என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில்கள்"
- கார்த்திகை மாதம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும்.
- ரெயில் செல்லும் வழித்தடங்களில், முக்கியமானதாக கிணத்துக்கடவு பகுதியும் அமைந்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்கி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வெளியூர் பயணங்களுக்கு அதிக அளவில் ெரயில் பயணத்தையே மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கி உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கார்த்திகை மாதம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும். இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ெரயில் சேவை இல்லாததால் இரண்டு ெரயில்கள் மாறி மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது, இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு ெரயில் சேவை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது வரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கூட சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து திருப்பூர் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதே போன்று கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் உடுமலை-பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி - திண்டுக்கல் ெரயில்பாதை அகல ெரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி 2017ல் நிறைவடைந்தது.ஆனால் மீட்டர்கேஜ் காலத்தில் பொள்ளாச்சி வாயிலாக இயக்கப்பட்ட கோவை- ராமேஸ்வரம், கோவை- தூத்துக்குடி, கோவை-கொல்லம், கோவை - திண்டுக்கல் போன்ற ெரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.
இந்த ெரயில்களை இயக்க வேண்டும் என, ரெயில்வே பயணிகள் நலச்சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உட்பட பலரும், அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை.கொரோனா பரவலுக்கு முன் காலை மற்றும் இரவு நேரங்களில், கோவை மாவட்ட பயணிகள் வசதிக்காக கோவை-பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சி - கோவை ெரயில்கள் இயக்கப்பட்டன. அவை இப்போது இயக்கப்படுவதில்லை.
இதனுடன் கோவை, பொள்ளாச்சி வழியாக டெல்டா மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் - தாம்பரம், தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட திருநெல்வேலி, டானாபூர், வாரம் ஒரு முறை இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ெரயில்களை, தினசரி ெரயில்களாக இயக்க வேண்டும்.
பாலக்காடு - திருநெல்வேலி செல்லும் பாலருவி விரைவு ெரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், வேலை நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - கோவை மெமூ ெரயிலையும், பொள்ளாச்சி வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
இவற்றுடன் திருவனந்தபுரம் - மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ெரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும், பொள்ளாச்சி வழியாக கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ெரயிலை இயக்கவும், ெரயில்வே வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. அந்த பணிகள் கூட இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.
அதேபோல், அமிர்தா ரெயிலின் மூன்று படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை, கொரோனாவுக்கு முன்பிருந்ததை போலவே அமரும் வசதி கொண்ட பெட்டிகளாக மாற்றி இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு உடுமலை, பொள்ளாச்சி பகுதி மக்களின் ரெயில்வே சேவை குறித்த கோரிக்கைகள் ஏராளமாக உள்ள நிலையில் அதை பாலக்காடு கோட்ட நிர்வாகமும், தெற்கு ெரயில்வேயும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.தெற்கு ெரயில்வே நிர்வாகம், இந்த கோரிக்கைகளில் கவனம் செலுத்தி பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகல ெரயில்பாதையாகவும், மின்மயமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ள உடுமலை, பொள்ளாச்சி ெரயில் வழித்தடத்தில், மக்கள் எதிர்பார்க்கும் ெரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ெரயில்வே ஆர்வலர்கள் பிரதமருக்கு மனுவாக அனுப்பியுள்ளனர்.
