என் மலர்
நீங்கள் தேடியது "முயற்சி"
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
கன்னியாகுமரி:
களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி கிழங்குவிளையைச் சேர்ந்தவர் பிஜு (வயது 38) இவர் படந்தாலுமூட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இங்கு திருமணமான 20 வயது இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். அவரை மிரட்டி அருகே நின்று, பிஜு போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்ப மாக இருந்ததால், இளம் பெண் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிஜு, இளம்பெண்ணுடன் தான் இருக்குமாறு எடுத்த போட்டோக்களை அவரது கணவர் மொபைல் போனுக்கு அனுப்ப போவ தாக மிரட்டி உள்ளார். மேலும் மற்றொரு மொபைல் போனிலிருந்து அந்தப் போட்டோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பி உள்ளார். இதனால் பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயார் வீட்டுக்கு வந்த பெண் எறும்பு பொடி(விஷம்) யை தண்ணீரில் கலக்கி குடித்து உள்ளார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிஜூவை தேடி வருகின்றனர்.
- நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். இதை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அவர் சொன்ன அடையா ளங்களை வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிய 2 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வழிப்பறிக் கொள்ளையர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பாரதி நகர் பகுதி இளம்பெண் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தனர்.
- சரத்பாபுவின் மனைவி கருவுற்று இருந்ததாகவும், இவருக்கு தெரியாமலேயே இவரது மனைவி கருவை கலைத்ததால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சரத்பாபு (வயது 21). திருமணமான இவர் இன்று அதிகாலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சரத்பாபுவின் மனைவி கருவுற்று இருந்ததாகவும், இவருக்கு தெரியாமலேயே இவரது மனைவி கருவை கலைத்ததால் மனம் உடைந்த சரத்பாபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதேபோல், சேலம் அம்மாபேட்டை இரட்டைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மகேந்திரன் (23). இவர் நேற்று இரவு மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில், விஷத்தை குடித்து மயங்கினார். வீட்டில் இருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மகேந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொண்டலாம்பட்டி காதீயம் காடு பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி சுகவானேஸ்வரி (29). நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுகவனேஸ்வரி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கரட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- இவர் கடந்த 2 வருடமாக தீராத முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கரட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாப்பான் (வயது 65). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2 வருடமாக தீராத முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும், முதுகுவலி சரியாகவில்லை. இந்நிலையில் நேற்று மாலை, வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாப்பானை மீட்டு, நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த செங்கோடன், நடுவனேரியில் 6 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர்.
- நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த செங்கோடன், நடுவனேரியை சேர்ந்த சாரதா, ரெட்டிப்பட்டியை சேர்ந்த ஜெயம்மாள், இவரது கணவர் தங்கமணி மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில், மகுடஞ்சாவடி ஒன்றியம் கூடலூர் ஊராட்சி சின்னஆண்டிப் பாளையத்தில் எங்களுக்கு சொந்தமான 3.41 ஏக்கர் நிலம் உள்ளது. கூடலூர் குன்னிப்பாளையம், கோவையை சேர்ந்த சிலர், முதல்-அமைச்சர் மனைவியின் உறவினர் எனக் கூறிக்கொண்டு, இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சங்ககிரி கோட்டாட்சியர், சார்பதிவாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்ளலாம் என இங்கு வந்தோம் என அவர்கள் கூறினர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் புலியூர்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சந்தேகத்துக்கு இடமாக நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் வாகனத்தை சோதனை செய்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர்.
நேற்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜி தலைமையில் போலீசார் புலியூர்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கண்டெய்னர் வாகனம் ஒன்று சாலை ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்தது.
அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 190 மூடையில் சுமார் 9 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்க பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வாகனத்தின் ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
- அலாரம் அடித்தது குறித்து உடனே சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவை மெயின்ரோட்டில் அரசு வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதை நோட்டமிட்ட மர்மநபர் தலைகவசம் அணிந்தபடி ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த கற்களை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை திறக்க முயன்றார்.
