவானி:

    ஈரோடு சின்னசோமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (59). தனியாருக்கு சொந்தமான சைசிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ராகுல் என்ற மகனும், கோபிகா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ராமசாமி இரவு 8 மணிக்கு வீட்டிலிருந்து கடைக்கு சென்று வருவதாக மனைவியிடம் தெரிவித்து சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்-கோவை பைபாஸ் ரோடு பவானி அருகிலுள்ள நசி யனூர், ஆட்டையாம்பா ளையம் பிரிவு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று ராமசாமியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக மனைவி பிரியா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பி ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேலு மீது அந்த வழியாக வந்த கார் ேமாதியது.
    • சிகிச்சை பலனளிக்காமல் வேலு பரிதாபமாக இறந்தார்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் வேலு (வயது 76). சம்பவத்தன்று இவர் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் முதியவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதியவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வேலு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி முதியவர் பலியானார்.
    • சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரி (75). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சோழம்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சேமபாளையம் தனியார் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் கீழே விழுந்த மாரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அழகாபுரத்தை சேர்ந்த சந்துரு என்பவர் மீது சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவிநாசி பாளையம் சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி யுள்ளார்.
    • 8 மணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் மீட்கப்பட்டது.

    விழுப்புரம்:

    பிரம்மதேசம் காளி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துவிட்டு, துணி துவைத்துக் கொண்டி ருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி யுள்ளார். இது குறித்து அருகில் இருந்த பொது மக்கள் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரி வித்ததின்பேரில், திண்டி வனம் மற்றும் மரக்காணம் தீயணைப்பு துறையினர் கிணற்றில் முதியவரை தேடும் பணியில் ஈடுபட்ட னர்.

    பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்காததால், 2 ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளி யேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடு பட்டனர். இதனையடுத்து 8 மணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரி சோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர், துணி துவைக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள நடுக்கோட்ைடயை சேர்ந்தவர் சேகர் (வயது58). இவர் தனியார் திருமண மண்டபத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று தேனி மெயின்ேராடு எஸ்.எஸ்.புரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து அவரது மகள் சுகப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்க் அருகே நடந்து வந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
    • இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரம் குமாரசாமி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சம்மந்தம்(70). இவர் நேற்று மாலை தருமபுரி கிருஷ்ணகிரி சாலையில் நான்கு ரோடு பெட்ரோல் பங்க் அருகே நடந்து வந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

    உடலை கைப்பற்றி தருமபுரி நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கொடுமுடி அருகே ரெயில்வே கேட் பகுதியில் முதியோர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
    • ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த முதியவர் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ரெயில்வே கேட் பகுதியில் முதியோர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கடந்த 23ஆம் தேதி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    எனினும் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இறந்த முதியவர் ரோஸ் கலர் அறிக்கை சட்டை, ரோஸ் கலர் வேட்டி அணிந்திருந்தார். மேலும் வலது முன் கையில் கருப்பு மச்சமும், இடது கால் முட்டியில் ஒரு காயத்தழும்பும் இருந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த முதியவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதி சேர்ந்த ஆறுமுகம் (69) என தெரிய வந்தது.

    இவர் கடந்த 23ஆம் தேதி பாலக்காடு - திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது கொடுமுடி தாண்டி சென்ற போது ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தது தெரிய வந்தது.

    இதன் பின்னர் ரயில்வே போலீசார் கரூரில் உள்ள முகவரியில் சென்று விசாரித்தபோது அப்படி ஒரு நபர் இல்லை என தெரிய வந்தது.

    இந்நிலையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த முதியவர் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாமணி கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மயங்கி கிடந்தார்.
    • அக்கம்பக்கத்தினர் மகாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் காவேரி ஆர்.எஸ்.ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாமணி (70). இவர் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மயங்கி கிடந்தார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மகாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணுவ வீரர் ஓட்டி சென்ற கார் மோதி முதியவர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தினைக்குளத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 43). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

    போஸ் தற்போது விடு முறையில் சொந்த ஊர் வந்துள்ளார். அவர் தனது காரை மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் ஓட்டி சென்றார். வேந்தோணி விலக்கு என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர் திசையில் நின்று கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது.

    மேலும் மேலும் அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பொழி கால் கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (65) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×