இது குறித்து ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கோவை - பொள்ளாச்சி ரெயில் காலை, 5:45 மணிக்கு கோவையில் புறப்பட்டு, பொள்ளாச்சி வரும். அதேபோல் இரவு 8:30 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு கோவை செல்லும். இதனால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதி பயணிகளுக்கு செம்மொழி, ஆலப்புழா மற்றும் நீலகிரி ஆகிய விரைவு ெரயில்களை பிடிக்கவும், பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலை பிடிக்கவும், இணைப்பு ெரயிலாக இருந்தது.அதேபோல் பொள்ளாச்சி - கோவை ெரயில், சென்னை, நீலகிரி, சேரன், பெங்களூரு, யஷ்வந்த்பூர் ஆகிய ெரயில்களுக்கு இணைப்பு ெரயிலாக இருந்தது.கொரோனா பரவலின்போது இந்த இரண்டு ெரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, இந்த ெரயில்களை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருநெல்வேலி வரை வாராந்திர விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில், வெள்ளிக்கிழமைகளில் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ெரயில் செல்லும் வழித்தடங்களில், முக்கியமானதாக கிணத்துக்கடவு பகுதியும் அமைந்துள்ளது. ஆனால், கிணத்துக்கடவில் இந்த ெரயில் நிற்காததால், இப்பகுதி மக்கள் பொள்ளாச்சி அல்லது போத்தனூர் சென்று, இந்த ெரயிலில் பயணிக்க வேண்டியுள்ளது.தெற்கு ரயில்வே நிர்வாகம், திருநெல்வேலி ெரயிலை கிணத்துக்கடவில் நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
- கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
திருப்பூர்:
சேலம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 3-ந் தேதிகளில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கோவை-சென்னை சென்ட்ரல் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. மேலும் கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கோவை செல்லும் உதய எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
கே.எஸ்.ஆர். பெங்களுரு-எர்ணாகுளம் எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர். பெங்களுரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இரு வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது,
- ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என சேலம் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தருமபுரி,
பெங்களூரு - ஓசூர் இடையே உள்ள கார்மெலாரம்- ஹீலாலிகே ரெயில் நிலையங்களுக்கு இடையில் இரு வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது, இதையொட்டி கீழ்கண்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என சேலம் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி பெங்களூரு- காரைக்கால் தினசரி ரெயில் (வண்டி எண் 16529) வருகிற 19 மற்றும் 20-ந் தேதிகளில் மையப்பனஹல்லி, பங்காரு பேட்டை, திருப்பத்தூர், சேலம் வழியாக செல்லும், இந்த ரெயில் பெலாந்தூர், ஹீலாலிகே, ஆனேக்கல் ரோடு, ஓசூர், கெலமங்கலம், ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தருமபுரி, சிவாடி, முத்தம்பட்டி, தொப்பூர், காருவள்ளி, ஓமலூர் வழியாக செல்லாது,
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் காரைக்கால் - பெங்களூரு தினசரி ரெயில் (16530) வருகிற 19 மற்றும் 20 -ம் தேதிகளில் காரைக்கால் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்காரு பேட்டை, பையப்பனஹள்ளி வழியாக செல்லும். இந்த ரெயில் ஓமலூர், தருமபுரி, பாலக்கோடு, ஓசூர், கார்மெலாரம், ஹீலாலிகே வழியாக செல்லாது. மேலும் பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (12677) வருகிற 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பெங்களூரு கண்டோன்மென்ட், பையப்பனஹள்ளி, பங்காரு பேட்டை, திருப்பத்தூர், சேலம் வழியாக இயக்கப்படும், இந்த ெரயில் கார்மெலாரம், ஓசூர், தருமபுரி வழியாக செல்லாது,
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ெரயில் (12678) வருகிற 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்காரு பேட்டை, பையப்பனஹள்ளி, பெங்களூரு கண்டோன்மென்ட் வழியாக செல்லும், இந்த ரெயில் தருமபுரி, ஓசூர், கார்மெலாரம் வழியாக செல்லாது.
- மனுவை பெற்று கொண்ட சசிகலா புஷ்பா, கடம்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார்.
- அனைத்து ரெயில்களும் கடம்பூரில் நின்று செல்ல வழி செய்வேன் என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
கயத்தாறு:
அகில இந்திய நாடார் சக்தியின் மகளிர் அணி தலைவி விஜயாசந்திரன், சென்னை வாழ் நாடார் உறவின் முறையின் தலைவர் சவுந்திர பாண்டியன், பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, செயலாளர் சேகர் ஆகியோர் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி சசிகலா புஷ்பாவிடம் மனு கொடுத்தனர்.
சசிகலா புஷ்பா
அதனை பெற்று கொண்ட சசிகலா புஷ்பா, கடம்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ. க. தமிழக தலைவர் அண்ணாமலையின் உதவியோடு, ரெயில்வே துறை அமைச்சர், மதுரை மண்டல மேலாளர் ஆகியோரை சந்தித்து மார்ச் 30-ந்தேதிக்குள் கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வழி செய்வேன்.