இதனால் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்த நபர் ஏ.டி.எம்.எந்திரத்தில் கற்களால் உடைக்க முயன்றார். அப்போது திடீரென அதிக சத்தத்துடன் அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேறி மோட்டார் சைக்களில் தப்பினார்.
அலாரம் அடித்தது குறித்து உடனே சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையம் மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட முயன்ற நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆட்டோ டிரைவர் கைது
- 2 பேருக்கு வலை வீச்சு
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள புலிப்பணம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 57), இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று பணி முடிந்து திரும்பும் போது சுவாமியார் மடத்தில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். அப்போது ஆட்டோவை எடுக்கும் போது சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி உள்ளனர். இதனால் சப்-இன்ஸ்பெக்டருக்கும், 3 பேர் கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கருணாகரனை தாக்கி, அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கருணாகரன் தக்கலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கருணாகரன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியது காட்டாத்துறையை சேர்ந்த ராஜேஷ் (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலில் 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- வீட்டுமனை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி
- தண்ணீர் பாட்டிலுடன் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது.
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார். மனுக்கள் வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
அப்போது திட்டுவிளை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 2 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்தனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினார்கள். இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் வீட்டுமனை பிரச்சனை இருந்து வந்த நிலையில் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மனு அளிக்க வந்த பொதுமக்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த பிறகு கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். தண்ணீர் பாட்டிலுடன் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.
பாட்டில்களில் என்ன உள்ளது என்பதை குறித்து முகர்ந்து பார்த்து சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள். கார்களில் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பும் டிரைவர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்றும் முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நாமக்கல் மாவட்டம் ராசி புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
- மனமுடைந்த மாணவி, அரளி விதையை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
சேலம்:
சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த 24 வயது இளம்பெண், நாமக்கல் மாவட்டம் ராசி புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு கல்லூரியில் கட்டண பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது பெற்றோரிடம் மாணவி பலமுறை கூறியும் பெற்றோர் கட்டணத்தை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, அரளி விதையை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனைப் பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பரமத்திவேலூர் போலீஸ் நிலையம் எதிரே செல்போன் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.
- இதையடுத்தில் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்தபோது, நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர் ஒருவர், கடையின் பூட்டை உடைக்க முயற்சித்தது தெரியவந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் போலீஸ் நிலையம் எதிரே செல்போன் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளர் பிலால் (வயது 35) வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்தில் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்தபோது, நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர் ஒருவர், கடையின் பூட்டை உடைக்க முயற்சித்தது தெரியவந்தது. மேலும் கடையின் முன்புறம் அலமாரியில் வைத்திருந்த செல்போன் கவர்கள் திருடி பாக்கெட்டில் வைத்ததும் வீடியோவில் பதிவாகி இருந்தது.
இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் கடையின் உரிமையாளர் பிலால் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், கடையில் திருட முயற்சி செய்தது வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று மாணவியி ன் தாய் பள்ளிக்கு சென்றார். ஆசிரியையை சந்தித்து பேசினார்.
- இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவைஅருகே உள்ள சூலூரை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கணக்கு பாடம்
மாணவி நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். இதனையடுத்து மாணவியிடம் கணித ஆசிரியை பெற்றோர் அழைத்து வரும்படி கூறினார்.
சம்பவத்தன்று மாணவியி ன் தாய் பள்ளிக்கு சென்றார். ஆசிரியையை சந்தித்து பேசினார்.
பின்னர் பள்ளி விடும் நேரம் என்பதால் தனது மகளை அழைத்து செல்லலாம் என்பதற்காக பள்ளி அருகே உள்ள பெருமாள கோவிலில் காத்திருந்தார்.
சாணிப்பவுடர்
பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவியின் வாய் மஞ்சள் நிறத்தில் இருந்தது. இதனை பார்த்து மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் என்ன வென்று கேட்டார். அப்போது மாணவி கணக்கு பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்தால் பள்ளியில் வைத்து மஞ்சள் சாணிப்பவுடரை கரைத்து குடித்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவியை அவரது தாய் சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.