கடம்பூரில் இருவழி பாதை அமைக்கப்பட்டு அங்கு பயணிகள் நடந்து செல்ல வழி அமைக்காததால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதனை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வியாபாரிகள் சங்ககூட்டம்
அப்போது கடம்பூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் தனசேகரன், பொதுச் செயலாளர் சந்திரசேகரன், வியாபாரி சங்கத் துணைத் தலைவர்கள் புஷ்ப கணேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் சித்ராதேவி, கலாராணி, செல்வ காயத்ரி, கடம்பூர் பா.ஜ.க. நகரச் செயலாளர் ராஜகோபால், துணைச் செயலாளர் கருப்பசாமி ஆகியோர் உடனிருநதனர்.
இதனைத் தொடர்ந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சசிகலா புஷ்பாவிடம், வியாபாரிகள் மனுக்கள் கொடுத்தனர்.
அதனை பெற்றுக் கொண்டு அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மதுரை வழியாக செல்லும் 3 ரெயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- வருகிற 24-ந்தேதி நாகர்கோ விலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12668) ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.
மதுரை
திருவனந்தபுரம் கோட்டத்தில் மேலப்பாளை யம்-நாங்குநேரி இடையே இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் தாம்பரத்தில் இருந்து நாளை (18-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை புறப்படும் நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் (20691) மற்றும் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா ரெயில் (20692) ஆகியவை நெல்லை- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும்.
அதேபோல திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி விரைவு ரெயில்கள் (22627/22628) இரு மார்க்கங்களிலும் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்த புரம் இண்டர்சிட்டி ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். அதேபோல வருகிற 22-ந்தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரெயில் (22657) மற்றும் நாகர்கோவிலில் இருந்து வருகிற 23-ந்தேதிபுறப்படும். தாம்பரம் வாரம் மும்முறை சேவை ரெயில் (22658) ஆகியவை விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும்.
இதேபோல சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 23-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12667) மற்றும் வருகிற 24-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12668) ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.
- ஜூன் மாதம் முதல் வாரத்தில் 3 நாட்கள் தாம்பரம் - செங்கோட்டை ரெயில் இயங்க இருக்கிறது.
- பேராவூரணியில் 2 நிமிடங்கள் வாராந்திர ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்.
பேராவூரணி:
பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்கம் சார்பில் தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 8-ந்தேதி முதல் வாராந்திர ரெயிலாகவும், ஜூன் மாதம் முதல் வாரத்தில் 3 நாட்கள் இயங்க இருக்கும் தாம்பரம் - செங்கோட்டை ரெயில் (வண்டி எண்: 20683), செங்கோட்டை - தாம்பரம் (வண்டி எண்:20684) மற்றும் ஏற்கனவே பேராவூரணி வழியில் இயங்கி கொண்டிருக்கும் செகந்திராபாத் - ராமநாதபுரம் (வண்டி எண்: 07696), ராமநாதபுரம் - செகந்திராபாத் (வண்டி எண்:07695) வாராந்திர ரெயில்கள் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி இடையில் உள்ள பேராவூரணியில் 2 நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- இதர பணிகளுக்காகவும் மக்கள் மடத்துக்குளம் வந்து செல்கின்றனர்.
- சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளத்தை சுற்றிலும் காகித ஆலைகள், நூற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளும் அதிக அளவு உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்களும் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்காகவும், இதர பணிகளுக்காகவும் மக்கள் மடத்துக்குளம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல்-பாலக்காடு அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற பிறகு, மடத்துக்குளம் ரெயில்வே நிலையத்தில் பாலக்காடு-திருச்செந்தூர், கோவை-பழநி உள்ளிட்ட பயணிகள் ெரயில்கள் நிறுத்தப்பட்டு வந்தன. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இவ்வழித்தடத்தில் கூடுதலாக ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மடத்துக்குளம் ரெயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் உடுமலை, பழநிக்கு சென்று ரெயில் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட காலமாக வலியுறுத்தியும் மடத்துக்குளம் ரெயில் நிலையம் குறித்த கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கைகள் குறித்து பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் சார்பில் ரெயில்வே மதுரை மண்டல மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- மடத்துக்குளத்தில் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல் பாலக்காடு- சென்னை எக்ஸ்பிரஸ், அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை மடத்துக்குளம் நிலையத்தில் ஒரு நிமிடம் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த ெரயில் சேவைகளை செயல்படுத்தினால் பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.
- சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
- கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.
நாமக்கல்:
கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்க ளுக்கும், சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.
மறு மார்க்கத்தில் 29-ந் தேதி மதியம் 12.10 மணிக்கு இந்த ரெயில் (எண். 07390) காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, 30-ந் தேதி மாலை 5.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.
இந்த ரெயில் ஹூப்ளியில் இருந்து வரும்போது ராணி பெண்ணூர், ஹரிஹார், தாவன்கரே, பிரூர், அர்சி கெரே, எஸ்எம்விடி பெங்க ளூர், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஹூப்ளி - காரைக்குடி செல்லும் ரெயில் கர்நாடகா மாநிலம் ஹாவேரியிலும், காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் கராஜ்கியிலும் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயில் ஹூப்ளியில் இருந்து காரைக்குடி செல்லும்போது, சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 6.45க்கு வந்து 6.55க்கு புறப்படும், நாமக்கல்லில் இரவு 7.44க்கு வந்து 7.45க்கு புறப்படும், கரூரில் இரவு 8.23க்கு வந்து 8.25க்கு புறப்படும்.
காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் 29-ந் தேதி மாலை 3.28 மணிக்கு கரூர் வந்து, 3.30க்கு புறப்படும். நாமக்கல்லில் மாலை 4.03 மணிக்கு வந்த 4.05 மணிக்கு புறப்படும், சேலத்திற்கு 4.50 மணிக்கு வந்து சேர்ந்து 5 மணிக்கு புறப்படும்.
சேலம், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்:
கர்நாடக மாநிலம் அர்சிகெரே நகரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரள மாநிலம் கண்ணூர் வரை கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இன்று மதியம் 12.15 மணிக்கு கர்நாடக மாநிலம் அர்சிகெரேயில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் (எண்.06205), மறுநாள் மாலை 5.15 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் கன்னூ ரில் இருந்து 29-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்.06206), மறுநாள் 30-ந் தேதி மதியம் 3 மணிக்கு அர்சிகெரே சென்றடையும்.அர்சிகெரே வில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் தும்கூர், சிக் பனா வர், எஸ்எம்விடி பெங்க ளூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கா ரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வட கரா மற்றும் தலச்சேரி வழியாக கண்ணூரை சென்றடையும்.
அர்சிகெரேயில் வரும் இந்த ரெயில் சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 7.47 மணிக்கு வந்து 7.50 மணிக்கு புறப்படும், ஈரோட்டிற்கு இரவு 8.40 மணிக்கு வந்து, 8.50 மணிக்கு புறப்படும், திருப்பூருக்கு இரவு 9.33 மணிக்கு வந்து 9.35 மணிக்கு புறப்படும். கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு இரவு 10.37 மணிக்கு வந்து 10.40 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் நாளை கண்ணூரில் இருந்து அர்சி கெரோ செல்லும்போது கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வந்து 1.55 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு 2.40 மணிக்கு வந்து 2.42 மணிக்கு புறப்படும். ஈரோட்டிற்கு மாலை 3.35 மணிக்கு வந்து 3.45 மணிக்கு புறப்படும். சேலத்திற்கு 4.35மணிக்கு வந்து 4.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
- பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விட்டுள்ளதால், கூட்டம் அதிகரித்துள்ளது.
- இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர்.
உடுமலை:
விடுமுறை நாட்கள் என்பதால் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும்ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
பாலக்காடு - திருச்செந்தூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சிக்கு காலை 7:10 மணிக்கு வந்து 7:15 மணிக்கு கிளம்புகிறது.பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விட்டுள்ளதால், கூட்டம் அதிகரித்துள்ளது. ெரயிலில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து ஏறுகின்றனர். ெரயில் பெட்டியில் இடமில்லாமல் நின்று கொண்டே பயணிக்கும் நிலை காணப்படுகிறது.
இது குறித்து ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-
பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலை மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். மற்ற நாட்களை விட, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர். 110 பேர் வரை உட்கார்ந்து செல்ல வசதியுள்ளது. மற்றவர்கள் நின்று தான் செல்ல வேண்டும்.
உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ஏறும் போது மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதனால் பயணிகள் நின்று கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி ெரயில்வே நிர்வாகம் நான்கு பெட்டிகள் வரை கூடுதலாக இணைக்க வேண்டும். முன்பதிவு செய்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை ெரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் டுவிட்டர் வாயிலாக ெரயில்வே மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வலியுறுத்தினர்.
- கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இருவழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும்.
- தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.
சீர்காழி:
சீர்காழி ரயில் நிலையத்தில் மீண்டும் இரு வழி மார்க்கமாக நின்று சென்ற அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் நிறுத்த போராட்டக் குழுவினர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை வருகின்ற 17ஆம் தேதி அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரெயில்வே நிர்வாக கோட்ட மேலாளர் ஹரிக்குமார், கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனை அடுத்து அறிவி த்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்படுவதாக போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் தெரிவித்தார்.
- மண்டபம், ராமநாதபுரம் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
- தெற்கு ரெயில்வேக்கு நவாஸ்கனி எம்.பி. நன்றி தெரிவித்தார்.
ராமநாதபுரம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், எம்.பி.யுமான நவாஸ்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க தொடர்ந்து தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறேன். மேலும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து நேரிலும் கோரிக்கை விடுத்து வந்தேன்.
இந்த நிலையில், வருகிற 18-ந்தேதி முதல் சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும், ராமேசுவரம்-வாரணாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் ராமநாதபுரம் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்காக தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் பல்வேறு ரெயில்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று செல்ல கோரிக்கை விடுத்து வருகின்றேன்.
அந்த ரெயில் நிலைய நிறுத்த கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விரைவு ரெயில் ஸ்ரீரங்கம்- திருச்சி இடையே ரத்து செய்யப்படுகின்றன.
- சேலம், விருத்தாசலம், பொன்மலை (பை-பாஸ்) வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும்.
தஞ்சாவூர்:
திருச்சி ரெயில்வே கோட்டம் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது :-
திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26, 27 ஆகிய 3 நாட்களில் ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.அதன்படி திண்டுக்கல்- திருச்சி- திண்டுக்கல் முன்பதிவில்லா விரைவு ரெயில் (வண்டி எண்-06498/06499) மற்றும் மயிலாடுதுறை- திருச்சி- மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரெயில் (16233/16234) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
திருப்பாதிரிபுலியூர்- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06889) லால்குடி- திருச்சி இடையேயும், வேளாங்கண்ணி- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06839) பொன்மலை- திருச்சி இடையேயும், திருச்சி- காரைக்கால் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06880) திருச்சி- திருவெறும்பூர் இடையேயும், திருச்சி- திருப்பாதிரிபுலியூர் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06890) திருச்சி- வாளாடி இடையேயும், விருத்தாசலம்- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06891) ஸ்ரீரங்கம்- திருச்சி இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.
இதேப்போல் திருச்சி- விருத்தாசலம் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06892) திருச்சி-லால்குடி இடையேயும், காரைக்குடி- திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06126) குமாரமங்கலம்- திருச்சி இடையேயும், திருச்சி காரைக்குடி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06125) திருச்சி- குமாரமங்கலம் இடையேயும், சென்னை- திருச்சி சோழன் விரைவு ரெயில் (22675) பொன்மலை- திருச்சி இடையேயும் ரத்து செய்யப் படுகின்றன.
ஹுப்ளி-தஞ்சாவூர் இடையிலான சிறப்பு கட்டண விரைவு ரெயில் (07325) நாளை (செவ்வாய்கிழமை) சேலம், விருத்தாசலம், பொன்மலை (பை-பாஸ்) வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.